Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
738
Reaction score
4,423
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 12

"பத்து வருஷம் முன்னாடி நான் காலேஜ் படிச்சி முடிக்கிற நேரம் வந்த மாப்பிள்ளை தான் பிரதாபன். அவர் ஒரு சாஃப்ட்வேர் பிசினஸ் செஞ்சிட்டு இருந்தாரு. அந்தச் சாஃப்ட்வேரைப் பத்தி புரோமோட் செய்றதுக்காக எங்க காலேஜூக்கு வந்தப்ப என்னைப் பார்த்துப் பிடிச்சி போய், என்கிட்ட புரபோஸ் செஞ்சாரு" என்றவள் சொன்னதும்,

"உன்னோடதும் என்னை மாதிரி லவ் மேரேஜ் தானா? நீ என்கிட்ட காட்டின கோப முகத்துக்கு உனக்கு லவ்லாம் வராதுனுல நினைச்சேன்" சிரிப்புடன் கேலியாய் அவன் உரைக்க, கோபத்துடன் ஓடிக் கொண்டிருந்த நீரை கையில் அள்ளி அவன் மீது தெளித்தாள்.

"ஹே தாமரை" எதிர்பாராத அவள் செயலில் உடலெங்கும் ஆங்காங்கே விழுந்திருந்த நீர்த்துளிகளைத் துடைத்தவனாய், "பாரு! இப்படி எப்ப பார்த்தாலும் உர்ருனே இருந்தா, பார்க்கிறவங்க அப்படித் தானே நினைப்பாங்க" மென்னகையுடன் உரைத்தான்.

"ஈஈஈஈஈ" எனப் பல்லை இளித்துக் காட்டியவளாய், "இப்ப உர்ருனு இல்ல போதுமா" என்று கடுப்பாய் அவள் கேட்க, வாய்விட்டுச் சிரித்திருந்தான் அவன்.

அவனின் சிரிப்பைப் பார்த்து அவளும் வாய்விட்டுச் சிரித்தாள்.

மனம் லேசாய் இருப்பதைப் போல் உணர்ந்தாள். அவனுடன் தான் இருக்கும் போதெல்லாம் உணரும் மன மகிழ்வையும் நிம்மதியையும் இன்றும் உணர்ந்தாள்.

அவனை தோழமையாய் உணர்ந்தது அவளுள்ளம். அதனாலேயே இயல்பாய் அவனிடம் பகடியாய் பேசியிருந்தாள்.

"லவ் மேரேஜ் இல்ல கண்ணா! நான் அவர் லவ்வை அக்செப்ட் செய்யலை. எனக்கு லவ் மேரேஜ் மேல நம்பிக்கை இல்லை. அப்பா அம்மா பார்த்து வைக்கிற வாழ்க்கை தான் நல்லா இருக்கும்னு நம்பினேன். இப்ப தானே புரியுது, யாரு எப்படிப் பார்த்து வச்சாலும், அவங்கவங்க தலைல எழுதினது தான் நடக்கும்னு" விரக்தியாய் அவள் உரைக்கவும்,

தான் தனது முன் வாழ்வில் ஏற்பட்ட அடியில் இருந்து கடந்து வந்து விட்டதைப் போல் அல்லாமல் இவள் இன்னும் கடந்து வராமல் தவிக்கிறாளோ என்று தோன்றியது அவனுக்கு.

"நான் ஒத்துக்கலைனதும் அவர் என்கிட்ட எதுவும் சொல்லலை. ஒரு மாசம் கழிச்சி திடீர்னு ஒரு நாள் யாரோ பொண்ணு பார்க்க வராங்கனு சொல்லி, அப்பா என்னை ரெடியா இருக்கச் சொன்னதும் எனக்குச் செம்ம கோபம். அப்ப எனக்குக் கல்யாணம் செய்றதுல விருப்பம் இல்லை. படிச்சி முடிச்சி வேலைக்குப் போன பிறகு தான் கல்யாணம் செய்யனும்னு நினைச்சிருந்தேன். ஆனா அப்பா தான் என்னைக் கன்வின்ஸ் செஞ்சாங்க. நல்ல வரன் வரும் போது தவற விட்டுடக் கூடாதுனு பேசி பேசியே ஒத்துக்க வச்சாங்க. அப்புறம் பொண்ணு பார்க்கிற அன்னிக்கு மாப்பிள்ளையா பிரதாபனைப் பார்த்து ஷாக் எனக்கு. நான் ஒத்துக்கலைனதும் அப்பாகிட்ட இவர் நேரடியாகப் பேசியிருக்காருனு அப்ப தான் தெரிஞ்சிது. படிச்சி முடிச்சதும் வேலைக்குப் போகனும்னு என்னோட ஆசையை அப்ப பிரதாபன்கிட்ட சொன்னேன். அவரும் ஒத்துக்கிட்டாரு. காலேஜ் முடிய அஞ்சு மாசம் இருந்துச்சு. அஞ்சு மாசம் கழிச்சி கல்யாணம் வச்சிக்கலாம்னு ஃபிக்ஸ் செஞ்சாங்க. அந்த அஞ்சு மாசம் நான் வானத்துல மிதந்தேன்னு தான் சொல்லனும். எங்களைப் போலப் பெர்ஃபெக்ட் மேட்ச் ஜோடி இல்லனு நினைச்சேன். மனசு எப்பவும் சந்தோஷத்துலேயே மிதந்துச்சு. அதுக்குப் பிறகு வாழ்க்கைல எனக்குச் சந்தோஷமே இருக்காதுன்னு அப்ப எனக்குத் தெரியாம போச்சு" என்றவள் நிறுத்தவும்,

"என்னாச்சு தாமரை? மாமியார் நாத்தனார் கொடுமை எதுவும் நடந்துச்சா?" எனக் கேட்டான் மாதவன்.

இல்லையெனத் தலையசைத்தவளாய், "அவர் அவங்க வீட்டுக்கு ஒரே பையன்! கூடப் பிறந்தவங்க யாரும் இல்லை. அவரோட அப்பா அம்மா ரொம்ப நல்லவங்க! என்னை அவங்க பொண்ணு மாதிரியே பார்த்துக்கிட்டாங்க" என்றாள்.

"அப்ப பிரதாபன் தான் பிரச்சினையா?" எனக் கேட்டான்

ஆமெனத் தலையசைத்தவளாய், "கல்யாணத்துக்குப் பிறகு தான் அவருக்குக் குடிப்பழக்கம் இருக்கிறது தெரிஞ்சிது. தினமும் நைட் குடிப்பாரு! குடிச்சிட்டு கணவனா என்கிட்ட மோசமா நடந்துப்பாரு! எனக்கு அவரை ஏத்துக்கவே முடியாம திணருவேன். அருவெருப்பா இருக்கும். ஆனா வெளில பார்க்க வெல் எஜூகேடட் பெர்சன்னு சொல்ற மாதிரி அப்படி இருப்பாரு கண்ணா. அவரோட பேச்சும் அப்படித் தான் இருக்கும். அவரை யாரு குறை சொன்னாலும் நம்ப முடியாத அளவுக்குத் தான் இருப்பாரு. அம்மாவும் அப்பாவும் என்னைத் தான் சமாதானம் செஞ்சாங்க. நீ தான் அவரோட குடிப்பழக்கத்துல இருந்து திருத்தனும்மானு என் அம்மா அப்பா அவரோட அப்பா அம்மானு எல்லாரும் அவரோட பாரத்தை என் தலைல ஏத்தி வச்சாங்க. நான் என்ன அவரைத் திருத்தவா பிறப்பெடுத்தேன். இல்ல அவரைப் பத்தி எல்லாம் தெரிஞ்சி அவரைத் திருத்துறேன்னு சொல்லிக் கட்டிக்கிட்டேனா? இவங்களா என் தலைல இவரைக் கட்டி வச்சிட்டு திருத்துமானு சொன்னா, என் தலைவிதினு ஏத்துக்கிட்டு நான் வாழனுமா என்ன! எனக்கு அவர் மேல இருந்த அன்பு, காதல் எல்லாம் கோபமா, எரிச்சலா மாறி அவரை நான் முழுசா வெறுத்தேன். அப்பா அம்மா சொல்லுக்காக ஆறு மாசம் வரை பொறுத்துப் பார்த்தேன். அதுக்கு மேல முடியாம, அந்த நரகத்துல இருந்து வந்தா போதும்னு, எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை தேவையே இல்லைனு சொல்லிட்டு அந்த வீட்டை விட்டு வந்துட்டேன்" அருவி மீது அக்னிப் பார்வை வீசியவளாய் அத்தனை கோபத்துடன் உரைத்திருந்தாள்.

"அதான் எனக்கு முன்னாடி குடிப்பழக்கம் இருந்துச்சுனு சொன்னதும் அவ்ளோ கோபப்பட்டியா தாமரை?" எனக் கேட்டான்.

ஆமெனத் தலையசைத்தவளாய், "உங்களை முதல் முறையா டிராஃபிக் சிக்னல்ல பார்த்தேன் கண்ணா. முன்னாடியே எனக்கு உங்களை நல்லா தெரியும்ங்கிற மாதிரி உணர்வு வந்துச்சு. அன்னிக்குச் சாயங்காலம் திரும்பவும் உங்களை வீட்டுல பார்க்கவும் ஆச்சரியமாவும் அதே சமயம் மனசுல ஒரு மாதிரி சந்தோஷமாவும் இருந்துச்சு. உங்களுக்குக் குடிப்பழக்கம் இருந்துச்சுனு நீங்க சொன்னதும், அந்தச் சந்தோஷம் எல்லாம் வடிஞ்சி மனசுக்குள்ள வலி! ஏன்னு புரியாத வலி! நீங்களும் பிரதாபன் மாதிரி தானானு கோபமும் வேதனையும் நெஞ்சை பிழிச்சி எடுத்துச்சு! அதான் அப்படிப் பேசினேன்" என்றவள் சொன்னதும்,

"அய்யோ தாமரை! என்னை அந்தக் கொடுமைக்காரன் போலவா நினைச்ச! என்னோட மனசு கஷ்டத்துக்காகத் தான் குடிச்சேனே தவிர, நான் குடிச்சிட்டு யாரையும் கஷ்டப்படுத்தினது இல்ல தாமரை. அதுக்காகக் குடிப்பழக்கம் சரின்னு நான் சொல்ல வரலை. எனக்கு இப்ப சுத்தமா அந்தப் பழக்கம் இல்லை தாமரை" என்னைப் புரிந்து கொள்ளேன் எனும் பார்வையோடு அவளை அவன் பார்த்திருக்க, எவ்வித எதிர்வினையும் ஆற்றாது கண்களைக் கூடச் சிமிட்டாது அருவி நீரைப் பார்த்தவளாய் அமைதியாக அமர்ந்திருந்தாள் அவள்.

சில்லென்ற நீரில் காலை நனைத்தவாறு அமர்ந்திருந்தவனின் உடல் அவளின் அமைதியில் பயம் கொண்டு மேலும் குளிர் பரப்பியது.

"என்னை இன்னும் அப்படித் தப்பானவனா தான் நினைச்சிட்டு இருக்கியா கோதை" அவனை மீறியே கோதை என அழைத்திருந்தான்.

அவனின் கோதை என்ற அழைப்பில் அவளின் உடல் ஒரு நொடி அதிர்ந்தடங்க, இமைகளைச் சிமிட்டியவளாய் அவனைத் திரும்பிப் பார்த்தாள். விழிகளில் நீர் சூழ, தள்ளி அமர்ந்திருந்தவனின் கரத்தைப் பற்றினாள்‌.

தனது இரு கரங்களாலும் அக்கரத்தினை இறுகப் பற்றியவளாய் முகத்தைப் புதைத்துக் கண்ணீர் சிந்தியவள், "ஏன் கண்ணா, நீங்க முன்னாடியே உங்க கோதையைத் தேடி வந்து கட்டிக்கலை. நான் உங்களைச் சந்தேகப்பட்டேன்னு என் மேல கோபமா!" என்றவளாய் குலுங்கி அழ, இவனுக்கு அவளின் பேச்சில் ஒளிந்திருக்கும் பொருள் புரிபடவில்லை.

அவளின் அழுகை மனத்தைப் பிசைந்த அதே நேரம், குழப்பத்தையும் கொடுத்தது.

ஆனால் பேசிய அவளுக்குத் தான், தான் என்ன பேசினோம் என்று நினைவில் பதியவில்லை. அந்நேரம் ஏதோ மனத்தின் கவலையை அவனிடம் உரைத்ததாய் நினைத்து, "சாரி" என்றவளாய் அவனது கரத்தைச் சட்டென விடுவித்தாள்.

கண்களைத் துடைத்தவாறு மீண்டுமாய்ச் சாரி என்றவள் அங்கிருந்து எழுந்தவளாய், "போகலாமா கண்ணா?" எனக் கேட்டாள்.

அவளின் கேள்வியும் அழுகையும் அவனுள் கேள்வியை எழுப்பியிருக்க, சிந்தனையில் உழன்றவனாய் அமர்ந்திருந்தவன் அவளின் அழைப்பில் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

"என்னை இன்னுமே அந்தப் பிரதாபன் மாதிரி தான்னு நினைச்சிட்டு இருக்கியா தாமரை?" எனக் கேட்டான்.

"அப்படி நினைச்சிருந்தா உங்க கூட உட்கார்ந்து இப்படிப் பேசியிருக்க மாட்டேன் கண்ணா!" என்றவாறு நடக்கத் தொடங்க, "தேங்க்ஸ் தாமரை" என்றவனாய் இதழில் அரும்பிய புன்னகையுடன் அவளுடன் இணைந்து நடந்தான்.

அங்கிருந்து கிளம்பியவர்களாய் சென்றவர்கள் அடுத்து வந்த சிவன் கோவிலில் வண்டியை நிறுத்தினர்.

கோபுரங்களில் செடிக் கொடிகளாய் புற்கள் வளர்ந்திருக்க, கவனிப்பாரற்றுப் பாழடைந்திருந்தது அக்கோவில்.

அக்கோவிலுக்குப் பெயர்ப்பலகை எதுவும் இல்லாமல் இருக்க, இருவரும் உள்ளே சென்று பார்த்தனர்.

சின்னஞ்சிறிய கோவில் அதில், நெடுஉயரமாகச் சிவன் தனித்து அமர்ந்திருப்பது போன்ற சிலை மட்டுமே மூலஸ்தானத்தில் இருக்க, எதிரில் நந்தி அமர்ந்திருந்தார். ஆங்காங்கே சில சிலைகள் சிதலமடைந்தவாறு இருந்தன.

அவளின் கண்கள் அங்குமிங்கும் அலைப்பாய, இதயத்தின் துடிப்பு ஏறியிறங்க, திடீரெனக் கண்ணா எனச் சத்தமிட்டு அழைத்தாள் தாமரை.

சுற்றிலும் பார்வையைச் செலுத்தியவனாய் இருந்தவன், அவளின் திடீரென்ற பதட்டமான அழைப்பில், "என்ன தாமரை?" எனக் கேட்டவனாய் அவளருகே சென்றான்.

"இங்கே.. இங்கே இரண்டு சிலை! ஒரு ஆண் சிலையும் பெண் சிலையும் கணவனும் மனைவியுமாய்ச் சிவலிங்கத்துக்குப் பூஜை செய்ற மாதிரி பஞ்சலோக சிலைகள் இருந்த மாதிரியும், அதுக்கு நாம ரெண்டு பேரும் பூஜை செய்ற மாதிரியும் மனசுக்குள்ள ஒரு காட்சி வந்து போகுது கண்ணா" உள்ளுக்குள் ஏற்பட்ட உதறல் அப்படியே இருக்க, அங்கிருந்த கல் இருக்கையில் அமர்ந்தாள் தாமரை.

'அப்படியா' ஆச்சரியத்துடன் வாய்க்குள் முனகியவனாய், பையில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து அவளருந்த கொடுத்தான்.

தண்ணீரை அருந்தியதும் சற்று சமன்பட்டவளாய் அமர்ந்திருந்தவளின் கண்களுக்குள் அந்தச் சிலைகளே காட்சி கொடுக்க, சுற்றி முற்றி அச்சிலைகள் அங்கே இருக்கிறதா எனத் தேடினாள்.

அங்கு எதுவும் கிடைக்காமல் போக, திடீரென நினைவு வந்தவளாய், "கண்ணா, நான் எடுத்துட்டு வந்த ஆபிஸ் ஃபைல் வண்டில இருக்கு! எடுத்துட்டு வர்றீங்களா?" எனக் கேட்டாள்.

அவள் கேட்ட அலுவலகக் கோப்பைக் கொடுத்ததும், அதிலிருந்த சோலைமலை கோவில்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தாள்.

அதில் ஒரே ஒரு சிவன் கோவில் பெயர் மட்டும் இருக்க, "கண்ணா இந்தக் கோவிலோட பேரு, 'ஸ்ரீ ஞானாம்பிகை சமேத முக்தீஸ்வரன் கோவில்'னு போட்டிருக்கு! அப்படீன்னா இங்கே அம்மன் சன்னதி இல்லனா அம்மன் சிலை எங்கேயாவது இருக்கனுமே!" என்றவளாய் அந்தக் கோப்பில் இக்கோவிலுக்கான அசையும் அசையா சொத்து விபரங்களைப் பார்வையிட்டாள்.

இக்கோவில் சிலைகள், நகைகள் எனப் பட்டியலிடப்பட்டவைகளை வாசித்தவளாய் வந்தவள், ஒரு ஆண் பஞ்சலோகச் சிலையும் ஒரு பெண் பஞ்சலோகச் சிலையும் வணங்கிய வடிவில் இருப்பதாக அப்பட்டியலில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்த்து மாதவனை அழைத்துக் காண்பித்தாள்.

"ஆத்மநல்லூர் கோவில்ல மட்டுமில்ல இங்கே சோலைமலை கோவில்கள்லயும் நிறையச் சிலைகள் காணாமல் போயிருக்குப் போலயே! ஆனா இதுக்குலாம் எதுவும் ஆக்ஷன் எடுத்த மாதிரியே போடலையே" என்றவளாய் தனது கோப்பினில் குறிப்பெடுத்துக் கொண்டாள்.
 

Latest threads

Top Bottom