- Joined
- Sep 16, 2024
- Messages
- 738
- Reaction score
- 4,423
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 13
"அடுத்து எங்கே போகனும் தாமரை? ஏதோ பெருமாள் கோவில் சொன்னீயே! அங்கேயா?" எனக் கேட்டான் மாதவன்.
கையில் இருந்த கோப்பை வாசித்தவளாய் பயணித்திருந்தவள் அவன் கேட்ட கேள்விக்கு ஆமெனத் தலையசைத்துப் பின் நிமிர்ந்து பார்த்து, "இங்கே ஏதோ அய்யனார் கோவில் இருக்குனு செந்தாமரை அம்மா சொன்னாங்களே! சக்தி வாய்ந்த அய்யனாருனு சொல்லி அவருக்கிட்ட வேண்டிக்கிட்டு முந்தானைல காசு முடிஞ்சி வைக்கச் சொன்னாங்க! அங்கே போகலாமா?" எனக் கேட்டாள்.
"என்ன வேண்டுதல்? உன் கல்யாணத்துக்கா?" எனக் கேட்டான்.
"அட நீங்க வேற! நான் உயிரோட இருக்கிறதுக்கு வேண்டிக்கச் சொன்னாங்க!" என்றவள் சொன்னதும்,
"என்னது! உயிரோட இருக்கிறதுக்கா?" அதிர்ச்சியில் ஜீப்பையே நிறுத்தி விட்டான் மாதவன்.
"ஆமா! இதைப் போய் எங்கம்மாகிட்ட சொன்னா என்னை இங்கே இருக்க விடுவாங்களா? இதுல எங்கம்மாவை நான் வேண்டிக்கச் சொல்லனுமாம்" சிரித்தவாறு அவள் கூற,
"ஏன் அப்படிச் சொன்னாங்க?" என்ன பிரச்சினை இவளுக்கு இங்கே இருக்கப் போகிறது என்றே சிந்திருந்தான் அவன்.
"ஏன்னா இங்கே எனக்கு முன்னாடி இந்தப் போஸ்ட்க்கு வந்த ஆபிசர்ஸ்லாம் இறந்துட்டாங்களாம்! அதான் எனக்கு எதுவும் ஆகிடக் கூடாதுனு அப்படிச் சொன்னாங்க. அந்தம்மா சொல்லும் போது கூட எனக்கு ஒன்னும் புரியலை கண்ணா. ஆனா இப்ப இந்தக் கோவில் சிலைகள்ல ஏதோ கோல்மால் நடந்திருக்குமோனு தோணுது. அதான் ஏதோ பிரச்சினை வந்து ஒன்னு டிரான்ஸ்ஃபர் வாங்கிப் போயிருக்காங்க. இல்லனா உயிரை விட்டிருக்காங்க" ஏதோ யோசனையுடன் அவள் உரைக்க, இவனுக்கு உள்ளுக்குள் திகில் பரவியது.
"நீயும் டிரான்ஸ்ஃபர் கேளு தாமரை! நாம இங்க இருந்து போயிடலாம். இந்த ஊரு வேண்டாம் நமக்கு! உனக்கு எதுவும் ஆகிடுமோனு எனக்கும் உள்ளுக்குள்ள பதட்டமாவே இருக்கு" உண்மையான அக்கறையில் விளைந்த பதட்டத்துடன் உரைத்தான்.
"ம்ப்ச் போனா போய்ட்டு போகுது கண்ணா! உயிரோட இருந்து என்னத்த சாதிக்கப் போறேன். அதுக்கு இப்படி நல்ல காரியத்துக்காக உயிர் போகுதுன்னா போயிட்டு போகுது" என்றவள் சொன்ன நொடி, பட்டென அவளின் கைகளை இறுக்கமாய்ப் பற்றியவனாய் கண்களில் சிவப்பேற,
"என் கோதைக்கு நான் எதுவும் ஆக விட மாட்டேன். அவளை நான் காப்பாற்றியே தீருவேன்" பற்களைக் கடித்துக் கொண்டு அவன் கூறவும், அவன் தோளை உலுக்கியவளாய், "என்னாச்சு கண்ணா?" எனக் கேட்டாள்.
தன்னிலை வந்தவனாய், "எனக்கு என்னாச்சு? ஒன்னும் ஆகலை. உன்னுடைய உயிருக்குத் தான் இங்கே ஆபத்து இருக்கும் போல! நீ இந்த ஊரை விட்டு டிரான்ஸ்ஃபர் வாங்கிப் போற வரைக்கும், நானும் எங்கேயும் போக மாட்டேன்" என்றவனாய் வண்டியை எடுக்க,
"வேண்டாம் கண்ணா! உங்களுக்கு வேற வேலை இல்லையா? என் பின்னாடியே சுத்திட்டு இருக்கப் போறீங்களா?" எனக் கேட்டாள்.
இப்பொழுது அவனின் மனமோ அவள் சொன்ன அந்த அய்யனார் கோவிலுக்குச் செல்ல வேண்டுமென அரற்றியது.
'அங்க போய் அந்தச் சாமிக்கிட்ட வேண்டிக்கிட்டா இவளுக்கு அவரு பாதுகாப்பாக இருப்பாரு' மனத்தோடு நினைத்துக் கொண்டான்.
"இனி என் வாழ்க்கைல உன்னை மீறி எந்த வேலையும் முக்கியமில்லை தாமரை" தீவிரமான குரலில் அவன் உரைக்கவும்,
"கண்ணா" அதிர்ச்சியுடன் அழைத்திருந்தாள்.
அவன் சொல்லின் பொருள் யாது? அவன் என்னை விரும்புகிறானா என்ன?
"உண்மையைத் தான் சொல்றேன் தாமரை! இனி என் வாழ்க்கைல கல்யாணம்னு ஒன்னு நடந்துச்சுனா அது உன் கூடத் தான். இல்லனா கல்யாணமே செஞ்சிக்க மாட்டேன். இந்த முடிவை எடுத்த பிறகு தான் உன் கூட ஆத்மநல்லூருக்கு வந்தே ஆகனும்னு பின்னாடியே வந்தேன்" என்றவனாய் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவனின் கண்களில் வலதுப்புறம் மரங்களுக்கிடையில் பெரிய சிலை இருப்பது போன்று தென்பட, அது அய்யனார் சிலையாக இருக்குமோ என்று மனத்திற்குள் தோன்றிய நொடி, சட்டென வண்டியை நிறுத்தியவாறு அவளின் முகம் பார்த்தான்.
அவளின் முகத்தில் ஏகத்துக்கும் கலக்கம் சூழ்ந்திருந்தது.
"என்ன தாமரை! என்னாச்சு?" பரிவோடு அவன் கேட்க,
கண்களில் சூழ்ந்திருந்த கண்ணீருடன் அவனைப் பார்த்தவளாய், "ஏற்கனவே ஒரு கல்யாணத்துல வாங்கின அடியே போதும்னு தான், ரெண்டாவதா கல்யாணம் செய்ய ஒத்துக்காம இருந்தேன் கண்ணா?" என்றவள் கண்களைத் துடைத்தவளாய்,
"நீங்க என்னைச் சந்தோஷமா வச்சி பார்த்துப்பீங்கனு எப்படி நான் நம்புறது கண்ணா?" முந்தைய வாழ்வின் கசடுகள், மனிதர்கள் மீதான நம்பிக்கையை முற்றிலுமாய் அவளின் மனத்தினிலிருந்து அகற்றியிருக்க, அதன் பொருட்டே இவ்வாறு கேட்டிருந்தாள்.
அவள் அக்கேள்வியைக் கேட்டதும் அவளின் கைகளைப் பற்றியவனாய், "என் கூட வா தாமரை" என அழைத்துச் சென்றான்.
எங்கே அழைத்துச் செல்கிறான் எனப் புரியாது அவனுடன் கைக்கோர்த்தவாறு நடந்திருந்தாள் அவள்.
தூரமாய்த் தெரிந்த அந்த அய்யனார் சிலையின் முன் சத்தியம் செய்து அவளை நம்ப வைக்கலாம் என்று எண்ணித் தான் அவளை அழைத்துச் சென்றான் மாதவன். ஆனால் அங்கே கருப்பண்ணசாமி வேறொரு லீலையைச் செய்யக் காத்திருப்பதை அறிந்திருக்கவில்லை அவன்.
ஒற்றையடி பாதையில் சில அடித் தூர நடைப்பயணத்தில் தூரமாய்த் தெரிந்த, ஆஜானுபாகுவான தோற்றத்தில் அமர்ந்திருந்த கருப்பண்ணசாமி சிலையைக் கண்டதும் விதிர்விதிர்த்துப் போனாள் தாமரை.
கருப்பண்ணசாமியின் சிலையை தான் அய்யனார் சிலை என்றெண்ணி வந்திருந்தனர் இருவரும்.
கனவில் தான் கண்ட சிலை அப்படியே நேரில் இருப்பதைக் கண்டு அவள் உடலில் புல்லரிக்க, உள்ளத்தில் திடுக்கிடலை உணர்ந்தாள். அவள் உடலின் அசைவைப் பற்றியிருந்த கரத்தினில் உணர்ந்தவனாய் தட்டிக் கொடுத்தவன், 'பெரிய சிலையைப் பார்த்துப் பயந்துட்டா போல' என்று நினைத்துக் கொண்டான்.
அச்சிலையை நோக்கி இருவரும் கைகளைக் கோர்த்தவாறு நடந்து அருகில் செல்லச் செல்ல, இருவரின் உருவமும் மாதவனும் தாமரையுமாய் இருந்த போதும், இருவரது ஆன்மாவின் உணர்வுகளும் கோதையும் கருப்பண்ணனுமாய்த் தங்களை உணர்ந்திருந்தன.
கருப்பண்ணசாமியின் முன்னே கரங்களைக் கூப்பி வணங்கியவர்களாய் நின்றிருந்தனர் இருவரும்.
'என் சாமியைப் பார்த்து எத்தனை வருஷமாச்சு' உள்ளுணர்வு கதறிட, கண்களில் நீர் சூழ அவரைப் பார்த்திருந்தான் மாதவன். தான் ஏன் இவ்வாறு உணர்கிறேன் என்று புரியவில்லை மாதவனுக்கு.
அமைதியாகக் கலங்கிய கண்களுடன் கருப்பண்ணசாமியைப் பார்த்திருந்த தாமரையை நோக்கித் திரும்பிய மாதவன், சத்தியம் செய்ய அருகில் சென்றான்.
தன்னையும் மீறி அவளின் முகத்தினைக் கைகளில் ஏந்தியவனாய், "இப்பிறவி மட்டுமல்ல இனி நான் இப்பூமியில் எடுக்கும் அத்தனை பிறவியிலும் நீ மட்டுமே எனது மணவாட்டியாகும் வரம் வேண்டும் கோதை! அவ்வரத்தை தந்தருளுவாயா உன் கண்ணனுக்கு?" எனக் கேட்டிருந்தான்.
அன்று கனவில் கண்டது போலவே இன்றும் அவனைத் தாவி அணைத்து மார்பில் முகத்தைப் புதைத்தாள் தாமரை.
"என்னை விட்டுப் போய் விடாதீர்கள் கண்ணா! நீங்கள் இல்லாத வாழ்வில் எனக்கு இன்பம் என்ற சொல்லே இல்லை கண்ணா" என்றவாறு கண்ணீர் சிந்தினாள்.
அவளின் கண்ணீர் அவனது மார்பை நனைக்க, அவளின் தலையை வருடியவனாய், "என்றும் உன்னை விட்டுப் போக மாட்டேன் கோதை! என் மேல் நம்பிக்கை இல்லையா உனக்கு?" அவளின் முகத்தை நிமிர்த்தியவனாய் கண்ணோடு கண்ணை நோக்கியவாறு கேட்டான் மாதவன்.
இருவருமே தங்களை மீறி கோதையும் கருப்பண்ணனுமாகப் பேசியிருந்தனர்.
இல்லையெனத் தலையசைத்தவளாய், "இந்நாட்டையும் மக்களையும் காக்கும் வேலை வந்துவிட்டால் என்னை மறந்து போய்விடுவீர்கள்" என்று அழுதாள்.
"மக்கள் சேவைத் தானே மகேசன் சேவை எனக்குக் கோதை" என்று அவளின் கண்ணீரைத் துடைத்தவனாய் அவன் கூற,
"என்னைத் தங்களின் மனையாளாக்கிவிட்டு எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். நான் உங்கள் நினைவுடனே வாழ்ந்து மடிந்து போகிறேன். இனிமேலும் நீங்கள் இல்லாத வாழ்வை என்னால் வாழ இயலாது" என்று அவனை இறுக அணைத்தவாறு அவள் கண்ணீர் சிந்த, இவனது கண்களையும் நிறைத்தது கண்ணீர்.
"எனக்கு ஏனிந்த துர்பாக்கிய நிலை கண்ணா? நான் ஏன் வேறொருவரை மணக்கும் நிலை வந்தது எனக்கு" தாமரையாகவும் கோதையாகவும் மாறி மாறிப் பேசி அரற்றியவாறு அழுது கரைந்தவளின் முதுகை வருடி அமைதிப்படுத்தியவனாய், "நீயில்லாது இப்பிறவியில் நானும் மகிழ்வுடன் வாழவில்லையே கோதை" என்றவனின் முகத்தினைப் பற்றியவளாய்,
"இப்பொழுதே என்னை மணம் செய்து கொள்ளுங்களேன் கண்ணா! இனி எவரும் என்னைத் தீண்டும் கொடும் தண்டனையை எனக்குத் தந்துவிடாதீர்கள் கண்ணா" நெஞ்சின் வலியை வார்த்தையில் வடித்து அழுகையின் விம்மலுடன் கூறியவளை ஆதூரமாய் அணைத்து குழந்தைப் போல் தாலாட்டினான்.
அவளைத் தன்னோடு இறுக்கி அணைத்தவனாய் அவளின் தலை மீது தனது கன்னத்தைப் பதித்தவன், "இப்பிறவியில் இந்தத் தாமரையின் மாதவனாகவும், மாதவனின் தாமரையாகவும் தான் நாம் இனி உடலாலும் மனத்தாலும் வாழ்வோம் என்று உனக்குச் சத்தியம் செய்து தருகிறேன் கோதை. நீயில்லாமல் நானில்லை என்று ஆன்மாவாகிய நாம் உணரும் இக்காதலை தாமரையும் மாதவனும் உடலாலும் உயிராலும் உணரும் பொழுது தான், நான் உன்னை மணம் செய்து கலந்துறவாட முடியும் கோதை" என்றவன் சொன்ன நொடி மாயை அறுபட, இருவரும் மாதவனும் தாமரையுமாய்த் தங்களின் இயல்பு மனநிலைக்கு வந்திருந்தனர்.
தாங்கள் இருவரும் நின்றிருந்த அணைப்பின் நிலையை உணர்ந்து பதறியவர்களாய் பட்டெனப் பிரிந்து நின்றனர்.
இருவரின் உடலும் மற்றவரது உடலின் வெம்மையை உள்வாங்கியிருக்க, பிரிந்து நின்ற பிறகும் அந்த அணைப்பின் கதகதப்பை உணர்ந்தனர் இருவரும்.
'அய்யோ! நான் என்ன செஞ்சிட்டு இருந்தேன். அவ எதுவும் என்னைத் தப்பா நினைச்சிடப் போறா' என்று அவனின் உள்ளம் அரற்றிட,
"சாரி தாமரை! நான்.. நான்.. இந்த இடம்.. எங்கேயோ பார்த்த மாதிரி.. சாரி... வேணும்னே நான் செய்யலை" என்று திக்கித் திணறியவனாய் பயத்துடனும் பதட்டத்துடன் உரைத்தான்.
"வண்டியை எடுங்க மாதவன்! வீட்டுக்குப் போகலாம்" அவன் முகத்தைப் பாராது கூறியவளாய் விறுவிறுவென வண்டியை நோக்கி நடந்திருந்தாள் தாமரை.
'மாதவன்னா என்னை சொன்னா! அப்படினா என் பேரு அவளுக்கு ஞாபகம் வந்துடுச்சா! அதான் என்னை விட்டு தள்ளிப் போறாளா? அதான் இப்படி விலகி நின்னு பேசுறாளா? நான் உன் கண்ணனாவே இருந்திடுறேனே தாமரை' மனத்திற்குள் நினைத்தவனாய் அவள் பின்னோடு சென்றவன் வண்டியை எடுத்தான்.
அவன் புறம் துளியும் திரும்பாது பயணித்திருந்தவள், வண்டி அரசு குடியிருப்பின் வாசலில் நிற்கவும், "தேங்க்ஸ் மாதவன்" என்றவளாய் அவன் முகத்தையும் பார்க்காது விறுவிறுவென வீட்டிற்குள் சென்று கதவை ஓங்கிச் சாத்தியிருந்தாள்.
அக்கதவைப் பார்த்தவாறே சில நிமிடங்கள் நின்றவன், கனத்த மனத்துடன் அங்கிருந்து சென்றான்.
அப்படியே மடங்கி மூடிய கதவில் சாய்ந்து அமர்ந்தவளின் உடலில் இன்னமும் அவன் வாசத்தை உணர்ந்தாள். கண்களில் தாரைத் தாரையாய் வழிந்தது கண்ணீர்.
'என்ன செஞ்சு வச்சிருக்க தாமரை நீ?' தன் மீதே பெருத்த கோபம் கொண்டாள்.
'நீ இடம் கொடுக்காம அவர் அப்படிக் கட்டிப்பிடிச்சிட்டு நின்னிருப்பாரா?' மனசாட்சி கேட்டக் கேள்வியில், மனத்தைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி வைத்தாள்.
அவளின் கண்களில் நில்லாது கண்ணீர் வழிய, தான் பெரும் தவறு இழைத்தது போன்று பதறியது அவளுள்ளம்.
சற்று அமர்ந்து அங்கு நடந்தவைகளை அவள் சிந்தித்திருந்தாலும், நடந்தவைகளின் காரணக் காரியங்கள் அவளுக்குப் பிடிப்பட்டிருக்கும். மாறாகத் தன் மீதே குற்றம் சாட்டி, அன்றைய பயணத்தின் நிகழ்வுகளை வாழ்வில் என்றுமே நினைத்துப் பார்க்கக் கூடாது என்று மனக்கட்டுப் போட்டவளாய் அச்செய்கைக்கான உண்மை காரணத்தை அறிந்து கொள்ள முயற்சிக்காமலே, அன்று இரவுணவை கூட உண்ணாது உறங்கியிருந்தாள் தாமரை.
நாராயண மந்திரம் – அதுவே நாளும் பேரின்பம்
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து
பரமன் அருள் தரும் சாதனம்
மறுநாள் விடியற்காலையில் ஆழ்ந்த உறக்கத்தில், காதினில் விழுந்த நாராயணரின் இப்பாடலில், அவளுக்கு எப்பொழுதும் போல் அந்தக் கனவு வந்திருந்தது.
வழமைப்போல் கனவில் தனது கையில் வைத்திருக்கும் சிலையை, "நான் தர மாட்டேன்! எம் மாதவனை நான் யாருக்கும் தர மாட்டேன். என் உயிரே போனாலும் தர மாட்டேன்" என்றவாறு எதிரில் இருப்பவரிடம் தராமல் தன்னோடு இறுகிய அணைப்பில் வைத்துக் கொண்டிருந்தவளின் கண்களுக்கு மெல்ல மெல்ல அந்நபரின் முகம் பனிப்புகை மூட்டத்திலிருந்து வெளிவருவது போல் தெளிவாய் தெரிய, "கண்ணா நீங்களா?" என்று கத்தியவளாய் பதறி எழுந்தமர்ந்தாள் தாமரை.

Previous thread
Next thread