- Joined
- Sep 16, 2024
- Messages
- 738
- Reaction score
- 4,423
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 19
"எப்படித் தான் அன்றாடம் அரசிமா இந்தப் பாதை வழியாய் நடந்து வந்து மாதவனுக்கு மாலைச் சூட்டினாரோ?" என்றவளாய் மூச்சு வாங்க மலை ஏற்றத்தில் நடந்திருந்தாள் கோதை.
ஆத்மநல்லூர் மாதவப் பெருமாள் கோவிலிலிருந்து பின் பக்கமாய் இருந்த குறுக்குப் பாதை வழியாகச் சோலைவனம் நோக்கி நடந்திருந்தனர் கோதையும் அவளின் அன்னை நீலாம்பிகையும்.
"ஆமாம் கோதை! திருமணமாகிச் சென்ற பிறகு தானே அவளுக்கு இம்மாதவப் பெருமாள் கோவில் தொலைவாகிப் போனது. ஈசனை வணங்கும் கணவனுக்கும் பணிவிடை செய்து, மாதவனுக்கு அன்றாடம் மாலைச் சூடும் கைங்கர்யத்தையும் விடாமல் செய்து வந்த அவளின் பக்திக்கு ஈடு இணையே இல்லை" என்றார் நீலாம்பிகை.
இருவருமாகப் பேசியவாறு சோலை வனத்தில் இருந்த பதின்மூன்று சிற்றூர்களில் ஒன்றான கருப்பனூரை அடைந்திருந்தனர்.
கருப்பனூர்
சோலைவனத்தின் காவல் தெய்வமான கருப்பண்ணசாமி வீற்றிருக்கும் ஊர் என்பதாலேயே இப்பெயர் பெற்றிருந்தது இவ்வூர்.
அந்த ஊரின் மத்தியில் வீற்றிருந்த கருப்பண்ணசாமியிடம் சென்று வணங்கியவர்களாய் சில மணி நேர நடைக்குப் பிறகு மாலை கவிழும் வேளையில் அவ்வீட்டை அடைந்தனர்.
திண்ணையில் தனது அத்தையுடன் அளவளாவியவாறு பூக்களை மாலையாய் தொடுத்துக் கொண்டிருந்த மரகதம், இவர்களைப் பார்த்து இன்ப அதிர்வுடன் எழுந்தவளாய், "அம்மா.. கோதை.. வாரும்.. வாரும்" என்று வரவேற்றாள்.
"நடந்தா வந்தீர்கள்? தந்தையின் புரவியில் வந்திருக்கலாமே?" எனக் கேட்டாள்.
"அரசாங்கப் பணிக்காக வழங்கியதை தந்தை என்றைக்குச் சொந்தப் பணிக்குப் பயன்படுத்த அனுமதித்திருக்கிறார் அக்கா" என்று கேட்டுச் சிரித்தாள் கோதை.
"பார்த்து எத்தனை நாள்கள் ஆயிற்று! என்னை மறந்து விட்டாய் தானடி" குரலில் பூரிப்பும் செல்லச் சீண்டலுமாய்த் தங்கையின் கரங்களைப் பற்றியவள்,
"அம்மா, தாங்களும் தந்தையும் கூட எனக்கு மணம் முடித்து வைத்ததும் கடமை முடிந்தது என்று இப்பக்கமே வராமல் இருந்து விட்டீர்கள் தானே! இப்பொழுது கூட, என் கணவர் வந்து அழைப்பு விடுத்ததால் தானே வந்திருக்கிறீர்?" அன்னையிடம் செல்லமாய்க் கோபத்தைக் காட்டிக் கேட்டிருந்தாள் மரகதம்.
"மகளைக் கட்டிக் கொடுத்த வீட்டிற்கு அடிக்கடி வந்து போனால் மரியாதை இருக்காது மகளே! சுகமாய்ப் பார்த்துக் கொள்கிறாரா மாப்பிள்ளை? நீ மகிழ்வுடன் இருக்கிறாயா?" என்று மகளை அணைத்தவாறு அவளின் காதினில் மெல்லமாய்க் கேட்டிருந்தார் நீலாம்பிகை. நாணமும் பூரிப்பும் கலந்த முகத்துடன் தாயிடம் தலையாட்டி வைத்தாள் பெண்.
பெண்ணின் முகத்திலேயே அவளின் மகிழ்வைக் கண்டு மனம் நிறைந்து போனது அவருக்கு.
மரகதத்தை மணம் செய்து கொடுத்த இந்த ஆறு மாதத்தில் ஒரே ஒரு முறை தான் நேரில் வந்து பார்த்து விட்டு சென்றிருந்தனர்.
"தந்தையார் எங்கே அம்மா?" மரகதம் கேட்க,
"எங்களுடன் கிளம்பிக் கொண்டிருக்கையில் அரசர் அழைப்பதாகச் செய்தி வந்தது. உடனே புறப்பட்டுச் சென்று விட்டார். இரவு நேராக இங்கே வந்துவிடுவதாகக் கூறினார்" என்றார் நீலாம்பிகை.
சம்பந்தியினரிடம் நலம் விசாரித்தவராய், "மாப்பிள்ளை எங்கே மரகதம்?" எனக் கேட்டார் நீலாம்பிகை.
"அரண்மனை காவல் பணிக்காகச் சென்றிருக்கிறார் அம்மா. இரவு கொடை விழா தொடங்கும் நேரம் வந்துவிடுவார்" என்றவளாய் தாயையும் தங்கையையும் வீட்டினுள்ளே அழைத்துச் சென்றாள்.
கருப்பண்ணசாமி கோவிலில் அன்றிரவு நடக்கவிருக்கும் கொடை விழாவிற்காகத் தான் வந்திருக்கிறார்கள் இருவரும்.
மேற்கு தொடர்ச்சி மலையில் நடைபெறும் சிறுதெய்வ வழிபாட்டு விழாவினை கொடை விழா என்று கூறுவர்.
காலை கால்நடுதல் என்ற சடங்குடன் ஆரம்பிக்கும் கொடை விழா இரவு சாமக்கொடை சடங்குடன் நிறைவுப் பெறும். சாமக்கொடை நிகழ்வில் பங்கு கொள்வதற்காக வந்திருக்கிறார்கள் இருவரும்.
கொடை விழாவிற்காகப் பட்டுப் பாவாடையும் தாவணியும் தங்க ஆபரணங்களும் அணிந்தவளாய் பேரழகியாய் கிளம்பியிருந்தாள் கோதை. அவளுடன் அவ்வீட்டினர் அனைவரும் பட்டாடை உடுத்தியவர்களாய், அண்டை வீட்டார் மற்றும் உற்றார் உறவினர் படைசூழ கிளம்பியிருந்தனர்.
அருவியின் சத்தத்துடன் சலசலத்துச் செல்லும் ஓடை நீரின் ஓசையும் செவிகளை நிறைக்க, வெண்ணிலா பூரணையாய் வெளிச்சமளித்தாலும் கையினில் தீப்பந்தம் ஏந்தியவர்களாய் கருப்பண்ணசாமியின் கோவிலை நோக்கிச் சென்றிருந்தனர்.
கருப்பண்ணசாமி சிலைக்கருகே செல்லச் செல்ல, உறுமி மேளச் சத்தத்தையும் மீறி மக்கள் கூட்டத்தினரிடையே ஏற்பட்ட சலசலப்புச் சத்தம் இவர்களின் செவியைத் தீண்டியது.
இன்னும் அருகே செல்ல, மேளதாள ஓசைகள் தடைப்பட்டு நிற்க, மக்களின் சலசலப்புச் சத்தம் அதிகரித்திருந்தது.
திடீரென்று ஒருவன் அலறும் சத்தமும் கேட்க, அங்கே என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள, விறுவிறுவென விரைவாக நடந்து கோவிலை அடைந்தனர் அனைவரும்.
அங்கே ஆஜானுபாகுவாய் அமர்ந்திருந்த கருப்பண்ணசாமி சிலையின் முன்னே ஆறடி உயரமுடைய ஒருவன், கோபத்துடன் ஒருவனை அடித்துக் கொண்டிருந்தான். அடிவாங்கியவன் தான் வலி தாங்காது அலறியிருந்தான்.
இதனைப் பார்த்த கோதைக்கு அந்த ஆறடி உயரமுடையவன் அக்கிரகாரனாய் தெரிய, 'யார் இவர்? கோபக்கார கருப்பசாமி போன்று இருந்து கொண்டு, தனது பலத்துக்கு நிகரானவரிடம் சண்டையிடாது அப்பாவியைத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறாரே?' மனத்தினுள் நினைத்துக் கோபம் கொண்டவளாய்,
அந்த ஆறடி ஆண்மகன் மற்றவனை அடிப்பதற்கு இடையில் தடுத்தவாறு சென்று நின்றாள்.
"தாங்கள் செய்வது அறமற்ற செயல்!" என்று அவனை முறைத்தவாறு உரைத்தாள்.
வெண்ணிலவின் ஒளி அவனது முகத்தில் பட்டுத் தெறித்துப் பொன்னாய் அவன் மேனியை ஜொலிக்கச் செய்ய, அவனது ஒளி பொருந்திய முகத்தையும், திண்ணிய தோள்களையும், அரிவாள் மீசையையும், பவளம் போன்ற உதடுகளையும் பார்த்தவளாய் அவனது தீட்சண்யமான கண்களை ஏறிட்டாள். அவனைக் கண்டதும் நெஞ்சுக்குள் ஏற்பட்ட புதுவித உணர்வை, அவன் மீது உண்டான கோப உணர்வில் உணராது இருந்தாள்.
தனக்கு முன்னே அழகு மங்கையொருவள் கோபக்கனல் வீசியவாறு பழிச்சொல் கூறியதை ஒற்றைப் புருவம் உயர்த்தியவனாய், 'யாரிந்த ராங்கி ராக்காயி?' என்ற கேள்வியுடன் பார்த்திருந்தான் அவன்.
இவன் பதில் சொல்லும் முன்பே, அடி வாங்கியவன் பயந்து நடுங்கியவாறு தனது கையில் இருந்த நகைப் பெட்டகத்தைக் கொடுக்க, அதை வாங்கியவனாய், தனக்கு அருகில் நின்ற வயது முதிர்ந்த பெண்மணியிடம் கொடுத்தவன், "இந்தாருங்கள் அம்மா! தங்களின் வீட்டிலிருந்து களவுப் போன நகைப் பெட்டகம். இவன் தான் களவாடியவன் என்று தாங்கள் என்னிடம் புகார் அளித்த போதே கண்டுபிடித்து விட்டேன். கருப்பண்ணசாமியின் முன்பு இவனைத் தண்டிப்பதற்காகவே காத்திருந்தேன்" என்றவனாய் கோதையிடம் திரும்பியவன்,
"எம் காவலில் அறமற்ற செயலை எவர் செய்தாலும் கடுமையான தண்டனை விதிக்கப்படும்" என்றான்.
"இந்நாட்டு மக்களைத் தண்டிக்கத் தாங்கள் யார்? அதற்கு அரசர் இருக்கிறார்! அம்முடிவை எடுக்க அரசவை இருக்கிறது! வருவோர் போவோர் எல்லாம் சட்டத்தைக் கையிலெடுத்தால் நாட்டில் நீதி நிலைக்குமா?" இன்னும் நீங்காத அக்கினிப்பார்வையுடன் கேட்டிருந்தாள்.
"கோதை! யாரிடம் பேசுகிறாய் என்று நினைவிருக்கட்டும்! என் தோழன் அவன்! இந்த ஊரின் முதன்மை காவலன்! அரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன்! இந்தச் சோலை வனத்தில் தனித்து எந்த முடிவும் எடுக்கக் கூடிய அதிகாரத்தை எம் தோழனுக்கு வழங்கியிருக்கிறார் அரசர்! அவனை எதிர்த்து இது வரை அரசரே கேள்வி கேட்டதில்லை" என்று கோபமாய்க் கூறியவாறு வந்து நின்றான் மரகதத்தின் கணவன் வீரபத்திரன்.
"அரசரிடம் இவ்வழக்கை எடுத்துச் சென்றால் இவன் உயிருடனே இருக்க மாட்டான். இவனை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது. கருப்பண்ணன் ஒரு தீர்ப்பு வழங்கினால் அதில் நிச்சயமாய் நியாயம் இருக்கும்" அவளது தந்தை அப்பொழுது தான் அங்கு வந்தவராய் நடப்பதைப் பார்த்து கோதையிடம் உரைக்கவும் கோபம் தணிந்தவளாய்,
"யாராய் இருந்தாலும் தவறு என்று மனத்தில் பட்டதைக் கேட்பதில் தவறில்லையே!" அவனது கூரிய விழிகளை நேர்கொண்டு சந்தித்தவளாய் கூற, இது நாள் வரை தன்னை நேர் கொண்டு எப்பெண்ணும் பார்த்திடாத போது, தைரியமாய்த் தன்னை எதிர்கொண்ட அவளின் பார்வையில் வீழ்ந்தவனாய், தானாய் அவனிதழ் சிரிப்பில் விரிய, கன்னத்தில் விழுந்த குழியில் விழுந்தாள் அவள்.
மேளத்தாளங்களோடு கொடை விழா மீண்டும் தொடங்கவும், அவ்விடத்தின் காவலை மேற்பார்வை பார்த்தவனாய் அங்குமிங்குமாய் நடந்திருந்தவனைத் தொடர்ந்திருந்தன அவளின் கண்கள்.
"யாரக்கா இவர்? இவரைப் பற்றி இத்தனை நாள்களாய் கேள்விப்பட்டதில்லையே" தொடுத்த மாலையைக் கருப்பண்ணசாமியின் காலில் போட்டவளாய் சாமி கும்பிட்டு எழுந்த மரகதத்திடம் கேட்டிருந்தாள் கோதை.
"கருப்பண்ணனைத் தெரியாதா உனக்கு?" எனக் கேட்டாள் மரகதம்.
"அக்கா.. காவல்தெய்வ கருப்பண்ணசாமியைப் பற்றிக் கேட்கவில்லை! இந்த ஊரின் முதன்மை காவலரென உன்னவர் போற்றிப் புகழ்ந்தவரைப் பற்றிக் கேட்கிறேன்" என்றாள்.
தங்கையின் கேள்வியில் சிரித்தவளாய், "அவர் பெயரும் கருப்பண்ணன் தானடி!" என்றாள்.
'ஓஹோ! அப்பொழுது நான் கோபக்கார கருப்பசாமி என்று நினைத்தது சரி தானோ' என மனத்தோடு நினைத்துச் சிரித்துக் கொண்டாள் கோதை.
"கருப்பண்ணன் அரசாங்க முதன்மை பாதுகாவலர்களாய் இருந்து வரும் பரம்பரையில் பிறந்தவர்! இவரின் பெற்றோர் பிள்ளை வரம் வேண்டி அவர்களது குலதெய்வமான கருப்பண்ணசாமியை வேண்டி விரதமிருந்து இவரைப் பெற்றார்களாம். அதனால் கருப்பண்ணன் என்றே பெயரிட்டு விட்டனராம். சிறுவயதிலேயே வீர உணர்ச்சியும், இறையுணர்வும் மிகுந்தவராக விளங்கினாராம்" என்றவள் சொன்னதும்,
"இறையுணர்வா?" ஆச்சரியத்துடன் கோதை கேட்க,
"ஆம் கோதை! உன்னைப் போலவே அன்றாடம் இறை வழிபாடு செய்பவர்! இந்தக் கருப்பண்ணசாமியை காணாது அவரது பணியைத் தொடங்க மாட்டாராம்" என்றாள்.
"ஓஹோ! வேறென்ன பெருமைகள் இருக்கின்றன இவருக்கு?" ஆர்வத்துடன் கோதை கேட்டதைப் பார்த்து,
"ஏது நீ கேட்பதைப் பார்த்தால், அவரை எனக்குக் கொழுந்தனாராக்கி விடுவாய் போலிருக்கிறதே!" என்று கேலிச் செய்தாள் மரகதம்.
"அடடா இப்பேர்ப்பட்ட ஊர்க்காரரைப் பற்றி அறியாமல் இருந்திருக்கிறேனே என்று கேட்டால் பரிகாசம் செய்கிறாயே! நீ ஒன்றும் சொல்ல வேண்டாம்" என்று பொய் கோபத்துடன் அவள் முகத்தைத் திருப்ப, அவளின் முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பியவளாய், "அப்படியானால் சரி! சொல்கிறேன் கேள்" என்று தொடர்ந்தாள் மரகதம்.
"பன்னிரண்டு வயதான பொழுதே போர்ப்பயிற்சியில் சிறந்து விளங்கினாராம். குதிரை ஏற்றம், யானை ஏற்றம், மல்யுத்தம், வாள் வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல் மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற அனைத்து வகையான வீர விளையாட்டுகளிலும் சிறு வயதிலேயே தேர்ச்சிப் பெற்றவராய் இருந்தாராம். இது வரை ஐந்திற்கும் மேற்பட்ட போரில் படைத்தளபதியாய் பங்கேற்று வெற்றிப் பெற்றிருக்கிறார்"
கோதை பெருத்த ஆவலுடன் ஆசையாய் இதனைக் கேட்டிருப்பதைக் கண்ட மரகதம், "என்னைப் போல் அல்லாது தந்தை உன் திருமணத்தின் பொருட்டுப் பெரும் கனவு வைத்திருக்கிறார் கோதை! நினைவிருக்கட்டும்" என்று எச்சரிக்கவும்,
கோதை வாய்விட்டுச் சிரித்தவளாய், "என் வாழ்வின் நிகழ்வுகள் அனைத்தும் மாதவன் நிச்சயித்தது அக்கா! சிவநேசன் முத்தரசியின் ஆசிப் பெற்றவரையே மணவாளனாய் ஏற்பேன் என்று சபதமேற்றிருக்கிறேன் அக்கா" என்றாள்.
இவளின் பேச்சினைக் கேட்டவனாய் அருகில் வந்த ஒல்லியான தேகமுடைய இளைஞனொருவன், "மரகதம் அக்கா, யாரு இது? உங்கள் தங்கையா?" எனக் கேட்டான்.
ஏனோ அவனின் பார்வையும் பேச்சும் அவளுள் எரிச்சலை எழச் செய்ய, "அருவியோடைக்குச் சென்று நிலவைத் தரிசிக்கலாம்! வாரும் அக்கா" அவனுக்குப் பதில் கூற விடாது மரகதத்தை இழுத்துச் சென்றாள் கோதை.
நிலவின் ஒளியில் சலசலத்துக் கொண்டிருந்த நீரில் கால் நனைத்தவாறு அமர்ந்தவளாய், "யாருக்கா அது?" என்று கேட்டாள்.
"அவன் கருப்பண்ணனின் அத்தை மகன் செங்கோடன்! இந்த ஊரின் கொல்லன்! உலோகங்களை உருக்கிப் போர் கருவிகள் செய்பவன்! ஏன் அவனிடம் பேச விடாது என்னை இழுத்து வந்தாய்?" எனக் கேட்டாள் மரகதம்.
"அவரின் பார்வையே சரியில்லை அக்கா" என்றவள் சொன்னதும்,
"பாவம் அவருக்குக் கோணல் பார்வையடி! அது உனக்குத் தவறாய்த் தோன்றுகிறது போலும்" என்றாள் மரகதம்.
ஆனால் ஏனோ அவன் மீது கோதைக்கு நன்மதிப்பு உண்டாகவில்லை.
தியானத்திலிருந்த தாமரையின் மூளை, தான் கண்ட காட்சியினில் செங்கோடனை கண்டதும், 'இவன் செந்தாமரை அம்மா மகன் தானே' என்று நினைத்திருந்த அதே சமயம் மாதவனின் மூளையும், 'இவர் இப்ப நாம பார்த்த பூசாரி தானே' என்று நினைத்திருந்தது.

Previous thread
Next thread