- Joined
- Sep 16, 2024
- Messages
- 738
- Reaction score
- 4,423
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 20
"தாங்கள் தான் அதிவீரபராக்கிரமரான கருப்பண்ணரோ?" புருவத்தை உயர்த்தியவாறு தனக்கு முன்னே நின்று அலட்சியமாய்க் கேட்டிருந்த கோதையை ரசித்த அவனது கண்கள் அவளின் கையைப் பற்றித் தன்னருகே இழுத்திட,
தன் மீது பூ போல் விழுவாள் என்று எண்ணியிருந்தவனின் நெஞ்சின் மீது பாராங்கல் மோதிய உணர்வு உண்டாக, பட்டெனக் கண்களைத் திறந்து பார்த்தான் கருப்பண்ணன்.
"எதற்காக உன்னை எழுப்ப வந்த என் கையைப் பிடித்து இழுத்தாயடா?" அவன் மீதிருந்து எழுந்தவனாய்க் கேட்டிருந்தான் வீரபத்திரன்.
வீரபத்திரனின் வீட்டிற்கருகே தான் கருப்பண்ணனின் இல்லம் இருக்கிறது. பால்ய வயதிலிருந்தே உற்றத் தோழமைகளாய் வளர்ந்து வந்தவர்கள் இவர்கள்.
"அடடே கனவா?" என்று சத்தமாய்ச் சொல்லியவாறு கருப்பண்ணன் எழவும்,
"என்னது கனவா? எந்தக் கனவுக்கன்னியை நினைத்து என்னை இழுத்து விட்டாயடா?" சிரித்தவாறு கேலியாய்க் கேட்டிருந்தான் வீரபத்திரன்.
தோழனின் கேலியில் மரக்கயிற்றுக் கட்டிலிலிருந்து எழுந்து அமர்ந்தவனாய் கருப்பண்ணன் நாணப்புன்னகை சிந்தவும், "என்ன ஒரு அதிசயம்! நெருப்புப் பூக்கள் சிந்தும் இக்காந்த கண்களில் எக்காலத்திலும் காதல் பூக்கள் பூக்காது என்றுரைத்த என் நண்பனின் கண்களில் காதல் பொங்கித் ததும்பி வழிகிறதே! யாரவள்? கல்லைக் கனியாக்கிய அந்தக் காரிகை யாரோ?" எனக் கேட்டுச் சிரித்திருந்தான் வீரபத்திரன்.
தோழனின் பேச்சில் மேலும் கன்னங்கள் சிவக்கச் சிரித்தவனாய், "நேற்று தான் என் வாழ்நாளில் முதல் முறையாகப் போர்க்களம் சென்றது தவறு என்று நினைத்தேன் வீரா" என்றான் கருப்பண்ணன்.
"என்னது? போர்க்களம் சென்றது தவறு என்று நினைத்தாயா? ஓஹோ போர்க்களத்தில் அல்லாது பூக்களத்தில் புரண்டிருக்க வேண்டுமென்ற ஆவலும் வந்து விட்டதோ?" மேலும் அவன் கேலிச் செய்யவும்,
சிரிப்புடன் விளையாட்டாய் அவனின் கழுத்தை வளைத்து முதுகில் அடித்திருந்தான் கருப்பண்ணன்.
"உன்னுடைய திருமண விழாவிற்கு வராது மன்னரின் ஆணைக்கிணங்க போர்க்களத்திற்குச் சென்றேன் அல்லவா? நேற்று உன் மச்சினியைக் கொடை விழாவில் கண்டப் பிறகு, அன்றே உன் திருமண விழாவில் அவளைப் பார்த்திருந்தால் இந்நேரம் என் மனையாளாய் வீட்டில் வீற்றிருப்பாளே என்னவள் என்று மனம் அடித்துக் கொள்வதைத் தடுக்க முடியவில்லை வீரா" கண்களில் காதல் பொங்கக் கூறியிருந்த இந்தக் கருப்பண்ணன் அவனுக்கு முற்றிலும் புதியவனாய்த் தெரிந்தான்.
பிறந்து வளர்ந்த நாளிலிருந்து போர்க்கலைகளையும் போர்க்களத்தையும் தவிர வேறெதைப் பற்றியும் எண்ணளவிலும் நினையாத என் நண்பனா இது! அதிசயமும் ஆச்சரியமுமாக அவனது முகப்பாவனைகளைப் பார்த்திருந்த வீரபத்திரன்,
"உன்னை மணாளனாகப் பெறும் எப்பெண்ணும் பாக்கியசாலி என்று பலமுறை மரகதத்திடம் கூறியிருக்கிறேன். எங்கள் கோதை பாக்கியசாலி கருப்பா" பெரும் மகிழ்வுடன் தனது அனுமதியையும் சம்மதத்தையும் இவ்வாறாக உரைத்திட,
"நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்குமுள்ள ஒருவளை மணம் செய்து கொள்ளப் போகும் நான் தான் பாக்கியசாலி வீரா" கண்களில் கனவு மின்ன உரைத்த நண்பனைப் பார்த்துச் சிரித்திருந்தான் வீரபத்திரன்.
"கண்டதும் காதலா கருப்பா" வினவினான் வீரபத்திரன்.
"இல்லை என்று தான் நானும் நினைத்தேன். ஆனால் அப்படித் தான் போலும். இல்லையென்றால் இளவரசரிடம் அவ்வாறு பேசியிருப்பேனா?" தன்னையே கேட்டுக் கொண்டவனாய் உரைத்தவனை,
"பித்துப் பிடித்தவர்கள் தான் தனக்குத் தானே பேசிக் கொள்வார்கள் கருப்பா! காதல் பித்துப் பிடித்து விட்டதா உனக்கு? இளவரசரிடம் நேற்று இவ்வாறு தான் பிதற்றிக் கொண்டிருந்தாயா?" சிரித்தவாறு கேட்டிருந்தான்.
"இளவரசர் தான் என்னிடம் பிதற்ற வந்தார்" என்றவன் சொன்னதும்,
விளையாட்டுப் பேச்சைக் கைவிட்டவனாய் தீவிரமான குரலில், "என்னது? இளவரசர் பிதற்றினாரா? ஏதும் பிரச்சினையா கருப்பா?" அரண்மனைக் காவலனாய் உருமாறியவனாய்க் கேட்டிருந்தான் வீரபத்திரன்.
இல்லை எனத் தலையசைத்தவனாய், "நேற்று கோதையின் பார்வை என் பின்னேயே தொடர்ந்த வண்ணமிருந்தது வீரா! இளவரசர் வந்த பிறகு அவரின் பின்னோடேயே காவலில் ஈடுபட்டிருந்த பொழுதிலும் என்னவளின் என் மீதான பார்வையை உணர்ந்து தான் இருந்தேன். இளவரசரின் பார்வையும் அவளைத் தொடர்ந்ததைப் பார்த்ததும் எனக்குள் பொங்கிய கோபத்தினை அடக்கவியலாமல்" என்று அவன் நிறுத்தவும்,
"அடக்கவியலாமல் இளவரசரை ஏதேனும் செய்து விட்டாயா என்ன?" பதட்டத்துடன் கேட்டிருந்தான் வீரபத்திரன்.
கருப்பண்ணனுக்குக் கோபம் உண்டானால் என்ன செய்வான் என்று தெரிந்ததினால் இவ்வாறு கேட்டிருந்தான்.
"இல்லை" என்று சிரித்தவனாய், "இளவரசரிடம், 'கோதை எனக்கு நிச்சயிக்கப்பட்டவள், என் மணவாட்டியாகப் போகிறவள்! பிறன் மனை நோக்குவது குற்றமல்லவா இளவரசே!' என்றுரைத்து அவரின் பார்வையை மடைமாற்றி விட்டேன்" என்றான்.
"அடேய் கருப்பா! இது அந்தப் பெண்ணிற்குத் தெரிந்தால் என்னவாகும்?" என்றவாறு வாய்விட்டுச் சிரித்திருந்தான் வீரபத்திரன்.
"அவளிடம் பேசும் வாய்ப்பு அமையவில்லை நேற்று. ஆயினும் இவள் தான் என்னவளென்று என் உள்ளுணர்வு அறுதியிட்டுக் கூறுகிறது வீரா!" தீவிரமான குரலில் உரைத்திருந்தான் கருப்பண்ணன்.
"கோதை என் மகளுக்கு இணையானவள்! உன்னைத் தவிர வேறு யாரவளுக்குச் சரியான இணையாக இருக்க முடியும். எம் புகுந்த வீட்டாரிடம் நான் பேசுகிறேன்" என்றான்.
தோழனிடம் இப்பொறுப்பை ஒப்படைத்த பின்பு மனம் நிம்மதியடைய, மகிழ்வுடன் தோழனை கட்டியணைத்துக் கொண்டான் கருப்பண்ணன்.
கொடை விழா முடிந்த கையோடு நடைபயணத்தைத் தொடர்ந்திருந்த கோதை குடும்பத்தினர், காலை வீட்டை அடைந்ததும் சிறிது நேரம் உறங்கி எழுந்தவர்கள், மறுநாள் மார்கழி முதல் நாள் என்பதால் திருப்பாவை பூஜைக்கான ஆயத்த பணியை இன்றே செய்யத் தொடங்கியிருந்தனர்.
திருப்பாவை
பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய பாசுரங்களே திருப்பாவை என்றழைக்கப்படுகிறது. இந்நூல் முப்பது பாடல்களாலானது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தின் 474ஆவது பாடல் தொடங்கி 503 வரையுள்ள பாடல்களைத் திருப்பாவைப் பாடல்கள் என்கின்றனர்.
மார்கழி மாதம் முதல் நாள் தொடங்கி முப்பது நாளும் ஒவ்வொரு பாசுரங்களாகத் திருப்பாவையைத் தினமும் பாடினால் திருமணத் தடை நீங்கி, மனத்திற்குப் பிடித்த வரன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆண்டாள் இவ்வாறு நோன்பிருந்து தான் நாராயணனை மணந்து கொண்டால் என்பதால் கன்னியர் இந்நோன்பிருப்பர்.
இம்முறை திருப்பாவை நோன்பு நோற்க முடிவு செய்திருந்தாள் கோதை.
கண்ணனே மணாளனாக வேண்டுமெனத் திருப்பாவைப் பாடி தொழுத கோதையைப் போல் நானும் எனக்கானவரை மணக்க அருள் புரிய வேண்டும் மாதவாயெனத் தனது வேண்டுதலை வைத்து நோன்பு நோற்றத் தொடங்கினாள் கோதை.
மார்கழி மாதத்தில் பாவை நோன்பு நோற்கும் கன்னியர், விடியற்காலை முன்பே எழுந்து, பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர்.
அவ்வாறாக மார்கழி முதல் நாளில் விடியற்காலையில் நீராடிவிட்டு தோழியருடன் மாதவப் பெருமாள் கோவிலுக்குச் சென்று, மாதவனுக்கு மாலைச் சாற்றி அன்றைய நாளுக்கான பாடலைப் பாடினாள் கோதை.
மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால்,
நீராடப்போதுவீர், போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வ சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏர் ஆர்ந்தகண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச்செங்கண், கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோரெம்பாவாய்.
ஆழ்ந்த பக்தியுடன் இப்பாடலைப் பாடியவாறு வந்தவளின் மனக்கண்ணில், கார்மேனிச் செங்கண், கதிர்மதியம் போல் முகத்தான் என்ற வரிகளில் கருப்பண்ணனின் உருவம் மூடிய விழிகளுள் வந்து நிற்க, பாடலைப் பாடி முடித்த மறுநொடி, தன்னை மீறி கண்ணா என்று கருப்பண்ணனை அழைத்தவாறு கண்களைத் திறந்திருந்தாள் கோதை.
அவளருகில் அமர்ந்திருந்த தோழி, "என்னாயிற்று கோதை!" என்று கேட்டதும், "மாதவனைக் கண்ணா என்று அழைத்தேன்" என்றவளின் மனத்தில் கண்ணனாய் நின்றிருந்தான் கருப்பண்ணன்.
அடுத்து வந்த நாள்களில் விரதமிருந்து பூஜை செய்யும் போதெல்லாம் அவளின் கண்களுள் கண்ணனாய் கருப்பண்ணனே காட்சி கொடுக்க, அவளையும் அறியாமல் மெல்ல மெல்ல அவளின் மனத்தில் அழியா உயிராய் உருவாய் உருமாறிக் கொண்டிருந்தான் கருப்பண்ணன்.
"என்னை மீறி கருப்பண்ணனின் மீது செல்லும் என் மனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறேன் அரசிமா! என் ஆசை சரி தானா? என்னவர் இவர் தானா?" என்று அன்றாடம் முத்தரசியிடம் கேட்டு பணிந்திருந்தாள்.
ஆனால் சிவநேசனிடமிருந்தோ முத்தரசியிடமிருந்தோ அவளுக்கு எவ்வித உத்தரவோ அல்லது சம்மதமோ வராது போக, தன்னை மீறி கருப்பண்ணனிடம் செல்லும் மனத்தை எண்ணி தவித்துப் போனாள் பெண்.
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்று ஏலோர் எம்பாவாய்!
இருபத்தொன்பதாம் நாள் பாடலைப் பாடியவளாய்,
"இந்தப் பிறவியில் மட்டுமன்றி இனி நாங்கள் எடுக்கவிருக்கும் ஏழேழ் பிறவிகளிலும் நாங்கள் உனக்கு உறவானவர்களாக இருக்க வேண்டும், மேலும் உனக்கே நாங்கள் பணிவிடை புரியவேண்டும். இந்த இரண்டு விருப்பங்களைத் தவிர, வேறு எந்த விருப்பங்கள் எங்களுக்கு வந்தாலும் அதனை மாற்றி எங்களுக்கு அருள் செய்ய வேண்டும் மாதவா" என்று அப்பாடலின் பொருளை உரைத்தவாறு வேண்டியிருந்த கோதையின் கண்களில் நீர் வழிந்தது.
'கருப்பண்ணன் மீதான என் விருப்பம் சரியா மாதவா?' கண்களை மூடியவாறு மனத்திற்குள் கேட்டிருந்தவளின் விழிகளை நிறைத்துக் கண்ணீர் வழிய, கண் திறந்து மூலஸ்தானத்தில் மாதவப் பெருமாளைப் பார்த்தவளின் பார்வையில், மாதவப் பெருமாள் ஒரு நிமிடம் கருப்பண்ணசாமியாய் காட்சி கொடுத்து அவளின் கேள்விக்கான பதிலை அளித்திருந்தார்.
மகிழ்வும் நெகிழ்வுமாய், "ஓம் நமோ நாராயணா" என்று உச்சரித்தவாறு கண்களைத் துடைத்தவளாய் வலது பக்கம் திரும்பியவளின் முன்னே நின்றிருந்தான் கருப்பண்ணன்.
இருவரது கண்களும் சந்தித்த நொடி, நெஞ்சில் காதல் கசிந்துருக, உள்ளங்கள் உறவாட துடித்திட, இருவரும் மெய் மறந்து ஒருவரையொருவர் நேருக்கு நேர் நோக்கியவாறு நின்று விட்டனர்.
கோவில் மணியோசையில் தன்னிலை பெற்றவர்களாய் இருவரும் மற்றவரைப் பார்வையில் தழுவிய வண்ணம் மெல்ல நடையிட்டு எதிரெதிராய் வந்து நின்றனர்.
"இது நமக்கு இரண்டாம் சந்திப்பு! ஆனால் பன்னெடுங்காலமாக உன்னுடன் உறவாடி வாழ்ந்து பிரிந்தது போன்ற உணர்வை உன்னுடனான முதல் சந்திப்பிற்குப் பின்பான இந்த இருபத்தெட்டு நாள் பிரிவில் உணர்ந்தேன் கோதை. உன் மனத்தில் நான் இருக்கிறேனா என்ற கேள்வியில் அன்றாடம் உறக்கம் தொலைத்து அலைகிறேன். என்னை உன்னவராய் ஏற்றுக்கொள்ள உனக்குச் சம்மதமா கோதை" தனது காதலை முன்மொழிந்திருந்தான் கருப்பண்ணன்.
"யாம் நோன்பினால் நலிந்துள்ளதாய் யாவரும் நினைக்கின்றனர். உண்மை என்னவென்றால் முப்பொழுதும் தங்களின் நினைவு மட்டுமே எனை ஆட்கொண்டு தந்த பசலை நோயினால் வாடியிருக்கிறேன் கண்ணா! மேலும் நான் மெலிந்து என் இடையணி கழலும் முன் என்னை உன்னவளாக்கிக் கொள்ளுங்கள் கண்ணா" அவனது கண்ணோடு கண்ணை நோக்கியவாறு உரைத்தவள், நெஞ்சம் படபடக்க நாணம் சூழ முகம் செவ்வானமாய்ச் சிவக்க, மறுநொடி அங்கிருந்து விறுவிறுவென அகன்று சென்றிருந்தாள்.
'கண்ணா' மெல்ல சத்தம் வராது வாயசைத்து உரைத்தவனின் இதழ்கள் நாணத்துடன் முறுவலித்தன.
முகத்தில் மகிழ்ச்சி பொங்க, கண்களில் காதல் ஒளிர, கம்பீரமாய் மீசையைத் திருகியவனாய் அவள் செல்லும் பாதையைப் பார்த்திருந்தான் கருப்பண்ணன்.
அதே பொழுது அங்கே அவளின் தந்தை முருகையன், செங்கோடனின் ஜாதகம் கோதைக்குப் பொருந்தி வருவதாய் நீலாம்பிகையிடம் உரைத்திருந்தார்.

Previous thread
Next thread