- Joined
- Sep 16, 2024
- Messages
- 738
- Reaction score
- 4,423
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 21
வீரபத்திரனிடம் கருப்பண்ணன் கோதை மீதான தனது விருப்பத்தைக் கூறிய மறுநாள், வீரபத்திரனின் வீட்டிற்கு வந்திருந்தார் முருகையன்.
மார்கழி முதல் நாளான அன்று தான் கோதை விரதத்தைத் தொடங்கியிருந்தாள்.
அன்று வீரபத்திரனைக் காணவென அவன் இல்லத்திற்குச் சென்ற முருகையன், "கோதைக்கேற்ற வரனை தேடிக் கொண்டிருக்கிறேன் மருமகனே! சோலைவனத்தில் வசிப்போர் பெரும்பாலும் அரசாங்க படை வீரர்களாகவும் காவலர்களாகவும் பணிபுரிபவர்கள் என்று அறிவேன். ஆனால் இறைத் தொண்டாற்றும் ஆண்மகன் தான் அவளுக்கு இணையாக இருப்பார் என்று தேடிக் கொண்டிருக்கிறேன். இங்கு அப்படி எவரேனும் இருந்தால் அவரின் ஜாதகச்சுவடியை வாங்கித் தாருங்கள்" என்றவர் சொன்னதும்,
"என்ன மாமா, காவலனான என்னிடமே காவலன் மாப்பிள்ளையாக வேண்டாம் என்கிறீர்?" கர்ஜிக்கும் குரலிலேயே கேட்டிருந்தான்.
"அப்படியல்ல மாப்பிள்ளை! கோதையின் ஜாதகப் பலனும் மரகதத்தின் ஜாதகப் பலனும் வெவ்வேறானது!
சிவநேசன் முத்தரசியைப் பற்றி இங்கு அறியாதார் எவருமில்லை. உலோகத்தினாலான இருவரின் சிலைகளையும் எம் பரம்பரையினர் இங்குள்ள சிவன் கோவிலுக்குத் தானமாய் அளித்திருக்கின்றனர். அந்தளவிற்கு மக்களின் மனத்தில் தெய்வமாக வாழ்பவர்கள் அவர்கள்.
இப்பொழுது வரையில் கணவனின் ஆயுள் காக்கும் சக்தியை தர்மபத்தினிக்கு முத்தரசி வழங்குகிறாள் என்று நம்பிக்கையுடன் அவளை வணங்கும் பெண்கள் எண்ணற்றோர் நம் நாட்டில் உள்ளனர்.
அப்படியான ஜாதக அமைப்பில் பிறந்த கோதையைச் சிவநேசனுக்கு நிகரான ஜாதக அமைப்புடைய பக்திமானுக்கு இறைப்பணிப்புரிபவனுக்கு மணம் புரிந்து வைத்தால் தான் அவளின் பெயரும் முத்தரசியின் பெயரைப் போல் காலம் காலமாகத் நிலைத்து நிற்கும்!
அவளுக்கான ஜாதக அமைப்பில் சற்று பிசகினாலும் தவறான வரன் அமையும் பலன் நிறையவே இருக்கிறது. அதனாலேயே கோதைக்கேற்ற வரனை கண்ணும் கருத்துமாய்த் தேடிக் கொண்டிருக்கிறேன்" என்றார்.
முதல் முறையாகக் கோதையின் ஜாதக அமைப்பைப் பற்றிக் கேட்டறிந்த வீரபத்திரனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதே சமயம் சிவநேசனைப் பற்றி வீரபத்திரன் அறிந்திருந்த வரையில் அதே போலான குணாசதியங்களும் இறையுணர்வும் கருப்பண்ணனுக்கு இருப்பதாய், ஈசனுக்கு நித்திய பூசை செய்யும் தனது தம்பியான வீரய்யன் சொல்லி பலமுறை கேட்டிருக்கிறான் வீரபத்திரன். அதனால் கருப்பண்ணனின் ஜாதகம் நிச்சயமாகக் கோதைக்கு ஒத்துப் போகும் என்ற நம்பிக்கையும் உண்டானது.
ஆயினும் இப்பொழுது கருப்பண்ணனைப் பற்றி உரைத்தால், தனது மாமனார் ஒப்புக்கொள்ள மாட்டார் என்று சிந்தித்தவனாய் வீரபத்திரன் அமர்ந்திருக்க,
இவர்களின் பேச்சைக்கேட்டிருந்த மரகதம், "இந்த ஊரில் இருப்பதே மூன்று கோவில்கள் தான். அருவியோடை அருகே சிவன் கோவிலும், கருப்பண்ணசாமி கோவிலும், நரசிம்மப் பெருமாள் கோவிலும் தான் இருக்கிறது. சிவன் கோவிலில் இவரின் தம்பி வீரய்யனும், நரசிம்மப் பெருமாள் கோவிலில் செங்கோடனும் தான் தினசரி பூசையினைச் செய்கிறார்கள். இருவரின் ஜாகதச்சுவடியையும் பார்க்கிறீர்களா தந்தையே" என்று கேட்டாள்.
மனைவியின் பேச்சைக் கேட்டதும், 'இவளிடம் கருப்பனின் காதலைப் பற்றிச் சொல்லாமல் விட்டது தப்பாகிப் போனதே! விட்டால் இவளே அவளின் தங்கையை இருவரில் எவருக்கேனும் மணம் முடித்து வைத்திடுவாள் போல' மனத்திற்குள் எண்ணியவனாய் அவளை முறைத்திருந்தான் வீரபத்திரன்.
"மாமா, இவ்வூரில் கோதைக்குப் பொருந்தி வரும் ஜாதகச்சுவடிகளை எல்லாம் சேகரித்து நாளை நான் மரகதத்திடம் கொடுத்து அனுப்புகிறேன்" என்றான் வீரபத்திரன் .
சோலைவனத்து யுவன்களின் ஜாதகச்சுவடிகளுடன், கருப்பண்ணனின் சுவடியினையும் சேர்த்து அனுப்பி விட்டுப் பேசலாம் என்று நினைத்தவனாய் இவ்வாறு உரைத்திருத்தான் வீரபத்திரன்.
அவ்வாறாக ஜாதகச்சுவடிகளை மனைவியின் மூலம் மாமனாரிடம் சேர்ப்பித்தும் இருந்தான்.
ஆனால் அடுத்த வந்த நாள்களில் அரண்மனையில் அசாதாரணமான சூழ்நிலை நிலவவும் வீரபத்திரனும் கருப்பண்ணனும் அங்கே ஓய்வில்லாது உழைக்க வேண்டியதாகிப் போனதால், மேலும் தொடர்ந்து கோதைப் பற்றி ஏதும் பேசும் நேரமில்லாது போனது. அதனாலேயே கருப்பண்ணனிடம் இவ்விஷயத்தைப் பகிராமல் இருந்து விட்டான் வீரபத்திரன். மாமனாரிடமும் மனைவியிடமும் மேலும் இதைப் பற்றிப் பேச நேரமற்று அரண்மனையிலேயே இருந்தான்.
அரண்மனையில் சுமூகச் சூழல் வந்த அன்றே, இதற்கு மேலும் தாமதிக்க இயலாதெனக் காதல் நெஞ்சம் படுத்திய பாட்டில் ஓடோடி வந்த கருப்பண்ணன் கோதையைச் சந்தித்துத் தனது காதலை முன்மொழிந்திருந்தான்.
கருப்பண்ணனின் காதலை ஏற்ற கோதையன்று தனது வாழ்நாளிலேயே இல்லாத அளவுக்குப் பெரும் மகிழ்வான மனநிலையில் சுற்றிக் கொண்டிருந்தாள்.
அந்நேரம் அவளிடம் முருகையன், செங்கோடனின் ஜாதகம் அவளுக்குப் பொருந்தி வருவதாக உரைக்க, பதறிப் போனாள் பெண்.
என்ன சோதனை இது? எனக்கானவரைத் தான் என் மனம் விரும்ப வேண்டுமெனத் தானே இந்நோன்பிருந்து மாதவனிடமும் முத்தரசியிடமும் கேட்டிருந்தேன். ஏன் இப்படி என் மனத்தை வேறொருவனை நோக்கி போக வைத்தார்கள் என்று முத்தரசி மீதும் சிவநேசன் மீதும் கோபம் கொண்டவளாய், கருப்பண்ணனை விரும்பும் நெஞ்சை மாற்றவும் இயலாது, அழுதவளாய் உறங்கியிருந்தவளின் கனவில், சிவநேசன் முத்தரசி இருவரும் மாலையை எடுத்துக் கொடுக்க, கருப்பண்ணன் இவளின் கழுத்தில் மாலைச் சூடுவதாய்க் கண்ட காட்சியில் இன்ப அதிர்வுடன் கண் விழித்திருந்தாள் கோதை.
"இதன் பொருள் யாது? கருப்பண்ணன் தான் எனக்கானவர் என்பது தானே இதன் அர்த்தமாகிறது! பின்பு ஏன் தந்தை இவ்வாறு கூறுகிறார்? அவரின் கணிப்பு என்றும் பொய்த்ததில்லையே! இனி நான் என்ன செய்ய வேண்டும்" வாய் விட்டே புலம்பியவளாய் குழப்பத்துடன் படுத்திருந்தாள் கோதை.
மறுநாள் விடியற்காலையில் கோவிலில், குழப்பமான மனநிலையுடன் மாதவன் முன்பு அமர்ந்திருந்தாள் கோதை.
'என் தந்தையின் கணிப்பு பொய்யா அல்லது கனவில் நான் கண்ட காட்சி பொய்யா? எதை நான் நம்புவது? இனி எது நடந்தாலும் கண்ணன் தான் என் மணவாளன் என விரும்பியவரை கைப்பிடிப்பது தானே என் தர்மமாகும் மாதவா' என்றிவள் போராட்ட மனத்தோடு கேட்டிருந்த நொடி,
'கோதை' என்ற அழைப்புக் காதில் கேட்டுத் திடுக்கெனக் கண்விழித்தாள்.
அவளின் எதிரே மாயக்கண்ணனாய்ப் புன்னகைத்திருந்தான் அவளின் கருப்பண்ணன்.
ஓடோடிச் சென்று அவனது மார்பில் தஞ்சம் புகுந்திடத் துடித்த காதல் மனத்தை அடக்கவியலாது கண்ணீர் சிந்தியவாறு அவனை அவள் பார்த்திருக்க,
"என்னாயிற்று கோதை? ஏனிந்த அழுகை" எனக் கேட்டவனாய் அவளருகில் வந்தவன், அவளின் கைப்பற்றி எழுப்பியவனாய் அருகிலிருந்த நந்தவனத்திற்கு அழைத்துச் சென்றான்.
கண்ணீர் சிந்தியவாறு தலைக் குனிந்தவளாய் அவனது கைப்பற்றி அவன் அழைத்துச் செல்லும் இடத்திற்கு அவன் பின்னோடேயே சென்றிருந்தாள்.
அங்கே சென்றதும் அவளின் முகத்தினைக் கைகளில் தாங்கியவனாய் கண்ணீரைத் துடைத்தவன், "என் பிரிவு உனக்கு அத்தனையாய் வாதையளிக்கிறதா பெண்ணே" எனக் கேட்டான்.
தேம்பி அழுதவளாய் அவன் மார்போடு முகத்தைச் சாய்த்து அணைத்தவள், "என்னை உம்மோடு அழைத்துச் சென்றுவிடுங்கள் கண்ணா. இனி என் வாழ்வில் மணவாளனாய் உங்களை மட்டும் தான் ஏற்பேன் என்று சபதமேற்றிருக்கும் இம்மனத்தை எவரேனும் மடை மாற்றி விடுவரோ என்று அச்சமாக உள்ளது. இப்பொழுதே என்னை உன்னவளாக்கி கொள்ளுங்களேன் கண்ணா" என்று கண்ணீர் உகுத்தாள்.
தன் மீதான அவளின் காதலை எண்ணி நெஞ்சுருகிப் போனவனாய் அவளின் முன்னுச்சியில் முத்தமிட்டு அணைத்தவன், "நான் சூட்டும் மணமாலை தான் உன் கழுத்தை நிறைக்கும் கோதை! வேறெந்த ஆடவனையும் உன்னை நெருங்க விட மாட்டேன். இது இங்கிருக்கும் மாதவனின் மீது ஆணை" என்று வாக்களித்தான்.
அதன் பிறகே சற்று அவள் தன்னிலைப் பெற்று நிற்க, "எங்கே நான் முதல் நாள் பார்த்த அந்த ராங்கி ராக்காயி? என்னோடு எதிர்வாதம் செய்த, கூரிய விழிகளால் என் நெஞ்சை கொய்த்த அந்த ராங்கி ராக்காயியை காணாமல் தவிக்கிறான் உன் கண்ணன்" என்றவனாய் அவளின் தாடையை ஒற்றைக் கையால் பற்றிக் காதல் பார்வை வீச,
இமையைத் தாழ்த்தியவளாய், "எனக்களித்த சத்தியத்தை மீறினால், ராக்காயியாக என்ன, காளியாகவே என்னை கண்பீர்கள் நீங்கள்" கண்களை உருட்டியவாறு எச்சரிக்கும் தொனியில் அவள் கூறியதும்,
"இது தான் என் ராங்கி ராக்காயி" என்றவனாய் அவளின் நெற்றியில் முட்டியிருந்தான்.
அவளும் நாணமும் மகிழ்வும் போட்டிப்போடச் சிரித்திருந்தாள்.
இவர்கள் இங்கே அவர்களின் உலகத்தில் சஞ்சரித்திருந்த அதே சமயம், வீரபத்திரன் வீட்டிற்குச் சென்றிருந்த முருகையன், செங்கோடனின் ஜாதகம் கோதைக்குப் பொருந்தி வருவதாய் வீரபத்திரனிடம் உரைத்திருந்தார்.
"என்னது செங்கோடனின் ஜாதகமா?" பேரதிர்ச்சியுடன் கேட்டவனாய், "ஆனால் நான் அவனின் ஜாதகத்தை உங்களிடம் அன்று தரவில்லையே" எனக் கேட்டான் வீரபத்திரன்.
"செங்கோடனே அவனது தாயாருடன் என் வீட்டிற்கு வந்து தந்து விட்டுப் போனார் மாப்பிள்ளை! கொடை விழாவில் கோதையைக் கண்டதும் பிடித்து விட்டது என்று வந்து பெண் கேட்டுப் பேசினார். பெருமாள் மீது மிகுந்த பக்தி வைத்திருக்கிறார். கொல்லனாகவும் பணிபுரிகிறார்" என்றார் முருகையன்.
அவரின் பேச்சிலேயே கோதைக்குச் செங்கோடனை மணம் முடித்து வைப்பதில் அவருக்கு விருப்பமிருப்பது புரிந்தது வீரபத்திரனுக்கு. இது இப்படி முக்கோணக் காதல் கதையாய்ச் செல்லும் என்று எண்ணியிருக்கவில்லை அவன்.
"மாமா, கேட்கிறேன் என்று தவறாக எண்ண வேண்டாம்! கருப்பண்ணனின் ஜாதகம் பொருந்தவில்லையா?" என்று நேரடியாகக் கேட்டிருந்தான்.
"சிவநேசன் அளவிற்குச் செங்கோடனின் ஜாதகமே பொருந்தி வந்ததால் வேறெந்த ஜாதகத்தையும் பார்க்கவில்லை மாப்பிள்ளை!" என்றார்.
அவரின் கூற்றில் கோபம் பொங்க, "சிவநேசனுக்கு இணையானவன் கருப்பண்ணன் மட்டுமே மாமா! தாங்கள் கேட்டீரே இறைத்தொண்டாற்றும் ஜாதகம். வருடாவருடம் பங்குனி உத்திரத்தன்று காணுங்கள் அவனது இறைச்சக்தியை! அப்பொழுது தங்களுக்குப் புரியும் யார் கோதையை மணக்கத் தகுதியானவர்கள் என்று" சற்றுக் கோபமான தொனியில் உரைத்திருந்தவன்,
"செங்கோடனின் குணம் அறிந்துமா தாங்கள் ஜாதகம் பொருந்துகிறது என்று அவனுக்கு மணம் பேச நினைக்கிறீர்?" என்று கேட்டான்.
"ஜாதகத்தைப் பொருத்தவரை செங்கோடன் நல்லவனாகத் தான் இருக்க முடியும் என்பது எனது கட்டக் கணிப்பு!" என்றவர் சொன்னதும்,
"நிச்சயமாக இல்லை" என்று மறுதலித்துப் பேசியவனாய்,
"அவனைப் போன்ற சுயநலவாதியை, தன்னலத்திற்காகப் பிறர் நலனை கெடுப்பவனைப் பார்க்கவே முடியாது! கருப்பண்ணனின் அத்தை மகன் தான் செங்கோடன். அவனது தந்தை இறப்பிற்குப் பிறகு சிறுவனாய் இவ்வூருக்கு வந்தவன், பால்ய வயதில் எங்களுக்கும் சிநேகிதனாகத் தான் இருந்தான். அப்பொழுதில் இருந்தே எனக்கு அவனை நன்கு தெரியும். அனைவரும் இவனை விடக் கருப்பண்ணனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்த்துப் பொறாமை கொண்டு அவனது அன்னை மூலம் குடும்பத்திற்குள் பிரிவினை ஏற்படுத்தி, இவனது தாய்க்கும் இவனுக்குமெனச் சொத்தை தனிப்பாகங்களாகக் கருப்பண்ணனின் தந்தையிடம் பெற்ற பின்பும், இப்பொழுது நரசிம்மப் பெருமாள் கோவிலின் உரிமையும் அவர்களுக்கானது என்று கூறி, அக்கோவிலையும் பிடுங்க அரசாங்கத்தின் மூலம் முயன்று கொண்டிருக்கிறான்.
அவன் கோழை மாமா! என்றுமே நேரடியாகச் சண்டையிட மாட்டான். முதுகில் குத்துவதில் வல்லவன்" என்றான்.
வீரபத்திரன் கூறியதைக் கேட்டு அதிர்ந்து போனவராய், "அவனளித்த ஜாதகத்தில் அவனை நல்குணாளனாய் தானே கட்டங்கள் காண்பித்தன. என்னுடைய கணிப்பு என்றுமே தவறியதில்லை மாப்பிள்ளை!" சற்று கர்வத்துடனே கூறினார்.
"அப்படியென்றால் எங்கோ தவறு நடந்திருக்கிறது மாமா" என்று யோசித்தவனாய்,
"நீங்கள் நான் அளித்த அனைத்து ஜாதகத்தையும் ஒரு முறை கணித்துப் பாருங்கள் மாமா! அதில் வேறு ஜாதகம் கோதைக்கு இணையாக வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று தோன்றுகிறது" என்று கூறி முருகையனை அனுப்பி வைத்தான் வீரபத்திரன்.
முருகையனிடம் கருப்பண்ணனைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு கோதையிடம் பேசிட நினைத்திருந்தான் வீரபத்திரன்.
கருப்பண்ணனின் ஒரு தலைக் காதல் இரு தலைக் காதலாய் உருமாற்றம் பெற்ற பின்பே கோதையின் திருமணத்தைப் பற்றிப் பேச வேண்டுமென எண்ணித் தான், இப்பேச்சைத் தொடங்காமல் இருந்தான் வீரபத்திரன். ஆனால் இன்று வேறு வழியில்லாமல் கருபண்ணன் பெயரை இழுக்க வேண்டியாகிப் போனது அவனுக்கு.
அடுத்த வந்த நாள்களில், தான் காதலை முன்மொழிந்ததையும் அவள் ஏற்றுக் கொண்டதையும் எவரிடமும், வீரபத்திரனிடம் கூட உரைக்காமலே அன்றாடம் மாதவப் பெருமாள் கோவில் சென்று அவளைச் சந்தித்துக் காதலை அன்பெனும் நீரூற்றி வளர்த்திருந்தான் கருப்பண்ணன்.
வீரபத்திரன் அளித்திருந்த அனைத்து ஜாதகங்களையும் கணித்துப் பார்த்தவராய், செங்கோடனின் ஜாதகமே கோதைக்கு நன்றாகப் பொருந்தி வருவதாய் வீரபத்திரனிடம் உரைத்திட, பெரும் மனக்கவலைக் கொண்டவனாய் கருப்பண்ணனிடம் இதனை உரைத்திருந்தான் வீரபத்திரன்.
இதனைக் கேட்டு அதிர்வுற்றவனாய், "செங்கோடன் ஏதோ சூழ்ச்சி செய்திருப்பதாய்த் தோன்றுகிறது வீரா" என்றான் கருப்பண்ணன்.

Previous thread
Next thread