- Joined
- Sep 16, 2024
- Messages
- 738
- Reaction score
- 4,423
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 4
எப்படியேனும் அவன் புகைப் பிடித்தான் என்று நிரூபித்து விட வேண்டுமென்ற அவசரத்தில் உள்ளே நுழைந்தவள் மெல்லிய கோடாய் அகர்பத்தியின் புகை அந்த வீட்டின் ஜன்னலின் வழியே வெளியே செல்வதைக் கண்டு வாயடைத்து நின்றாள்.
'அய்யய்யோ நாம தான் தப்பா நினைச்சிட்டோமா?' என்று நினைத்தவளாய் கெஞ்சும் கண்களுடன் அவனைப் பார்க்க, அவளைப் பொசுக்கும் கோபத்துடன் நெருப்பாய்ப் பார்த்திருந்தான் மாதவன்.
வீட்டினுள்ளே இருந்த புகையைக் கண்டு நடந்ததைப் புரிந்து கொண்ட விமலா, "தம்பி என் பொண்ணை மன்னிக்கனும். அவளுக்குக் கொரோனா ஜூரம் வந்த பிறகு நுகரும் சக்தியை இழந்துட்டா. அவளால் எதையும் வாசம் புடிக்க முடியாது. உங்க ஜன்னல்ல வந்த புகையைப் பார்த்து தப்பா நினைச்சிட்டா?" மகளுக்காக மன்னிப்பை வேண்டியவாறு விளக்கினார்.
அது வரை இறுகிய முகத்துடன் அவளைப் பார்த்திருந்தவன், அவளுக்கு வாசனை தெரியாது என்று சொன்னதில் அனுதாபம் கொண்டவனாய், "பரவாயில்லங்கமா! ஆனா கொரோனா போய்த் தான் வருஷங்கள் ஆச்சே. இன்னுமா அவங்களுக்கு இந்தப் பிரச்சனை சரியாகலை" எனக் கேட்டான்.
தாமரைக்கு மிகுந்த குற்றயுணர்வாகிப் போனது. என்னவெல்லாம் பேசி விட்டேன் அவரை. தலையைக் குனிந்தவாறு நின்று கொண்டாள்.
"இல்ல தம்பி! திடீர்னு வாசனை தெரியுதுனு சொல்லுவா. அப்புறம் காயச்சல் சளினு வரும் போது போய்டுது. இப்படியே தான் இருக்கு. நிறைய டாக்டர்கிட்ட பார்த்துட்டோம் கேட்டுட்டோம். 'அந்த வைரஸ் நமக்குள்ள தான் உலவிட்டு இருக்கு. ஆனா அதோட வீரியம் குறைஞ்சிடுச்சு. அந்த வைரஸ் தாக்கும் போதெல்லாம் ஏற்கனவே அவளுக்கு இருந்த பாதிப்பை அது அதிகப்படுத்தி விட்டுடுது'னு டாக்டர் சொன்னாங்க. அதுவா சரியாகும்னு சொல்லிட்டாங்க" அவரின் விளக்கத்தில் யோசனையுடன் முகத்தைச் சுருக்கினான் மாதவன்.
"சாரிங்க" தாமரை மன்னிப்புக் கேட்கவும், அவளை நிமிர்ந்து பார்த்தவனாய், "என் மேல எதுவும் பர்சனல் வென்ஜன்ஸ் இருக்கா உங்களுக்கு. ஏன் பார்த்த நாள்லருந்து என் மேல ஏதாவது குத்தம் சொல்லி என்னைக் கடுப்பேத்திட்டே இருக்கீங்க?" என நேரடியாகவே கேட்டிருந்தான் மாதவன்.
"ரெண்டு லேடீஸ் தனியா இருக்கும் போது எங்ககிட்ட தேவையில்லாம நீங்க அட்வாண்டேஜ் எடுத்துக்கக் கூடாதுனு தான் கொஞ்சம் கடுமையா பேசிட்டேன். மன்னிச்சிருங்க" என்றவள் சொன்னதும்,
"என்னைப் பார்த்தா பொறுக்கி மாதிரி தெரியுதாங்க?" இன்னுமே கோபத்துடன் அவன் கேட்டிருக்க,
"யாரா இருந்தாலும் பொண்ணுங்க சேஃப்டிக்காகச் சந்தேகப்படுறது தப்பில்லைங்க" அலட்சியமாக உரைத்தவளாய் அங்கிருந்து சென்றிருந்தாள் தாமரை.
"அய்யோ இவளை வச்சிக்கிட்டு" என்று தலையில் அடித்துக் கொண்டவராய், "நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க தம்பி" என்றவாறு அங்கிருந்து சென்றார் விமலா.
தாமரையும் விமலாவும் புறப்பட்டுச் சென்றதும் கதவை அடைத்தவனாய் பெருமூச்சு விட்டவன், மெத்தையில் அமர்ந்து தனது தாய் வினோதினிக்கு அழைப்பு விடுத்தான்.
அவர் அழைப்பையேற்ற மறுநொடி, "அதெப்படிமா ராங்கித்தனமா சுத்துற பொண்ணுங்களையே எனக்கு எப்பவும் பார்க்கிற நீ" என ஆயாசத்துடன் கேட்டிருந்தான் மாதவன்.
மகனின் கேள்வியில், மறுபுறம் கைப்பேசி இணைப்பில் இருந்த வினோதினி அதிர்ந்தவராய், "என்னடா எதுவும் பிரச்சனையா?" எனக் கேட்டார்.
அந்த வீட்டிற்கு வந்தது முதல் தற்போது வரை தாமரை அவனிடம் சண்டையிட்டதைக் கூறிய மாதவன், "என்னமோ உன்னோட ஃப்ரண்ட்டோட பொண்ணு. நல்லவ, வல்லவ, நாலும் தெரிஞ்சவனு சொல்லி அனுப்புனியே! எனக்குத் தேவையா இதெல்லாம்? நாளைக்கே நான் வீடு மாத்திட்டு போய்டலாம்னு இருக்கேன்" என்றான்.
தாமரையின் தாய் விமலா, அவரது கல்லூரித் தோழியான வினோதினியை பல வருடங்களுக்குப் பிறகு ஏதேச்சையாக ஒரு நாள் அருகிலிருக்கும் புகழ்பெற்ற பெருமாள் கோவிலில் சந்தித்தார். அன்று இருவரும் பரஸ்பரம் தங்களது சுக நலன்களைப் பற்றிப் பேசிய போது தாங்கள் பெற்ற மக்களைப் பற்றியும் பேசினர். அப்பொழுது தான், தாமரைக்கும் மாதவனுக்கும் மறுமணம் செய்து வைக்கலாமே என்ற எண்ணம் எழுந்தது இருவருக்கும். அதன் பிறகு விமலாவும் வினோதினியும் அவரவர் ஜோதிடரிடம் பார்த்து உறுதிச் செய்தனர். ஆனால் தாமரைத் தொடர்ந்து திருமணம் வேண்டாமெனக் கூறுவதாகக் கவலையுடன் வினோதினியிடம் கூறினார் விமலா. சரியாக அச்சமயம் மாதவனுக்கு இங்கே பணியிட மாறுதல் கிடைக்கவும், மாதவனின் தந்தை ரங்கராஜன் தான் மாதவனிடம் விபரங்களைக் கூறி இந்த வீட்டில் தங்கி, தாமரையின் குணநலன்களை அறிந்து கொண்டு திருமணத்திற்கான அவனது கருத்தை உரைக்குமாறு அனுப்பி வைத்தார். பின்னாளில் அவன் ஒப்புக் கொண்டதும் நேரடியாகத் தாமரையிடம் தாங்களே பேசி திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்கலாம் என்று திட்டமிட்டனர் மாதவனின் பெற்றோர்.
"டேய் உன் வயசுக்கு பொண்ணு கிடைக்கிறதே கஷ்டம். கிடைச்ச நல்ல பொண்ணை வேண்டாம்னு போறேன்னு சொல்றியேடா" கவலையுடன் வினோதினி கூற,
"யம்மா நீ திடீர்னு கோவில்ல உன்னோட காலேஜ் ஃப்ரண்ட்டை பல வருஷம் கழிச்சி பார்த்துட்டு வந்து, அவங்க பொண்ணை கட்டிக்கோனு என்கிட்ட சொல்லும் போதே செம்ம கோபம் எனக்கு! இருந்தாலும் பொண்ணைப் பார்க்காம எதுவும் சொல்ல வேண்டாமே, என்னோட புது ஆபிஸ் பக்கமா வேற வீடு இருக்கேனு தான் மண்டைய மண்டைய ஆட்டிட்டு இந்த வீட்டுல தங்க ஒத்துக்கிட்டு வந்தேன். ஆனா இதுக்கு மேல பொறுக்க முடியாதுமா. எனக்கு இந்தப் பொண்ணு வேண்டாம்" கோபத்துடன் உரைத்திருந்தான்.
"மொத தடவை நீ காதலிச்ச பொண்ணை என்ன ஏதுன்னு கேட்காம தானே கல்யாணம் செஞ்சி வச்சோம் உனக்கு. ஒரு வருஷத்துல ஒத்து வரலைனு டைவர்ஸ் வாங்கிட்டு தனிமரமா நின்னவன் தான்! எட்டு வருஷம் ஆச்சு! இப்ப வரை உனக்கு ஏதாவது நல்லது நடந்துடாதானு நாங்க படுற கஷ்டம் புரியாம பேசுறியே டா! நான் பார்க்கிற பொண்ணெல்லாம் போக்கிரித்தனமா இருக்காங்க ராங்கித்தனமா இருக்காங்கனு சொல்லி சொல்லியே வேண்டாம்னு சொல்லி இவ்வளோ வயசாகிப் போச்சு உனக்கு! இப்பவாவது எங்கப் பேச்சைக் கேளுடா" என்றவராய் அருகில் இருந்த கணவரிடம் கைப்பேசியை நீட்டி, "நீங்களாவது அவனுக்குப் புரிய வையுங்க" என்றார்.
"ஹலோ மாதவா" என்ற தந்தையின் வாஞ்சையான அழைப்பில்,
"அப்பா" என்றவனின் விழிகளில் இருந்த கோபம் குறைந்து கனிவு குடிக்கொண்டது.
ஆம் அப்பா பையன் தான் இந்த மாதவன். வாரணம் ஆயிரம் தந்தை மகன் சூர்யா போன்றது இவர்களின் பிணைப்பு! இவனது சொல்லுக்கு மறுபேச்சு பேசாத தந்தை அவர். என்றேனும் ஒரு முறை தான் அறிவுரை உரைப்பார். அவன் வாழ்வில் அடிப்பட்டு வந்த பொழுதில் எல்லாம் தோள் கொடுத்துத் தாங்கிக் கொண்டவர்.
"சொல்லுங்கப்பா" தன்மையாகக் கேட்டிருந்தான்.
"உனக்குப் பிடிக்கலைனா கிளம்பிடுடா மாதவா" என்றவர் சொன்ன மறுநொடி,
"நான் என்ன சொல்லச் சொன்னா என்ன சொல்றீங்க நீங்க" என்று அருகிலிருந்த வினோதினி ஆங்காரமாகக் கத்தியிருக்க,
இங்கே மாதவனின் இதழ்கள் புன்னகைத்தன.
'என் அப்பானா அப்பா தான்' நினைத்தவனாய் தாயின் கத்தலில் மனத்திற்குள் சிரித்துக் கொண்டவன், "இல்லப்பா நான் இங்கேயே இருக்கேன்" தாயிடம் இருந்து தந்தையைக் காப்பாற்றவே அவ்வாறு உரைத்திருந்தான்.
"இருடி! நை நைனு கத்திட்டு இருக்காத" என்று மனைவியை அமைதிப் படுத்தியவராய்,
"பொம்பிளைங்க மட்டும் தனியா இருக்க வீட்டுல பாதுகாப்புக்கு அந்தப் பொண்ணு இந்த மாதிரி கறாரா பேசுறது, சரி தான்டா மாதவா. இதுவே நீ அந்தப் பொண்ணுக்காகப் பார்த்திருக்க வரன்னு தெரிஞ்சா, அந்தப் பொண்ணு வேற மாதிரி பேசுமா இருக்கும். ஒருத்தரைப் பத்தி முழுசா தெரிஞ்சிக்காம ஒரு தீர்மானத்துக்கு நாம வந்துடக் கூடாது. இது நீ அந்தப் பொண்ணைக் கல்யாணம் செஞ்சிக்கனும்றதுக்காகச் சொல்லலை. அந்தப் பொண்ணை நீ கல்யாணமே செஞ்சிக்கலைனாலும் அந்தப் பொண்ணு மேல உனக்கு இருக்க அபிப்ராயம் சரியா தப்பானு உனக்குத் தெரியனும்னு தான் சொல்றேன்" என்ற தந்தையின் பேச்சில் இருந்த நியாயம் புரிய,
"சரிப்பா! நான் இங்கேயே இருக்கேன். அந்தப் பொண்ணோட குணத்தைத் தெரிஞ்சிக்க முயற்சி செய்றேன்" என்றான்.
சரி என்றவராய் அவர் இணைப்பைத் துண்டித்ததும், "என் பேச்சுக்கு இங்க என்ன மதிப்பு இருக்கு. நீங்க சொன்னதும் சரிப்பா சரிப்பானு எப்படிப் பம்முறான் இந்தப் பைய" என்று புலம்பியவராய் வினோதினி சமையலறைக்குள் நுழைய, மகனுக்கு முப்பத்தைந்து வயதான போதும் அவனைச் சிறுவனாகவே பாவித்துப் பேசும் மனைவியின் பேச்சைக்கேட்டுச் சிரித்துக் கொண்டிருந்தார் மாதவனின் அப்பா ரங்கராஜன்.
இங்கே மாதவனும் தன் மீதான தாய் தந்தையரின் அளவற்ற அன்பை எண்ணி புன்சிரிப்புடன் படுக்கச் சென்றான்.
அன்றிரவு மாதவனிடம் தான் வீடித் தேடிச் சென்று சண்டையிட்டதை எண்ணி தனக்குள்ளேயே திட்டிக் கொண்டவளாய் உறங்கியிருந்தாள் தாமரை.
மறுநாள் காலை தாமரையின் ஆழ்ந்த உறக்கத்தைக் கலைக்கும் விதமாக நாராயண மந்திரம் பாடல் ஓடவும், வழமைப்போல் கண்ட கனவில், "எம் மாதவனைத் தர மாட்டேன்" என்ற அலறலுடன் எழுந்தவளின் மனமோ இப்பொழுது மாதவன் என்ற பெயரை உச்சரித்தவாறு மாடி வீட்டு மாதவனிடம் சென்று நின்றது.
உடனே அனிச்சையாக அவளின் மனம், தான் கனவில் கூறும் மாதவனுக்கும் மாடி வீட்டு மாதவனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்று எண்ணியது.
'ச்சே ச்சே அப்படிலாம் இருக்காது. இந்தக் கனவு தான் எனக்குச் சின்ன வயசுலருந்தே வருதே. இந்த மாதவனை நேர்ல பார்த்தே ரெண்டு நாள் தானே ஆகுது. நேத்து அவர்கிட்ட சண்டைப் போட்டதால அப்படித் தோணுது' எனத் தன்னைத் தானே சமாதானம் செய்தவளாய் காலைப் பணிக்குள் தன்னை ஆழ்த்திக் கொண்டு அலுவலகத்திற்குக் கிளம்பியிருந்தாள் தாமரை.
காலை பத்து மணியளவில் அலுவலகத்தில் இருந்த தாமரையை அழைத்த அவளின் மேலதிகாரி, "உங்க கண்ட்ரோல் கீழ இருக்க மருதங்காடு சுப்ரமணிய சாமி கோவில்ல ஏதோ பிரச்சினைனு அந்தக் கோவில்ல இருந்து போன் வந்துச்சு. என்னனு போய்ப் பார்க்கிறீங்களா? இன்னும் காலைல பத்து மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய அபிஷேகம் தொடங்கலையாம்" என்று சொன்னதும் சரியெனத் தலையசைத்தவளாய், தனது கைப்பையை எடுத்துக் கொண்டு அரசாங்க ஜீப்பில் ஓட்டுனருடன் அந்தக் கோவிலை நோக்கிப் பயணித்தாள்.
ஐம்பது படிக்கட்டுகள் கொண்ட கோவிலின் வாசலில் இருந்த கோவில் காவலரிடம், "என்ன பிரச்சினை?" எனக் கேட்டவளாய் படிக்கட்டில் ஏறினாள்.
இவளுக்கு இணையாக ஏறிய அந்தக் காவலரும், "இன்னிக்கு காலை பத்து மணி அபிஷேகத்துக்கு ஆன்லைன்ல புக் செஞ்சவர் பேரு நம்ம லிஸ்ட்ல வரலையாம் மேடம். ஆல்ரெடி அபிஷேகத்துக்கு நாம அனுமதிக்கிற மக்கள் லிமிட் முப்பது பேருக்கு ஆளுங்க இருக்காங்களாம். அதனால இவரை உள்ளே அனுமதிக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்க போல. அதான் பிரச்சினை" என்றிவர் பேசி முடிக்கும் போது மூச்சு வாங்கியவளாய் மேலே வந்தவள், கோவிலுக்குள் நுழையவும், "வணக்கம் மேடம்" என ஆங்காங்கே இருந்த கடைக்காரர்கள், கோவில் பணியாளர்களின் வணக்கத்தையும் கை அசைப்பையும் தலை அசைத்து ஏற்றுக் கொண்டவளாய் உள்ளே சென்றாள் தாமரை.

Previous thread
Next thread