- Joined
- Sep 16, 2024
- Messages
- 738
- Reaction score
- 4,423
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 6
"நீங்க தான் அந்தச் சாமியாருக்கு காசு கொடுத்து அப்படிப் பேச வச்சீங்களா?" எனத் தாமரை கேட்டதும் வாய்விட்டுச் சிரித்திருந்தான் மாதவன்.
"ஏங்க என் மேல கொஞ்சம் கூட நல்ல அபிப்ராயமே இல்லையா உங்களுக்கு" எனக் கேட்டான்.
"ரொம்ப நாள் பழகினவங்களையே இந்தக் காலத்துல நம்ப முடியலை. உங்களை ரெண்டு மூனு நாளாகத் தானே எனக்குத் தெரியும். இதுல திடீர்னு ஒரு சாமியார் வந்து இப்படிச் சொன்னா எப்படி நம்புறது?" எனக் கேட்டாள்.
"ஹ்ம்ம் சரியான கேள்வி தான். ஆனா சில விஷயங்களை ஏன் எதுக்குனு ஆராயாம நம்புறது கூட வாழ்க்கைய வேற மாதிரி மாத்தும் தாமரை" என்றான்.
"அப்ப அந்தச் சாமியார் சொன்னதை நீங்க நம்புறீங்களா மாதவன்?" எனக் கேட்டாள்.
"சாமியாரை நம்பலை. ஆனா சாமியை நம்புறேன் தாமரை. வாழ்க்கையே நொந்து போய் இருந்தப்ப என்னைக் கைத்தூக்கி விட்டவரு முருகர் தான். அவர் எனக்கு எப்பவும் சரியானதை தான் செய்வாருனு நம்புறேன்" என்றவன் சொன்னதும்,
"அப்புறம் ஏன் உங்க மொத கல்யாணம் சரியில்லாம போச்சு" பட்டெனக் கேட்டிருந்தாள்.
"அப்ப எனக்குக் கடவுள் மேலலாம் நம்பிக்கை இல்லை தாமரை. நல்ல அப்பா அம்மா, நல்ல படிப்பு, படிச்சு முடிஞ்சதும் கை நிறையச் சம்பளத்தோட படிப்புக்கேத்த வேலை. எல்லாமே நல்லதா நடக்கும் போது சாமியை ஏன் நினைச்சி பார்க்கப் போறேன் சொல்லுங்க. சாமியைக் கும்பிடாமலும் நல்லா இருக்க முடியும். கடவுள் பக்திலாம் தேவையே இல்லைனு இறுமாப்பா சுத்திட்டு இருந்த காலமது. அப்ப தான் கூட வேலைப் பார்த்த பிரியாவைக் காதலிச்சுக் கல்யாணம் செஞ்சிக்கிட்டேன். அம்மாவும் அப்பாவும் பிரியாவுக்கும் எனக்கும் ஒத்து வராதுன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தாங்க. அப்ப எனக்குக் கல்யாணம் செய்ற வயசு இல்லைனு கூட அப்பா சொன்னாங்க"
"என்ன வயசு அப்ப உங்களுக்கு?" எனக் கேட்டாள்.
"இருபத்திரண்டு" என்றவன் சொன்னதும்,
"அதே வயசுல தான் எனக்கும் கல்யாணம் நடந்துச்சு! எனக்கு அப்பா அம்மா கம்பெல் பண்ணி செஞ்சி வச்சிட்டாங்க. ஆனா நீங்க ஏன் அவ்ளோ சீக்கிரமா செஞ்சிக்கிட்டீங்க" எனக் கேட்டாள்.
"பிரியா வீட்டுல கம்பெல் செஞ்சனால செஞ்சேன். நிஜமாவே அப்ப எனக்கு மெச்சூரிட்டி பத்தலை தாமரை. பிரியாவுக்கு மெச்சூரிட்டி இருந்துச்சா இல்லையானு தெரிஞ்சிக்கிற மெச்சூரிட்டி கூட எனக்கு இருக்கலை. முழுசா ஒரு வருஷம். அந்த ஒரு வருஷத்துல காதலோட ஒரு மாசம் தான் வாழ்ந்திருப்போம். அதுக்குப் பிறகு முழுக்க முழுக்கச் சண்டை சச்சரவோட தான் வாழ்க்கைப் போச்சு. சும்மா பேச ஆரம்பிச்சாலே சண்டைல தான் முடியும். ஒரு கட்டத்துல வீட்டுக்குப் போகாம ஆபிசுலயே இருந்துடலாமாங்கிற அளவுக்கு மனசு வெறுத்துப் போச்சு. அவளுக்கும் அப்படித் தான் இருந்திருக்கனும். அவளே டிவோர்ஸ் அப்ளை செஞ்சி பேப்பரோட வந்து சைன் கேட்டா! எனக்கு ஷாக்கா இருந்துச்சு. ஏன்னா அவ்ளோ மனசு கஷ்டத்துல கூட நான் என்னிக்குமே பிரியனும்னு நினைச்சதே இல்லை. அதனால அவளோட இந்த முடிவு எனக்குப் பெரிய மனவலியைக் கொடுத்துச்சு. எங்களுக்கு டிவோர்ஸ் ஆனதுக்கான காரணமே அவ தான், என் வாழ்க்கையே பாழாக்கிட்டானு அவ மேல ரொம்ப கோவமா இருந்தேன். அப்புறம் டிவோர்ஸ் ஆனதை ஏத்துக்க முடியாம அவளோட பிரிவை ஒத்துக்க முடியாம தண்ணி அடிக்க ஆரம்பிச்சேன். அப்பா சொன்னாங்க, 'ஒரு வருஷம் போகட்டும். பிரியாகிட்ட பேசி சேர்த்து வைக்கிறேன்னு' சொன்னாங்க. ஆனா என்னாச்சுத் தெரியுமா தாமரை?" என்று கேட்டவனின் கண்களில் மெல்லிய சோகம் இழையோடியது.
"என்னாச்சு?" எதுவும் விபரீதமா நடந்திருக்குமோ என்று அவளின் நெஞ்சம் படபவெனத் துடித்தது.
"அவ வீட்டுல அதுக்குள்ள அவளுக்கு வேற பையனைப் பார்த்துக் கல்யாணம் செஞ்சி வச்சிட்டாங்க. அதுக்குப் பிறகு அவளை மறக்க முடியாம ஒரு வருஷம் போச்சு. அந்த நேரத்துலலாம் அப்பா தான் எனக்கு முழு சப்போர்ட்டா இருந்தாங்க. என் வேலைல கவனக்குறைவு வந்து என்னை வேலையை விட்டே தூக்குற நிலைமைக்கு வாழ்க்கை இறங்கிப் போனப்ப தான் முருகரை வணங்க ஆரம்பிச்சேன். அதுவும் அப்பா சொல்லித் தான் செஞ்சேன். கொஞ்சம் கொஞ்சமா என்னை நானே மாத்திக்க ஆரம்பிச்சேன். குடிப் பழக்கத்தை மொத்தமா விட்டுட்டு அவரோட பக்தனா மாறினேன். அவரைக் கும்பிட ஆரம்பிச்ச பிறகு என் மனசுக்குக் கிடைச்ச நிம்மதிக்கு அளவே இல்லை தாமரை. அதிலிருந்து என் வாழ்க்கை அவர் கையில்னு என்னை நான் அவர்கிட்ட முழுசா ஒப்படைச்சிட்டேன்" என்றவன் சொல்லி முடிக்கும் போது, மெல்லச் சிரித்தாள் தாமரை.
அவளின் புன்னகையைப் பார்த்து, "ஏன் சிரிக்கிறீங்க தாமரை?" எனக் கேட்டான்.
"இல்ல இந்த வாழ்க்கை எவ்ளோ வினோதமானதுனு நினைச்சேன். சிரிப்பு வந்துடுச்சு" என்றாள்.
"ஏன் அப்படிச் சொல்றீங்க?"
"டிவோர்ஸ் ஆனப் பிறகு உங்களுக்கு வந்த கடவுள் பக்தி எனக்கு டிவோர்ஸ் ஆன பிறகு தான் என்னை விட்டுப் போச்சு. கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் எல்லாச் சனிக்கிழமையும் பெருமாள் கோவிலுக்குப் போய்டுவேன். சின்ன வயசுலருந்தே பெருமாள் பாசுரங்கள் பாடுறது அவ்ளோ பிடிக்கும். எனக்கு நடந்த கல்யாணம் என் வாழ்க்கையையே மொத்தமா புரட்டிப் போட்டுருச்சு. உன்னை வணங்கின என்னைக் கைவிட்டுட்டியேனு கடவுள் மேலலாம் கோபம். உண்மையிலேயே கடவுளை கும்பிடாமலும் நிம்மதியா வாழ முடியும் மாதவன். கஷ்டம் வர்ற நேரத்துல கையைப் பிடிச்சி உனக்கு நான் இருக்கேன்னு சொல்ற நம்பிக்கையா தான் நான் கடவுள் பக்தியைப் பார்க்கிறேன். ஆனா அந்த நம்பிக்கையை கடவுள் கொடுக்காம போய்ட்டாரேனு கோபம்" என்று பெருமூச்சு விட்டவளாய்,
"பாஸ்ட் இஸ் பாஸ்ட்! அதை எல்லாம் எப்படியோ கடந்து வந்துட்டேன்" என்று முடித்தாள்.
அவள் வாழ்வில் ஏதோ பெரிய சம்பவம் நடந்திருக்குமோ என்று இவனின் மூளை யோசித்த அதே சமயம், 'கடவுளிடம் நீ எதிர்பார்த்த அந்த நம்பிக்கையை அரவணைப்பை நான் தருவேன்' என்று அவளிடம் கூறிட பரிதவித்தது அவன் நெஞ்சம். தான் ஏன் இவ்வாறு உணர்கிறோம்! அந்தளவிற்கா அவள் தனது மனத்திற்குள் புகுந்து விட்டாள் என்று ஆச்சரியமாக இருந்தது மாதவனுக்கு.
"நான் ஏன் அந்தச் சாமியார் சொல்றதை நம்புறேன் தெரியுமா தாமரை?" எனக் கேட்டான்.
"ஏன்?"
"ஏன்னா நான் முருகருக்கு அபிஷேகம் செஞ்சி கேட்டதே கல்யாண வரம் தான். அப்படிக் கேட்டுட்டு இங்கே வந்து பார்த்தா இந்தச் சாமியார் இப்படி நாம ஈருடல் ஓருயிராய் இணைந்து வாழ பிறந்தவங்கனு சொல்லும் போது அது எனக்கு முருகனின் வாக்கா தான் தோணுச்சு தாமரை. அதுவுமில்லாம அந்த நேரத்துல நான் ஃபீல் செஞ்சது என் ஆழ்மன உணர்வுனு எனக்கு தோணுச்சு" என்றான்.
அவன் கூறியதைக் கேட்டு இவளின் விழிகள் ஆச்சரியத்தில் விரிய, 'அப்ப இவர் வானத்துல நிலாக்கிட்ட பேசிட்டு இருந்தது என்னைப் பத்தி தானா? கோவில்ல இவரைப் பத்தி நான் உணர்ந்த மாதிரியே இவரும் உணர்ந்தாரா' என்று மனத்திற்குள் எண்ணும் போதே நெஞ்சத்தின் பாரம் இறங்கி, மயிலிறகில் வருடியது போன்ற இதத்தை உணர்ந்தாள் தாமரை.
'இந்த மாதவன் மேல அன்பு உணர்வு பெருகும் போதெல்லாம் இந்த இதயம் லேசான மாதிரி மனசை மயிலிறகால் வருடின மாதிரி ஒரு இதம் பரவுதே' மனத்திற்குள்ளே பேசிக் கொண்டாள்.
ஆயினும் முகத்தில் எவ்வித உணர்வையும் காட்டாமல், "இது என்ன லவ் பிரபோசலா மாதவன்?" என நேரடியாகவே கேட்டிருந்தாள் தாமரை.
மாதவனின் இந்த பேச்சிற்குப் பின்னால் தனது தாயின் பங்கு நிச்சயமாக இருக்கிறது என்று நம்பினாள். இல்லையென்றால் தன்னுடைய வீட்டிலிருந்து கொண்டே ஒருவன் தன்னை மணம் செய்து கொள்வதைப் பற்றி எப்படிப் பேச முடியும் என்று நினைத்துக் கொண்டாள்.
அவளின் கேள்விக்கு இல்லையெனத் தலையசைத்தவனாய், "லவ் பிரபோசல் இல்ல மேரேஜ் பிரபோசல் தாமரை மேடம்" என்று சிரித்தான்.
கார்முகில் நிறத்தவனின் சிரிப்பில் விழுந்த கன்னக்குழியைப் பார்த்தவளுக்கு, 'எவ்ளோ வசீகரமான சிரிப்பு' தன்னை மீறி மனம் அதனை ரசிக்க, மூளைக் கொண்டு அவ்வெண்ணத்தை உதறியவளாய், அவனது கண்களை நோக்கியவள், "உங்க பாஸ்ட் லைஃப் பத்தி நீங்க சொல்லும் போதே டவுட் வந்துச்சு?" என்று கூறிக் கொண்டிருக்கும் போதே,
"ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா"
மாதவனின் அலைபேசி பாடவும், அவனையே இமைக்காது பார்த்திருந்தவள் விழியைத் திருப்பிக் கொண்டாள்.
அலைபேசியை எடுத்துப் பார்த்தவனாய், தனது அன்னையிடம் இருந்து வந்த அழைப்பையேற்றுப் பேசினான்.
இப்பாடலைக் கேட்டதும் அவளின் மனம் எப்பொழுதும் காணும் காலை கனவிற்குச் சென்றது. அப்படியே சுற்றிச் சுழன்ற எண்ணங்கள் அன்று அவள் தியானத்தில் இருந்த போது, "தங்களை மணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அந்தப் பாக்கியத்தை அடியேனுக்கு அருளுவாயா கோதை" என்று மாதவன் கூறுவதாய்க் கண்ட காட்சியில் வந்து நின்றது.
'ஆஹா அன்னிக்கு தியானத்துல பார்த்த மாதிரியே வந்து கல்யாணம் செஞ்சிக்கலாமானு கேட்குறாரே' என்று மனத்திற்குள் இவள் பேசிக் கொண்டிருக்கும் போது அன்னையிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவனாய் இவள் புறம் திரும்பியவன், "கோதை" என்று தன்னை மீறி அழைத்து விட்டுப் பின் சுதாரித்தவனாய், "தாமரை" என்றான்.
அவனின் கோதை என்ற அழைப்பில் திடுக்கிட்டு நின்றாள் தாமரை.
'அன்னிக்கு கோவில்ல நான் தியானத்துல இருக்கும் போது இவர் கோதைனு தானே கூப்பிட்டாரு. இன்னிக்கு கோவில்லயும் அப்படித் தானே கூப்பிட்டாரு. ஆனா ஏன் என்னை அப்படிக் கூப்பிடுறாரு' என்று சிந்தித்தவளாய்,
"ஏன் என்னை கோதைனு கூப்பிட்டீங்க?" எனக் கேட்டாள்.
தனது நெற்றியைத் தேய்த்தவனாய், "ஏன்னு தெரியலை தாமரை. என்னை மீறி வந்துடுச்சு. நீங்க கூட இன்னிக்கு கோவில்ல அந்த சாமியாரைப் பார்த்த பிறகு என்னை கண்ணானு கூப்பிட்டீங்க" என்றான்.
"அப்படியா? எனக்கு நினைவில்லையே" என்றவளாய் யோசித்தவள், "உங்களுக்கு ஆத்மநல்லூர் ஊர் தெரியுமா?" எனக் கேட்க வந்த போது,
ஒரு பாதிக் கதவு நீயடி
மறு பாதிக் கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சோ்த்து வைக்கக் காத்திருந்தோம்
அச்சமயம் இப்பாடல் ஒலித்துத் தாமரையின் கைப்பேசி ஒளிர, இருவரின் சிந்தனையும் தடைப்பட்டது.
'இந்தப் பாடலோட பொருள் என்ன? யாரையாவது மனசுல நினைச்சிக்கிட்டு இந்தப் பாட்டை ரிங்டோனா வச்சிருக்காளா இல்ல அந்தப் பாட்டைப் பிடிச்சதுனால வச்சிருக்காளா?' சிந்தித்தவனாய் இவன் நிற்க,
அழைப்பை ஏற்றவளாய், "சொல்லுங்க சார்" என்று தனது மேலதிகாரியிடம் பேசினாள் தாமரை.
மறுபுறம் பகிரப்பட்ட செய்தியில், "என்ன சார் சொல்றீங்க?" என்று சற்று அதிர்ச்சியாய் கேட்டிருந்தவளின் முகம் அதிர்ச்சியும் கவலையுமாய் மாறுவதைக் கண்ட மாதவன்,
"என்ன தாமரை? என்னாச்சு?" தாமரையின் அருகில் வந்தவனாய் வாஞ்சையுடன் கேட்டிருந்தான்.
கண் சிமிட்டி அவனை அமைதியாக இருக்குமாறு சைகை செய்தவளாய், "ரெண்டு நாள்லயா? எப்படித் திடீர்னு?" என்று கைப்பேசியில் இன்னும் பேசிய வண்ணம் அவள் இருக்க, அவளையே பார்த்தவாறு நின்றிருந்தான் மாதவன்.
"சரிங்க சார். நான் கிளம்புற ஏற்பாட்டைச் செய்றேன்" சோகமாகச் சொன்னவளாய் கைப்பேசியின் இணைப்பை தாமரை துண்டித்த நொடி,
"என்ன தாமரை? எதுவும் பிரச்சினையா?" சற்றுப் பதட்டத்துடன் கேட்டிருந்தான் மாதவன்.
"ஆமா மாதவன். நான் உடனே ஆத்மநல்லூருக்குக் கிளம்பி போயாகனும். அங்கே என் போஸ்ட்டிங்ல வேலைப் பார்த்துட்டு இருந்தவரு இறந்துட்டாராம்" என்றவள் பதைபதைப்புடன் சொல்லவும்,
"என்னது ஆத்மநல்லூரா? அப்ப அந்தச் சாமியார் சொன்ன மாதிரி நிஜமாவே அப்படி ஒரு ஊரு இருக்கா?" பேரதிர்ச்சியுடன் கேட்டிருந்தான் மாதவன்.

Previous thread
Next thread