👁️ 1074 Views
அவள் அறிந்து இதுதான் அவளாகக் கொடுத்த முதல் இதழ் முத்தம்! இன்னொன்று என்ற கேள்வி தொக்கி நின்ற அதே நேரத்தில் ஏதோ தோன்றியது. உடனே அவள் முகம் மாறியது.
“அப்…அப்போ அன்னைக்கு… அன்னைக்கு நீங்க சொன்னது நிஜம் தானா? நா…ன்… நான்தான் வந்தேனா?” என்று திணறலுடன் கேட்டாள்.
“என்கிட்ட தானேடி வந்த! அப்புறம் எதுக்கு இந்தத் திணறல், ம்ம்? அன்னைக்கு நீதான் இங்க முதலில் கிஸ் பண்ண. அதுக்குப் பிறகு என் கண்ட்ரோலும் மிஸ் ஆகிருச்சு…” என்றான் சிறு புன்னகையுடன்.
ஆனால் அவளால் புன்னகைக்க முடியவில்லை.
“அது… அது தலைவலி தைலம்னு நினைச்சு நான்…” என்றவளுக்கு அதற்கு மேல் அதைப் பற்றிப் பேச முடியாமல் தொண்டை அடைத்தது.
“எப்படி ஒரு முட்டாளா இருந்திருக்கேன்? ஒருத்தன் என்னை எனக்கே தெரியாம ஏமாத்தியது கூடத் தெரியாம… அவனை நல்லவன்னு நினைச்சு… அந்தத் தைலத்தைத் தடவி… ம்ப்ச்…” என்று கலங்கினாள்.
“ஷ்ஷ் மது! அதை நினைக்காதே!” என்றான் அவளைத் தன் தோளோடு ஆறுதலாக அணைத்துக் கொண்டே.
“நானும் மறக்க நினைக்கிறேன். ஆனா… உள்ளுக்குள்ள ஒரு ஓரத்திலிருந்து உறுத்திட்டே இருக்கு. என் தப்பு புரியாம பெத்தவங்களைக் கஷ்டப்படுத்தி… உங்களைக் கஷ்டப்படுத்தி… என்னையே அறியாம ஒரு குழந்தை உருவாகும் வரை போய்…” என்று அவள் புலம்ப,
“உன்னையே அறியாம மட்டும் இல்லை. என்னையும் அறியாமத்தான்…” என்றவனை அவள் பார்க்க,
“அன்னைக்குக் கொஞ்ச நேரம் தான் எனக்கும் சுய உணர்வு இருந்தது. அதுக்குப் பிறகு நானும் உன் நிலையில்தான் அந்தத் தைல போதைக்குக் கட்டுப்பட்டு இருந்தேன்…” என்றான்.
“ஆனா… நீங்க அதை யூஸ் பண்ணலை தானே?”
“உன் ஸ்கின் மூலமா என் ஸ்கினுக்கும் பரவி…” என்று அவன் தோளை குலுக்க…
“ஓ! எந்தளவு மோசமான மருந்துக்கு அடிமையாகிருக்கேன்…” என்று முகத்தைச் சுருக்கினாள்.
அதெல்லாம் நினைக்க நினைக்க அவளின் மனம் கலங்கியது. கூடவே அந்தக் காணொளி நினைவும் வந்தது.
அவள் முகம் மாறவுமே சுதாரித்த மயூரன், “அதெல்லாம் விடு. அன்னைக்கு நம்மை அறியாமல் நடந்த அழகான தவறுக்கு… அற்புதமா நம்ம அற்புதா கிடைச்சிருக்கா. அதை மட்டும் நினை!” என்றான்.
சில நொடிகள் அமைதியாக இருந்த மதுமதி, “அப்ப விடிய விடிய… அப்படின்னு ஏதோ… சொன்னீங்க?” என்று கேட்டவளைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புச் சிரித்தான்.
“உங்க சிரிப்பே சரியில்லையே?” என்று கேட்டாள்.
“நான்தான் சொன்னேனே. எனக்கும் கொஞ்ச நேரம்தான் சுயநினைவு இருந்தது. அதுக்குப் பிறகு எத்தனை தடவையோ… விடிய விடியவா… விடிந்த பிறகுமா… அதெல்லாம் எனக்கும் தெரியாதுடி. ஆனா… ஒரே நாள் நைட்டில் நம்ம பாப்பா வந்துட்டா. அப்போ நாம புகுந்து விளையாடினோம் போல…” என்று உதட்டை கடித்து மார்க்கமாகக் கூறினான்.
“ச்சை… பேச்சை பாரு…” என்று அவனின் தோளின் சட்டென்று அடித்தாள்.
“பாரு… முழுசா பேசுறதுக்குக் கூட நாம என்னன்ன செய்தோம்னு நமக்கே தெரியலை. அதனால் என்ன பண்றோம். இன்னைக்கு நைட் வாழ்நாளுக்கும் மறக்காதபடி, ஒவ்வொன்னும் ரசிச்சு அனுபவிக்கப் போறோம். ரெடியா இரு…” என்றான் குறும்புடன் கண்களைச் சிமிட்டி.
“இன்னைக்கேவா?” என்று தொண்டைக்குழி ஏற இறங்க கேட்டாள்.
“ஆமாம்! நீ நைட் மிரண்டுட கூடாதுன்னு தான் இப்பவே சொல்றேன். தயாரா இருந்துக்கோ…” என்று மயூரன் அவளின் மூக்கோடு மூக்கை உரசியபடி சொல்ல,
அவனின் அடர்ந்த புருவங்கள் அவளின் நெற்றியில் உரசி கூசியது.
“பாப்பா பிறந்து மூனு மாசம்தான் ஆகுது…” என்றாள் தயக்கத்துடன்.
“அதான் மூனு மாசம் ஆகிருச்சே. போன வாரம் டாக்டரை பார்த்தப்ப கூட நீ இப்ப ஓகேன்னு தானே சொன்னாங்க. மது… இதுக்கு மேல என்னைக் காக்க வைக்காதேடி. பக்கத்துல பொண்டாட்டியை வச்சுக்கிட்டே விரதம் இருப்பது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா? அதுவும் நாம ஒரே பெட்டில் படுத்திருக்கும் போது உன்னை அப்படி வாரி அணைச்சு என் கைக்குள்ளயே வச்சுக்கணும் போலத் தோனும். ஆனா… முடியாது!” என்று உதட்டை பிதுக்கினான்.
“நீங்க என்கிட்ட முன்னயே உண்மையைச் சொல்லிருந்தால் நான் முன்னவே மாறியிருப்பேன் தானே? நீங்க ஏன் என்கிட்ட உண்மை தெரிந்தும் சொல்லவே இல்லை?” என்று கேட்டாள்.
“யார் நீ மாறியிருப்பியா? இப்ப நீ உண்மை தெரிந்து உடனே மாறவா செய்த? எப்படி எப்படி எல்லாம் கிறுக்குத்தனமா யோசிச்சு இந்த உலகத்தை விட்டே போகணும்னு நினைச்ச நீ மாறியிருப்பியா?” என்று கோபத்துடன் கேட்டான்.
அவள் முகத்தைச் சுருக்க, “இந்த இரண்டு வருஷத்தில் என்னதான் என்மேல் உனக்குக் கோபம் இருந்தாலும், உன்னால் என் வாழ்க்கையும் வீணாகுதுன்னு உனக்குள்ள ஒரு கில்டி இருந்தது. என் காதலை நீ ஏத்துக்கலைனாலும், அதை நீ புரிஞ்சிக்கிட்ட. என்னை நம்பி இந்த வீட்டில் நீ இருந்திருக்கனா அதுக்கு அந்தப் புரிதல்தான் காரணம். என்ன அதை எல்லாம் உணர முடியாம உன் கோபம் உன் கண்ணை மறைச்சிருச்சு. முன்னாடியே உண்மை தெரிந்திருந்தால் என்னோட காதலுக்காக நீ மீண்டு வந்திருக்க மாட்ட. என் காதலுக்கான முக்கியத்துவத்தை கொடுக்கணும்னு இப்ப போல அப்ப உன் புத்தி யோசிச்சிருக்காது. உனக்கு உண்மை தெரிந்த பிறகும் போராடிதான் உன்னை மீட்டுக் கொண்டு வந்திருக்கேன். முன்னாடி அந்தச் சான்ஸ் கூட நீ எனக்குக் கொடுத்திருக்க மாட்ட. அதுவும் நீ மீண்டு வந்தது பாதிக் காரணம்தான் நானும் என் காதலும். மீதி நம்ம பாப்பா. அவள் தப்பித் தவறி உருவாகியிருந்தாலும் உன்னை முழுசா என்கிட்ட கொண்டு வந்து சேர்க்கவே அற்புதமா நம்மகிட்ட வந்து சேர்ந்திருக்கா…” பேசியபடியே கட்டிலில் படுத்து கையைக் காலை ஆட்டி உதைத்துக் கொண்டிருந்த மகளை தூக்கி வந்து அவளைக் கொஞ்சியபடி சொன்னான் மயூரன்.
அவன் சொல்வது சரிதானே என்றுதான் அவளுக்கும் தோன்றியது. குழந்தைக்காக, அவனுக்காக என்று பற்றிக்கொள்ள ஒரு பற்றுகோல் இருந்தது.
முன்பென்றால் அவசரப்பட்டுத் தன் முடிவை தேடிக் கொண்டிருப்பாள். அப்படி ஆகக் கூடாது என்று தானே மயூரன் போராடினான். அவனின் அந்தப் போராட்டமும் தான் அவளை அவனிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்று நினைத்துக் கொண்ட மதுமதி, கணவனின் தோளில் சலுகையுடன் சாய்ந்து கொண்டாள்.

அன்றைய இரவு மகள் உறங்கியப்பின் மனைவியைத் தன் கை வளைவிற்குள் இழுத்துக்கொண்டான் மயூரன்.
மதுமதியும் அதற்கு மேலும் அவனைச் சோதிக்காமல் அவனோடு ஒட்டிக்கொண்டாள்.
“நம்ம ஃப்ர்ஸ்ட் நைட்டை ஆரம்பிக்கலாமா தங்கப்பொண்ணே?” அவளின் காதில் ரகசியமாகக் கேட்டான் மயூரன்.
“தப்பா சொல்றீங்க. ஃப்ர்ஸ்ட் நைட் இல்லை. செகெண்ட் நைட்…” நாணத்துடன் மொழிந்தாள் மதுமதி.
“ம்கூம் இதுதான் நாம அறிந்து நம்மை அறிந்து கொள்ளப் போகும் ஃபர்ஸ்ட் நைட்!” என்றான் மயூரன்.
“ஒரு பொண்ணைப் பெத்துக் கையில் வைச்சுட்டு… ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடும் ஒரே ஒரு புருஷன் பொண்டாட்டி நாமாத்தான் இருப்போம்…” என முனகினாள் மதுமதி.
“புதுமை படைப்போம்டி தங்கப்பொண்ணே!” என்ற மயூரன் பின் வார்த்தைகளால் பேசவில்லை. அவளையும் பேச விடவில்லை. அவர்களின் உள்ளங்கள் பேசின! உணர்வுகள் பேசின! உடல்கள் பேசின!
முத்தத்தில் ஆரம்பித்து அவளின் மொத்தத்தையும் தனதாக்கி கொண்டான் மயூரன்.
அன்று அவர்களுக்கே அறியாமல் நடந்த கூடலை இன்று ஒவ்வொன்றையும் நிதானமாக அறிந்து ஆழ்ந்து அனுபவித்தனர்.
இன்றுதான் முதல் முறை என்று அவர்கள் சொன்னதற்கு ஏற்ப, புதிதாக தாம்பத்தியத்தை அறிந்து கொள்ளும் தயக்கங்களும், தடுமாற்றங்களும் அவர்களைத் திணறவும் வைத்தன.
அத்தனை தடைகளையும் தகர்த்தெறியும் வித்தைகளையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தனர்.
ஒருவருள் ஒருவர் முழுமையாக மூழ்கி முத்தெடுத்து முக்தியடைந்தனர்.
“தங்கப்பொண்ணே… மது…” என்று முனகி கொண்டே அவன் முழுமையடைய…
“மய்யூ… மயூரா…” என்ற முனகலுடன் அவனின் சுருட்டைமுடிக்குள் கைகளை நுழைத்து அவனை ஒரு வழியாக்கி, தன்னையும் முழுமையாக அவனிடம் ஒப்படைத்தாள் மதுமதி.
மனதோடு உடலும் கிளர்ச்சியில் சிலிர்த்து அடங்கியபின் கணவனின் வெற்று மார்பில் முகம் புதைத்து படுத்திருந்தாள் மதுமதி.
அவளைச் சுற்றி கைகளை போட்டு தன்னோடு இறுக்கிக் கொண்டான் மயூரன்.
அவனின் இதயமோ தன் மனம் கவர்ந்த மணவாட்டியை மையல் கொண்ட மகிழ்வில் லயத்துடன் துடித்துக் கொண்டிருந்தது.
அது வெறும் இதயத்தின் ஓசை மட்டுமல்ல. அவனின் காதலின் ரீங்கார நாதமும் கூட என்பதை உணர்ந்து கொண்டாள் அவனுள் தகதகவென ஜொலித்துக் கொண்டிருக்கும் அவனின் தங்கப்பெண்!
©nandhavanamnovels.com