Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

11 - உறையுள் உறையும் உதிரம்

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 12
  • Views Views 2K
Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
746
Reaction score
4,462
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 11
View attachment 682

நிவேதிதா நகரை நோக்கி, அந்த வாகனம் சென்றுக் கொண்டிருந்தது.

பிரதாப்பின் தலைமையில் ஏழு பேர் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டு, அங்கு புறப்பட்டுச் சென்றனர்.

துணை ஆய்வாளர் சிவராம் , டாக்டர் தனபாலன், குழந்தை நல மருத்துவர் என்ற பெயரில் போலியாக மருத்துவம் பார்த்து வருவதாகவும், அவர் பன்னிரெண்டாம் வகுப்பு கூட தேர்ச்சி பெறவில்லை என்றும் கூறியதை அடுத்து, இதுவரைக்கும் கிடைத்த அவனைப் பற்றிய தகவல்கள் போதாதென்று, இன்னும் தீவிரமாக சேகரிக்க கிளம்பிச் சென்று விட்டனர்.

செல்லும் வழியில், பிரதாப்பின் அனல் பார்வைக்கு திவாகர் தான் சாம்பல் ஆகிப் போனார்.

"என்ன லட்சணத்துல நீங்க இன்வெஸ்டிகேஷன் பண்ணி வச்சி இருக்கீங்க. அந்த ஆளு, என்னோட சாவு தற்கொலைனு ஒரு வீடியோ போட்டதை வச்சி, வேற எதையும் நீங்க கவனிக்கல. எதையுமே நீங்க முழுசா விசாரிக்கவும் செய்யல." என்று திவாகரை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தான் பிரதாப்.

திவாகரால் ஒன்றும் பேச முடியாத நிலைமை. ஏன் என்றால் தவறு அவனிடம் உள்ளதே. எந்த வழக்கையும் தீர விசாரித்து, அது கொலையா தற்கொலையா என்பதை உறுதி செய்த பின்னர் தானே அதனை முடிக்க வேண்டும். அவசரப்பட்டு முடித்து விட்டு, இப்பொழுது பிரதாப்பிடம் முழித்துக் கொண்டிருக்கின்றான்.

நிவேதிதா நகரில் தனபாலன் வீடு வந்ததும் வாகனத்தை நிறுத்த, அங்கு இறங்கியது சிறப்பு விசாரணைக் குழு.

பிரதாப் முன்னே செல்ல, அவனை தொடர்ந்து ஆய்வாளர் திலீப், பிரதாப்பின் நெருங்கிய நண்பன் நேதாஜி நகர் ஆய்வாளர் பார்த்திபன், விவேகானந்தா நகர் துணை ஆய்வாளர் கதிரவன், நிவேதிதா நகர் துணை ஆய்வாளர் திவாகர் மற்றும் இதர துணை ஆய்வாளர்களான சிவராம் மற்றும் கேசவன் ஆகியோர் பின்னால் சென்றனர்.

கொலை நடந்த அன்று பாரென்சிக் ஹெட் சாரங்கன் எல்லாம் எடுத்து இருந்தாலும், இப்பொழுது அவனைப் பற்றி துப்பு துலக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளதால் சர்ச் வாரண்ட் வாங்கிக் கொண்டு, வந்து விட்டனர்.

மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீடு அது.

வீட்டிற்குள் நுழைந்து, கூடத்தில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டனர் துணை ஆய்வாளர்கள் தவிர.

"திவாகர், நீங்க தனபாலன் பத்தி என்ன டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணி வச்சி இருக்கீங்க. அதை சொல்லுங்க. நம்ம கூட இப்போ புதுசா ஜாயின் பண்ணவங்களுக்கும் அது தெரியணும்." என்று பிரதாப் கூற,

"ஷுயர் சார்." என்று சொல்லியவன், தனபாலன் பற்றிய கேஸ் பைலை எடுத்து வாசிக்கத் தொடங்கினான்.

"Dr. தனபலான். வயது 40. திருமணம் ஆகாதவர். குழந்தை நல மருத்துவராக எழில் நகரில் தனியாக கிளினிக் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். அவரது பெற்றோர் சொந்த ஊரான மணப்பாறையில் வசித்து வந்தனர்.. சில வருடங்களுக்கு முன்பு இருவரும் அடுத்தடுத்து காலமாகிவிட்டனர்." என்று சொன்ன திவாகர், "இது அவரோட பர்சனல் டீடெயில்ஸ் சார். இதைத் தவிர அந்த ஆளு பத்தி வேற எதுவும் இல்லை. அப்புறம் இந்த வீடு அவரோட சொந்த வீடு தான்." என்றார் திவாகர்.

"சிவா, கதிரவன் அண்ட் கேசவன். நீங்க மூணு பேரும் ஆளுக்கு ஒரு அறையில போய் தேடிப் பாருங்க. ஒரு இடமும் விடாம தேடுங்க." என்று சொன்ன பிரதாப், இப்பொழுது திவாகரைப் பார்த்து, "கொலை நடந்த அன்னைக்கு நீங்க எப்படியும் ஃபுல்லா சர்ச் பண்ணி இருப்பீங்க தானே " என்று கேட்க, அவரும் ஆமாம் என்றார்.

"ஒரு வேளை திரும்ப நம்ம செக் பண்றப்போ ஏதாவது கிடைக்கலாம்.. சரி அந்த சுருக்குப் பை கொடுங்க " என்று கேட்டான் பிரதாப்.

திவாகரும் அதை எடுத்துக் கொடுக்க, அவனும் அதில் இருந்து அந்த சாவியை எடுத்து உன்னிப்பாகக் கவனித்தான்.

அருகில் இருந்த தனது நண்பன் பார்த்திபனிடம் காட்டி, "பார்த்தி.. இந்த கீ பார்த்தா உனக்கு எதுவும் ஐடியா தோணுதா " என்று அவனிடம் கொடுத்தான்.

அவனும் அதைத் திருப்பி திருப்பி பார்த்தவாரு, "ஏதோ லாக்கர் கீ போல இருக்கே" என்று தனக்கு தோன்றிய கருத்தை முன் வைத்தான் பார்த்திபன்.

"ஆமா. இது லாக்கர் கீ தான். ஆனால் எதோட லாக்கர் கீ யா இருக்கும்னு தான் சந்தேகமா இருக்கு" என்றான் பிரதாப்.

"இது கொலைனு நமக்கு தெரிஞ்சிப் போச்சி. கொலைகாரன் ஒரு தடயம் கூட இல்லாம கொலை பண்ணிட்டு போய் இருக்கான். ஆனால் இந்த பேக் அவன் கண்ணுல படாமலா இருந்து இருக்கும்" என்று பார்த்திபன் அவன் சந்தேகத்தை கேட்க,

இப்பொழுது திவாகரை பார்த்த பிரதாப், "இந்த பை எந்த அறையில கெடச்சது " என்று கேட்க,

திவாகர் அந்த அறையைக் காட்டினான்.. "இதோ இந்த ரூம் தான் சார்" என்றான்.

அந்த அறைக்குள் சென்ற பிரதாப்பை பின் தொடர்ந்து சென்றனர் திலீப், பார்த்திபன் மற்றும் திவாகர்.

அந்த அறையில் சிவா, ஒவ்வொரு இடமாக தேடிக் கொண்டிருந்தார்.

பிரதாப் வருவதை பார்த்த சிவா, சல்யூட் வைத்து விட்டு மீண்டும் தனது வேலையைத் தொடர்ந்தார்.

பிரதாப்பும் சின்ன தலை அசைப்புடன் அதனை ஏற்றுக் கொண்டு, அந்த அறையை ஒரு முறை பார்வையால் அலசினான்.

"டெட் பாடி இங்க தான் இருந்ததா" என்று கேட்டான் பார்த்திபன்.

"ஆமா சார்" என்றான் திவாகர்.

"இங்க பேக் கரெக்ட்டா எந்த ப்ளேஸ்ல இருந்தது" என்று பிரதாப் கேட்க,

"கட்டிலுக்கு அடியில் கொஞ்சம் உள்ள தள்ளி போய் இருந்துச்சி சார்" என்று சொன்னான் திவாகர்.

"ம்ம்ம்." என்று கேட்டுக் கொண்டே, பிரதாப் கட்டிலை குனிந்து ஒரு முறை பார்த்து விட்டு, அந்த அறையில் இருந்து வெளியேறி வந்து, மேலே மாடி இருக்கிறதா என்று பார்த்து அங்கு சென்றனர்.

மாடியில் ஒரே ஒரு அறை தான். அதை திறந்து உள்ளே சென்று பார்க்க, எல்லாம் பழைய பொருட்களாக இருந்தது.

"ஸ்டோர் ரூம் போல. எல்லாம் பழசா போட்டு வச்சிருக்கான்" என்று பிரதாப் வெளியேறி போன சமயம், பார்த்திபன் தடுத்தான்.

"எதுக்கும் நம்ம பார்த்துரலாம். தேவை இல்லாத பொருள்னு நம்ம நினைப்போம். ஆனால் ஒரு வேளை நமக்கு தேவை உள்ளது அதுல இருந்தா" என்று சொல்லி பிரதாப்பை ஆழ்ந்துப் பார்த்தான்.

அதுவும் சரிதான் என்று நினைத்த பிரதாப் உள்ளே சென்றான்.

அங்கு உள்ள பொருட்களை எல்லாம் ஆராய்ந்தனர்.

எல்லாம் பழைய மர சாமான்கள், இரும்பு பொருட்கள், தேவை இல்லாத துணி மணிகள் என இருந்தன.

அதைக் கிளற கிளற தூசி தான் கிளம்பியது.

பழைய புகைப்படங்கள் என்று இரண்டு மூன்று இருந்தன.

அதை எடுத்துப் பார்த்த பிரதாப், திவாகரிடம் கொடுத்து, "இதை போட்டோ எடுத்துக்கோங்க. எதுக்கும் யூஸ் ஆகும்" என்றான்.

அவனும் அதை வாங்கி தனது அலைப் பேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டான்.

வேறு எதுவும் இருக்கிறதா என்று பார்க்க, ஒன்றும் அவர்களுக்கு உபயோகமாக இருப்பது போல் தோன்றவில்லை என்று எண்ணியவனின் கண்ணில் பட்டது அந்த அறையில் இருந்த செல்ஃப்.

அருகில் சென்றவன், அந்த செல்ஃப்பில் இருந்த பொருட்கள் எல்லாம் எடுத்து பார்த்தவன், அதை வைக்கும் போது ஒரு மாதிரி வித்தியாசமாக சத்தம் கேட்டது.

பார்ப்பதற்கு அந்த செல்ஃப் சிமெண்டினால் சுவரோடு சேர்த்து கட்டப்பட்ட செல்ஃப் போல தோன்றும்.

ஆனால் அது தனியாக செய்யப்பட்டு சுவரோடு சாத்தி வைக்கப்பட்டு இருந்தது.

எந்த வித்தியாசமும் தோன்றா வண்ணம், ஒரே மாதிரி நிறம் பூசப் பட்டு இருந்தது.

அதை அப்படியே தடவிக் கொண்டே இருக்க, ஒரு இடத்தில் ஒரு மூடி போன்று நகர்ந்து அவன் கை சற்று நகர்ந்ததும் திரும்பவும் பழைய இடத்திற்கே வந்தது.

என்னவென்று அதை மீண்டும் நகர்த்திப் பார்க்க, அங்கு சிறிய துளை இருந்தது.

"பார்த்தி இங்க வா" என்று அவனது நண்பனை அழைக்க, அவனும் வந்து அதைப் பார்த்தான்.

"பிரதாப்.. ஒரு வேலை இது அதுவா இருக்குமோ" என்று தன் சந்தேகத்தை முன் வைக்க,

"எனக்கும் அப்படித்தான் தோணுது " என்றவன், தன் பாக்கெட்டில் வைத்து இருந்த அந்த கீயை எடுத்து திறந்து பார்க்க, அது திறந்து கொண்டது.

"அப்போ இந்த லாக்கர் ஓட கீ தான் இது. இதை இவ்ளோ ரகசியமா பாதுகாப்பா இருக்குனா, இதுக்கு பின்னாடி வேற என்னமோ இருக்கு" என்றவன், அதனுள் கையை விட்டுப் பார்க்க,

முதலில் அவன் கைக்கு அகப்பட்டது என்னவோ பிஸ்டல் தான்.

அதை வெளியே எடுத்து காண்பித்தவன், "கன் வச்சி இருக்குற அளவுக்கு, இவன் பெரிய வேலை பார்த்து இருப்பானு நினைக்கிறேன்" என்று அருகில் இருந்த திவாகரிடம் கொடுத்து விட்டு, மீண்டும் கையை விட்டுப் பார்க்க,

ஒரு ஃபைல் கிடைத்தது. அதை தவிர வேறு எதுவும் இல்லை.

அந்த ஃபைலை எடுத்துக் கொண்டு,
அனைவரும் கீழே வந்தனர்.

கீழே அறைகளில் தேடிப் பார்த்த துணை ஆய்வாளர்களும் அறையில் எதுவும் இல்லை என்று வந்து சேர்ந்தனர்.

முன் கூடத்தில் இருந்த சோபாவில் மீண்டும் அமர்ந்து அந்த ஃபைலை பிரித்துப் பார்க்க, அதில் சில குழந்தைகளின் புகைப்படங்கள் இருந்தன.

அதை எல்லாம் பார்த்து விட்டு, தனக்கு முன்னே இருந்த மேசையின் மீது வைத்தவன் பார்வை, மீண்டும் ஃபைலில் படிந்தது.

சில டாக்குமெண்ட்ஸ் பேப்பர்கள் இருந்தன.

அதில் ஒவ்வொரு தாளிலும் ஒவ்வொரு குழந்தைகளின் புகைப்படத்தோடு அந்த குழந்தைகளின் விவரங்களும் இருந்தன.

ஆனால் இதில் இருந்த குழந்தைகளின் விவரமும், மேசையின் மீது இருந்த குழந்தைகளின் புகைப்படமும் வேறு வேறு.

"இவன் குழந்தை நல மருத்துவர்னு சொல்லி, குழந்தைகளை வச்சி வேற ஏதோ பெருசா பண்ணிருக்கான்" என்ற பிரதாப்,

"திவாகர் அண்ட் கேசவன், நீங்க ரெண்டு பேரும் இந்த ஃபைல்ல இருக்குற குழந்தைகளோட டீடெயில்ஸ் வச்சி அவங்க அட்ரஸ்க்கு போய் விசாரிச்சுப் பாருங்க" என்றான் பிரதாப்.

"ஓகே.. சார்." என்று உடனடியாக அவனிடம் இருந்து ஃபைலை வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டனர்.

இப்பொழுது கதிரவன் மற்றும் சிவாவை பார்த்து, "விவேகானந்தா நகர்ல, மதனகோபால் அண்ட் காயத்ரி கொலைல மேக்ஸிமம் எல்லா சிசிடிவி புட்டேஜ் பார்த்தாச்சு. ஆனால் ரெண்டு புட்டேஜ் மட்டும் வரணும்னு திலீப் சொல்லி இருந்தாரு. நீங்க அதை போய் என்னனு பார்த்துட்டு எனக்கு உடனே தகவல் சொல்லுங்க." என்றான் பிரதாப்.

அவர்களும் கிளம்பி விட, இப்பொழுது மூவர் மட்டுமே அங்கே இருந்தனர்..

"பார்த்தி... அன்னைக்கு அமைச்சர் மீட்டிங் அப்போ செந்திலதிபன் ஒரு விஷயம் சொன்னாரு" என்ற பிரதாப்பிடம், "என்ன" என்று கேட்டான் பார்த்திபன்.

"இப்போ அந்த கொலைகாரன் இவ்ளோ கொடூரமா கொல்றானா, அவன் கொலை செஞ்ச அனுபவத்துல இப்படி பண்ணனும்னு சொல்லி இருந்தாரு. ஆனால் கொலையாளி ஆரம்பத்துல முதல் கொலை பண்ணும் போது இப்படி பண்ணாம சாதாரணமா கூட பண்ணி இருக்கலாம்னு சொன்னாரு. அப்போ நம்ம பழைய ரெக்கார்டஸ் எல்லாம் எடுத்து பார்த்தா தான், எதுலயாவது நமக்கு ஒரு ஹின்ட் கிடைக்கும்." என்றான் பிரதாப்.

அதற்கு "நீ சொல்றது சரி தான் பிரதாப். ஆனால் இப்போ நடந்த கொலைல, சுந்தரியை கொலை பண்ணது அந்த ராமலிங்கம்னு நமக்கு தெளிவா தெரிஞ்சி போச்சு.
அப்புறம் இந்த தனபால் இவன் கொலை சேம் பட்டேர்ன். ஆனால் காரணம் வேறயா இருக்கும்னு தோணுது." என்று பார்த்திபன் கூற,

பிரதாப்பும் யோசனையுடன் ஆமாம் என்றான்.

பின்னர் மூவரும் சிறிது நேரத்தில் கிளம்பி விட, வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, கிடைத்த இடைவெளியில் தனது வருங்காலத்திற்கு அழைத்தான் பிரதாப்.

அந்த பக்கம் அவனது அழைப்பு சிறிது நேரம் கடந்து துண்டிக்கப்பட்டது.

மீண்டும் அவன் அழைப்பு விடுக்க, இந்த முறை உடனே துண்டிக்கப் பட்டது.

அன்று முதல் நாள், நைனிகாவைப் பார்த்து பேச வேண்டும் என்று எண்ணி அவளது டியூஷன் சென்டர்க்கு எதிரில் அமைந்து உள்ள டீக் கடையில் சந்திக்கச் சென்றவன், அவளைப் பார்த்து தான் எண்ணியதை பேச முடியாமல் வேறு ஏதோ பேசி விட்டு வந்தான்.

அதற்கு மறுநாள் அமைச்சருடன் நடந்த மீட்டிங்கிற்கு பிறகு, எப்படியும் அவளிடம் பேசி விட வேண்டும் என்று நினைத்து, அவளை வரச் சொல்லி, அவளிடம் தன் மனதில் தோன்றிய, "திருமணத்தை இந்த கேஸ் முடிந்த பிறகு வைத்துக் கொள்ளலாம்" என்று கூறியதன் விளைவு தான் இது.

"இன்னும் கோவமாத் தான் இருக்கா போல. எப்போ காளி அவதாரத்துல இருந்து மலை இறங்கப் போறாளோ தெரியல" என்று நினைத்தவன் அருகில் இருந்த பார்த்திபனிடம் கேஸ் சம்மந்தமாக பேச ஆரம்பித்து விட்டான்.

பின்னர் அவர்களது வாகனம் கமிஷனர் அலுவலகம் அடைந்ததும் மூவரும் இறங்கி உள்ளேச் செல்ல, அவர்களுக்காகவே காத்து இருந்தனர் சிவராமும், கதிரவனும்.

"சிவா.. எனி லீட்" என்று கேட்க,

"ஆமா சார். நமக்கு தேவையான ஒரு இன்ஃபர்மேஷன் கெடச்சி இருக்கு" என்று சிவராம் சொல்ல,

"குட். ப்ளே பண்ணுங்க." என்று அருகில் இருந்த சேரை இழுத்துப் போட்டு அமர, அவனுக்குப் பின்னால் பார்த்திபனும் திலீப்பும் நின்று இருந்தனர்.

சிவராம், அதனை கணினியில் போட்டுக் காண்பிக்க, அதைப் பார்த்த பிரதாப்பின் கண்கள் அகல விரிந்தன...

*****
நான் முன்பே சொன்னது போல் முதல் எபிசோட் மற்றும் ஐந்தாவது எபிசோட் தவிர வேறு எந்த எபிசோடுக்கும் யாரும் சரியான பதில் இன்னும் சொல்லவில்லை.

சிலர் எழுத்து எல்லாம் நீங்க வழக்கமா படிக்கும் எழுத்தாளர்கள் எழுதியதுதான். ஆனாலும், அதை உங்களால் கண்டுபிடிக்க முடியாதது எழுத்தாளரின் வெற்றியா அல்லது ரீடர்ஸின் தோல்வியா என்று தெரியவில்லை 😔

இன்னும் 14 எபிசோட்ஸ் தான் உள்ளது. முடிந்தவரை முயற்சி செய்யுங்கள். முடியாத பட்சத்தில் கதை முடியும் போது எழுத்தாளர்களின் லிஸ்ட் கொடுக்கப்படும். அப்போது எபிசோட் எழுதிய சரியான ஆசிரியரை கண்டறிய வாய்ப்பு கொடுக்கப்படும்.

ஓகே மக்களே... இந்த எபிசோட் எழுதிய எழுத்தாளர் யாராக இருக்கும்? எபிசோட் எப்படி இருந்தது... கொலையாளி யாராக இருக்கும் என்று உங்களால் கெஸ் செய்ய முடிகிறதா என்று சொல்லவும்.

நன்றி!
 
ஒவ்வொரு எபிசோடும் ரொம்ப பரபரப்பா நல்லா நகர்கிறது👌👌

நிச்சயமா கொலையாளி யாருன்னும் கெஸ் பண்ண முடியல ரைட்டர் யாருன்னும் கெஸ் பண்ண முடியல 😔😔
 
உறையுள் உறையும் உதிரம்...!
(அத்தியாயம் - 11)


அட ராமா ! திரும்ப திரும்ப அதே இடத்துக்கு தான் வந்து நிக்கறாங்க. ம்.. திருடன் பெருசா, போலீஸ் பெருசான்னு கேட்டா, திருடன் தான் பெருசுன்னு சொல்லிடலாம் போல போங்க.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
உண்மையாகவே கொலைகாரன் யாருன்னு கெஸ் பண்ண முடியல ரைட்டர் யாருன்னு தெரியலை😔😔😔
 
குழந்தைகள் போடோவா?????

Human traffic போலவா????

இப்ப உலகத்தில், ஹியூமன் traffic la 1 in 4 ....குழந்தைகள் தான்னு சொல்றாங்க....

அது போல இந்த பிராட் டாக்டரும்....அப்படி பண்ணி இருப்பானோ?????

Interesting epi🤩🤩🤩🤩🤩
 
இன்ட்ரஸ்டிங், கொலைகாரனையும் கண்டு பிடிக்க முடியவில்லை, எழுத்தாளரையும்🤔🤔🤔😱😱😱
 
சரண்யா ஹேமா
 

Latest threads

Top Bottom