- Joined
- Sep 16, 2024
- Messages
- 746
- Reaction score
- 4,462
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் - 12:
View attachment 685
பிரதாப், பார்த்திபன் மற்றும் திலீப் மூவரும் சிவராம் சொல்லிக் கொண்டிருப்பதை தான் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர்.
“இந்த CCTV இறந்துப்போன மதனகோபால் அப்புறம் காயத்திரி வீடு இருக்குற தெருவோட முனைல இருக்க பியூட்டி பார்லர்ல கிடைச்சது சார். அந்த பார்லர் நடத்துறவங்களுக்கு கல்யாணம்னு ஒரு மாசம் கழிச்சு இப்ப தான் திரும்பி வந்திருக்காங்க. அவங்க கிட்ட கலெக்ட் பண்ண தான் லேட் ஆகிடுச்சு. அப்புறம், மதனகோபால் வீட்டுக்கு போகணும்னா இந்த CCTVயை கடந்து தான் ரைட் சைடு திரும்பனும் சார். அந்த பக்கம் இருந்த வேறொரு CCTVல சந்தேக படுற மாதிரி எதுவும் இல்லை சார்” என அந்த CCTVயை வாங்க காலதாமதம் ஆனதை சொல்லிவிட்டு அதனின் ஒளிப்பதிவுகளை இயக்க தொடங்கினார் சிவராம்.
இரண்டாம் இரட்டை கொலை நடந்த நாளன்று மாலைநேரம் ஆறரை மணிக்கு பதிவாகிய காணொளி ஓட துவங்கியது. தெருவில் மழை வருவது போல் இருக்க எப்பொழுதும் இருட்டுவதை விட சற்று அதிகமாகவே இருட்டாக அந்த தெரு இருந்தது. ஆனாலும் அங்கிருந்த தெருவிளக்கு வெளிச்சம் ஓரளவு அங்கு இருந்தது. சரியாக ஆறரை மணிக்கு கருப்பு கோட் அணிந்து சாதாரணமாக நடந்தபடி ஒரு உருவம் அந்த CCTVயில் வந்தது.
அந்த ஒளிப்பதிவையே பார்த்தபடி இருந்த நால்வரின் விழிகளும் அந்த உருவத்தில் பதிந்திருக்க எந்த ஒரு அலட்டலும் அவசரமும் இல்லாமல் நிதானமான நடையுடன் சென்றது அந்த உருவம். கிட்டத்தட்ட ஐந்து வினாடியில் இந்த CCTVயின் இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கம் கடந்து சென்றது.
“இந்த உருவம் ஆறரை மணிக்கு இந்த CCTVயை தாண்டி போயிருக்கு சார். அதே மாதிரி ஏழரை மணிக்கு திரும்பி வந்திருக்கு..” என குறிப்பிட்ட நேரத்தை ஃபார்வர்ட் செய்து காண்பித்தார் சிவராம்.
ஒருமணி நேரம் கழித்து அதே நிதான நடையுடன் எப்படி சென்றதோ அப்படியே திரும்பி வந்தது அவ்வுருவம். கொலை செய்துவிட்டு வந்த பதட்டம், படபடப்பு என எதுவுமில்லாமல் அதே நிதான நடையில் நேரே பார்த்தபடி CCTVயின் வலப்பக்கத்தில் இருந்து இடப்பக்கம் சென்றது.
பிரதாப், “அந்த உருவம் வரப்ப ஜூம் வைங்க சிவா..” என கட்டளையிட்டு பார்வையை கூர்மையாக்கினான்.
சிவராமும் பிரதாப் சொன்னது போல் செய்தான். கிட்டத்தட்ட ஆறடியில் இருந்த அவ்வுருவத்தின் பக்கவாட்டு தோற்றம் மட்டுமே கேமராவில் பதிவாகி இருந்தது. முகத்தில் கருநிற மாஸ்க் அணிந்து; கருப்பு நிற கோட் வடிவ ஹூடியின் உதவியால் தலையையும் மறைத்திருந்தது அவ்வுருவம். மேலும், கையில் கருப்புநிற கையுறை; முதுகில் ஒரு கருப்பு பை; கருப்பு நிற பேண்ட் அதனை அடுத்து கருமை நிற ஷூ என கண்களை தவிர முழுதாக கறுப்பின போர்வையில் தன்னை மறைத்தபடி இருந்தது அந்த உருவம்.
“ஆறரை மணிக்கு வந்துருக்கான். ஏழரை மணிக்கு சென்றிருக்கான். சோ, இவன் கொலை பண்ணியிருக்க நிறைய சான்ஸ் இருக்கு சார்..” என திலீப் கூற,
அதே யோசனையில் தான் பிரதாபும் இருக்கிறான் என அவன் முகமே சொல்லியது. ஏதோ நினைவு வந்தவனாக, “CCTVயை ஏழரை மணிக்கு அப்புறம் பிளே பண்ணுங்க சிவா” என்றான் பிரதாப்.
அவன் சொன்னபடி செய்ய அடுத்த அரைமணி நேரத்திற்கு மழையில் சில வாகனங்கள் வந்து சென்றபடி இருந்தன. அந்நேரம், ரோஷன் ஒருவனுடன் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் கூட அணியாமல் அந்த CCTVயை கடந்துச் சென்றான். ஆனால், அவன் சென்ற வேகத்திலே அடுத்த இரண்டு நிமிடத்தில் மறுபடி அதே CCTVயை கடந்து மறுபக்கம் சென்று விட்டான்.
“கொலை நடந்த அன்னைக்கு ரோஷனும் அங்க வந்திட்டு போயிருக்கான். அதுனால தான் அவனோட ஃபோன் சிக்னல் நமக்கு அங்க காட்டிருக்கு. இதை அவனே ஸ்டேட்மெண்ட்டா கூட கொடுத்திருக்கான். அன்னைக்கு பெய்த மழையால யாரோட காலடி தடமும் நமக்கு கிடைக்கல..” என காணொளியை முழுதாக பார்த்தபின் பிரதாப் சொன்னான்.
“அப்படினா அந்த ப்ளாக் கோட் போட்டவன் தான் கில்லரா சார். ரோஷன் வந்த நேரத்தை பார்த்தா அவன் கொலை செய்யல போலயே?” என்ற கதிரவனின் கேள்விக்கு அவனிடம் சட்டென்று திரும்பினான் பிரதாப்.
“அந்த பிளாக் கோட் போட்டவன் தான் கொலையாளினு இன்னும் முடிவாகல கதிரவன். ரோஷன் வந்த வேகத்துலயே திரும்பி போனதை பார்த்தா, ஒன்னு ரோஷனே கூட ஆளை வெச்சி கொன்னுட்டு.. எல்லாம் சரியா நடந்திருக்கானு பார்க்க வந்திருக்கலாம்.
இல்ல, அவனே கொலை செய்ய வந்து, ஏற்கனவே, கொலை செய்யப்பட்டு இருந்தவங்களை பார்த்து நம்ம வேலை மிச்சம்னு சுயநலமா திரும்பி போயிருக்கலாம். கொலையாளி யாருன்னு நிரூபணம் ஆகாத வரைக்கும் ரோஷன் சஸ்பெக்ட் லிஸ்ட்ல இருந்து தான் ஆகணும்” என விளக்கமாக சொன்னான்.
திலீப், “ஆனா ரோஷன் நம்மகிட்ட அவன் வந்து பார்த்தப்பவே அவங்க இறந்து கிடந்தாங்கன்னு சொல்லிருக்கானே சார்..” என நிறுத்தினான்.
“அவன் சொல்லுறது எல்லாமே உண்மையா இருக்கணும்னு இல்லையே திலீப்..” என்ற பிரதாப்,
“சிவா, செல்வநாயகம் கொலை வழக்குல கிடைச்ச அந்த டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் CCTVல கூட கொலை நடந்த அன்னைக்கு பிளாக் கோட் போட்டுட்டு ஒரு உருவம் போயிருக்கும். இந்த ரெண்டையும் சேர்த்து ஒரே ஆளான்னு செக் பண்ணி பாருங்க” என்றான்.
“கண்டிப்பா சார்..” என சிவா அந்த வேலையில் இறங்கினான்.
“கதிரவன், நீங்க தனபால் வீட்டு கிட்ட இருக்க CCTVயை கலெக்ட் பண்ணிடுங்க..” என அவனுக்கும் வேலையை கொடுத்துவிட்டு நிமிர்ந்து அமரந்தான் பிரதாப்.
“எல்லாம் சரி பிரதாப். ரோஷன் பணத்துக்காக கொல்ல பார்த்தான். இந்த ப்ளாக் கோட்காரன் கொலையாளியா இருந்தா.. எதுக்காக அவங்களை அவ்ளோ கொடூரமா கொலை பண்ண வந்திருக்கணும்?” என்ற பார்த்திபனின் கேள்விக்கு,
“அதை நாம தான் கண்டுபிடிக்கணும் பார்த்தி. கண்டுபிடிப்போம்..” என சொன்னவனிடம் வந்த திலீப்,
“சார் செல்வநாயகம் வீட்ல வேலை செய்த காமாட்சி இப்ப தான் திருச்சில இருந்து சென்னை வந்திருக்கிறதா தகவல் கிடைச்சிருக்கு. அவங்கள எப்ப நாம விசாரிக்கலாம்?” என்றான்.
கையில் இருந்த கடிகாரத்தில் நேரத்தை பார்த்தான், பிரதாப். அப்பொழுதே மணி இரவு ஒன்பதை கடந்திருக்க, “நாளைக்கு காலைல ஒன்பது மணிக்கு வர சொல்லுங்க திலீப்” என்றான்.
“ஓகே சார்..” என்ற திலீப் சென்றுவிட்டான்.
இரவு வீட்டிற்கு வந்த பிரதாபின் மூளைக்குள் அந்த CCTVயின் காட்சிகள் தான் வலம் வந்தபடி இருந்தன. ‘எதுக்கு நடந்து வந்து கொலை பண்ணிருக்கான்? எங்க இருந்து நடந்து வந்திருப்பான்?’ என யோசித்தவன், ‘அந்த விவேகானந்தா நகருக்குள்ள நுழையுற இடத்துல இருக்க எல்லா CCTVயையும் சோதனை செய்யணும்’ என குறித்து வைத்தான். பின், ‘ரோஷன் அவனோட பிரேஸ்லெட்டை ஒரு சூதாட்ட கிளப்பில இழந்ததா சொல்லிருக்கான். சோ, அதையும் விசாரிக்க சொல்லணும். அது உண்மையா இருந்தா, நம்மகிட்ட இருக்க பிரேஸ்லெட் கொலையாளிதா இருக்கணும்’ என அதனையும் குறித்துக்கொண்டான்.
அனைத்தையும் முடித்துவிட்டு
நைனிகாவை அழைத்தான். இம்முறையும் அவள் அலைபேசியை எடுக்கவில்லை என்றவுடன், ‘நேர்ல போய்தான் மேடமை மலையிறக்கணும் போல..’ என மறுநாள் அவளை பார்க்க முடிவெடுத்தான்.
*****
மறுநாள் காலையில், பிரதாப் மற்றும் திலீப் முன்பு காமாட்சி அமர்ந்திருந்தார்.
“நீங்க தான் காமாட்சியா? கொலை நடந்த நேரம் நீங்க எங்க இருந்தீங்க?” என நேராக விசாரணையில் இறங்கினான் பிரதாப்.
“நான் தான் சார் காமாட்சி. என்னோட சின்ன பொண்ணுக்கு பிரசவம்னு கொலை நடந்த ஒருவாரம் முன்னாடி தான் திருச்சிக்கு போனேன். ஒருமாசம் லீவு கொடுத்தாங்க அவங்க.. ஆனா இப்ப அவங்களே இல்லை..” என்ற காமாட்சியின் முகத்தில் மெய்யான வருத்தம் வந்தது.
“ஓ.. இவங்க வீட்டுல எவ்வளவு நாளா வேலை பார்த்திட்டு இருந்தீங்க?” என விசாரிக்க,
“இவங்க வீட்ல நான் மூணு வருஷமா வேலை பார்க்கிறேன் சார்” என்றார்.
“இறந்த ரெண்டு பேரும் எப்படி?”
“நல்லவங்க தான் சார். ஆனா டைமுக்கு சாப்பாடு கொடுக்கணும். எல்லா வேலையும் சரியா செய்யணும். கொஞ்சம் சொதப்பினாலும் ரொம்ப திட்டுவாங்க..” என காமாட்சி சொன்னதும் திலீப்பும் பிராதப்பும் மற்றவரை பார்த்துக் கொண்டனர்.
“யாராவது சந்தேகப்படுற மாதிரி வந்திருக்காங்களா? இல்ல வீட்ல ஏதாவது வித்தியாசமா நடந்திருக்கா? கொஞ்சம் நல்லா யோசிச்சு சொல்லுங்க..” என்றான் பிரதாப்.
“அப்படி யாரும் வரல சார். ராமலிங்கம்னு ஒருத்தர் அவங்க வீட்டை எழுதி கேட்குறாங்கன்னு ஒருமுறை அம்மா கிட்ட ஐயா சொல்லிருக்காங்க. அதனால தான் யாரும் மேல குடிவரலனு அவங்க பேசிக்கிட்டதை நான் கேட்டிருக்கேன்..” என்றார்.
‘இது அவனும் அறிந்தது தானே! என்ன இது? எந்த ஒரு வழியும் கிடைக்க மாட்டிங்குது..’ என பிரதாப் யோசிக்க, “வசுமதி அம்மாவுக்கு இன்சுலின் போட ஒரு நர்ஸ் அப்பப்ப வந்திட்டு போவாங்க சார். இப்ப ஒரு ஆறுமாசமா அவங்க வர்றது இல்லை” என்றார் காமாட்சி.
“அப்படியா? யார் அவங்க? அவங்க எங்க இருக்காங்கன்னு தெரியுமா?” என எந்த ஒரு உணர்வும் காட்டாமல் அமைதியாகவே பிரதாப் கேட்டான்.
“அவங்க பேரு சந்திரா சார். பக்கத்து ஏரியால ஒரு தனியார் ஆஸ்பத்திரில தான் நர்ஸா இருக்காங்க..”
“அவங்க ஃபோட்டோ ஏதாவது இருக்கா..” என ப்ரதாப்பை முந்திக்கொண்டு திலீப் கேட்டான்.
“அவங்க ஃபோட்டோ இல்லை சார். ஆனா பார்த்தா அடையாளம் காட்டுவேன்.” என காமாட்சி சொல்லிவிட,
“சரி. உங்க ஃபோன் நம்பர், உங்க பொண்ணு வீட்டு விலாசம் எல்லாத்தையும் கொடுத்துட்டு போங்க. தேவைனா கண்டிப்பா மறுபடி விசாரணைக்கு கூப்பிடுவோம்” என எச்சரித்தே அவர்களை அனுப்பி வைத்தான்.
“திலீப் நீங்க அவங்க சொன்னதை செல்வநாயகம் பையன் வருண் கிட்ட ஒருமுறை கிராஸ் செக் பண்ணிடுங்க.” என்றவன், காமாட்சியிடம் தகவல்களை வாங்கிவிட்டு வந்த சிவராமை அழைத்தான்.
“பெயர் சந்திரா. பக்கத்து ஏரியால இருக்க தனியார் ஆஸ்பத்திரில தான் நர்ஸா இருக்காங்க. யார்? என்னனு விசாரிங்க சிவா” என அவனை அனுப்பி வைத்தான்.
பின் ஞாபகம் வந்தவனாக, “திவாகரும் கேசவனும் அந்த குழந்தைகளை பற்றி விசாரிக்க போனது என்னாச்சு திலீப்?” என்ற பிரதாபின் கேள்விக்கு,
“பாதியை விசாரிச்சு முடிச்சிட்டாங்களாம் சார். மீதியை முடிச்சிட்டு இன்னைக்கு ஈவினிங் ரிப்போர்ட் பண்ணுறோம்னு சொல்லிருக்காங்க” என்றான்.
அந்நேரம் உள்ளே நுழைந்த பார்த்திபனிடம் திரும்பிய பிரதாப், “பார்த்தி! ஒரு எட்டு வருஷம் முன்னாடி தமிழ்நாட்டுல நடந்த கிரைம் ரெக்கார்ட்ஸை கலெக்ட் பண்ணனும்..” என்றான்.
“ஆனா, மொத்த தமிழ்நாடும் எடுத்தா ரொம்ப நிறைய வருமே பிரதாப் சார். நாம இந்த ஏரியா அதை சுத்தி இருக்குறதை மட்டும் பார்க்கலாமே..” என திலீப் எளிதாக சொல்ல,
“சென்னைக்கு படிக்க, வேலைக்குனு வருஷம் வருஷம் ஆயிரம் ஆளுங்க வந்துட்டே தான் இருப்பாங்க திலீப். சோ, அந்த கில்லர் எட்டு வருஷத்துக்கு முன்னாடி வேற ஊர்ல இருந்துட்டு இப்ப சென்னைல இருக்கலாம்..” என பிரதாப் சொன்னதும்,
“சரியா சொன்ன பிரதாப்” என்ற பார்த்திபன், “டீடெயில்ஸ் எடுத்திடலாம். ஆனா, அவ்ளோத்தையும் எப்படி விசாரிக்க போறோம்..” என கேட்டவனுக்கு அப்பொழுதே முழி பிதுங்கியது.
அவனை பார்த்து சிரித்த பிரதாப், “நீ முதல்ல ரெக்கார்ட்ஸ் எடுத்துட்டு வா. விசாரணையை அப்புறம் பார்க்கலாம்..” என்றவன் திலீப்பிடம், “தனபாலோட கிளினிக் எங்க இருக்குனு தெரியுமா திலீப்?” என கேட்டுக்கொண்டு எழுந்தான்.
“அது பக்கத்துல இருக்க எழில் நகர்ல இருக்கு சார்..” என்றதும், “வாங்க போகலாம்..” என இருவரும் கிளம்பினார்கள்.
கீழே கிளினிக் இருக்க அதன் மேல் இரண்டு மாடி இருந்தன.
“இது தனபாலுக்கு சொந்த கிளினிக் தான?” என பிரதாப் கேட்க,
“ஆமா சார். இந்த பில்டிங்கே அவனுக்கு சொந்தமானது தான். கீழ கிளினிக். மேல ரெண்டு வீடு வாடகைக்கு விட்டிருக்கான்..” என்றான் திலீப்.
ஓரளவு பெரிய கிளினிக் தான் தனபால் வைத்திருந்தான். நுழைந்ததும் நோயாளிகள் காத்திருக்கும் அறை, அதனை கடந்து கன்சல்டேஷன் அறை இருந்தது. அதனுள்ளே ஒரு கழிவறையும் இருந்தது.
“பத்து வருஷமா எப்படி தான் போலி டாக்டர்னு ஏமாத்த முடிஞ்சதோ..” என கொதித்தப்படியே திலீப்பும் சோதனை செய்தான்.
அவனை ஒருமுறை திரும்பி பார்த்த பிரதாப் சோதனையை தொடர்ந்தான். அவ்வளவாக எந்த மருந்துகளும் அங்கு இல்லை, எனவே தனபால் ப்ரிஸ்கிரிப்ஷன் மட்டும் தான் எழுதி கொடுப்பான் போல என பிரதாப் யூகிதான்.
அங்கிருந்த மேசையின் ட்ராயரை திறந்து பார்த்தான் பிரதாப். அதில் பெயரேதும் இல்லாமல் கண்ணாடி பாட்டிலில் வெள்ளை நிற மாத்திரைகள் சில இருந்தன. அதனை பத்திரப்படுத்திக் கொண்டான் பிரதாப். எவ்வளவு தேடியும் வேறெதுவும் அங்கு அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றதும், “மேல போய் பார்க்கலாம் திலீப்..” என்று பிரதாப் சொன்னதும் அவனுடன் மாடியேறினான் திலீப்.
மாடியில் ஏறிக்கொண்டே, “அப்ப போலி டாக்டரா இருந்தே சொந்தமா ஒரு வீடு! சொந்த பில்டிங்கில் கிளினிக்! அதுக்கு மேல இரண்டு ப்ளோரை வாடகைக்கு விட்டு அதில் வரும் சம்பாத்தியம்னு போலி டாக்டர் நல்லா செல்வாக்காத்தான் வாழ்ந்திருக்கார் போல..” என சொல்லிக்கொண்டே மாடியேறிய திலீப்,
“பப்ளிக்கு மட்டும் இவன் போலி டாக்டர்னு தெரிய வந்தா.. இந்த கிளினிக் அப்படியே தரைமட்டம் ஆகிடும்” என முடித்தான். முதல் மாடியில் இருந்த வீடு பூட்டியிருக்க இரண்டாம் மாடி சென்றார்கள்.
போலீசை பார்த்ததும் பதட்டத்துடன் எழுந்து வந்தார் வயது முதிர்ந்த ஒருவர், “என்ன சார் வேணும்?” என சற்று பயந்தபடியே கேட்டார்.
“கீழ இருந்த டாக்டரை பத்தி விசாரிக்க வந்தோம். வீட்ல வேற யாருமில்லையா..” என்றான் திலீப். “என்னோட பையனும் மருமகளும் வேலைக்கு போயிருக்காங்க”
“எப்ப வருவாங்க?”
“அவங்க வர எழு மணிக்கு மேல ஆகிடும் சார்..” என்றார் அந்த முதியவர்.
“ஓ.. கீழ் வீட்ல யாரும் இல்லையா?” என பிரதாப் கேட்க,
“அங்க இருக்கவங்களோட குழந்தைக்கு ரொம்ப முடியாம பெரிய ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்க சார். வேற எதுவும் எனக்கு தெரியாது” என்றார்.
“சரி..” என இருவரும் கீழே வந்தனர். அந்த தெருவை சுற்றி பார்த்த பிரதாபின் கண்களில் பக்கத்தில் இருந்த மருந்தகம் விழுந்தது. இருவரும் அங்கே சென்றனர்.
“டாக்டர் தனபாலை பத்தி உங்களுக்கு தெரியுமா?” என சுற்றி வளைக்காமல் கேட்டான், பிரதாப்.
“அவங்க குழந்தை டாக்டர்னு தெரியும் சார். வேறெதுவும் தெரியாது..” என்றார் அந்த மருந்தகத்தை நிர்வாகி.
“அவர் எழுதி கொடுக்குற மாத்திரை எல்லாம் உங்க கடைல வந்து தான வாங்குவாங்க?” என சந்தேகமாக பிரதாப் கேட்டான்.
“அ..ஆமா சார்..” என ஒப்புக்கொண்டவர், “இங்க பக்கத்துல இருக்க டென்டல் கிளினிக் அப்புறம் ரெண்டு தெரு தள்ளியிருக்க கண் ஹாஸ்பிடல்னு அங்க வர எல்லாரும் கூட எங்க கிட்ட வந்து தான் மருந்து வாங்குவாங்க சார்..” என்றார் கொஞ்சம் பதட்டத்துடன்.
“ஓகே..” என அங்கிருந்து வெளிவந்தனர்.
“திலீப், அந்த இரண்டாம் மாடில இருக்கவங்க அப்புறம் அந்த முதல் மாடில குடியிருக்குறவங்க ரெண்டு பேர் கிட்டயும் விசாரிக்கணும். அவங்க எப்ப இருப்பாங்கன்னு விசாரிச்சு சொல்லுங்க..” என சொல்லிவிட்டு இருவரும் வண்டியில் ஏறினார்.
“அடுத்து எங்க போகணும் சார்..” என்ற திலீபின் கேள்விக்கு, “சாரங்கன்..” என சொல்லிவிட்டு வெளியே பார்வையை செலுத்தினான். ‘எதையாவது.. எங்கேயாவது.. தவற விடுறோமா..’ என சிந்தித்தப்படியே பிரதாப் வந்தான்.
அங்கு சென்றதும் சாரங்கனிடம் அந்த வெள்ளை நிற மாத்திரையை கொடுத்த பிரதாப் அதனை பற்றி விசாரிக்க சொன்னான். அவரும் இரண்டு நாட்களில் சொல்வதாக உறுதியளித்தார்.
*****
மாலை நேரம்,
“இன்னைக்கு என்னோட கிளாஸ்ல நிறைய பசங்க வரல..” என டியூஷன் முடித்துவிட்டு தன் தோழியுடன் பேசியபடியே வந்துக்கொண்டிருந்தாள் நைனிகா.
“பதினொன்னாம் வகுப்புக்கு பப்ளிக் எக்ஸாம் இல்லன்னு சொன்னதும், அந்த கிளாஸ் ஸ்டுடண்ட்ஸ் டியூஷன் வரதை நிறுத்த போறதா பேசிட்டு இருந்ததை நான் கவனிச்சேன்..” என அவள் தோழியும் சொன்னாள்.
“அப்படியா..” என கேட்டபடி வந்த நைனிகாவின் முன்னே இருசக்கர வாகனத்தை நிறுத்தினான் பிரதாப் சக்கரவர்த்தி.
நைனிகாவுடன் நடந்து வந்த அஞ்சலி பிரதாபை பார்த்திட்டு, “உங்காளு வந்தாச்சு.. என்ஜாய்..” என நைனிகாவின் காதில் சொன்னவள் பிரதாபிடம் சிறு தலையசைப்புடன் விடைபெற்றாள்.
வெள்ளை நிற சட்டை நீல நிற ஜீன்ஸில் அட்டகாசமாக பைக்கில் வந்திருந்தான் பிரதாப். கண்ணில் கண்ணாடி அணிந்திருந்தவனின் பார்வை நைனிகாவை தான் பார்த்தப்படி இருந்தது.
அலைபேசி போல் நேரில் அவனை தவிர்க்க முடியாமல் அவனின் முன்னே அமைதியாக நின்றாள், நைனிகா. “ப்ளீஸ் நைனி.. வண்டில ஏறு..” என அவளை ஏற்றிக்கொண்டவன் உயர்தர ரெஸ்டாரெண்ட்டிற்கு அவளுடன் சென்று இறங்கினான்.
அவனுடன் வந்துவிட்டாலும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவளை பார்த்தவன் அவர்களுக்கு தேவையானதை ஆர்டர் கொடுத்துவிட்டு “நைனிகா..” என மெல்ல அழைக்க,
“என்ன போலீஸ்கார்? ப்ளீஸ் சொல்ல போறீங்களா..” என அவளின் குரல் நக்கலாக வந்தாலும் அவளின் பார்வையில் அனல் தெரிந்தது.
“சாரி நைனி. கேஸ் விஷயத்தால என்னால நம்ம கல்யாண வேலையை உன்கூட சேர்ந்து பார்க்க முடியலையேனு இருக்க கில்ட்ல.. ஒரு டென்க்ஷன்ல தான் அன்னைக்கு அப்படி கேட்டேன்..” என்றான் பொறுமையாக.
“உங்களுக்கு மட்டும் தான் டென்ஷன் இருக்குமா? நான் கூட தான் கல்யாணத்துக்கு லீவ் எடுக்குறதுக்கு முன்னாடி என்னோட சிலபஸ் முடிக்கணும். அதுவும் லீவ் கேட்டா ஏதோ வீட்டையே எழுதி கேட்ட மாதிரி திட்டுற அந்த மனோகர் சார் கிட்ட ரெண்டு வாரம் லீவ் கேட்கணும்.. எனக்கு கூட தான் நிறைய டென்ஷன்ஸ் இருக்கு..” என படபடவென பொரிந்தவள்,
“இப்ப நான் உங்கள.. உங்க வேலை எதுலயாவது டிஸ்டர்ப் பண்ணுறேனா? கல்யாணத்துக்கு அப்புறமும் அப்படியே இருந்துப்பேன். நீங்க அப்படி கேட்டது தப்பு தான? நீங்க எதுக்கு அப்படி கேட்டீங்க?” என கோபமாக முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“நீ வேணா கல்யாணத்துக்கு அப்புறமும் டிஸ்டர்ப் பண்ணாம இருந்துக்கோ. என்னால அப்படியெல்லாம் இருக்க முடியாது மா..” என்று பிரதாப் உல்லாசமாக சிரித்தான். அதில் அவளின் இதழ்களிலும் குறுநகை பூத்தது.
“அப்பாடா சிரிச்சிட்டியா? டோன்ட் வர்ரி நைனி குறிச்ச நாள்ல கண்டிப்பா நம்ம கல்யாணம் நடக்கும். அதுக்குள்ள இந்த குற்றவாளியை நான் பிடிச்சிடுவேன்..” என உறுதியான குரலில் பிரதாப் சொன்னான்.
“அப்ப நீங்க கேட்டதுக்கு உங்களுக்கு பனிஷ்மெண்ட் கொடுக்கணுமே..” என யோசிப்பது போல் செய்கை செய்தாள்.
“டீச்சர்னு நிரூபிக்காத நைனி..” என பிரதாப் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே,
“என்னோட பிரெண்ட்ஸ்கு பத்திரிகை வைக்க நீங்க தான் என் கூட வரணும்.” என்றாள் கண்டிப்புடன்.
“நான் இப்ப இருக்க பிஸில..” என அவன் துவங்க,
“வெயிட்! வெயிட்! பத்திரிக்கையே அடுத்த வாரம் தான் வர போகுது. குலதெய்வ கோவிலுக்கு வைக்கணும். நெருங்கிய சொந்தத்துக்கு வைக்கணும். லாஸ்ட்டா தான் என்னோட பிரெண்ட்ஸ்கு எல்லாம். இப்பவே முடியாதுன்னு சொல்லாதீங்க போலீஸ்..” என்று அவள் சொல்லி முடிக்க பிரதாபின் கைபேசி அதனின் இருப்பை உணர்த்தியது.
அதில் சிரித்த நைனிகா, “பேசுங்க பேசுங்க..” என கையசைத்தாள்.
பிரதாப் ஃபோனை எடுத்து பார்க்க திலீப் என ஒளிர்ந்தது. “சொல்லுங்க திலீப்..” என்றான் காதில் வைத்தான்.
“சார் குழந்தைகளை பற்றி விசாரிக்க போன திவாகரும் கேசவனும் வந்துட்டாங்க..” என்றான்.
“சரி ஒரு பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்..” என்றவன் நைனிகாவை பாவமாக பார்த்தான்.
“கல்யாணத்துக்குள்ள கேஸை முடிச்சிடுங்க போலீஸ். அதுவரைக்கும் தான் நானும் உங்கள டிஸ்டர்ப் பண்ணாம இருப்பேன்..” என்று சிரித்தவள் கிளம்ப ஆயத்தமானாள்.
***
அத்தியாயம் பற்றியும், எழுத்தாளர் யார் என்ற உங்கள் கணிப்பையும் பகிர்ந்து கொள்ளுங்கள் மக்களே...
தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் நன்றிகள்.

Previous thread
Next thread