Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

13 - உறையுள் உறையும் உதிரம்

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 16
  • Views Views 2K
Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
746
Reaction score
4,462
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
உறையுள் உறையும் உதிரம்-13
View attachment 688
வாழ்க்கையின் மற்றுமொரு பரிணாமத்தை உணரச் செய்யும் அந்த அரசு மருத்துவமனையிலிருந்து கிளம்பி அவர்களது வீடு நுழைந்தனர் அமுதா, சந்தானம் தம்பதியினர் தங்கள் குழந்தையுடன். குழந்தை பிரணவ் மருந்தின் தாக்கத்தால் உறக்கத்தில் இருக்க, குழந்தை உறக்கம் கலையாதவாறு படுக்க வைத்து விட்டுப் படுக்கை அறையிலிருந்து வெளியே வந்தபோது வீட்டின் அழைப்பு மணி அடித்தது. சந்தானம் குளியலறையில் இருக்க, விரைந்து சென்று கதவைத் திறந்தாள் அமுதா.

“வாங்க”, என்று மாடி வீட்டு முதியவர் பழனிக்கு வழி வீட்டு உள்ளே செல்ல, சத்தம் கேட்டுச் சந்தானம் வெளியே வர, இருவரையும் பார்த்து விட்டு அமுதாவிடம் “குழந்தை எப்படிம்மா இருக்கான்?” என்றார் பழனி.

“இப்போ பரவாயில்லை... அடுத்த வாரம் திருப்பிப் பரிசோதனைக்குப் போகணும்” என்றாள் அமுதா.

சந்தானம், பழனியிடம் “என்ன ஆச்சு தனபாலுக்கு, என்ன நடக்குது நம்ம ஏரியாவில்?” என்று கேட்க, மட மடவென்று அனைத்தையும் ஒப்புவித்தார் பழனி.

“ரெண்டு மாசம் மருத்துவமனையில் இருந்ததால் நடந்த எதுவும் சரியா தெரியலை, பிரணவ் சரியாகுற வரை உயிரே எங்க கிட்ட இல்லை, இதில் எங்க இருந்து நாட்டில் நடக்குறத பார்க்க” என்று சந்தானம் தாங்கள் இருந்த நிலையை விவரித்தான்.

“தம்பி போலீஸு மட்டும் இல்லை, கம்பவுண்டர் முத்து வேற உங்களைத் தேடினான்… நீங்கப் பேசாம உங்க சொந்த ஊருக்குப் போயிடுங்க... இந்தப் பிரச்சனை எல்லாம் முடியட்டும்.” என்றப்போது,

“அவன் என் கண்ணில் சிக்கினா அவனுக்கு என் கையால் தான் சாவு” என்று ஆவேசப்பட்ட கணவனிடம்,

“கொஞ்சம் பேசாம இருங்க, அவனுக்கு ஏற்கனவே உங்க மேல பகை, நீங்க வேற இப்படி பேசிப் பகையை வளர்க்காதீங்க, போதாததுக்கு இப்போ அந்தப் பிராடு டாக்டர் வேற உயிரோடு இல்லை, எது எது தான் நினைச்சுக் கவலைப்படவோ” என்று ஆதங்கத்தில் ஆரம்பித்து வருத்தத்தில் முடித்தாள் அமுதா.

“அந்த டாக்டர் பிராடுன்னு நமக்குத் தானே தெரியும், நீ கேட்டுப் பாரு இவருக்கே நாம சொல்லித் தான் தெரியும்... இத்தனைக்கும் இவுங்க பல வருஷம் இங்க தான் இருக்காங்க” என்று சந்தானம் ஆவேசம் குறையாமல் பேச,

“இன்னமுமே நம்பத் தான் முடியலை தம்பி, அதை விடுங்க” என்ற பழனி அமுதாவிடம்,

“அம்மாடி நாங்களே வேற வீடு பார்த்துப் போகலாம் நினைச்சோம், ஆனா என் மருமக அண்ணன் தான் அவனுக்குத் தெரிந்த யாரோ போலீஸ்ல இருக்குறாங்க , ஏதாவது பிரச்சனை வந்தா பார்த்துக்கலாம், இவ்ளோ வசதியா வீடு கிடைக்காது சொல்லி வீடு மாத்த வேண்டாம் சொல்லிட்டான்".

"நீங்க வேணா எதுக்கும் அந்தப் போலீஸ்காரர் நம்பர் வாங்கிப் பேசிட்டு போயிப் பார்த்துட்டு வாங்க” என்று கூறி மீண்டும் சந்தானத்திடம், “தம்பி மேற்கொண்டுப் பிரச்சனைய வளர்க்காம முடிக்கப் பாருங்க” என்று தன்னால் ஆன அறிவுரையைச் சொல்லி விட்டு, தனது வீட்டிற்கு கிளம்பினார்.

சந்தானம் பெருமூச்சு விட்டு, “சரி நான் சுந்தர் கிட்டப் பேசி அந்தப் போலீஸ்கார் நம்பர் வாங்கிப் பேசுறேன், நீ கவலைப் படாம வேலையப் பாரு” என்று கலங்கி இருந்த தன் துணைக்கு ஆறுதல் கூறினான்.

கணவனது அனுசரணையில் மனதில் இருந்த அழுத்தம் மேலே வர மொத்தமாக உடைந்த அமுதா, சந்தானத்திடம் தஞ்சம் அடைந்தாள். “ஏங்க நமக்கு மட்டும் இப்படி ஒரு பக்கம் பிரணவ் உடல் நிலை, அது சரி பண்ணிட்டு வரதுக்குள்ள டாக்டர் மரணம், போலீஸ் தேடிட்டு போய் இருக்கு, அந்த முத்து வேற வந்துட்டுப் போய் இருக்கான், நம்ம கிட்ட இருந்த எல்லாச் சேமிப்பும் போயி இப்போக் கடனாளி ஆகிட்டோம்” என்று சொல்லி நொந்துக் கொண்டிருந்த மனைவியின் நெற்றியில் முத்தமிட்டு,

“ரொம்பக் குழம்பிக்காத, நான் பார்த்துக்கிறேன்.. நீ நம்ம சிம்பாவை மட்டும் பாரு. அவன் சரியானா, நம்ம உலகமே சரி ஆகும்” என்று மனைவியைத் தேற்றி விட்டு தன் அலைப்பேசி எடுத்துக் கொண்டு அறைக்கு சென்றான் சந்தானம். அருகில் இருக்க இருக்க மனம் உடைவாள் அமுதா.

அவனுக்குத் தெரியும் அவனிடம் மட்டுமே தன் கவலைகளைக் கொட்டுவாள் அவனின் பாதி, அவன் இல்லாத பல சமயங்கள் தனியேப் போராடிய இரும்புப் பெண். மனதை சமன்படுத்திக் கொண்டு குழந்தையை கவனிக்கச் சென்றாள் அமுதா.

அலுவலகம் வந்த பிரதாப், திவாகரையும் கேசவனையும் அவனது அறையில் காத்திருக்கச் சொன்னான். பார்த்திபனும் திலீப்பும் உடன் அமர்ந்தார்கள்.

“திவாகர், கேசவன்… என்ன ஆச்சு? குழந்தைகள் பற்றி என்ன தகவல்?” என்று பிரதாப் இருவரையும் பார்த்து பொதுவாய் கேட்டான்.

திவாகர் ஒரு கோப்பைக் காகிதங்களை மேசை மீது வைத்துவிட்டுப் பேசத் தொடங்கினான்.. “சார், இதைப் பாருங்க” என்றான்.

பிரதாப் அதை வேகமாகப் பிரித்துப் பார்த்தான். அது, சில தனியார் மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்ட சிகிச்சை விவரங்கள் அடங்கிய மருத்துவ குறிப்புகள்.

“இது என்ன?” என பார்த்திபன் குழப்பத்துடன் கேட்டான்.

“மருத்துவமனைகளில் உள் நோயாளியாய் இருந்து, வீடு திரும்பும் போது தரப்படுகிற டிஸ்சார்ச் சம்மரி” என்ற பிரதாப், “ஆனா தனபால் வீட்ல இருந்து எடுத்த சில குழந்தைகள் பெயர் மட்டும் ஒத்துப் போகுது, சிலர் தகவல்கள் இல்லை” என்றான்.

“கரெக்ட்டா சொன்னீங்க சார்” என்ற கேசவன். “இங்கே இருக்குற குழந்தைகள் விவரம் வேற வேற தனியார் மருத்துவமனைகளில் தீவிர அறுவைச் சிகிச்சைக்குப் போனவங்க, ஆனா தனபால் கிட்ட வந்துட்டுப் போனவங்க” என்று விளக்கினான்.

“என்ன சொல்றீங்க? தெளிவா சொல்லுங்க” என்று பார்த்திபன் கேட்க,

“சார் நீங்க குடுத்த ஃபைலில் இருந்த குழந்தைகளில் பெரும்பாலானவங்க ஒன்னு உயிரோடு இல்லை அல்லது அந்த முகவரில இல்லை... ஒரு சிலப் பேர் சொன்னத் தகவல் படியும் எங்களுக்கு கிடைத்த தகவலின் படியும் தனபால் தன் கிட்ட வருகிற குழந்தைகளை 3 விதமா பிரிச்சு இருக்கான்.
ஒன்னு- வசதியான, செலவழிக்க கூடிய பின்புலம் உள்ள வீட்டுக் குழந்தைகள்.
இரண்டு- எதிர்த்து கேள்வி கேட்கும் பெற்றோர் வீட்டு ஏழைக் குழந்தைகள்.
மூன்று- வசதி இல்லாத படிப்பும் இல்லாத பயந்த பெற்றோர் வீட்டு ஏழைக் குழந்தைகள்” என்று கேசவன் முடித்தான்.

பிரதாப் கேள்வியாய்ப் பார்க்க,

திவாகர் “சார் அவன் 3 விதமா பெருசா வருமானம் பார்த்து இருக்கான்.. முதல் கேட்டகிரி உள்ள குழந்தைகள் பெற்றோர்களை அவுங்க குழந்தைகள் பற்றி உளவியல் ரீதியா பயப்பட வைத்து மருந்தில் சரியாக கூடிய வியாதிகளுக்கு கூட அறுவைச் சிகிச்சை தேவைன்னு நம்ப வைத்து பெரிய பெரிய தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கிற ஒரு புரோக்கர் வேலைப் பார்த்து இருக்கான். அதாவது சளியால் மூச்சுத் திணறல் இருந்தாலும் இதயநோய் இருக்கலாம் சொல்லி பயமுறுத்தி பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி காசுப் பார்த்து இருக்கான்.

இரண்டாவது கேட்டகிரி அந்த குழந்தைகள் இவன் கிட்ட வந்தப் பிறகு ரொம்ப உடம்பு சரி இல்லாம போயி இருக்காங்க அல்லது போக செய்து இருக்கான். அவுங்களுக்குத் தேவையான பொருளாதார உதவிகள் செய்து குழந்தைகள் இறந்தப் பிறகு உடல் உறுப்புத் தானம் செய்ய வைத்து இருக்கான்.. அதாவது, பெற்றோர்கள் கேள்வி கேட்க முடியாத அளவு, இவனைக் கடவுள்னு நம்புற மாதிரி கொண்டு வந்து, உணர்வு ரீதியா அடிமை ஆக்கி இவன் சொல்றதை செய்ய வைச்சு இருக்கான்.

3வது கேட்டகிரி மூளைச் சலவை செய்து தத்துக் குடுக்க வைத்து காசுப் பார்த்து இருக்கான். அதாவது நிறைய பொருளாதார சிக்கல் இருக்கிறவங்க கிட்ட, குழந்தை நல்ல இடத்தில் வளரும், உங்கப் பிரச்சனைத் தீரும்னு சொல்லி தத்துக் கொடுக்க வைத்து காசுப் பார்த்து இருக்கான்” என்று விளக்கினான்.

“என்ன சார் கிணறு வெட்ட பூதம் கிளம்பின மாதிரி” என்று குழப்பமாய் கேட்டான் தீலிப்.

“எப்படி இந்த அளவு தகவல் கிடச்சது?” என்று சந்தேகமாய் கேட்டான் பார்த்திபன்.

“சார், பெரும்பாலான பெற்றோர்கள் டாக்டர் தனபால், கம்பவுண்டர் முத்து பெயரை சொன்னாங்க, அவனைத் தேடிப் போனோம். வீட்ல அவன் இல்லை, அவன் வீட்டை உடைச்சு எடுத்த ஆவணங்கள் தான் உங்க கிட்ட கொடுத்த மருத்துவ விவரங்கள்.. அதோட இந்த டைரி இருந்தது” என்று கொடுத்தான் கேசவன்.

“நம்ம சிவராம் அவனைப் பிடிக்கப் போயி இருக்கார்” என்றான் தீலிப்.

“இவ்ளோ விஷயம் நடந்து இருக்கு... நீங்க சொல்லவேயில்லை தீலிப்?” என்ற பார்த்திபனின் கேள்விக்கு,

“ஏற்கனவே நிறையப் புதிர்கள் நம்மக் கிட்ட இருக்கு, இந்த விஷயத்திலயாவது முழுத்தகவல் தெரிந்து சொல்லலாம்னு இருந்தேன் சார். அதுப்போக எனக்கும் இப்பத்தான் முழு விவரம் தெரியும்” என்று திலீப் பதில் சொல்லிக் கொண்டிருந்த போது பிரதாப்பின் அலைப்பேசி சத்தமிட்டது.

அனைவரிடமும் சொல்லி விட்டு, மருத்துவர் வைஷ்ணவி அழைப்பினை ஏற்ற பிரதாப், “சொல்லுங்க டாக்டர்” என்றதற்கு,

“சார் நீங்க கேட்டு இருந்த 3 விசயங்களுக்கு பதில் சொல்லத் தான் கூப்பிட்டேன். நீங்க சந்தேகப்பட்ட மாதிரி ஹீலியம், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் பயன்படுத்தி மயங்க வைத்து இருக்கலாம், கண், வாய் தைத்து இருந்த அந்த இரட்டைக் கொலை வழக்குக்களில். இதுவும் யூகம் தான்... நீங்க கேட்ட மாதிரி பெரிய எதிர்ப்பு இருந்திருந்தா கொலை செய்த நபர் மயங்க வைக்க பயன்படுத்தி இருக்கலாம்.. இது போன்ற வாயுக்கள் சில நேரம் பிரேத பரிசோதனையில் கூட தெரியாம போக வாய்ப்பு இருக்கு, என் சீனியர் ஒருத்தர் கிட்ட உங்க சந்தேகம் பற்றி கேட்ட போது சொன்னாங்க” என்றார்.

சிறு புருவச் சுழிப்புடன் மருத்துவர் வைஷ்ணவி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த பிரதாப், “அதாவது ரொம்ப எதிர்ப்பு இருந்திருந்தா சமாளிக்க பயன்படுத்தி இருக்கலாம், இல்லாமலும் இருந்திருக்கலாம் இல்லையா?” என்று கேட்க,

“ஆமாம்.. இரண்டாவது நீங்க அனுப்பி இருந்த, டாக்டர் தனபால் வீட்ல இருந்து எடுக்கப்பட்டதா அனுப்பி இருந்த மருத்துவ குறிப்புகள் படி, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான ஆனால் குழந்தைகள் உயிரைப் பாதிக்க கூடிய அல்லது நீண்ட கால அதிக செலவாக கூடிய சிகிச்சைகள் தேவைப் பட கூடிய மருத்துவ நிலைமைகள் இருந்து இருக்குது. அதைப் பற்றி உங்களுக்கு சில குறிப்புகள் அனுப்பி இருக்கேன் பார்த்துக்கோங்க” என்றார் வைஷ்ணவி.

“சரிங்க டாக்டர் , கடைசி விஷயம் கொலையாளி கொலை செய்யும் விதத்தில் உள்ள வித்தியாசம் பற்றிக் கேட்டு இருந்தேனே அதுவா?” என்று கேட்டான் பிரதாப்.

“ஆமாம்... முதல் இரண்டு இரட்டைக் கொலைக்கும் தனபால் டாக்டர் கொலைக்கும் சில ஒற்றுமைகள் இருக்கு.. ஒரே ஆள் செய்து இருக்கலாம்.” என்றார் மருத்துவர் வைஷ்ணவி

“சரிங்க டாக்டர், உங்களது தகவல்களுக்கு மிக்க நன்றி. நாங்கப் பார்த்துக் கொள்கிறோம்” என்று அழைப்பைத் துண்டித்த பிரதாப்,

“திவாகர் , போலி டாக்டர் தனபால் தன்னுடைய நோயாளிகளுக்குப் பரிந்துரைத்த எல்லாப் பல்நோக்கு உயர் மருத்துவமனைகள் பற்றியும் , அவை செயல்படும் விதங்கள் பற்றியும் முழுசா சரி பாருங்க” என்று சொல்லி விட்டு,

“பார்த்தி, கேசவன், குழந்தைகள் பற்றிய தகவல்களை இன்னும் நல்ல சரி பாருங்க.. அந்த டைரில வேற ஏதும் தகவல்கள் இருக்கானும் பாருங்க...

திலீப், சிவராம் கிட்ட பேசிட்டு எனக்கு தகவல் சொல்லுங்க” என்று அனைவரையும் அனுப்பி விட்டு மருத்துவர் வைஷ்ணவி அனுப்பி இருந்த மருத்துவ குறிப்புகளை புலனத்தில் இருந்து எடுத்து படிக்க ஆரம்பித்தான்.

தசைச் சிதைவு நோய் (Muscular Dystrophy)
தசை சிதைவு நோய் என்பது தசைகளின் பலவீனம் மற்றும் அழிவு ஏற்படுகின்ற ஒரு நிலையாகும். இது மரபணு ரீதியாகவோ அல்லது வேறு காரணங்களினாலோ ஏற்படலாம். இந்த நோய், தசை திசுக்களை பாதித்து, இயக்கத்தில் சிரமங்களை ஏற்படுத்தும். ஆண் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது.

பிரதாப் இதனைப் படித்துக் கொண்டிருந்த போது, நைனிகா ஒரு முறை அவளது மாணவன் ஒருவனுக்காக பணம் திரட்டுவதாகவும், அவனுக்கு தசை சிதைவு நோய் என்றும் சொல்லியது நினைவு வந்தது.

இரத்தக் கோளாறு
o"ஹீமோபிலியா" என்பது இரத்தத்தின் இயல்பான உறைதல் திறனை இழப்பது.

o"தலசீமியா" என்பது ஹீமோகுளோபின் அளவு குறைவதால் அல்லது இல்லாமையால் வகைப்படுத்தப்படும் மரபுவழி கோளாறுகளின் குழுவைக் குறிக்கிறது.

o"சிக்கிள் செல் நோய்" என்பது நாள்பட்ட இரத்த சோகை, வலிமிகுந்த நிகழ்வுகள் மற்றும் தொடர்புடைய திசு மற்றும் உறுப்பு சேதத்தால் ஏற்படும் பல்வேறு சிக்கல்களால் வகைப்படுத்தப்படும் ஒரு ஹீமோலிடிக் கோளாறு ஆகும்;

மேற்கண்ட இரத்த நோய்களுக்கு தீவிர சிகிச்சை மற்றும் இரத்தம் ஏற்றுவதும் தேவைப்படும். குருதி கொடையாளியான பிரதாப்புக்கு குருதி நோய்கள் பற்றித் தெரிந்து இருந்தது. மேலும் பிளாஸ்மா சரியான நேரத்தில் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட பலரை அறிவான்.

(Plasma - பிளாஸ்மா என்பது இரத்தத்தின் மஞ்சள் நிறத் திரவப் பகுதியாகும். இதில் புரதங்கள், ஆன்டிபாடிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டிபாடிகள் பல்வேறு நோய்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கான மருந்துகளாக மாற்றப்படுகின்றன.)

மேலும் குழந்தைகளைப் பாதிக்கும் முக்கிய இதய நோய்களான பிறவி இதய நோய்கள் (Congenital Heart Diseases), பெறப்பட்ட இதய நோய்கள் (Acquired Heart Diseases) பற்றிய விரிவான விளக்கங்களை படித்து முடித்த பின் வைஷ்ணவியை அழைத்து, சில சந்தேகங்களை கேட்டுத் தெளிவுப் படுத்திக் கொண்டான்.

அடுத்து கமிஷனருக்கு அழைப்பு விடுத்தான்.

அவர், “சொல்லு மேன்... என்ன விஷயம்?” என்று கேட்க,

தனபால் பற்றி கேசவன் மற்றும் திவாகர் சொல்லியதை விவரித்த பிரதாப் , " அவன் பெற்றோர்களை வைத்து அவர்கள் பிள்ளைப் பாசத்தை பயன்படுத்தி பல விதத்தில் பணம் சம்பாதித்து இருக்கான்" என்று விவரமாக சொன்னான்.

“சோ தனபால் பெற்றோர்களை உளவியல் ரீதியா குழப்பி சாதாரண நோய்களை கூட மிகைப்படுத்தி சொல்லி பல்நோக்கு மருத்துவமனைகளுக்கு அனுப்பும் புரோக்கர் வேலைப் பார்த்து பண வேட்டை நடத்தி இருக்கான் இல்லையா" என்று கமிஷனர் கேட்க

"ஆமாம் சார் , சில தீவிர உயிர் பாதிப்பு ஏற்படுத்த கூடிய நோய்கள் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு உதவுவதாக சொல்லி நன்கொடை வசூல் செய்து நோயாளிகளுக்கு கொடுக்காமல் பண மோசடி வேற செய்து இருக்கான்" என்று விவரித்தான் பிரதாப்

" தனபால் சமூக வலைத் தளங்கள் பற்றி அலசிப் பாரு பிரதாப், இப்போ அது தான் பணம் வசூலிக்க உதவுது, அவன் நெட்வொர்க் பத்தி தெரியவும் உதவும்” என்றார் கமிஷனர்.

மேலும் மற்ற கேஸ்கள் பற்றியத் தகவல்களையும் கொடுத்து முடித்து அழைப்பைத் துண்டித்தான் பிரதாப் சக்கரவர்த்தி.

அதே நேரம் நைனிகா, அஞ்சலியுடன் அலைப்பேசியில் பேசிக் கொண்டு இருந்தாள்.

“அப்புறம் உன் ஆளு RK எழுதுனது எல்லாம் நடக்குது” என்று அஞ்சலி நைனியிடம் கிண்டலாக கேட்டாள்.

“என் ஆளு போலீஸ்கார்மா, RK எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த எழுத்தாளர். ராஜேஷ்குமார் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது அந்த குற்றம் 23 படம்... இப்போ அந்தப் படத்தில் வருகிற மாதிரி நடக்குது.. அதை விடு அஞ்சு, அருண் விஜய் கலக்கி இருப்பார் போலீஸ் வேஷத்தில்” என்று ரசித்து சொல்லிக் கொண்டிருந்த போது,

“சரி சரி உன் ஆளு போலீஸ்கார் என்ன சொல்றார்?” என்று கேட்டாள் அஞ்சலி.

வெட்கமும் ஆதங்கமும் மெலிட “ ‘ப்ளீஸ்’ ‘பிஸி’ தான் எப்போதும்” என்று தன் மனக்குமுறலைக் கொட்டினாள்.

“என்னடா அவர் வந்துட்டார்ன்னு ஆசையா கிளம்பின?” என்ற போது,

பிரதாப்புடன் நடந்த நிகழ்வுகளை விவரித்து, “வழக்கம் போல் வேலைன்னு கிளம்பிட்டார்” என்று தன் வருத்தத்தை தெரிவித்தவளுக்கு ஆறுதல் கூறினாள் அஞ்சலி.

பேச்சை மாற்றும் விதமாக “நம்ம கௌரிக்கு சேட்டையப் பார்த்தியா! மனோகரை வம்பு இழுக்கலைன்னா தூக்கம் வராது போல... அவ சிம்பு நடித்த வாலு படத்தில் விடிய விடிய நிக்கிற சீன்னை எடுத்து அந்த சுருட்டை முடி மனோகர்னும், சந்தானம் இவனும் போட்டு, லீவு கேட்டு நின்ற போதுன்னு ஸ்டேட்டஸ் போட்டு இருக்கா” என்று சொல்லக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாள் நைனிகா.

“மனோகர் பார்த்தா என்ன ஆகும்?” என்றதற்கு,

“அவ விபரம், மனோகர் பார்க்காம நாம சில பேர் மட்டும் பார்க்கிற மாதிரி தான் வைத்து இருக்கா” என்ற அஞ்சலி மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தாள்.

நைனி, அஞ்சலியிடம் பேசிய பின்பு பிரதாப்பிற்கு அழைக்க நினைத்து வேண்டாம் என்று விட்டு குறுஞ்செய்தி மட்டும் அனுப்பி வைத்தாள்.

தனது அலைப்பேசி அதிர்ந்ததில் எடுத்துப் பார்த்த பிரதாப், புதிய எண்ணில் இருந்து வந்த அழைப்பை யோசனையுடன் ஏற்றுப் பேசிவிட்டு அந்த நபரிடம் தான் அலுவலகத்தில் இருப்பதாகவும் உடனே வருமாரும் சொல்லி வைக்க முயன்ற போது வந்திருந்த நைனி தகவலைப் படித்தவனுக்கு, கொட்டும் வெயிலில் செல்லும் போது மரத்தின் நிழல் கீழ் நிற்கும் ஆசுவாசம் கிடைத்த உணர்வு.

“கல்யாணத்துக்குப் பிறகு ப்ளீஸ் பண்ணும் போதாவது பீஸ்ஃபுல்லா என்னோடு இருங்க ப்ளீஸ் போலீஸ்கார்” என்று குறும்பாய் அனுப்பி இருந்தாள்.

“உள்ளே வரலாமா சார்?” என்ற குரல் கேட்டு நிமிர்ந்துப் பார்க்க, சந்தானம், அமுதா மற்றும் பிரணவ் வந்து இருந்தனர்.

அவர்களை வரவேற்று அமர செய்து பேச ஆரம்பித்த போது, அவசரமாக ஓடி வந்த திலீப், “சார், முத்துவைத் தேடிப் போன சிவராமை யாரோ கத்தியால் பின்னாடி இருந்து குத்திட்டாங்க” என்றதும் ஸ்தம்பித்துப் போனாது பிரதாப் மட்டுமல்ல அங்கிருந்த அனைவரும் தான்.
 
Nejamave kinaru vetta bhootham vantha kadhai thaan , interesting I think Devi kanmani sis
 
I guess this episode writer as Nithya Mariappan.
 
ஒவ்வொரு எபியும் அடுத்து என்ன என்ன என்று எதிர்பார்ப்போடு ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா நகர்கிறது சூப்பர் 👌👌👌
 
அருமையான பதிவு
 
சோ அந்த தனபால் இவளோ கீழ் தரமான வேளை தான் செய்து இருக்கான்.....

அவன் எல்லாம் நாட்டுக்கு எதுக்கு?????

போய் சேரட்டும் பக்கி பய 😤😤😤😤😤

ஐ திங்க் இது கார்த்திகா சக்கரவர்த்தி அப்படினு தோணுது.....
 
உறையுள் உறையும் உதிரம்...!
(அத்தியாயம் - 13)


அச்சோ...! உருப்படியா சில தகவல்கள் கிடைச்சதேன்னு சந்தோஷப்பட்டேன். இப்ப என்னடான்ன எஸ்.ஐ. சிவராமையே குத்திட்டாங்களே..
அந்த டீம்லயே சின்சியரா வேலைப் பார்த்தது அவரொருத்தர் தான். அதுவும் ஒப்பாம, அவரையும் தூக்க நினைச்சிட்டாங்களா..? ஆனா, பாருங்க, எம்புட்டு தைரியம் இருந்தா போலோஸ்காரரையே தூக்க நினைச்சிருப்பாங்க.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
இன்ட்ரஸ்டிங், இந்த தனபால் போலி டாக்டர் மட்டுமில்லாமல் இந்த வேலை வேற செஞ்சிருக்கானா? இவன் செய்தது நல்லது, அடப் பாவிகளா போலீஸ்காரரையே தாக்கி இருக்காங்க
 
விவரங்கள் கலெக்ட் செய்து இருக்கிறதை பார்த்தால் நித்யா மாரியப்பன் தான் இந்த எபி.
 

Latest threads

Top Bottom