Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

14 - உறையுள் உறையும் உதிரம்

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 12
  • Views Views 2K
Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
746
Reaction score
4,462
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
உறையுள் உறையும் உதிரம்-14
View attachment 689
பிரதாப்பும் திலீப்பும் அவசரகதியில், அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தனர். சிவராமின் பெயரைக் கூறி, அவன் இருக்கும் பகுதிக்கு இருவரும் விரைந்து செல்ல, அங்குள்ள ஒரு அறையில், வயிற்றில் கட்டிடப்பட்டு, மயக்க நிலையில் சிவராம் படுத்திருந்தான்.

காவலர்களைக் கண்டதும், பதறி எழுந்த ஒருவர், அவரது அரவத்தில் திரும்பிய காவலர்களுக்கு, கரம் அசைத்து வணக்கம் வைத்தான்.

“சார்.. ரோட்டோரமா கத்திக்குத்துபட்டுக்கிடந்தாங்க.. என்ன பண்ணனு தெரியல. உயிர் இருந்தது.. அதான் உடனே ஆட்டோல போட்டுக் கூட்டி வந்தேன். இங்கருக்க டாக்டருங்கதான் தகவல் சொன்னாங்க” என்று பவ்யமாய் அவர் கூற,

திலீப்பிடம் கண்காட்டிவிட்டு, மருத்துவரைப் பார்க்க, பிரதாப் விரைந்தான்.

மருத்துவரின் அறைக்குள் அனுமதியோடு நுழைந்தவன், “டாக்டர், நான் ஏ.சி.பி. பிரதாப். சிவராம் இப்ப எப்படி இருக்காங்க?” என்று பதட்டத்தை உள்ளடக்கிய குரலில் கேட்க,

“எஸ் தெரியும் சார். நான் தான் உங்களுக்குத் தகவல் சொன்னேன். ப்ளீஸ் பீ சீடெட்” என்று அவனுக்கு இருக்கையைக் காட்டினார்.

பிரதாப்பும் அவர் காட்டிய இருக்கையில் அமர, “கத்தி கொஞ்சம் ஆழமாதான் இறங்கியிருக்கு சார். ஸ்பிலீன் அன்ட் இன்டஸ்டைன் டேமேஜ் ஆயிருக்கு. நல்லவேள ஹீமோபெரிடோனியம் ஸ்டேட் இல்ல [hemoperitoneum- வயிற்றில் (stomach) ரத்தம் நிறைதல்]. அவருக்கு ரேர் ப்ளட் க்ரூப்பும் இல்லாததால எங்க பக்கம் எந்தச் சிரமமும் இல்லை.. காயம் குணமாகக் கண்டிப்பா தாமதமாகும். அவர் மருத்துவமனைல ஒருவாரமாது ஸ்டே பண்ண வேண்டியிருக்கும் சார்” என்று சிவராமின் நிலையை விவரித்தார்.

“உயிருக்கு?” என்று அவன் கேள்வியாய் நிறுத்த,

“எந்தப் பிரச்சினையும் இல்லை சார். கூட்டிட்டு வந்தவருக்குத்தான் நீங்க நன்றி சொல்லனும். கொஞ்சம் தாமதமாயிருந்தாலும் காப்பாத்திருக்க முடியாது” என்று கூறினார்.

ஒரு பெருமூச்சுடன் அவருக்கு நன்றி கூறியவன், வெளியே வர, அந்த முதியவர் கொஞ்சம் பயத்தோடு அவனைப் பார்த்தார். எங்கே தன்னைக் குற்றவாளியென்று நினைத்திடுவானோ என்ற அச்சம் அவர் முகத்தில்…

அதை அவர் முகம் பார்த்தே புரிந்துக் கொண்டவன், “ரொம்ப நன்றி ஐயா” என்று கூறிவிட்டு திலீப்பிடம் செல்ல,

“சிவராமுக்கு அம்மா மட்டும்தான் சார். அவங்களுக்குத் தகவல் சொல்லியாச்சு. அவங்க பக்கத்து ஊரில் இருக்காங்க போல. வரக் கொஞ்சம் தாமதமாகுமாம்” என்று கூறினான்.

“பரவாயில்லை திலீப். நான் இருக்கேன். நீங்கப் போய் மற்ற வேலைகளைக் கவனிங்க” என்று பிரதாப் கூற,

“ஓகே சார்” என்று சல்யூட் அடித்துவிட்டுச் சென்றான்.

அந்த முதியவருக்கும் நன்றி கூறி அனுப்பிவைத்த பிரதாப், வெளியே உள்ள இருக்கையிலேயே தோய்ந்து அமர, காலையிலிருந்து ஓடித்தேயும் அலைச்சலை, உடல் எடுத்துக்கூறியது.

அதில் சற்றே அயர்ந்து அவன் சாயும் வேளை, மீண்டும் உடல் விரைப்புற, கண்கள் கூர்மை பெற்றது, அங்கிருந்த செவிலியர் ஒருவரைக் கண்டு.

அவன் நினைவடுக்கில், அவளது புகைப்படத்தோடு வந்த கேசவன், ‘இவங்க தான் மிஸ் சந்திரா சார். வசுமதிக்கு இன்சுலின் போட்டவங்கனு காமாட்சி சொன்ன ஆள். ஆனா இப்ப அவங்க அந்த ஆஸ்பிடல்ல வர்க் பண்ணலையாம். வேற ஆஸ்பிடல் மாறிட்டதா சொன்னாங்க’ என்று இரண்டு நாட்கள் முன்பு கூறியது நினைவு வர, மூளை பரபரப்பானது.

சற்றும் தாமதிக்காமல், சந்திரா அருகே அவன் சென்று நிற்க,

அவனைப் பார்த்து ஒரு நிமிடம் பதறியவள், பின் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “எதும் வேணுமா சார்?” என்று கேட்டாள்.

“ம்ம்.. நீங்க சந்திரா தானே?” என்று அவன் கேட்க,

சற்றே திணறலாய் தலையசைத்தாள்.

“செல்வநாயகம், வசுமதி வீட்டில் இன்சுலின் இன்ஜெக்ஷன் போடும் ஆள் நீங்க தானே?” என்று நிறுத்தி, நிதானமாய், அழுத்தமாய் அவன் கேட்க,

அவளுக்கு உடலெல்லாம் வியர்த்து விட்டது.

“விசாரணைக்கு நீங்களா ஒத்துழைப்புத் தருவீங்களா? இல்லை ஸ்டேஷன்லருந்து ஆளை வரச் சொல்லி, நானே வாய்ப்பை ஏற்படுத்திக்கலாமா மிஸ் சந்திரா?” என்று பிரதாப் கேட்க,

வியர்த்த நெற்றியைத் துடைத்துக் கொண்டு, தலையசைத்தாள்.

சிவராமின் பாதுகாப்பிற்காக அவனை படுக்க வைத்திருந்த அறைக்கே சந்திராவோடு சென்ற பிரதாப், தனது துளைக்கும் பார்வையோடு, “சொல்லுங்க சந்திரா” என்க,

“எ..என்ன சொல்லனும் சார்?” என்று கேட்டாள்.

“வசுமதி பற்றிச் சொல்லுங்க.. உங்களுக்கு அவங்க இறந்துபோனது கண்டிப்பா தெரிஞ்சிருக்குமே? யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?” என்று பிரதாப் கேட்க,

“சார்.. எனக்கு அதெல்லாம் தெரியாது சார். நான் அவங்களுக்கு இன்சுலின் போடுவேன் அவ்ளோதான்” என்று கூறினாள்.

“ஓ..” என்று தன் நெற்றியைத் தேய்த்துக் கொண்டவன், “கடைசியா எப்ப அவங்களுக்கு இன்ஜெக்ஷன் போடப் போனீங்க?” என்று கேட்க,

“அ.. அது..” என்றவள், அவனது கூர்மையான பார்வையில், “நான் ஒரு அஞ்சு ஆறு மாசத்துக்கு முன்னயிருந்தே அவங்களுக்கு ஊசி போடுறதில்லை சார்” என்று தயக்கமாய் கூறினாள்.

“ஏன்?” என்று புருவம் சுருக்கி, பிரதாப் கேட்க,

“எனக்கும் அவங்களுக்கும் கொஞ்சம் தகராறு..” என்றவள், “நான் ஒரு டிவோர்ஸி சார். அவங்க வாடகைக்கு விட்டிருந்த வீட்டில் ஆள் இல்லைனு எனக்கு அந்த வீட்டை வாடகைக்குக் கேட்டேன். முதல்ல தர்றபோல தான் பேசினாங்க. ரேப்பிடோல நான் அவங்க வீட்டுக்கு வந்து இறங்குறதை வச்சுட்டு, அவங்களா ஏதோ தப்பா நினைச்சிருந்துருக்காங்க. சமீபமா குடிவர்றதைப் பற்றி நான் பேச்செடுக்கவும், கண்டவன் வந்து போற மாறி இருக்கும் என்னால தரமுடியாதுனு சொன்னாங்க.. அதுல கோவப்பட்டு நான் அவங்களுக்கு இனி ஊசி போட வரமுடியாதுனு சொல்லிட்டேன். சத்தியமா அந்த கொலைக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை சார். என்னை விட்டுடுங்க” என்று அழுதேவிட்டாள்.

“இதுக்காகத்தான் ஆஸ்பிடல் மாறினீங்களா?” என்று பிரதாப் கேட்க,

“இல்ல சார்.. அந்த ஆஸ்பிடல்ல சம்பளம் பத்தாம இங்க மாறினேன். எங்க வீட்ல ரெண்டாவது கல்யாணத்துக்கு வரன் பார்க்க ஆரம்பித்து இப்பத்தான் ஒன்னு தழைஞ்சு வந்துருக்கு. நானே என் அக்கா வீட்லதான் தங்கிருக்கேன். என் அக்காக்கு அவ பிள்ளைகளுக்கான படிப்பு, டியூஷன் செலவெல்லாம் நான் செய்றதாலதான் என்னை வச்சிருக்கா. இந்த நேரம் கேஸ் அது இதுனு நான் ஸ்டேஷன் பக்கம் போனதா ஆனா, கல்யாணத்துல பிரச்சினை ஆயிடுமோனுதான் நானும் இதுபத்தி எதுவும் சொல்லிக்காம இங்க வேலை கிடைக்குதுனு வந்துட்டேன்” என்று கூறினாள்.

அவள் கூறியதை மனதோடு அசைபோட்டவன், சிவாவின் தாய் அழுதபடி உள்ளே வரவும், சந்திராவைத் தன் பார்வையால் அனுப்பி வைத்திட்டு, அவருக்கு பொறுமையாய் நடந்ததை எடுத்துக்கூறி, ஆறுதல் படுத்திவிட்டுச் சென்றான்.

மனதில் சந்திரா கூறியது எதையோ உணர்த்தத் துடிப்பதாய் தோன்ற, திலீப்பிற்கு அழைப்பு விடுத்தான்.

“சார்..” என்று திலீப் அழைக்க,

“திலீப்.. முத்துவைப் பற்றி எதும் தகவல் கிடைச்சுதா?” என்று கேட்டான்.

“கேசவனும் பார்த்திபன் சாரும் தேடிப் போனாங்க சார்.. என்னை தனபால் கேஸ் பற்றி விசாரிக்கச் சொல்லிட்டு அவங்க போனாங்க” என்று திலீப் கூற,

சரியென்று அழைப்பைத் துண்டித்தவன், முத்துவின் வீடிருக்கும் பகுதிக்குச் சென்றான்.

‘பிரதாப்.. சம்திங் ஸ்டிரேஞ்.. எதையோ விடுற நீ..’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு வண்டியைச் செலுத்தியவனது உள்ளுணர்வே அவனை வழி நடத்தியதோ?

அவன் வண்டி தனபாலின் மருத்துவகத்திற்கு வந்து நின்றது.

மருத்துவகத்தின் பலகையைக் கண்ட பின்புதான், வந்த இடமே அவனுக்கு உரைக்க, வண்டியைக் கிளப்ப இருந்தவன், பின் என்ன தோன்றியதோ? வாகனத்திலிருந்து இறங்கினான்.

சந்தானம் மற்றும் அமுதா தம்பதியர் அவனைச் சந்திக்க வந்தது நினைவு வர, திலீப்பிற்கு அழைத்து அவர்கள் வீடு திரும்பிவிட்டதை கேட்டுத் தெரிந்துக் கொண்டு மேலே சென்றான்.

இரண்டாம் தளத்தை நெருங்கும்போது, சந்தானம் வீட்டில் பெரும் சப்தம் கேட்க,

அமைதியாய் அடி வைத்து வீட்டு கதவின் அருகே பதுங்கி நின்றான்.

“டேய்.. உன்னைத்தான்டா அந்தப் போலீஸ்ட சொல்ல இருந்தேன்.. உங்களாலதான் என் புள்ள உசுருக்குப் போராடிகிட்டு கிடக்குறான்.. உங்களயெல்லாம் சும்மாவே விடமாட்டேன்” என்று சந்தானம் கத்த,

“ரொம்ப சௌண்டு குடுக்காதடா.. என்னைத் தேடிவந்த போலீஸே என்கிட்ட கத்திக்குத்து வாங்கி சாவக்கிடக்குறான்.. உன்னைப் பார்க்க வர்றவன் உன்னையும் போட்டுத்தள்ள ஐடியா இல்லாமலா வருவேன்?” என்று முத்து கேட்டான்.

சந்தானம் மற்றும் அமுதா தம்பதியர் அதிர்ந்து போய் அவனை நோக்க,

“அதுக்கு முதல்ல நீங்க உயிரோட இருக்கனும் பாஸ்” என்றபடி, அவனது பின்னந்தலையில் துப்பாக்கியை வைத்தபடி பிரதாப் கூறினான். அவனது உஷ்ணப் பார்வையை, முன்னிருந்து பார்க்காமலேயே முத்துவால் உணர முடிந்ததோ?

அவன் குரலிலும், தலையில் உரசிய துப்பாக்கியிலும் பதறிப்போன முத்து, அரண்டு போய் விழிக்க,

“சுட்டுக் கொல்லுங்க சார்.. இவனும் அந்தத் தனபாலும் போட்ட வேஷத்தாலதான் என் புள்ள தவிக்குறான் இப்ப. எத்தனை மாசமா ட்ரீட்மெண்டுக்கு அலையுறோம்? நல்லா படிக்குற புள்ள படிப்பும் இல்ல கெட்டு நிக்குது? என் புள்ளைக்கு மட்டும் எதாவது ஆகட்டும்” என்று ஆக்ரோஷமாய் சந்தானம் கத்தினான்.

“யாருடா நீ? அந்த தனபால் என்ன பண்றான்? வீட்ல துப்பாக்கி வச்சுருக்குற அளவு என்ன பெரியாளா அவன்?” என்று பிரதாப் கேட்க,

முத்துக்குப் பேச்சே இல்லை…

“சொல்லுடா..” என்று துப்பாக்கியால் அவன் தலையை அழுத்த,

“சார் சார்.. ஒன்னும் பண்ணிடாதீங்க சார்” என்று பதறினான்.

“மரியாதையா உண்மையைச் சொல்லு.. இல்ல கேட்க வேண்டிய விதத்துல கேட்க வேண்டியிருக்கும்” என்ற பிரதாப், பின்புறமாய் வளைத்துப் பிடித்து, அவன் கரத்தை வலிக்கும்படி திருக,

“ஆ… சார்.. நான் ஒன்னும் பண்ணலை சார்.. எனக்கும் அவர் சாவுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. நான் வெறும் கம்பௌன்டர் வேலைக்குத்தான் வந்தேன்.. ஆனா அவரு போலி டாக்டருனே எனக்கும் வேலைக்குச் சேர்ந்து ரெண்டு வருஷம் பிறகுதான் தெரியும். உண்மை தெரிஞ்சப்ப வெளிய சொல்லாம இருந்தா நீயும் என்கூட சேர்ந்து நிறையா சம்பாதிக்கலாம்னு சொன்னாரு.. என் வீட்டு வறுமை அவர் காட்டின பணத்துக்கு அடிபணிய வச்சுடுச்சு.. ஒரு பாதுகாப்புக்குத்தான் துப்பாக்கி வாங்கி வச்சுக்கிட்டாரு.. எ..எனக்கும் ஒன்னு வாங்கித் தந்தாரு. எனக்குச் சத்தியமா வேற எதுவுமே தெரியாது சார்.. நான் அவரு சொல்ற எடுபுடி வேலையத்தான் செய்வேன்” என்று அலறாத குறையாக முத்து கூறினான்.

சரியாய் பார்த்திபன் மற்றும் கேசவனும், பிரதாப்பின் தகவல்படி அவ்விடம் வந்துவிட, “செஞ்சது ஃபிராடுதனம், இதுல வேற எதுவுமே தெரியலைனு சத்தியம் வேற.. அந்த வார்த்தைக்கு இருக்கும் மகத்துவத்தையே உங்கள போன்ற ஆட்கள் தான்டா கெடுக்குறீங்க” என்று அவனை ஓங்கி மிதித்தவன், “கேசவன் இவனைக் கூட்டிட்டுப் போங்க” என்று கூறினான்.

இரவு பத்து மணியானதை சுட்டிக்காட்டும் விதமாய், சந்தானம் வீட்டின் கடிகாரம் ‘டங்..டங்..’ என்று ஓசை எழுப்ப, உள்ளே அவர்களின் மகன் சிணுங்கும் சப்தம் கேட்டது.

கலக்கமான முகத்துடன் அமுதா உள்ளே விரைந்து செல்ல, சந்தானம் தோய்ந்துபோய் இருக்கையில் அமர்ந்து, பிரதாப்பை நிமிர்ந்து பார்த்தார். ஆழ்ந்த மூச்சை வெளியிட்டபடி, அவரது தோளில் கரம் வைத்து அழுத்திய பிரதாப், “நாளைக்கு பேசிக்கலாம். டேக் கேர்” என்று கூறிவிட்டு வெளியே வர,

“என்னடா இது இவ்ளோ சுத்தல்ல விடுது நம்மை?” என்று பார்த்திபன் கேட்டான்.

“ஹ்ம்..” என்று முகத்தைத் தேய்த்துக் கொண்ட பிரதாப், “பிடிப்போம்.. பலநாள் திருடன் ஒருநாள் மாட்டுவான் தானே? உன்கிட்ட பழைய கேஸ் டீடைல்ஸ் கேட்டிருந்தேன்ல? திரட்டினது வரை நாளைக்கு எடுத்துட்டுவா. பார்ப்போம்” எனக் கூறி, “நான் ஹாஸ்பிடல் போறேன் பார்த்தி.. கேஸ்ல நமக்கு அவ்வளவு துணையாருந்த சிவாவை அப்படிப் பார்த்தது கஷ்டமாருக்கு. வீட்ல தூங்குறதுக்கு அங்க இருந்தா அவங்களுக்கும் ஒரு துணையாருக்கும்” என்று கூறினான்.

அவன் தோள் தட்டிய பார்த்திபன், “பார்த்துப் போடா” என்று கூறிவிட்டுச் செல்ல,

தானும் மருத்துவமனை வந்து சேர்ந்தவன், சிவாவின் உடல்நிலை பற்றி அவனது அன்னையிடம் விசாரித்துவிட்டு, தான் பாதுகாப்பிற்கு இருப்பதாய் கூறி, வெளியே வந்து அமர்ந்துக் கொண்டான்…

தூங்காமல் இருக்க இணையத்தின் பக்கம் பிரதாப் தன் பார்வையைச் செலுத்த, தகவல் தொழில்நுட்பத் துறை பாதுகாவலர் ஒருவரிடமிருந்து செய்து ஒன்று வந்து குதித்து. செல்வநாயகத்தின் மகனது இணையப் பக்கத்தில் பதிவிடப்பட்டப் புகைப்படம் அது. அவனது இணைய செயல்பாட்டை வைத்து, அவன் குணநலன்களை ஆராய வேண்டி பிரதாப் தகவல் தொழில்நுட்பத் துறையினரிடம் கூறியிருக்க, அதிலிருந்து அவன் வியக்கும்படியான தகவல் ஒன்று வந்து சேர்ந்தது.

வருண், தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்க, அதில் அவனது கையில் இருந்த பிரேஸ்லெட்டைக் கண்டு அதிர்ந்து போனான். ஆம்! சுந்தரி கணவனிடமும், ரோஷனிடமும் கண்டெடுத்த அதே வடிவம் கொண்ட பிரேஸ்லெட் அது!

நொடியும் தாமதிக்காமல் வருணுக்கு அழைத்து அதுகுறித்து விசாரிக்க, “எங்கப்பா எனக்கு பிறந்தநாள் பரிசா கொடுத்தது சார்” என்று கூறினான்.

மனதில் பல குழப்பங்களை அடக்கியபடி “இது எங்க வாங்கினார்? ரிஸிப்ட் எதுவும் இருக்கா?” என்று கேட்க,

“எனக்கு சரியா தெரியலை சார். பரிசா கொடுத்ததால நான் அதுபத்தி எதும் கேட்டுக்கலை” என்றான்.

அழைப்பைத் துண்டித்தவனுக்கு குழப்பமான மனநிலையோடு நேரம் செல்ல, மெல்ல அவன் கண்கள் சொருகி, சோர்வு அவனை மயக்கம் கலந்த தூக்கத்திற்குள் அழைத்துச் சென்றது.

அதேநேரம்.. அந்த ஆள் அரவமற்ற சாலையில், தனது ஆஸ்தான கருப்பு உடையில், நிதானமாக நடந்துச் சென்றது அவ்வுருவம்…

குறிப்பிட்ட அந்த வீடு வரவும், அழைப்பு மணியை ஒலிக்கச் செய்து காத்திருக்க, கதவு ஒரு முதியவரால் திறக்கப்பட்டது.

அலுங்காமல் உள்ளே நுழைந்த உருவம், அடுத்த அரை மணி நேரத்தில், அந்த முதியவரை, நாற்காலியில் அமர்த்தியிருந்தது.

இரண்டு கரங்களும், நாற்காலியின் கைப்பிடியோடு கட்டப்பட்டிருக்க, வாயில் அழுத்தமாய் டேப் ஒட்டிவிட்டு, ஓங்கி அந்த முதியவரின் கன்னத்திலேயே ஒரு அறை விட்டது…

அதிர்ந்து விழித்த முதியவர், பயத்தில் உடலை அசைக்க முயன்றபடி, “உம்..உம்..” என்று சப்தம் எழுப்ப முயற்சிக்க,

அதை காது குளிர கேட்ட கொலையாளியின் கண்களில் பௌர்ணமி நிலவின் பளபளப்பு.

பிடித்த உணவை விரும்பி உண்ணும்போது எழும் ரசிப்புடன், இடுக்கி போன்ற ஒரு பொருளை எடுத்தது, அந்த கருப்பு உடைக்கு பாத்தியப்பட்ட கொலையாளி…

முதியவரின் கண்களில் பயம் அதிகரிக்க, அது கொலையாளியின் உற்சாகத்தை அதிகரிக்கப் போதுமானதாய் இருந்தது.

முதியவரின் கரத்தை லேசாய் தடவிக் கொடுத்து, விரலைப் பிடித்துக் கொண்டு, “இந்தக் கைதானே சின்னப் பசங்க, ஆம்பல பசங்கனுகூட பார்க்காம தொடச் சொல்லுது?” என்று கேட்டபடி, அந்த இடுக்கிக் கொண்டு நகத்தினை அப்படியே பிய்த்து எடுக்க, ரத்தம் லேசாய் சிதறியது.

“ம்ம்..ம்ம்..” என்று வலி பொறுக்க இயலாமல் முதியவர் கத்த முயற்ச்சிக்க, மரண பயம் கசிந்து கண்ணீராய் பெருகியோடியது.

“தொடும்போது சுகமா தானே இருந்தது?” என்றபடி, அடுத்த விரல் நகத்தை இடுக்கியால் பிடித்துக் கொண்டு, “எனக்கும் கூட இப்ப ரொம்ப சுகமா இருக்கு” என்றபடி, நகத்தை பிடுங்கியது.

உயிர் போகும் வலி உச்சம் மண்டைவரை ஏற, ஒவ்வொரு விரல் நகமாய், பார்த்துப் பார்த்து, ரசித்து பிடுங்கப்பட்டது, அக்கொலையாளியால்…

தேவலோக இசைபோல, முதியவரின் வலியுடன் கூடிய முனகல், உன்மத்தம் கொள்ளச் செய்ய, “ஆஹா.. இட்ஸ்‌ ஹெவன்லி” என்று அத்தனை ரசனையோடு கூறியபடி, அந்த இடுக்கியை பாடலுக்கேற்ப கரமசைப்பதைப் போல் ஆட்டி, கடைசி நகத்தையும் பிய்த்து எடுத்தது.

பத்து நகங்களும் பிடுங்கப்பட்டு கை அத்தனை அகோரமாய் இருக்க, “ப்யூடிஃபுல்” என்று அக்கரத்தை ரசனையோடு பார்த்துக் கூறியபடி, “உனக்கு ஏத்த தண்டனை இதுதான்” என்று கூறி, முள் அடிக்கும் கருவியை எடுத்து,(stapler) காயப்பட்ட நகம் நீக்கப்பட்ட இடத்திலேயே முள்ளை அடித்தது.

வலியில் என்னைக் கொன்றுவிடேன், என்ற பார்வையோடு முதியவர் கண்ணீரில் சிவந்த விழிகளோடு ஏறிட, இரண்டு கரத்தின் கட்டுகளையும், அவிழ்த்து விட்டு, கையைத் திருப்பிவைத்துக் கட்டினார், கொலையாளி. முள் தீர்ந்துபோன கருவியை அழுத்தி, ஓசை எழுப்பி, கண்கள் மூடி, நாசியை இழுத்து ரத்த வாசம் பிடித்து, புன்னகைத்தன, அந்த உடுப்புக்குள் மறைந்திருந்த இதழ்கள்…

கரங்களைப் பதமாய் திருப்பி, பூனைக்குட்டிக்குத் தடவிக் கொடுப்பதைப் போல் கொடுத்துவிட்டு, இரண்டு கையின் நரம்புகளையும் ஆழமாய், அழுத்தமாய், ஆசையாய் வெட்டி முடிக்க, ரத்தம் பீறிட்டுக் கிளம்பி, கீழே குளம் உருவாக்கும் தன் பணியைச் செவ்வனே செய்யத் துவங்கியது.

அதைக் கண்டு மந்தகாசமாய் புன்னகைத்துவிட்டு அக்கருப்பு உருவம் வெளியேற, கொட்டும் அடைமழை, பூமழைத் தூவி வழியனுப்பியது…

மறுநாள் காலை…

அரை தூக்கத்தில், அமர்ந்த நிலையில் இருந்தபோதும், பிரதாப்பின் காதுகளில், சுற்றி நடப்பவை அனைத்தும் கேட்டுக்கொண்டுதான் இருந்தது.

அவனது அலைபேசி தனது இருப்பை உணர்த்தி, அவனது சொற்ப தூக்கத்தையும் கலைத்துவிட, சிவந்த கண்களைக் கசக்கிக் கொண்டே நிமிர்ந்து அமர்ந்தவன், அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

எதிர்புறம் சொல்லப்பட்ட செய்தியில், அரண்டுபோய் எழுந்தவன், சிவாவின் தாயிடம்கூட சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டான். அலைபேசியில் நிவேதிதா நகரில், திலீப் குறிப்பிட்ட இடத்தை அடைய, கேசவன், திலீப், மற்றும் பார்த்திபன் அவ்விடத்தில் கூடியிருந்தனர்.

இந்தக் கொலை செய்தியாளர்கள் பக்கம் சென்றால், இருக்கும் தொல்லையில் இன்னும் எத்தனை அழுத்தங்களைக் கொடுக்கும் என்று நினைக்கும்போதே, அங்கிருந்த அனைவருக்கும் பெரும் மன அழுத்தத்தைக் கொடுத்தது.

“பெயர் தண்டபாணி சார்.. மனைவி இல்லை, ஒரே பையன், அவனும் கொஞ்சம் வருஷம் முன்ன இறந்துட்டானாம். தனி ஆளாதான் இருக்காரு.. அவர் மகன் கட்டின ரெண்டுமாடி வீடுதான் இது. மேல் வீட்டு ஆளுங்க தான் ஊருலருந்து வந்துட்டதா சொல்லிட்டுப்போக உள்ள வந்து பார்த்திருக்காங்க..” என்று சேகரித்தத் தகவலை திலீப் கூற,

சுற்றிலும் தன் பார்வையை அலசினான்.

அதே பாணி, ஆனால் கையில் நகம் பிடுக்கப்பட்டுள்ளது…

அந்தப் பகுதி காவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலமாக இவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்க, அவர்களைப் பார்த்த பிரதாப், “இவர்மேல இதுக்கு முன்ன எதாவது புகார் வந்திருக்கா?” என்று கேட்டான்.

“அதைதான் நானும் சொல்ல வந்தேன் சார்.. இந்தாளு பஸ்ல வச்சு சின்ன பையன்கிட்ட தப்பா பிகேவ் பண்ண முயற்சிபண்ணி பிரச்சினை ஆயிருக்கு. பஸ்லருந்த ஒரு காலேஜ் பையன் கடைசிவர விடாம ஸ்டேஷன் இழுத்துட்டு வந்தான்.. பத்துநாள் உள்ள வச்சுத்தான் அனுப்பினோம்” என்று அவர் கூற,

அவன் மூளை பரபரப்பானது.

‘தப்பா பிஹேவ் பண்ண முயற்சி பண்ணிருக்கான்’ என்ற வரியோடு, அவன் கரங்களைப் பார்க்க, எதுவோ இணைவதைப் போன்ற தோற்றத்தை, குளம் கட்டி, ஈக்கள் மொய்க்கும் ரத்தமும், கரத்தின் காயமும் உணர்த்தியது.

அதை அவன் யோசிக்கும் நேரம், அவனது அலைபேசி ஒலிக்க, எடுத்துப் பார்த்தவன், ‘டீச்சர்’ என்று இருக்கவும், அன்று நைனிகாவும், பேருந்தில் நடந்ததாய் கூறிய சம்பவம் நினைவு வந்தது.

அழைப்பைத் துண்டித்தவன், “மேல் வீட்டு ஆட்களைக் கூப்பிடுங்க. நான் விசாரிக்கனும்” என்று கூற, மீண்டும் நைனிகாவிடமிருந்து அழைப்பு வந்தது.

அழைப்பைத் துண்டித்தவன், தன்முன் வந்து நின்ற முப்பதுகளின் தொடக்கத்திலிருந்த ஆணைப் பார்த்து, “எத்தனை வருஷமா இங்க குடியிருக்கீங்க?” என்று கேட்க,

“ஆறு மாசமாதான் சார் இருக்கோம். கடந்த பதினைந்து நாளா, எங்க பையனுக்கு ஸ்கூல் லீவ்னு சொந்த ஊருக்குப் போயிட்டோம். எனக்கும் வர்க் ஃப்ரம் ஹோம் கிடைச்சது. இப்பத்தான் ஊருக்கே வந்தோம்” என்று அவர் கூறினார்.

மீண்டும் நைனிகாவிடமிருந்து அழைப்பு வர, அதில் எரிச்சலுற்றவன், அழைப்பை ஏற்று “நைனி நான் தான் கட் பண்றேன்ல? அப்றம் கூப்பிடுறேன்” என்க,

பதட்டமாய், “ப்ர..பிரதாப்..” என்று திணறியவள் அழைப்பு, துண்டிக்கப்பட்டது.
 
குழந்தைகளிடம் தப்பாக நடக்கறவங்களை கொலை பண்றானா கொலையாளி 🙄 நைனிகா எதுக்காக போன் செஞ்சா அவளுக்கு ஆபத்தா???
 
Aiyo naini thaan murderer ah irupalo 🤔 Nithya mariyappan sis
 
அப்ப அன்னைக்கு, நைனி பார்த்தா அந்த கிழவன் தான் போல இது....



கண்டிப்பா இந்த கொலையாளி நைனியா இருக்க வாய்ப்பு இருக்கு....



அவ அவளோ emotion ஆனதை பார்த்தா....



ஏதும் அவளுக்கு childhood டிராமா இருந்து இருக்க வாய்ப்பு இருக்கு.....



ஏன் இவ இப்ப இப்படி செய்யற?????



நியூஸ்லா பார்த்து இருப்பாளோ?????



அவளோட சுயநினைவில் இதை செய்யலையோ என்னவோ.....



ஆன இப்ப இறந்தவங்க எல்லாம்.....



அதுக்கு தகுதி ஆனவங்க தான்....



வயசானா
லும், சபல புத்தி போகல போல....
 
Priya dharshini sis 😄
 
Super. All bad boys target. Kalakal. Teacher ku enna achu.
 
உறையுள் உறையும் உதிரம்...!
(அத்தியாயம் - 14)


அடப்பாவி...! அவ என்ன சொல்ல வரான்னு கூட கேட்காம லைனை எதுக்கு கட் பண்ணனும்..? அத்தனை சின்சியர் சிகாமணின்னா இவன் எதுக்கு கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கணும் ?
அவ என்ன சொல்ல வரா, முக்கியமான விஷயமா இருந்தா பதில் சொல்லி இருக்கலாம், இல்லையா அப்புறம் பேசறேன்னு காலை கட் பண்ணியிருக்கணுமஇ. இப்படி எடுத்தவுடனே, என்ன, ஏதுன்னு கூட கேட்டகாம எதுக்கு கட் பண்ணனும்..? சரியான அவசரத்துக்கு பிறந்தவன் போல. ஆனா, இப்ப நைனிகாவுக்கு என்ன ஆபத்தோ, அவசரமோ தெரியலையே..? அவளுக்கு ஏதோ கிடைக்கப் போய்தான் அவனை கூப்பிட்டாளோ என்னவோ...? அட ராமா !


இப்பத்தான், மொத்த க்ரைமும் ஒரு போகஸ்க்கு வருது போல.
ஸோ.. செத்தவங்க எல்லாருமே
பாலியியல் தொல்லை கொடுத்தவங்க போலவே...?


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
பிரதாப் ஏதோ அவசரமாய் இருக்கப் போய் தானே நைனி அத்தன வாட்டி கால் பண்றா அட்டென்ட் பண்ணி என்னன்னு கேட்கலாம்ல இப்படி என்ன ஏதுன்னு கேட்காமலே கட் பண்ணிட்ட
 
நைனி தான் கொலைகாரியா?
 
பயங்கரம். இதில் ரைட்டர் யோசிக்க முடியவில்லை.
 

Latest threads

Top Bottom