Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

16 - உறையுள் உறையும் உதிரம்

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 13
  • Views Views 2K
Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
746
Reaction score
4,462
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
உறையுள் உறையும் உதிரம்

அத்தியாயம் 16
View attachment 692
வாயிற்கதவு திறந்து கிடக்க, முகப்பறையில் இரு நாற்காலியில் மத்திய வயதை ஒட்டிய ஆணின் விழிகள் பிடுங்கப்பட்டு கைகள் கட்டப்பட்ட நிலையிலும், பெண்ணின் வாயை தைத்து மணிக்கட்டு வெட்டப்பட்ட நிலையில் அந்த இடத்தை சுற்றி உதிரம் வழிந்தும் கிடக்க அதன் ஒரு ஓரத்தில் பாதி உதிரத்தில் நனைந்து மயங்கியிருந்தாள் நைனிகா. சிறிது தொலைவில் அவளது அலைபேசி அழைப்பு வந்ததற்கான இசையொலி எழுப்ப ஏற்கபடவில்லை என்றதும் அணைந்து சார்ஜ் இல்லாமல் தனது உயிரை விட்டிருந்தது.

***

நிலவு ஜொலிக்கும் வேளையில் நிலவின் துணையோடு மனோகர், நைனிகா புலனத்தில் அனுப்பிய நேரடி இருப்பிடத்தைக் (live location) கொண்டு இந்த வீட்டை அடைந்திருந்தான்.

ஆனால் உள்நுழைந்து பார்த்தவனோ நைனிகா மயக்கமடைந்த நிலையையும் சடலங்களையும் பார்த்தவன் நின்றபடியே விழிகளை மட்டும் சுற்றி சுழற்றி வீட்டை ஆராய்ந்தவன் எவ்வித சலனமின்றி வெளியே வந்து நின்று காவல் நிலையத்திற்கு அழைத்துத் தகவலைச் சொல்லி இருந்தான்.

“ஹலோ என் பேர் மனோகர் சார். இங்க ஒரு மர்டர் நடந்திருக்கு சார். அதுவும் சேம் பேட்டர்ன்ல கில்லர் திருப்பி அடுத்த கைவரிசைய காட்டிட்டான்போல.
அந்த ஸ்பாட்ல என் ஸ்டாப் நைனிகா மயங்கி விழுந்து கிடக்கிறாங்க. உடனடியாக வாங்க சார்” என்றவாறு முகவரியைக் தந்து அலைபேசி இணைப்பைத் துண்டித்தபடி அவ்வீட்டின் வாயிலில் நின்றிருந்தான் மனோகர். அவனிடம் எந்த பதற்றமும் இல்லை.

***

இரவு நேரம் 9.30 மணி கடந்திருக்க திலீப் பதற்றமாக

“சார் இசைநகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் பேசினார். மறுபடியும் அங்கு சேம் பேட்டர்னில் கொலை நடந்ததா இன்பார்ம் பண்ணியிருகாங்க. கூடவே ஒரு பெண்ணும் மயங்கி இருக்கதா சொல்றார். நாம உடனடியாக போகனும்” என்றான்.

பிரதாப் உடனடியாக தன் டீம் ஆட்களை அழைத்து விவரங்களைச் சொல்லி அழைத்து சென்று கொண்டிருந்தான். அவன் மனமெல்லாம் கமிஷனர் சொன்ன ‘இன்னும் ஒரு கொலை நடந்தால் இந்த கேஸ் தன்னை விட்டு போய் விடுமே’ என்ற கவலை கரையானாக அரித்தது.

அந்த ஆள் நடமாட்டம் இல்லா இசைநகரில் இசைநாதமாக சைரன் ஒலி பெரும் சத்தத்துடன் அந்த வீட்டின் முன் நின்றது. வீட்டின் வெளிவாசலிலே மனோகரும் காவல் ஆய்வாளரும் நின்றிருந்தார்கள்.

ஜீப்பில் இருந்து இறங்கிய பிரதாப்பிடம் சல்யூட் வைத்தவர் “சார் இவர் தான் மனோகர். கால் பண்ணி இன்பார்ம் பண்ணவர். உள்ள ஒரு லேடி மயக்கத்தில் இருகாங்க. தென் இரண்டு டெட் பாடீஸ்..” என்று படபடவென்று ஒப்புவித்தார்.

மனோகரிடம் விசாரணை மேற்கொள்ள திலீப்பிடம் சொல்லிவிட்டு பிரதாப் தன் குழுவினருடன் உள்ளே நுழைந்தான். அவனுக்கு மனதினுள் என்னவென்று புரியாத அசௌகரியமாக இருந்தது.

பெண் மயங்கி இருக்கிறாள் என்ற தகவல் அறிந்ததும் இரண்டு பெண் காவல் அதிகாரிகளையும் அழைத்து வந்திருந்தார்கள்.

உள்நுழைந்து கண்ட காட்சியில் அனைவரும் ஒரு நிமிடம் திடுக்கிட்டுதான் போயினர். கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் க்ரைம் சீன் பார்க்கும் முன் அந்த இடத்தையோ பொருட்களையோ யாரும் தொடவோ இடம் மாற்றவோ கூடாது. ஆனால் இங்கு நைனிகாவோ பயத்தில் மயங்கி விழுந்தவள் தேங்கி இருந்த உதிரத்தின் மீதே விழுந்ததால் குருதி அனைத்துப் பகுதிகளிலும் தெறித்ததோடு அவளது கைரேகைகளும் கைப்பை மற்றும் அலைபேசி சிதறியும் கிடந்திருந்தன.

பார்த்த பிரதாப்புக்கு “நைனி இங்கே எப்படி?” அதிர்ச்சியும் பதற்றமும் கூடிய உஷ்ணம் தலைக்கேற கைமுஷ்டிகளை இறுக்கியபடி பெரும் மூச்செறிந்தான். அவ்வளவு சொல்லியும் தான் சொல்வதைக் கேட்காமல் ஏன் வெளியே வந்தாளென்று சினமும் கூட. அவள் ஏற்கனவே வெளியே தான் இருந்தாளென்று அவனுக்கு எப்படி தெரியும்?

பெண் அதிகாரியிடம் கண்காட்ட அவர்கள் இருவரும் நைனிகாவை எழுப்ப முயன்றனர்.

எழவில்லை என்றதும் தண்ணீர் போத்தல் எடுத்து வந்து முகத்தில் லேசாக தெளித்து கன்னங்களைத் தட்டவும் மீண்டும் கொலைகாரன் தான் உள்நுழைந்து விட்டானோ என்று பயந்தவள் அடித்துப் பிடித்து எழுந்து தரையோடு பின் நகர்ந்தவளாய்

“வேண்டாம் என்ன விட்ரு என்னை எதுவும் பண்ணிடாத எனக்கு அடுத்த மாசம் கல்யாணம் பேசி இருகாங்க” என்று பிதற்றியவளிடம்,

ஏற்கனவே வழக்கு தன்னை விட்டுப் போய்விடும் என்ற வருத்தத்திலும் தன்னவள் இப்படியான சூழலில் இருக்கிறாளே என்ற பதற்றமும் சேர்ந்து

“ஸ்டாப் இட் நைனிகா”

என்று பிரதாப்பை உச்சஸ்தானியில் கத்தியிருக்க செய்தது. ஏற்கனவே க்ரைம் சீனை கொலாப்ஸ் பண்ணதோடு மீண்டும் உதிரத்தை வழித்துக்கொண்டு அவள் நகர்ந்துச் சிக்கலைப் பெரிதாக்கி கொண்டிருந்தாள்.

பிரதாப் கத்தியதை செவியில் வாங்காமல் அவனைக் கண்டதும் சிறுமழலையாய் மலர்ந்தவள் எழுந்து அவனருகில் ஓடிவர எத்தனிக்க

“நில்லுங்க மிஸ் நைனிகா. முதலில் உங்களைச் சுற்றி என்ன நடக்குதுனு கொஞ்சம் நிதானமா பாருங்க. இந்த நேரத்தில் இந்த இடத்தில் என்ன செய்றீங்க?” தன் உணர்வுகளை வெளிக்காட்டாது காவலதிகாரியாய் அவன் கேட்டத் தோரணை அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றால் ஏனையோருக்கு வருத்தமாக தான் இருந்தது. அவர்களுக்கு தான் தெரியுமே அவள் இவனது வருங்காலமென்று.

“பிரதாப் பிளிஸ்..” என்றவள் கண்களை திரையிட்ட உவர்நீரை கன்னத்தில் தழுவ விட்டாள்.

“விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பீங்கனு நம்புறேன்.” என்றவன் க்ரைம் சீனை ஆராயும் சாக்கில் திரும்பிக் கொண்டான். ஏற்கனவே நிகழ்ந்த நிகழ்வுகள் அவனை இப்படி செய்ய வைத்தது. தான் இளக்கமாக இருந்தால் வழக்கு திசைமாறி போய்விடும் என்ற சொல் வரும் என்பதை மனதில் கொண்டு தன்னுணர்வுகளை அடக்கினான்.

“இவங்க ரெண்டு பேரையும் நீங்க எப்ப பாத்தீங்க?” என்றார் பெண் காவலதிகாரி.

“நா.. நான் ஹெல்ப் கேக்க தான் உள்ள வந்தேன் ஆனா.. ஆனா இங்கு வந்து பாத்தா இப்..படி”என்று பதற்றத்தோடு கூறினாள். விழிகளோ பிரதாப்பை தேடின.

“எதற்காக ஹெல்ப் அதுவும் இந்த இடத்தில் இந்த நேரத்தில்”

அவள் நடந்தது அனைத்தும் சொல்லிக் கொண்டே வந்த போதே, ‘அவ போன் செஞ்சப்ப கோபத்தை விட்டுட்டு நான் போனை எடுத்திருக்கனும்’ பிரதாப் தன்னையே திட்டிக் கொண்டான்.

அவள் கூறியதை ஒன்று விடாமல் சொல்லக் கேட்டு கொண்டிருந்தவர்கள் இறுதியாக அவள் கூறியதில் அனைவரும் ஒருசேர, “அந்தக் கில்லரை நீங்க நேரில் பாத்தீங்களா?” எனக் கேட்டிருந்தனர்.

செவிகூர்மையுடன் கவனித்திருந்த பிரதாப் அவள் பதிலை தான் எதிர் பாத்திருந்தான்.

“நா.. நான் பக்கத்தில் போய் பாக்கல கொஞ்சம் தூரமா தான் நின்றிருந்தான். ப்ளாக் ஹூடி ப்ளாக் கோட் ப்ளாக் மாஸ்க் ப்ளாக் க்ளவுஸ் ப்ளாக் ஷூஸ் னு அவனை பாக்கவே இருட்டில் பயங்கரமா இருந்தது” நடுக்கத்துடன் சொல்லி முடித்தாள்.

இனி என்ன செய்வது என்பது போல் அப்பெண் அதிகாரி பிரதாப்பை பார்க்க

“ஓகே மர்டர் நடந்த இடத்தில் போலீஸ் என்கொயரி வரும் முன்னாடி இப்படி க்ரைம் சீனை contaminate பண்ண கூடாதுனு உங்களுக்கு தெரியாதா? இப்ப உங்க பிங்கர் பிரிண்ட் புட் பிரிண்ட் உங்க திங்க்ஸ் எல்லாமே நீங்க தான் க்ரைம் பண்ணதா அக்யூஸ் ஆகும். உங்களை என்கொயரி கிரிமினலா கூட்டிட்டு போக வேண்டிய சூழல் வரும்னு தெரியாதா?”

என்றவன் குழு தலைவனாக கேள்வி தொடுக்க ‘இதற்கு எல்லாம் தயாராக இரு’ என்று சொல்வது போல் நைனிகாவிற்கு இருந்தது.

சுற்றி ஆராய்ந்தும் எந்த ஆதாரமும் இல்லை. சடலங்களுக்கு அருகில் இருந்த டீப்பாயில் இருந்த இரண்டு டீகோப்பைகளும் அதற்கு அருகில் இருந்த டீபேக்கும் மட்டுமே எஞ்சியிருந்தன. அதனை மனதில் குறித்துக் கொண்டான்.

தடயவியல் குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததால் அவர்களும் வந்து தங்கள் வேலையைத் தொடர பிரதாப் வெளியே வந்தான். வாசலுக்கு அருகே உடைந்து கிடந்த பலகைகள் சிதறிக் கிடந்தன.

அவை 'O’ ‘E’ 'o’ ‘T’ ‘L’ ‘T’ ‘a’ என்ற எழுத்துக்களை பிரதிபலிக்க ‘o’ ‘a’ எழுத்துக்கள் மட்டும் ‘×’ இந்த குறீயிடை தழுவி வித்தியாசமாக இருந்தது. அதனை மனதில் குறித்துக் கொண்டு புகைப்படம் எடுத்தவன் மனோகரிடம்,

“மிஸ்டர் மனோகர் நீங்க ஏன் உங்க ஸ்டாப் உள்ள மயங்கி கிடக்றாங்கனு தெரிஞ்சிம் அவங்கள எழுப்ப முயற்சிக்கல?”

“சார் போலீஸ் வர முன் நான் உள்ள போனா அந்த க்ரைம் சீன்ல நானுமே இருந்ததா அக்யூஸ் பண்வீங்க. எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அப்புறம் contaminate பண்ணதுக்காக நானும் ப்ரைம் சஸ்பெக்ட்ல உள்ள போகவா?அதுவும் இல்லாமல் அந்த பாடிய பாத்துட்டு நிக்க முடியுமா? கண்ணும் இல்லாமல் பாக்கவே இங்கிலீஷ் படத்தில் வரும் மம்மி மாதிரி இருக்கு. அதுவும் இந்த ரத்த வாடை எனக்கு ஆகவே ஆகாது” என்று சாதாரணமாக பேச பிரதாப் அவனைக் கூர்மையுடன் கவனித்தான்.

“ஓகே மிஸ்டர் மனோகர். எப்பவேணாலும் என்கொயரிக்கு கூப்பிடுவோம் நீங்க வரனும். இன்பார்ம் பண்ணாம வெளியூர் போக கூடாது” என்ற நிபந்தனையுடன் அவனை அனுப்பி வைத்தான்.

தடவியல் குழுவினர் தங்கள் பணியை முடித்து வர

“சாரங்கன் எவ்வளவு சீக்கிரம் அட்டாப்ஸி ரிப்போர்ட் ரெடி பண்ண முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு வேணும்”

“ஷ்யூர் சார்”

சடலங்களை சிகிச்சை ஊர்தியில்(Ambulance) ஏற்றி அனுப்பிவிட்டு மாஜிஸ்திரேட்டிடம் அனுமதி பெற்று நைனிகாவை முதண்மை சந்தேக நபராக(Prime Suspect) அழைத்துச் சென்றனர் பிரதாப்பின் குழுவினர்.

***
காவல் நிலையத்தில் விசாரணைக் கைதியாக அமர்ந்திருந்தாள் நைனிகா. பெண் அதிகாரிகள் உதவியுடன் தன்னைச் சுத்தம் செய்தவள் வேறு உடை மாற்றி மனம் முழுவதும் வேதனையும் கலக்கமும் பயமுமாக அமர்ந்திருந்தாள். பிரதாப்பும் வீடு செல்லாமல் அங்கயே தான் இருந்தான்.

“எல்லாம் சரியாயிடும்டா போகஸ் டூ யுவர் இன்டியூசன். நான் கிளம்புறேன்டா” என்றவாறு கிளம்பியிருந்தான் பார்த்திபன்.

இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்தாலும் பேசிக்கொள்ள வில்லை. அழுதழுது அமர்ந்தவாறே உறங்கியிருந்தாள்.

பிரதாப் தான் உறக்கம் தொலைத்து நடந்தது அனைத்தும் ஒன்று விடாமல் யோசித்துக் கொண்டிருந்தான்.

“இந்த கேமமைல் டீபேக் செண்டர்ல என்கூட வேலை பாக்கிறவங்களுக்கு வாங்கினது”

“அக்கா உங்களுக்கு தலைவலிக்குமேனு கேமமைல் டீ போட்டேன்”

தான் யோசிப்பது சரிதானா? தன்னவளையே சந்தேகபடுகிறோமோ? என்று கூட தோன்றியது. இருப்பினும் காவலதிகாரியாக தான் பொறுப்புடன் அனைத்தையும் யோசிக்க வேண்டும் என்று நினைத்ததோடு இதைப்பற்றி அவளிடமே கேட்கலாம் என்று நினைத்தவாறே சிறிது நேரம் அசந்திருந்தான்.

காலை ஆறு மணியளவில் அலைபேசி ரீங்காரமிட எடுத்து பேசியவன் மௌனமானான். அழைத்தது கமிஷ்னர். என்ன பேசினாரோ முந்தைய தினம் இருந்த பாரம் நீங்கி புதுப்பொலிவுடன் அடுத்த விசாரணைக்கு தயாராகியிருந்தான்.

தன் வீட்டிற்கும் நைனிகா வீட்டிற்கும் அழைத்து பேசியவன் அவர்கள் இருவரும் முந்தைய தினம் வெளியே வந்ததாகவும் தாமதமானதால் தன்னுடனே தங்கி விட்டதாகவும் கூறியிருந்தான். திருமணத்திற்கு முன் இப்படி தங்க கூடாதுனு தெரியாதா அந்த பொண்ணுக்கு என்று கோபமான அவளின் வீட்டினர், வீட்டிற்கு வரட்டும் பேசிக் கொள்வோம் என்று அவளின் வரவுக்காக காத்திருந்தனர்.

முன்தினம் தண்ணீர் தெளித்து எழுப்பியதும் ‘எனக்கு அடுத்த மாசம் கல்யாணம் பேசியிருகாங்க’ என்று சொன்னது நினைவு வந்து இளம்புன்னகையுடன் நைனிகாவை திரும்பிப் பார்க்க அவளோ கிழிந்த நாராக சோர்வுடன் பெஞ்சில் படுத்திருந்தாள். அவளுக்கு துணை இருந்த பெண் காவலதிகாரி வெளியேச் சென்றிருக்க மெதுவாக அவளருகில் வந்தவன் அவளை எழுப்பினான்.

“நைனி… நைனி…”

“இல்லை… இல்ல என்னை விட்ரு என்னை கொல்லாத” என்றவாறே பதறி கத்தியவளின் வாயை மூடியவன் “நான் தான் நைனி பிளிஸ் சத்தம் போடாத” என்றான்.

அவளுக்கு மிக அருகில் இருவரின் மூச்சுக்காற்றும் தீண்டிட அவனது விரல்கள் அவள் உதட்டினை தழுவியிருக்க நான்கு விழிகளும் சந்திக்க ஏகாந்தத்தை அனுபவிக்கும் சூழலாக இல்லாமல் இப்படியொரு சூழலில் நிற்க வைத்த விதியை நொந்துக்கொண்டு அமைதியாக அவனைப் பார்த்தவள் “ம்ம்ம்..” என்றாள்.

மெதுவாக கைகளை விலக்கியவன்

“இந்தக் கொலைக்கும் உனக்கும்…”

“நிச்சயமா சம்மந்தம் இல்லை பிரதாப். நான் வழிமாறி தான் வந்தேன்” நேர்பார்வையாக அவள் சொல்ல

“அப்ப அந்த கேமமைல் டீபேக் ஏன் அந்த வீட்டில் இருந்தது?”

“வாட்? அதுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் பிரதாப்? உங்க மேல உள்ள அக்கறையில் உங்களுக்கு டீபேக் வாங்கி தந்தா நீங்க என்னையே சந்தேகபடுவீங்களா?” என்றவளின் விழிகள் உவர்நீரை சிந்தியது.

“என் வேலையை நான் சரியா செய்யனும் நினைக்கிறேன் நைனி”

“நிச்சயமா அந்த டீபேக் அங்கு இருந்தது எனக்கு தெரியாது நான் பாக்கவும் இல்லை கொடுக்கவும் இல்லை”

இதழ் விரியா புன்னகையுடன் “இது போதும். இனி நான் பாத்துகிறேன்” என்றவாறு எழுந்து கொண்டான். ஆனால் தன்னவள் மீதும் ஒரு கண் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் மறக்கவில்லை.

“ஆனால் உன் மேலுள்ள கோவம் இன்னும் அப்படியே தான் இருக்கு சொல்லப்போனா கூடியிருக்கு”

“பிரதாப்.. பிளீஸ்” என்று நைனிகா சொல்ல

“எங்கே நான் மட்டுமே இந்த பிளீஸ் சொல்லி காலத்தை ஓட்டனுமோனு நினைச்சேன். பத்தல” என்று தன் காதை இழுத்துக் காட்டினான்.

அந்த நேரத்தில் உள்ளே யாரோ வருவது போல் இருக்க அவரவர் இடத்தில் அமைதியாக அமர்ந்துக் கொண்டனர்.

புதியதாக ஒரு பெண் காவலதிகாரி வந்திருந்தார். சல்யூட் அடித்தவர்

“ஐஅம் ஆரவி. சிவா சார் ஹாஸ்பிடலைஸ் இருக்கும் வரைக்கும் என்னை அவரோட பொஸிஸன்ல ஒர்க் பண்ண அலாட் பண்ணிருகாங்க சார்” என்றவாறு ஒரு கடிதத்தைக் கொடுத்தார்.

அப்பொழுது தான் சிவாவை அப்படியே விட்டு வந்தது நினைவு வந்தது.
கடிதத்தை வாங்கியவன் சிவாவிடம் நலம் விசாரிக்க வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டான்.

***
வெளியேச் சென்றிருந்த திலீப் மதிய வேளையில் ஓடோடி பிரதாப் முன் வந்தவன்,

“சார் அந்த நகைக்கடைகாரர் காஞ்சிபுரம் போய்ருப்பாரு போல. அந்த பழைய நோட்டிலிருந்து 25 பேரோட அட்ரஸூம் எடுத்து தந்துட்டார். “ என்றவாறு ஒரு கோப்பினை பிரதாப்பிடம் தந்தான்.

வாங்கிப் பார்த்த பிரதாப் ஒரு முகவரியில் கண்கள் இடுங்கப் பார்த்தான். அந்த முகவரி கலிவரதன் பொன்னி வீட்டு முகவரியின் மேல்மாடி முகவரியாக அமைந்திருந்தது. அதில் உள்ள பெயர் அவனின் சந்தேகத்திற்கு வலு சேர்த்தது.

***
குட்வெல் டியூசன் செண்டர்

“டேய் ஜோயல் ஏன்டா டல்லா இருக்க?”

“ஒன்னுல்லடா கோபி”

“என்கிட்ட சொல்ல மாட்டியாடா?”

“அப்படி எல்லாம் இல்லைடா. என் அப்பா தெனசரி குடிச்சிட்டு வராருடா எங்கம்மாவ போட்டு அடிக்கிறாரு அதான் மனசு சரியில்லை”

“இதான் விஷயமா? நீ பேசாம அந்த சைக்கோ கிட்டே உங்கப்பாவ பிடிச்சு கொடுத்திடுடா போட்டு தள்ளட்டும் ”

அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அஞ்சலி அங்கு வந்தவள்

“வயசுக்கு தகுந்த மாதிரியாடா பேசுறீங்க? என்ன பேச்சு இது?”

“டீச்சர் உங்களுக்கு ஒன்னும் தெரியாது. இவங்க அப்பா தெனமும் தண்ணீ போட்டு வந்து அவங்க அம்மாவ அடிப்பாரு தெரியுமா?” என்க அந்த மாணவன் தலை குனிந்திருந்தான். என்ன நினைத்தாளோ எதுவும் பேசாது அமைதியாக போய்விட்டாள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மனோகருக்கு அடுத்து அந்த மாணவர்கள் பேசியது தான் உச்சகட்ட கோவத்தை வர வைத்தது.

“சும்மா இருடா டீச்சர் கோவபடுறாங்க”

“அதலாம் ஒன்னும் இல்லடா. நீ இந்த படம் பாத்திருக்கியா? Surya's Saturdayனு ஒரு படம் அதுல அவங்க அம்மா சத்தியம் வாங்கிட்டாங்கனு சனிக்கிழமை மட்டும் தான் ஹீரோ அடிப்பொளந்து கட்டுவான். அதை மாதிரி இந்த பேமஸ் கில்லரும் அவங்க அம்மாகிட்ட சத்தியம் பண்ணிருபானாடா? The Great ‘Psycho killer's Saturday’ நல்லாருக்குல்ல”

“எனக்கு எப்படிடா தெரியும்”

“படிக்கிற வயசுல இது என்ன பேச்சு வேண்டி இருக்கு போங்கடா” என்று இருவரின் முதுகிலும் ஒன்று வைத்து அனுப்பியவன் முகம் வெளுத்திருந்தது. ஏதோ நினைப்பில் இருந்தவன் கடகடவென மாடியேறி தன் உடைமைகளை எடுத்து கொண்டு வெளியேக் கிளம்பியிருந்தான்.

உள்ளே அமர்ந்திருந்த அஞ்சலி “எங்கே போறார் இந்த மனுஷன்?” என்று நினைத்துக்கொண்டே “ச்ச நைனிகாக்கு என்ன ஆச்சுனே தெரிலயே? இந்த மனோகரும் கிளம்பிட்டாரு. பேசாமல் போலீஸ் ஸ்டேஷன்ல போய் பாக்கலாமா?நானும் போய்ட்டா பசங்கள யார் பாக்கிறது” என்று தோழிக்காக கவலையுடன் அமர்ந்திருந்தாள்.

****
அன்றிரவு வீடு வந்த பிரதாப் கொலைகாரனைக் கண்டுபிடிக்கும் வரை இனி உறக்கம் இல்லை என்று தன்னறையில் உள்ள வெள்ளை பலகையில் இதுவரை கண்டறிந்தக் குறிப்புகளை எழுதியவன் நீண்ட நேரமாக நடந்த வண்ணம் யோசனையில் இருந்தான்.

இதுவரை கிடைத்த சிசிடீவி காட்சிகளையும் மறுபடியும் மறுபடியும் போட்டு பார்த்தான். தகவல்களை மறுபடியும் படித்தான்.

அங்கும் இங்கும் அலைந்து யோசனையோடே நிற்க மின்னல் வெட்டியது போல் அந்த எண்ணம் தோன்றவும் அந்த ஆங்கில எழுத்துக்களை கோர்த்து பார்த்தவன் புன்னகையுடன் கையில் இருந்த அம்பினை எடுத்து போர்டில் இருந்த கேள்விக்குறியை குறி வைத்து எறிந்தான். அது சரியாக இலக்கினை அடைந்தது. " உன்னை நெருங்கிட்டேன்டா" என்று அறைகூவலும் விடுத்தான். போர்டில் “TOoLaTE” என்ற வார்த்தை மின்னியது.

அதே நேரத்தில் வானம் கவிழ்ந்திருந்த நடு ஜாமத்தில் வெளிச்சத்தின் எதிராளி நிரம்பி இருந்த அந்த இருளடைந்த அறையின் ஜன்னலோரத்தில் நின்றிருந்த உருவம் ஆகாயத்தை ஆக்கிரமித்திருந்த தண்ணொளியின் குளிர்ச்சியை உள்வாங்கிக் கொண்டு கைகளிலிருந்த புகைப்படத்தினைப் பார்த்து “தினமும் உன்னை பாக்கும் போதெல்லாம் என் நிலாம்மாவ மிஸ் பண்றேன்” வருத்தம் தோய்ந்த குரல் அடுத்து விகாரமெடுத்தது.

“என் நிலாவ என்கிட்ட கொடுத்திடுடா. இல்லனா உனக்கு சொந்தமானவளோட கண்களை எனதாக்கி கொள்வேன்.” என்று
கோரமாகச் சிரித்தது.

"ம்ஹூம்… நீ என்னை பிடிச்சிடுவியாடா? என்னை நெருங்க முடியுமாடா உன்னால? அதற்கு நான் விட்ருவேனா? உன்னை எப்படி அலைய வைக்கிறேன் பாருடா ஏசிபி" என்று மீண்டும் சிரித்தது விழிகளில் தன் நிலாவை தொலைத்த துக்கத்தை தேக்கி வைத்துக் கொண்டு.
 
Andha Manohar murderer aga irrupano
 
Enaku intha manohar mela starting la irunthe doubt thaan 🤔 I think priya pandees sis
 
இந்த கலிவரதன் - பொன்னி யாரு?????

இப்ப இறந்தவர்களா?????

அதை கொஞ்சம் சொல்லி இருக்கலாம்....

Too many characters.....

நைனி, அந்த ஆள் கிட்ட இருந்து தப்பிக்க வந்து இருப்பா....

இப்ப வந்து மாட்டிக்கிட்ட.....

மனோகர் கிட்ட ஏதோ தப்பு இருக்கு தான்....ஆன அவன் கொலையாளியா இருக்க வாய்ப்பு இல்லைனு தோணுது....

அந்த பசங்க பேசறதை வெச்சி பயப்படறான்....

அவனும், தண்ணி அடிச்சிட்டு அடிக்கற பக்கியா இருக்கிறதில் வந்த பயமா இருக்கும்.....
 
உறையுள் உறையும் உதிரம்...!
(அத்தியாயம் - 16)


ஸோ.. இதுக்கெல்லாம்.காரணம் மனோகர்ன்னு தோணுது. இந்த அஞ்சலி, மனோகர், நைனிகா இவங்க மூணு பேருமே டீச்சர்ஸ், தவிர மூணு பேருமே குட்வில் ட்யூசன் சென்டர்ல வேற வேலை பார்க்குறாங்கன்னு தோணுது.
அது மட்டும் இல்லாம அந்த
இந்த நைனிகாவுக்கு தான் டீ பேக்கை தனக்கு வேண்டியவங்களுக்கு எல்லாம் கிஃப்ட் மாதிரி கொடுக்கிற பழக்கம் இருக்குது. அதுல இந்த மனோகரும் ஒருத்தன். மனோகரோட லவ்வரோ இல்லை தங்கச்சி நிலாவுக்கு ஏதோ ஆகியிருக்கு, அதுல சம்பந்தப் பட்டவங்களை எல்லாம் இந்த மனோகர் பழி வாங்குறான்னுத் தோணுது. இதுல நைனிகாவும் மாட்டியிருக்கான்னு தோணுது.
கரெக்ட்டா...?

இதுல அந்த கொலைகள் எல்லாம் சாட்டர்டேஸ் தான் நடக்குது. இதை பிரதிப் நோட் பண்ணலையோ ?


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
மனோகரா இருக்குமோ? அந்த பசங்க கண்டு பிடிச்ச சாட்டர்டே வ பிரதாப் நோட் பண்ணலியா? யார் அந்த நிலா?
 
எனக்கு ஆரம்பத்துல இருந்தே அந்த மனோகர் மேல தான் சந்தேகம்.... ஆனா அந்த நிலா யாரு?? ' கண்களை எடுத்துப்பேன் ' னு சொல்றான்.... ஒருவேளை அவன் அந்த கொலைகளை பண்ணிட்டு எல்லாரு கண்களையும் கலக்ட் பண்ணுறானா??

ஒருவேளை அந்த பிரதாப் கிட்ட இருக்க பிரேஸ்லட் தான் நிலாவா?? அந்த டீ பாக்கெட்ஸ்க்கும் இதுல தொடர்பு இருக்கு போலயே....
Nithya Mariappan
 
மனோகர் கிட்ட ஏதோ தப்பு இருக்கு. ஏனோ அவன் மீது சந்தேகம் இருந்துகிட்டே இருக்கு அந்த பசங்க பேசினது கேட்டு இவன் ஏன் அவ்வளவு பதட்டப்படறான்
 
மனோகர் தான் சைக்கோவா?. அனிதா.
 

Latest threads

Top Bottom