- Joined
- Sep 16, 2024
- Messages
- 746
- Reaction score
- 4,462
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
உறையுள் உறையும் உதிரம்
View attachment 698
அத்தியாயம்-20
நைனிகாவை அவள் வீட்டில் விட்டுவிட்டு, நிதானமாக தன் வீட்டுக்கு வந்து, ஈர உடையை மாற்றி சூடான கெமோமில் டீயை தயார் செய்து, சுவாதீனமாக மனோகர் முன் அமர்ந்திருந்தான் பிரதாப்.
லேசான மயக்கத்துடன் மனோகர் இருக்க, அவனருகே நிழலாட, தலைநிமிர்ந்தான்.
எதிரே தன்னை துரத்தி வந்த பிரதாப், யாருமில்லா இடத்தில், தனி கட்டிடத்தில் தான் அகப்பட்டதும், முதல் வேலையாக போலீஸ் அடியை அடித்து மயக்கத்தில் தள்ளியது மட்டுமே நினைவில் வந்தது.
அதன்பிறகு இங்கே கைகால் கட்டப்பட்டு, சற்றுமுன்னர் இடத்தை பார்வையிட்டான்.
இதோ இப்பொழுது பிரதாப் எதிரே நிதானமாய் இருக்கவும் பிரதாப்பின் கஸ்டடியில் இருப்பதை புரிந்துக்கொண்டான்.
மனோகர் கோபமாய் "பிரதாப் எதுக்கு என்னை, இப்படி கைகால் கட்டிப்போட்டு வச்சியிருக்கிங்க. லீவ் மீ." என்று உடலை முறுக்கி கத்தியதில் கட்டப்பட்ட நாற்காலி ஆடியது.
"வெயிட் வெயிட்... ஏன் இந்த கோபம் மனோகர்? நைனி சொல்லியிருக்கா, குட்வில் டியூஷன் செண்டர் நடத்தற மனோகருக்கு பயங்கர கோபம் வரும், ஸ்டாப்ஸ் லீவு கேட்டா கூட தரமாட்டார்னு, அதுக்காக கொலைகாரர்களை கண்டறியற இந்த பிரதாப்பிடமே உங்க கோபத்தை காட்டாதிங்க.
எங்க டிப்பாட்மெண்ட், ஏன் உங்களை தேடுது, வாத்தியாருக்கு தெரியாமலா இருக்கும்?" என்று புருவம் ஏற்றி வினாத்தொடுக்க, மனோகருக்கு இமைகள் தரை தாழ்ந்தது.
"என்னை இத்தனை நாள் தூங்கவிடாம, மீடியா முன்ன, உயரதிகாரி முன்ன, பதில் சொல்ல முடியாத வகையில் இக்கட்டை உண்டு பண்ணினிங்க. இப்ப வாயை திறங்க? ஏன் வரிசையா கொலை செய்யறிங்க? உங்க இடத்தை உங்களுக்கு முன்ன விட்டு தராம இழுத்தடிச்சாங்க என்ற ஒரே காரணத்துக்காகவா?" என்று சில்லித்தனமாக இல்லையா என்பது போல கேட்டான், மனோகர் மறுக்கும் விதமாக தலையாட்டினான். குட்வில் டியூஷன் செண்டர் இன்று மனோகர் வசம் என்றானாலும், முன்பு அதை வாங்கிட வாய்தா மேல் வாய்தா வாங்கி போராடியவன் அல்லவா!
பிரதாப்பின் விழியை ஏறிட்டு "ஏன் சார்... உண்மையான குற்றவாளியை பிடிக்க வக்கில்லைன்னு சிவனேனு இருந்த என்னை குற்றவாளியா மாத்த பார்க்கறிங்களா?" என்று இகழ்ச்சியான முறுவலை வெளிபடுத்தினான்.
அடுத்த நொடி பிரதாப் கையிலிருந்த பீங்கான் டீ-கப் உடைப்பட்டு தூளாகி, அவனது பாதம் பணிய, மனோகரின் முகவாயில் குத்து விழந்து, உதட்டிலிருந்து லேசான குருதி எட்டி பார்த்தது.
மனோகரின் இகழ்ச்சியான முறுவலும், அவன் விடுத்த 'உண்மையான குற்றவாளியை பிடிக்க வக்கில்லை' என்ற வார்த்தையும் பிரதாப்பை சினமேற்ற போதுமாய் இருந்தது.
மனோகர் இளக்காரமாய் சிரிக்க, பிரதாப்போ "பாஸ்டர்ட்... இறந்துப் போனவங்களுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்லேன்டா பார்க்கலாம்" என்று கர்ஜித்தான்.
கீழே தரையை பார்த்து சிரித்த மனோகர், "இருக்கு.. சம்பந்தம் இருக்கு." என்றான்.
பிரதாப் தனக்கு முன்னால் இருந்த உடைந்த பீங்கான் துண்டை காலால் தட்டி விட்டான். வீட்டில் அணியும் காலனி அணிந்திருந்தமையால் பிரதாப்பின் பாதம் சேதாரம் இல்லாமல் தப்பித்தது. கைகளில் மட்டும் லேசான பீங்கானின் சில் குத்தியிருக்க வேண்டும். அதை தற்போது இருக்கும் சூழ்நிலையில் பிரதாப் அலட்சியப்படுத்தினான். இந்த கேஸிற்காக சிவா கத்தி குத்தே வாங்கியிருக்க, இதெல்லாம் எம்மாத்திரம்.
"உண்மையை சொல்லு. இல்லைன்னா போலீஸ் அடி எப்படியிருக்கும்னு காட்ட வேண்டியதா போகும். ஆல்ரெடி ஒரு தட்டு தட்டியதுக்கே 'தொபுக்கடீர்'னு விழுந்துட்ட." என்று 'ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு' என்ற சொல்லுக்கு இணங்க மனோகரின் கோபத்தை தூண்டி விட்டு பேச வைக்க முயன்றான்.
அது சரியாக வேலை செய்தது. "நீ என்னவோ கண்டுபிடிச்சி வச்சியிருக்க போலயே..., அதை சொல்லு ஆமாவா இல்லையானு நான் சொல்லறேன். அதை தவிர என்னிடம் உண்மை சொல்லுனு கெஞ்சறியே.. பச் அப்படி எதுவும் இல்லையே பிரதாப் சார்." என்று மனோகரும், பிரதாப்பின் சினத்தை பற்ற வைத்தான்.
ஏற்கனவே பல்வேறு தரப்பில் தான் இந்த கேஸ் நீட்டிப்பதாக பேசப்படவும், பிரதாப் தான் கண்டறிந்தவற்றை 'சரிபார்த்துக் கொள்' என்ற ஏளன ரீதியில் கூறத்துவங்கினான்.
"உன்னோட முதல் கொலை கலிவரதன். அவர் வீட்ல நீ முன்பு இருந்ததற்கான ஆதாரம் இருக்கு. உன் நிலத்தை உனக்கு கிடைக்காம அலைகழித்ததில் சங்கத்தலைவர் என்று அவர் மீது கோபம்.
அவரை கொன்றது போதாதுனு அவர் மனைவி பொன்னியை கொன்றுயிருக்க" என்று கூற உதடு பிதுங்கி தலையாட்டி மறுத்தான் மனோகர்.
"அவர் வீட்ல இருந்தேன். ஆனா இந்த எக்ஸ்ட்ரா கொலைப்பழியை என் தலையில் போடாதிங்க பிரதாப் சார். அப்படி போடுவதாக இருந்தா ஆதாரத்தை நீட்டுங்க" என்றான்.
"ஓ... ஆதாரம்... ஓகே... கலிவரதன் கொலை என்னோட யூகம்னே வச்சிக்கலாம்.
அப்ப.. கலிவரதனுக்கு அடுத்து நீ செய்த இரண்டாவது கொலை பற்றி பேசுவோம். சந்திரா என்னிடம் சில விஷயத்தை பகிர்ந்திருக்காங்க.'' என்றதும் மனோகர் பார்வை பிரதாப்பின் விழியை சந்தித்தது.
"செல்வநாயகம் வசுமதி கொலையில், வசுமதிக்கு இன்சூலின் போட வந்த நர்ஸ். இன்னும் சட்டுனு நினைப்படுத்தணும்னா உன்னோட எக்ஸ்ஒய்ஃபுக்கு, ரகுராம் வத்சலா பிளான் பண்ணி டி.என்.சி மூலமாக அபார்ஷன் செய்ததை, உன்னிடம் தெரிவித்த மனிதாபிமானம் கொண்ட நர்ஸ்." என்றதும் மனோகர் கண்கள் கலங்கிவிட்டது.
மனோகர் காதலித்து திருமணம் செய்தவனாயிற்றே. அதில் தன் காதல் மனைவி தன்னை விட்டு பிரிந்தால் கூட தாங்கியிருப்பான்.
மனோகரிடம் சண்டையிட்டு அப்பா வீட்டுக்கு சென்றவளின் மணிவயிற்றில், அவனது சின்னசிறு உலகமாக, தன் குழந்தை வரப்போவதை, பல வண்ண கனவு கண்டவனுக்கு மாமியார் மாமனாரான வத்சலா-ரகுராம் இருவருமே, பெற்ற மகளுக்கு டி.என்.சி முறையில் அபார்ஷன் செய்து, அவனது அழகான சிறு உலகத்தை அழித்து, காதலியின் மனதை நெயிற்சியாக மாற்றி, விவாகரத்து வாங்கி, வேறொருவனுக்கு அவர்கள் ஆசைப்படி மணமும் செய்து வைத்ததில், தன் வாழ்க்கையில் சிரிப்பை தொலைத்து சிடுமூஞ்சியாக, கோபமெனும் அரக்க முகத்தை பூசி மற்றவரோடு பழகுகின்றான்.
மனோகர் தன் குழந்தையின் இழப்பை எண்ணி கலங்கியவன் தன்மனதை தேற்றி பிரதாப்பை பார்வையிட, பிரதாப் சந்திரா கூறியதை மேலும் விவரித்தான். "சந்திரா... இதை மட்டும் சொல்லலை. வசுமதிக்கு இன்சூலின் போட ரெகுலரா செல்வநாயகம் வீட்டுக்கு போயிருக்கா. அங்க போகும் போது மோஸ்ட்லி ரேப்பிடோ தான் உபயோகப்படுத்தியிருக்கா.
ரேப்பிடோல ஒரு ஆணோடு வருவதை பார்த்த செல்வநாயகம், தன் மனைவி வசுமதிக்கு ஊசி போட வரும் சமயம் சந்திராவை தொட்டு தடவி பேசி சந்திராவை ரசிச்சு இருக்கார். முதல்ல பெரியவர் என்ற மரியாதையில் சந்திரா அதை கவனிக்கலை. ஆனா நாளாக நாளாக கவனிச்சு வசுமதியிடம் கஷ்டப்பட்டு சொல்லியிருக்காங்க. ஆனா அவங்க புருஷனோட தீண்டல் தப்பானதில்லைனு கணவருக்கு ஆதரவா பேசி, அவளிடமே ஆர்கியூமெட் பண்ணிருக்காங்க.
இதுக்கு நடுவுல சந்திராவும் ஒரு டிவோர்ஸி என்பதால், அவளது அக்கா-மாமா அவளுக்கு மறுமணம் செய்ய நினைக்க, ஒரு நல்ல வரன் வந்திருந்தது. அந்த வரனும் சந்திரா டிவோர்ஸி என்பதால், நாலு இடத்துல சந்திராவோட கேரக்டரை பத்தி விசாரிச்சியிருக்காங்க. பல இடத்துல பாஸிடிவா சொல்லியிருக்க, இந்த வசுமதி மட்டும், கணவரோட செய்கையை தன்னிடமே சொல்லிட்டாளேன்ற கடுப்புல, 'அந்த சந்திரா தினம் ஒருத்தன் கூட வந்து இறங்கறா. ஏதோ கொடுத்த காசை வாங்கிட்டு ஊசி போட்டுட்டு போவாளேனு கண்டுக்க மாட்டோம்.' என்ற வதந்தியை திரிச்சியிருக்காங்க.
அந்த வதந்தியால் அந்த வரனும் அதுக்கு பிறகு நிறைய வரனும் தடைப்பட்டிருக்கு.
இதெல்லாம் உங்களுக்கு தெரியவும், மாமனாரோட தோழர், உன்னோட குட்வில் டியூஷனை வேற உன்னிடம் தர மறுத்த கூட்டத்தில் ஒருவன்னு அவரை போட்டு தள்ளியிருக்க.'' என்றதும், மனோகரோ "பாதி தப்பு பாதி சரி. இதுல எது தப்புனு உங்களுக்கே தெரியும்" என்று தோளைக்குலுக்கினான்.
"சுந்தரி கொலை... அது ராமலிங்கம் செய்தது. அது உங்களை பொறுத்தவரை காந்தி கணக்கு.
ஆனா நாலாவது கொலை டாக்டர் தனபால். உன்னோட குட்வில் டியூஷன் செண்டர்ல ஆறாவது படித்த மாணவன் பிரணவுக்கு, தசைநார் தேய்வுக்கு தவறான மருந்து தந்து, அவன் உடல்நலத்தை பாதிக்கப்பட வச்சிருக்கார்.
இந்த விஷயம் உனக்கு தெரியும். எத்தனையோ கொலையை அசால்டா பண்ணற நீ. உன்னோட குட்வில் டியூஷன்ல நல்லா படிக்கற பிரணவிற்காக செய்திருக்க. ஏன்னா உன் குழந்தை இறந்ததால் ஒரு குழந்தையோட உயிரை காப்பாற்றிய மஹானா, உன்னை நீயே நினைச்சிக்கற. தனபாலை ஏதோ மயக்கப்படுத்தி, உயிர் பயத்தை காட்டி, உன் சொல்லுக்கு கட்டுப்பட்டு, தற்கொலை செய்ய போவதா வீடியோ போட வச்சியிருக்க. ஆனா அவனையும் கொலை செய்திருக்க." என்றதும் மனோகர், "எனக்கு பிரணவோட உடல்நலம் தெரியும். அதனால் அவனை பார்த்துக்க கூறி, பணத்தை உங்க பியான்சி நைனிகாவிடம் தந்து அவங்க பேரண்சிடம் தந்திருக்கேன். அஞ்சலி கௌரியை விட்டு நேர்ல பார்த்து ஆறுதல் சொல்ல சொல்லிருக்கேன். தனபால் இறந்ததுக்கு நான் காரணமா? அதுவும் தற்கொலை வீடியோவை போடவச்சி..." என்று வெடித்து சிரித்தான்.
பிரதாப்பிற்கு எரிச்சல் உண்டானது. ஆனால் மனோகரை பேசவிட்டு விசாரணை நடத்தப்படும் விதமாக கேமிரா ஓடிக்கொண்டுள்ளதே!
முதலில் பேசி தீர்க்க, பிறகு கொலை செய்யவில்லையென்று சாதித்தால் அப்பொழுது புரிய வைப்போம் என்று தன் வெள்ளி காப்பை மேலே நகர்த்தினான்.
"தண்டபாணி கொலைக்கும் நீ காரணமில்லையா? நைனிகா ஏறிய பஸ்ஸில் ஒரு பையனிடம் ஒரு முதியவர் அத்துமீறி தடவியதை பார்த்து, அவ போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் தந்திருக்கா. அதுல இளைஞன் ஒருவன் புகார் அளித்தான்னு மென்ஷனாகி இருக்கு.
யார்டா அது நைனிகா ஸ்கூட்டி கொண்டு போகாத சமயத்தில் பஸ்ல போன பொழுது, சீன்போட்ட ஆளுனு பார்த்தா, அந்த புகாருக்கு ஆதரவா இளைஞன் என்ற இடத்துல உன் பெயர்.
பச்... அதெப்படி மனோகர் எல்லா கொலையிலும் உன்னோட பெயர் அடிபடுது. ஆனா 'நான் அவன் இல்லை'னு மட்டும் சாதிக்கற.
உனக்கு குட்வில் டியூஷன் சென்டர் கோவிலுக்கு சமம். அதுல படிக்கிற மாணவ மாணவிகள் உனக்கு சாமிக்கு சமம். அப்படியிருக்க யாரோ மாணவன் ஒருவனுக்கு ஒரு துன்பம் என்றதும் தண்டபாணியை தீர்த்து கட்டியிருக்க. அதுவும் அவன் தொட்டு தடவியதால் நகத்தை பிடுங்கி, சதையை கிழித்து, ரத்த வெள்ளத்தில் ஒவ்வொரு கொலையையும், மிதக்க விட்டு ரசிச்சியிருக்க" என்று நெஞ்சு விம்ம ஒருமையிலே சாடி கூறினான். இறந்தவர்கள் தவறானவர்களாக இருந்தாலும், இத்தனை கொலைகளை செய்தவனுக்கு மரியாதை என்ன? அதுவும் தன்னை அலைய விட்டானே என்ற ஆக்ரோஷம்.
மனோகர் தண்ணீர் என்பதாய் கையில் செய்கை செய்தான்.
பிரதாப் தண்ணீர் பாட்டிலை எடுத்து மனோகரிடம் கொடுக்க வர, "தண்ணி எனக்கில்லை.. உங்களுக்கு தான். நான் தான் கொலைக்காரன்னு மூச்சு பிடிக்க காரணத்தை அடுக்கறிங்களே அதுக்காக. இப்ப என்ன? என் எக்ஸ் ஒய்ஃப்போட அப்பா அம்மாவையும் நான் தான் கொன்றேன். பிகாஸ்... என் குழந்தையை அழிச்சதால். ரைட்...?
ஆக மொத்தம்.. விவேகானந்தர் நகர் குடியிருப்பு வாசிகளை, என் பெர்சனல் ரிவேன்ஜிற்காக, கொடூரமா கொலை செய்திருக்கேன். பேஷ் பேஷ்... அப்போ நான் ஏன் கண்ணை ஓட்டை போட்டேன், வாயை தச்சேன்? காரணம் சொல்லுங்க." என்றதும் பிரதாப்பிற்கு இது தான் விளங்கவில்லை.
இறந்தவர்கள் பிரதாப்பின் பார்வையிலிருந்து பார்க்கப்படும் போது, செல்வநாயகம் சந்திராவை மோசமாக பார்த்து தடவியது குற்றம் என்றால் அது தெரிந்தும் வசுமதி கணவரை தண்டிக்கவில்லை.
அதே போல மதனகோபால் தன் மகள் காதலிப்பதை அறிந்து விரட்ட, காயத்ரி மகளுக்காக வாதாடவில்லை என்று கொன்றிருப்பானா?
இதில் ரகுராம் தன் மகள் உயிருக்கு ஆபதென்றும் பாராமல் அபார்ஷன் செய்யென்று, கண்களால் டாக்டரிடம் ஆர்வமாய் சம்மதம் அளிக்க, வத்சலா வாய் இருந்தும் தடுக்காமல் வேடிக்கை பார்த்து, தங்கள் வீட்டு வாரிசான குழந்தையை கலைக்க கூறியதால் கண்ணை குத்தி, வாயை தைத்திருக்கலாம்' என்றெல்லாம் நினைத்தாலும், ஏதோவொரு காரணம் உதைத்தது.
காரணம் சரியா? கொலை செய்தவன் சரியா? இருவேறு மனநிலையில் பிரதாப்பே சென்றதில் திடுக்கிட்டான்.
எப்படியும் காலையில் கமிஷனர் ஜார்ஜ் செபாஸ்டியனிடம் இந்த மனோகரை நிறுத்தி, இந்த வீடியோவை காட்டி கொலை செய்த காரணத்தை ஒப்புதல் வாங்கிடலாமென்று நினைத்தான். ஆனாலும் 'உள்ளுணர்வு' என்ற ஒன்று, ஏதோவொன்றை தவற விட்டுக்கொண்டே உள்ளதை எடுத்துக் காட்டியது.
ஆனால் இம்முறை, 'தப்பு செய்யாதவனாக இருந்தா, இந்த மனோகர் ஏன் போலீஸை பார்த்து ஓடணும்.' என்று குறுக்கே காரணத்தை அடுக்கியது.
மனோகரோ "வாயை தச்சதுக்கும், கண்ணை குத்தியதுக்கும், உங்களால் என்னை வச்சி பிளேம் பண்ண முடியாது. ஏன்னா... நான் குற்றவாளி இல்லை... இல்லை... இல்லை.
ஏன் இந்த கொலைகளில் நான் மட்டும் தான் கிடைச்சேனா? நீங்க கல்யாணம் செய்யப்போற என் ஸ்டாப் நைனிகா, சாரி சாரி உங்க பியான்சிக்கு முதல் உரிமை இல்லையா?
அவங்க தான் தண்டபாணியை விஷயத்தில் மெயினா, ஸ்டேஷனில் புகார் தந்தாங்க.
அதோட தனபால் மூலமா பாதிப்படைந்த, பிரணவுக்கு அவங்களும் தான் டீச்சர்.
பிரணவை அவங்களுக்கும் நல்லா படிக்கற பையன்னு ரொம்ப பிடிக்குமே. அவன் சிகிச்சைக்கு கூட, அவங்களும் பணம் தந்து உதவியதா கேள்விப்பட்டேன்.
சமீபத்துல நடந்த கொலையில் உங்க நைனிகா தான் ரத்தத்தில் குளிச்சு, தடயத்தை அழிச்சதை பார்த்தேனே." என்று சிரித்து கூற, அன்று நைனிகா பித்துப்பிடித்தவள் போல செய்த செயல் பிரதாப்பிற்கு நினைவுப்படுத்தவும் கோபமாய் மனோகரை நோக்கினான்.
மனோகரிடம் அதே தெனாவட்டும், ஏளன சிரிப்பும் கண்டவன், தேவையற்று நைனிகா தந்த கெமோமில் டீபேக், அவள் அன்று புகார் தந்த பிறகு, தன் வீட்டில் வந்த அன்று பஸ்ஸில் நடந்தவையை பற்றி, கோபமாய் பேசியதெல்லாம் வேறு நினைவு வந்தது.
மனோகரின் வாயை பிளாஸ்திரி போட்டு அடைத்துவிட்டு, கதவை பூட்டிவிட்டு படுக்க சென்றான். படுக்கையறை வந்தப்போதும், பிரதாப்பால் இயல்பாய் இருக்க முடியாமல் தவித்தான்.
முன்பு சாதாரணமாய் நைனிகாவை டீ-பேக் வைத்து கேட்டதற்கே, அவள் முகம் மாறிவிட்டது. காளிஅவதாரம் எடுக்காத குறையாக கண்டித்தாள்.
அதோடு கடைசி கொலைகளில் அவள் அடைந்த பதற்றம், அழுகை, பயம் இதெல்லாம் கண்முன்னே காட்சிகளாக வந்து சேர, கூடுதலாக தந்தையிடம் 'என் மடியில கணமில்லாதப்போ பொண்டாட்டிய பாதுகாக்க அவருக்கு தெரியும்' என்றாள். அந்த நம்பிக்கையான வார்த்தை இவன் மீதல்லவா!
ஆனால் மனோகர் பேசுவது போல மாணவர்களோடு நைனிகா பழகுவதும் சந்தேகத்திற்கு உள்ளாவது போல தான் உள்ளது.
நைனியை பற்றி நினைக்கவும், குழப்பத்தில், சிவராத்திரியாக தூக்கத்தை பறிக்கொடுத்தான்.
அதிகாலை வெளியே, இன்னமும் ஓயாமல் மழை பொழிந்தது. அதேபோல பிரதாப் மனதில் புயல் ஒன்று வீசிக்கொண்டிருந்தது.
குற்றவாளி என்று மனோகர் சந்தேகத்தை கிளம்புவது தன் மனதை சாய்த்த நைனிகாவை, அதனால் அவன் இதயம் பலதரப்பட்ட உணர்வோடு போராடியது.
அதேநேரம் வாசலில் காலிங்பெல் அடிக்க, பிரதாப் நேரத்தை பார்த்து, கதவை திறக்க வந்தான்.
"சார்... ஏதோ பேசணும்னு வரச்சொன்னிங்க" என்று வந்து சேர்ந்தான் திலீப்.
ஏனோ அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாக தெரிய, திலீபின் ரெயின் கோர்ட், தோற்றம்மெல்லாம் கொலையாளியாகவே தெரிந்து தொலைத்தது.
'பிரதாப் உனக்கென்ன ஆனது.' என்ற மனசாட்சி உலுக்க, தீலிப் வேறு, "சார் கொஞ்ச நேரத்துல கமிஷ்னர் இங்க வரப்போவதா சொன்னார். ஏன் சார். என்ன காரணம்?" என்று பணிவாய் கேட்க, பிரதாப் பக்கத்து அறையின் கதவை திறந்து மனோகரை காட்டினான்.
மனோகரும் உறக்கமின்றி தவித்திருப்பானோ என்னவோ, கதவுதிறக்கும் சத்தம் கேட்க, தலையுயர்த்தினான்.
"சார் மனோகரை பிடிச்சிட்டிங்களா?" என்று அதிர்ச்சியாக கேட்க, தீலிப்பை பார்வையிட்டவாறு மனோகரின் பிளாஸ்திரியை அகற்றினான் பிரதாப்.
பிளாஸ்திரி எடுத்ததும் தான் தாமதம், "பிரதாப் சார்... திலீப் சாரை பாருங்களேன். கிட்டதட்ட கொலையாளி மாதிரி தெரியலை. இவர் கூட இரண்டு கொலைகளை, திருட்டு வழக்குன்னு கேஸை முடிக்க பார்த்த கேடி. இவரையும் பக்கத்தில் சேரை போட்டு உட்கார வச்சி, உதைச்சி கேளுங்க சார்" என்று நேற்றைய கிண்டலை தொடர, "ஸ்டாபிட் மனோகர். நான் ஒன்னும் உன்னை தேவையற்று பிடிக்கலை. இந்த கேஸுக்கும் உனக்கும் சம்பந்தம் இருக்க இல்லையா? போலீஸை கண்டு ஓடின தானே" என்று கொதிகலனாக கேட்டதும், மனோகர் முகம் கிண்டல் கேலியை எல்லாம் துணிக்கொண்டு துடைத்தது போல நீங்கிட மௌனமானான்.
மனோகர் அமைதியாக "திலீப்... கமிஷ்னர் வருவதற்கு முன்ன, ஏதோ சொல்ல நினைச்சிங்களே என்ன சொல்லணும்?" என்று சலிப்புடன் கேட்டான்.
திலீப்போ அடிக்கடி மனோகரை பார்வையிட்ட படி, கைக்குட்டையால் முகத்தில் படர்ந்த வியர்வை துளிகளை துடைத்து, "சார் ராஜசேகரிடம் லாஸ்டா பேசினப்ப தனபால் மர்டரை பத்தி சொன்னேன். தற்கொலை செய்துக்கொள்வதா வீடியோ போட்டதை, அப்ப தான் அவர் இன்னொரு விஷயம் சொன்னார்.
கலிவரதன் வீட்ல மனோகர் மட்டுமில்லை. மாதேஷ் என்றவரும் வாடகைக்கு இருந்திருக்கார். அவர் கலிவரதன் இறக்கறதுக்கு முன்ன தற்கொலை செய்திருக்கார். என் சந்தேகம் என்னன்னா... மாதேஷும் ஒருவேளை தனபால் மாதிரி தற்கொலை பண்ண வச்சிருக்கலாமோனு... அதோட பிரேஸ்லேட் பிக்சரை காட்டினேன். அப்ப அவர் மாதேஷும் இந்த மாதிரி ஒரு டிசைனை, அவரோட முதல் மாத சம்பளத்தில் டிசைன் செய்து ஆசாரியிடம் செய்ய சொன்னதா சொன்னார். இந்த ஊர்ல அவர் ஒருத்தர் தான் ஆசாரி என்பதால, பிரேஸ்லேட் மாடல் ஒன்னுக்கு ஒன்னு வித்தியாசப்படுத்தி செய்திருக்கலாம். மாதேஷுக்கு கல்யாணமானதும், ஏன் தற்கொலை செய்தார் என்ற விவரம் ராஜசேகருக்கு தெரியலை சார். அவரோட பேமிலி பிராப்ளமே அவருக்கு இருந்ததால் மற்ற பழைய ஆட்களை தவிர்த்திருக்கார்." என்றதும் பிரதாப்பிற்கு கண்ணை கட்டியது.
"சாரி சார்.. அவசரமா நீங்க கூப்பிட்டதால இங்க வந்துட்டேன். அந்த டெனெட் மாதேஷ் விவரம் சேகரிக்கலை... இன்னிக்கு அதை விசாரணை பண்ண கிளம்பணும்." என்றான் திலீப்.
கதவு திறந்திருக்க, கமிஷர் வரவும், பிரதாப் திலீப் அவசரமாக சல்யூட்டை அடித்து முடித்தனர்.
"என்ன பிரதாப் காலையிலே வரச்சொன்ன.." என்றவர் மனோகரை கண்டதும், "இவனை மிஸ் பண்ணிட்டதா நேத்து சொன்ன. உன் வீட்ல கட்டி வச்சி என்ன செய்யற பிரதாப். இதெல்லாம் சட்டத்துக்கு விரோதமானது. வெளியே தெரிந்தால் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதா இருக்கும்." என்றார் ஜார்ஜ் செபாஸ்டியன். அவருக்கு பிரதாப் மீது எப்பொழுதும் ஒரு சலுகை உண்டல்லவா! ஆனாலும் பிரதாப் மனோகரை பிடித்து அவன் வீட்டில் வைத்திருப்பது தவறே.
"இனி மறைச்சு என்ன யூஸ் சார். இந்த கொலை எல்லாம் செய்தது நான் தான்." என்று மனோகர் கூற, தன்னிடம் கொலை செய்யவில்லை என்று கூறி மல்லுக்கட்டிய மனோகர், கமிஷனரிடம் குற்றத்தை எப்படி ஒப்புக்கொள்கின்றான்?
இது நிஜம் தானா? இவன் தானா? நைனியை வைத்து என்னை ஏன் குழப்பினான்? அல்லது நைனி குற்றவாளியாக சந்தேகிக்கும் பட்சத்தில், அவளை காப்பாற்ற பார்க்கின்றானா? என்று மனதில் ஓடினாலும், பிரதாப் கமிஷ்னரிடம் அவன் அழைத்ததற்கு காரணம் கூறி தெளிவுப்படுத்த நினைத்து அவன் விசாரித்து சேகரித்தவையை விவரித்தான்.
-தொடரும்

Previous thread
Next thread