- Joined
- Sep 16, 2024
- Messages
- 746
- Reaction score
- 4,462
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
உறையுள் உறையும் உதிரம்
அத்தியாயம் -21
View attachment 699
'வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கத்தவனுக்கு போலீஸ்காரன் வேலை' எனும் சொலவடை உண்டு. மேலோட்டமாக பார்த்தால் செயலற்றவர்கள் என்பது போல் பொருள் தரும். உண்மையான சொற்றொடர் 'வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை, போக்கு கற்றவனுக்கு போலீஸ்காரன் வேலை' என்பதே.
இங்கு வாக்கு கற்ற ஆசிரியனான மனோகருக்கும், போக்கு கற்றவனான காவலன் பிரதாப் சக்கரவர்த்திக்கும் , கொலைக்குற்றம் பற்றிய விசாரணையில் போட்டாபோட்டி நடந்திருந்தது.
நள்ளிரவில், மனோகரை விசாரித்த பிரதாப், இதுவரை நடந்த கொலைகளைப் பட்டியலிட்டு, மனோகர் அதில் எப்படி சம்பந்தப் பட்டிருப்பான் எனக் கொலைக்கான காரணங்களைச் சொல்ல,
மனோகர் தனது வாக்கு வன்மையால் குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு மட்டுமில்லாமல், கேலி இழையோட, பிரதாப்பின் மணமகளான நைனிகாவை இழுத்து, சந்தேக பட்டியலில், அவளையும் கொண்டு வந்து, ஐபிஎஸ் பயிற்சி பெற்றவனையே குழப்பியும் இருந்தான்.
இயற்கையில் நல்லவனாக உள்ளவன், ஏமாற்றப் படும் போது, ‘சாது மிரண்டால், காடு கொள்ளாது’ என்ற பழமொழிக்கு ஏற்ப, அவனின் இழப்புகள் உளவியல் ரீதியான மாற்றத்தைத் தரும். மனோகரும் இந்த வகையில் இருப்பான். நாளை ஃபாரன்ஸிக் சைக்காலஜிஸ்ட் செந்திலதிபன் அல்லது ரவீந்திரனைச் சந்தித்தால் இந்த காரணங்கள் இன்னும் தெளிவு பெறும்.
நைனிகா, கொலைக் களத்துக்குச் சென்றது, முற்றிலும் விபத்தே. அவளுக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்பதை பிரதாப் பூரணமாக நம்பினான்.
நைனிகாவை நினைக்கும் போதே, அவன் மனதில் ஆற்றாமை தோன்றியது. தனக்கு மணமகளான காரணத்தினாலேயே இத்தனை துன்பங்களையும் அனுபவிக்கிறாள். 'போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் வரை அலைக்கழித்து விட்டேனே!' என வருந்திக் கொண்டான். இந்த மனோகர் வேண்டுமென்றே நைனிகாவின் பெயரை உள்ளே இழுக்கிறான், என பல உணர்ச்சி போராட்டத்துக்கு உள்ளானவன், கமிஷனர் முன் நிறுத்தும் முன் அதை உடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அதிகாலை விழிப்பு தட்டவும், மீண்டும் மனோகரை விசாரிக்கச் சென்றான்.
அதற்கிடையில், கடமை தவறாத காவலனாக திலீப், அதிகாலையில் மழையோடு பிரதாப் வீட்டுக் கதவைத் தட்ட, மனோகரைப் பார்த்து அதிர்ந்து பின்னர், மதனகோபால் கொலை நடந்த இடத்தில் கிடந்த ப்ரேஸ்லெட், தற்கொலை செய்து கொண்ட மாதேஷ் உடையது என்ற விவரத்தையும் சொன்னார்.
‘ மனோகரும் அதே வீட்டில் குடியிருந்ததாக ரிபோர்ட் சொன்னதே’ என பிரதாப்புக்கு மின்னல் வெட்டியது. அதை விசாரிக்கும் முன், கமிஷனர் செபாஸ்டியன், பிரதாப் வீட்டிற்கு வந்து விட்டார்.
“ சார்” என சல்யூட் அடித்து அவரை வரவேற்க, மனோகரைப் பார்த்தவர், இது சட்ட விரோதம் என பிரதாப்பை கண்டித்து, பின் விவரம் கேட்டார்.
பிரதாப் பதில் சொல்லும் முன், மனோகர், "இனி மறைச்சு என்ன யூஸ் சார். இந்த கொலைகளை நான் தான் செஞ்சேன்" என இலகுவாக ஒப்புக் கொள்ள, காவலர்கள் மூவருக்குமே அதிர்ச்சி.
சற்று முன் ஆய்வாளர் திலீப் வந்த போது கூட, தெனாவெட்டாக கேலி கிண்டலில் இறங்கியவன், கமிஷனர் ஜார்ஜ் செபாஸ்ட்டியனைப் பார்த்தவுடன், தலைகீழாக மாறியதில், ‘அவன் யாரையோ காப்பாற்ற முயல்கிறானோ?’ என பிரதாப்புக்கு சந்தேகம் வந்தது.
ஆனால் கமிஷனரோ கேஸை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற நெருக்கடியிலிருந்தவர், மூவரையும் கூர்ந்து நோக்கி விட்டு,
" வாட் இஸ் திஸ் பிரதாப். வீடியோ கேம் விளையாண்ட மாதிரி, நான் தான் கொன்னேன்னு ஒருத்தன் சொல்றான். எல்லாமே சீரியஸ் அண்ட் க்ருயல் மர்டர் மேன். டேய், என்ன போலீஸ்காரனோட விளையாடுறியா" என பிரதாப்பிடம் ஆரம்பித்து, மனோகரைப் பார்த்துக் கோபப்பட, கிழட்டு சிங்கத்தின் கர்ஜனை போல் இருந்தது.
“ இவ்வளவு நேரம் இல்லை, இல்லைனு கத்திட்டு இருந்தவன் உங்களைப் பார்க்கவும் அந்தர் பல்டி அடிக்கிறான் சார்” என்ற பிரதாப்,
“ டேய் , என்ன? நக்கலா? எங்களை எல்லாம் பார்த்தா எப்படி இருக்கு. போலீஸ் விசாரணை என்னனு காட்டுறேன்.” என ஓங்கி தாடையில் குத்த, மனோகரின் உதட்டில் ரத்தம் வர, ஏற்கனவே பீங்கான் கப் குத்தியிருந்த பிரதாப்பின் கையிலும் ரத்தம் கசிந்தது.
“ பிரதாப், கன்ட்ரோல் யுவர்செல்ஃப். அவன் பேச வேண்டியது நிறைய இருக்கு” என அதட்டிய கமிஷனர், தன் கைக்குட்டையால், சிஷ்ய பிள்ளைக்குக் கட்டும் கட்டிவிட,
“ நோ, இஸ்ஸுஸ் சார், நேத்திலிருந்து தெனாவெட்டா பதில் சொல்றான் . என்கிட்டையே மைண்ட் கேம் விளையாடுறான்” எனப் பொங்கினான்.
“ சார், நீங்க இருங்க. நான் விசாரிக்கிறேன்” என பிரதாப்பையும், கமிஷனரையும் மனோகருக்கு எதிரே அமர்த்தி விட்டு, பக்கவாட்டிலிருந்து, திலீப் பொறுமையாக விசாரித்தான்.
“ மனோகர், கமிஷனர் சொன்ன மாதிரி, இது வீடியோ கேம் இல்லை. துள்ளத் துடிக்கக் குரூரமா கொலை நடந்திருக்கு. உங்ககிட்ட அந்த எமோஷனே காணோமே. ஏசிபி சார் சொல்றதை வச்சு பார்த்தா, உங்களுக்குக் கொலையாளி யாருன்னு தெரியும். நீங்க யாரையோ காப்பாத்த ட்ரை பண்றீங்க. மாதேஷுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்” என சரியாக நாடி பிடித்துக் கேட்க, இவ்வளவு நேரமும் இறுகி இருந்தவன் வெடித்துச் சிதறி ஆக்ரோஷமாகப் பேசினான்.
" இந்த சொசைட்டிகாரங்க, எனக்குச் செஞ்ச துரோகத்துக்கு, கொடுமைக்கு நான் திருப்பி கொடுத்தேன். செத்தவன் எல்லாம் ஒன்னும் புனிதனுங்க இல்லை. மண்ணாசை, பெண்ணாசை,பணத்தாசைப் பிடிச்ச கேடு கெட்டவனுங்க. அவனுங்க பொண்டாட்டிகளும், சரியான பஜாரிங்க.
அன்னனூர் ஊராட்சியில் பூர்வ குடியா இருந்த மக்களை அடிச்சு தொரத்திட்டு, புறம்போக்கு நிலமா காட்டி, அதையும் ஆக்கிரமிப்பு செஞ்சவனுங்க. அரசியல், அதிகார வர்க்கம்,பண முதலைகள்னு எல்லாரும் இதில் கூட்டு.
நீங்க சொன்னிங்களே கலிவரதன் அவன் தான் இதுக்கு மூளை, செல்வநாயகம், மதனகோபால், ரகுராமன் இவனுங்க எல்லாம் ஒனனு சேர்ந்து, அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இந்த இடத்தையே வளைச்சு போட்டானுங்க. அவனவனுக்கு ப்ளாட்டை பங்கு போட்டு, விவேகானந்தர், நிவேதிதா, எழில், இசை நகர்னு பேரை வச்சு ஊரை ஏமாத்துனவனுங்க.
நான் அவனுங்களால நேரடியா பாதிக்கப் பட்டவன், மத்த மக்கள் நிலத்தை விட்டுட்டு போனப்பவும், நான் மட்டும் என் நிலத்துக்காகப் போராடினேன்.
அதுலையும், இந்த நாய்ங்க கூட்டுன்னு தெரியாமல் முதலில் ஏமாந்தவன். எனக்கு உதவி செய்யிறேன்னு இதுக்கு காசு கொடு, அதுக்கு காசு கொடு, தாசில்தார் ஆபீஸ், ஆர்டிஓ கோர்ட்டு, நீதிமன்ற கேஸுன்னு எனக்கு யோசனை சொல்றேன்கிற பேர்ல அலைக்கழிச்சானுங்க.
நானும் இவனுங்க பேச்சைக் கேட்டு, நாய் மாதிரி இவனுங்க ஏவின வேலை எல்லாம் செஞ்சு ஏமாளியா திரிஞ்சேன். பொறம்போக்கு நாயிங்களுக்கு எல்லா கெட்ட பழக்கமும் உண்டு. வெல்ஃபேர் சங்கம்னு வச்சுக்கிட்டு அவனுங்க செய்யாத தப்பு இல்லை. அதைத் தட்டி கேட்கத் துப்பில்லாத அவங்க வீட்டு பொம்பளைங்க, மத்தவங்க கேரக்டரை தப்பா பேசுங்க. இதுங்களால மன உளைச்சல் ஆனவங்க, நிறையப் பேர். வீட்டைக் கட்டி போட்டுட்டு, வாடகைக்கு வர்றவங்களை இவுங்க படுத்துற பாடு இருக்கே" என்ற மனோகரின் முகம் விகாரமாக மாறி குரோதத்தைக் காட்டியது.
" குத்தனும் சார். இதுங்களை மாதிரி***** பொம்பளைங்க வாயை தைக்கணும், அத தான் செஞ்சேன். இன்னும் நிறைய இருக்கு, எல்லாத்தையும் களை எடுக்கனும். அந்த தண்டபாணி கழிசடை, பஸ்ஸுன்னு கூட பார்க்காமல் பப்ளிக்ல, சொல்லவே வாய் கூசுது, அப்படி நடந்துக்கிட்டான். அவனை கொல்றது தப்பா" எனக் கர்ஜித்தவன்,
" என் டியூஷன் சென்டர்ல வர்ற பிள்ளைகள் பாடத்தில் கவனம் செலுத்தனும்னா, மனசு ரிலேக்ஸா இருக்கனும்னு கவுன்சிலிங்க் கொடுப்போம். எத்தனை புள்ளைங்க, விதவிதமா தங்கள் பிரச்சினையைச் சொல்லி அழுது இருக்காங்க தெரியுமா. குற்றத்துக்கு ஏத்த மாதிரி தண்டனையை கொடுப்பேன், அதில இவனுங்களுக்கெல்லாம் உச்ச பட்ச தண்டனை" எனக் குரூரமாகச் சிரித்தவன், பிரதாப் சொன்ன காரணங்களை அடுக்கி, ஒவ்வொருவரையும் எப்படிக் கொன்றேன் எனப் பட்டியலிட்டு தனபால் கொலையையும், தான் தான் செய்தேன் ஒத்துக் கொண்டான்.
" நம்ம சரியான திசைல தான் சார் இன்வஸ்டிகேட் பண்ணியிருக்கோம்" திலீப், பிரதாப்பின் காதுகளில் மெல்லச் சொல்ல, ஆய்வாளனை முறைத்து , மனோகரிடம் கவனத்தைச் செலுத்தினான் ஏசிபி.
"வரிசையா கொலையை பண்ணிட்டே வர்றேன். எப்படியும் போலீஸ் என்னை பிடிச்சிடும்னு தெரியும், ஃபாரின் போயிருந்த என் எக்ஸ் மாமனார், மாமியார் வந்த பிறகு அதுங்களையும் போட்டு தள்ளிட்டு அமைதியாகிடலாம்னு பார்த்தேன். அதுக்குள்ள இவரோட ஃபியான்ஸி நைனிகா என்னை தூரத்தில் இருந்து பார்த்துட்டா. கொஞ்சம் பயமுறுத்தி விட்டு, எஸ்கேப் ஆகிற ப்ளான் தான். அதுக்குள்ள நைனிகாவே போன் பண்ணி, என்னை காப்பாத்துங்கன்னு கேட்டா. போலீஸை குழப்ப நல்ல வாய்ப்புன்னு, அவளை டைரக்ட் பண்ணி, வெளிச்சம் இருக்க இடத்துக்கு போங்கன்னு சொன்னேன். பாவம் அப்பாவி டீச்சர், மர்டரை பார்த்து மட்டையாகி, அங்கேயே விழுந்திடிச்சு" என இளக்காரமாகச் சிரிக்க, பிரதாப் எழுந்து மீண்டும் ஒரு குத்து விட்டான்.
“ சார், ரெக்கார்ட் ஆகுது. கன்ட்ரோல் யுவர்செல்ஃப்” என திலீப் நினைவு படுத்த,
“ இந்த லவ்வை நைனிகாட்ட காட்டுங்க போலீஸ்கார். கடமையில் கண்ணா இருந்து, பியான்சியை கோட்ட விட்டிங்க, அதுனால தான் அவ கிரைம் ஸ்பாட்ல வந்து மாட்டினா” இலவச அறிவுரை தர, பிரதாப் கண்களால் அவனை எரித்தான்.
“விசாரணையை டைவர்ட் பண்ணாத. நீ முழு ஒத்துழைப்பு கொடுத்தா, எங்க தரப்பிலும் அதே மாதிரி நடந்துக்குவோம்” என கமிஷனர் சொல்ல,
" அதுக்காக தான் உங்ககிட்ட சொல்றேன்” என பவ்யமாக மீண்டும் சொல்ல ஆரம்பித்தான்.
“ நைனிகா, ஸ்பாட்ல விழுவான்னு எதிர்பார்க்கலை, அவ விழவும் நான் யூஸ் பண்ணிகிட்டேன். அப்பத் தான் ஸ்பாட்டுக்கு வந்த மாதிரி வந்து, உங்களுக்குத் தகவல் கொடுத்தேன்" என்றவன்,
" நான் பண்ணத் தப்பு, அந்த ரகுராம் மகளை காதலிச்சது தான். காதலி நல்லவளா இருப்பா, ஆனா மனைவி சுயநலமா மாறிடுவான்னு என் மண்டையில் அடிச்சு புரிய வச்சவ. சங்கத்து ஆளுங்க கிட்ட நான் ஏமாந்து நின்னப்ப, எனக்கு ஆதரவு தந்தவ. வீட்டை எதிர்த்து என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டா. ஆறு மாசம் சொர்க்க வாழ்க்கை சார். என் வாழ்க்கையில நான் சந்தோசமா இருந்ததே அந்த ஆறுமாசம் தான்.” எனும் போது அவன் முகம் கனிந்தது.
“என் குழந்தை அவ வயித்தில நூறுநாள் கருவா இருந்தப்ப, திடீர்னு ஏதோ சங்கடமா இருக்குன்னு சொன்னா, ஹாஸ்பிடலுக்கு செக்கப் கூட்டிப் போகக் காசுக்காக அலைஞ்சேன். அந்த நேரத்தை யூஸ் பண்ணிகிட்டு அவ பேரண்ட்ஸ் , அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்க. நம்மளால வைத்தியம் பார்க்க முடியலை, அவுங்களாவது பார்க்கட்டும்னு இருந்தேன். பத்து நாள்ல , என் கவனிப்பு பத்தலை, ஊட்டம் பத்தலை, கரு கலைஞ்சுடுச்சுன்னு சொல்லிட்டாங்க. " என வேதனையோடு கதறினான். சிடுசிடுத்தபடி திரியும் இவனுள் நொடிக்கு எத்தனை உணர்ச்சி மாற்றங்கள் என கூர்மையாக கவனித்தனர்.
"என் பொண்டாட்டி மனசை மாத்தி, என் கூட வாழ முடியாதுன்னு டைவர்ஸ் வாங்க வச்சிட்டாங்க. அப்போ கூட, விதியை நொந்துகிட்டு பேசாமல் தான் இருந்தேன். சமீபமா நர்ஸ் சந்திரா சொல்லித் தான், என் பொண்டாட்டிக்கு , பர்பஸா டி என் சி பண்ணாங்கன்னு தெரிய வந்தது. என் குழந்தையை இந்த மண்ணுக்கு வரும் முன்னாடியே, கருவுலையே கலைச்ச இவனுங்களுக்கு, இந்த மண்ணுல வாழ உரிமை இல்லைனு முடிவு பண்ணினேன் . அதை நிறைவேத்தவும் செஞ்சேன்” என வெறியோடு, வெற்றி சிரிப்பு சிரித்து, ஓவென அழவும் செய்ய, எல்லாமே காணொளியில் பதிவானது.
கமிஷனர் செபாஸ்டியன், " இவன் வாக்குமூலம் கொடுத்துட்டான். எவிடென்ஸ் கலெக்ட் பண்ணு மேன். இவனையும் கோர்ட்ல ப்ரொடியூஸ் பண்ணி, ரிமாண்ட் பண்ணுங்க. பெரிய தலைவலி முடிஞ்சது" என்று சொல்ல,
" சார், இன்னும் சில சந்தேகம் எல்லாம் தீரலை. ப்ரஸ்லெட்..." என ப்ரதாப் ஆரம்பிக்க,
" அதெல்லாம் அப்புறம் ஆராய்ஞ்சுக்க . இவனை முதல்ல கோர்ட்ல ப்ரொடியூஸ் பண்ற வேலையை பாரு" என உத்தரவிட்டுச் செல்ல, போலீஸ் வேலையில் பாலபாடமே, மேலதிகாரி சொல்லுக்குக் கீழ் படிவது’ என்ற கூற்றுக்கு இணங்க,
" யெஸ் சார்" என இருவரும் சல்யூட் அடித்தனர்.
மேலதிகாரி முன் சல்யூட் அடிக்கும் பிரதாப்பை பார்த்து மனோகர் இளக்காரமாகச் சிரிக்க,
" டேய், நான் சொன்ன கதையவே, திருப்பி சொல்லி வாக்குமூலம் கொடுத்திட்டேல்ல. இனிமே தான் இன்வெஸ்டிகேஷன் சூடு பிடிக்க போகுது" என பிரதாப் கர்ஜிக்க,
“ ஆல் த பெஸ்ட்” என்றான் மனோகர்.
" திலீப், நீங்களும் கேசவனும் இவனை கோர்ட்ல ப்ரொடியூஸ் பண்ணுங்க. " என ஆணையிட்ட பிரதாப்,
" பார்த்தி" என நண்பனை அலைப்பேசியில் அழைத்து ஒரு வேலையைப் பணித்து விட்டு, ஆய்வாளர் கதிரவனை மனோகர் வீட்டை ஆய்வு செய்ய அனுப்பினான்.
ஆரவியை குட்வில் டியுசன் சென்டருக்கு போலீஸ் டீமோடு வரப் பணித்துவிட்டு தானும் அங்குக் கிளம்பினான்.
மணி எட்டானது, காலையில் டியுசன் வரும் பிள்ளைகள் கிளம்பி இருப்பார்கள், மழை விட்டு தூவானம் தூவிக் கொண்டிருக்க, இந்த வழக்கும் அப்படித் தான் பயணித்துக் கொண்டிருந்தது. பலத்த சிந்தனையோடு, குட்வில் டியுசன் செண்டரை அடைந்தான் பிரதாப்.
மனோகர் இல்லாததால், கௌரியும், நைனிகாவும் மட்டுமே மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பாடம் எடுக்க வந்திருந்தனர். நைனிகாவுக்கு மாலை நேர வகுப்புகள் தான் இருக்கும். நேற்று நலமாக சென்ற அஞ்சலி அதிகாலையில் காய்ச்சல் என விடுப்பு எடுத்திருக்க, நைனிகா அவசரமாக கிளம்பி வந்திருந்தாள்.
வகுப்பு முடிந்து மாணவர்கள் வெளியேறி இருக்க, கௌரியும், நைனிகாவும் சென்டரை பூட்டி கிளம்பலாம் எனும் நேரம் இரண்டு போலீஸ் வாகனங்களும், காவலர்களும் வந்து இறங்க, இரு ஆசிரியர்களுக்கும் பதற்றம் தொற்றியது.
ஆரவி," உங்க டியுஷன் சென்டரை, சோதனையிட சர்ச் வாரண்டோட வந்திருக்கோம்" என ஆர்டரைக் காட்ட, வாசிக்கும் நிலையில் இல்லாத கௌரி, " ஏன் மேடம்" கேட்க, பதில் சொல்லும் வேலை தன்னுடையது இல்லை என்பது போல், அவள் கான்ஸ்டபிள்களுக்கு சமிக்ஞை செய்தாள்.
நைனிகா கலவரத்தோடு, பிரதாப்பை ஏறிட, விழி மூடி திறந்து அவளுக்கு நம்பிக்கை தந்தவன், "மனோகர் தான் கில்லர். கொலைகளை ஒத்துக்கிட்டான்" எனச் சலனமின்றி சொல்ல,
" இல்லை, மனோ, கொலை செஞ்சிருக்க மாட்டார். இங்க படிக்கிற பசங்களுக்கு ஒன்னுன்னா கூட, வெளியே காட்டிக்காமல் கவலைப்படுவார் சார். இதில ஏதோ தப்பு இருக்கு. " எனக் கௌரி புலம்ப, நைனிகா அதிர்ச்சி விலகாமல் நின்றாள். பிரதாப், அவர்கள் பேச்சுக்குச் செவி கொடுத்துக் கொண்டே, மனோகரின் அறையை ஆராய்ந்தான். மேஜை பூட்டப்பட்டு இருக்க, கான்ஸ்டபிளை அழைத்து உடைத்துத் திறக்கச் சொல்ல,
" சாவி இங்க இருக்கு சார்" என நீட்டிய கௌரி, விடாமல் மனோகர் நல்லவன் என வக்காலத்து வாங்கினாள். மேஜைக்குள், அன்னனூர் ஊராட்சியாக இருந்த காலத்திலிருந்து, இந்த ஏரியா பற்றிய நிறையப் பத்திரங்கள், தாஸ்தாவேஜுக்கள் இருக்க, அதையும் ஆராய வேண்டும் என எடுத்து வைத்தான்.
மனோகர் வீட்டைச் சோதனை செய்த துணை ஆய்வாளர் கதிரவன், “ உருப்படியா எதுவும் சிக்கலை. ஆனால் டைரியா எழுதி குவிச்சு வச்சிருக்கான் சார்” என்று சொல்ல,
“ அது தான் கதிரவன், முக்கியமான எவிடன்ஸ். எல்லாத்தையும் கொண்டு வாங்க” எனப் பணித்தான்.
ஆரவி அவசரமாக ஓடிவந்து, " சார் மிஷன் சக்ஸஸ். எவிடன்ஸ் கிடைச்சிருச்சு" என அறிவித்து விவரம் சொல்ல, விரைந்து சென்று பார்த்த பிரதாப்புக்குமே அதிர்ச்சி தான். மனோகர் யாருக்காகவோ, கொலைப்பழியைத் தான் ஏற்கிறான் என நினைத்தானே தவிர, ஆதாரங்கள் இங்குச் சிக்கும் என நினைக்கவில்லை.
பெண் துணை ஆய்வாளரான ஆரவி, கௌரியையும், நைனிகாவையும் தகவல் அறிந்து வந்த அஞ்சலியையும் பிரதாப்பின் முன் வைத்துக் குறுக்கு விசாரணை செய்ய, அவன் பெண்களின் முகபாவனை, உடல் மொழிகளை மட்டுமே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தான்.
கௌரி, மீண்டும் மீண்டும் , மனோகர் நல்லவன் என்பதை மட்டுமே அழுகையோடு கூறிக் கொண்டிருந்தாள். அஞ்சலி அதிர்ச்சியில் உறைந்திருந்தாள். நைனிகா தனக்குத் தெரிந்த விவரங்களை வெளிப்படையாகச் சொல்ல, காவலன் மனதில் தன் இணையை மெச்சிக் கொண்டான்.
குறிப்பிட்ட ஸ்டோர் ரூமை, மனோகரும், நாடோடியான பலூன்காரர் ஒருவரும் மட்டுமே பயன்படுத்துவர் என்ற தகவலைச் சொல்ல, அவரின் அங்க அடையாளங்களை நைனிகாவிடம் விசாரித்து ஒரு வரைபடம் தயாரித்துச் சுற்று வட்டாரத்தில் உள்ள காவல்நிலையங்களுக்கு அனுப்பி வைத்தனர். எப்போது விசாரணைக்குக் கூப்பிட்டாலும் வரவேண்டும் என்ற நிபந்தனையோடு அவர்களை அனுப்பி விட்டு, டியூசன் சென்டரையும் பூட்டி சீல் வைத்துக் கிளம்பினர்.
கதிரவன் கொண்டுவந்த டைரிகள், பிரதாப் எடுத்து வந்த பத்திரங்களை அவன் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையத்தின் பெண் காவலர் ஒருவரிடம் கொடுத்து, முழுதும் வாசித்து கேஸ் சம்பந்தமானதை குறித்து வைக்கச் சொல்லிப் பணித்துச் சென்றான். மாதேஷ் பற்றிய குறிப்பு எங்கேனும் இருக்கும் என்பது அவன் யூகம்.
மாலை , கமிஷனர் ஜார்ஜ் செபாஸ்ட்டியன் முன்னிலையில், ஏசிபி பிரதாப் சக்கரவர்த்தி தலைமையிலான தொடர் கொலைகளுக்கான சிறப்புப் புலனாய்வுக் குழு அவசரமாகக் கூடியது.
காலையிலேயே குட்வில் ட்யூசன் சென்டரின் உரிமையாளர் மனோகரை நீதிபதி முன் நிறுத்திக் காவலில் எடுத்திருந்தனர். நான் தான் கொலை செய்தேன் என்பதைத் தவிர, வேறு எதையும் சொல்ல மறுத்தான் மனோகர்.
ஆய்வாளர்கள் திலீப் பிரபாகரன், பார்த்திபன் துணை ஆய்வாளர்கள் கதிரவன், கேசவன், திவாகர் , ஆரவி, ஃபாரன்சிக் ஹெட் சாரங்கன் , சைக்காலஜிஸ்ட் செந்திலதிபன், ரவீந்திரன் ஆகியோர் கூடியிருக்க, கொலைகாரன், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பொருள்கள் இரண்டையும் கண்டுபிடித்ததில் காவலர்கள் நிம்மதியாகவும், பெருமையாகவும் அமர்ந்து இருந்தனர். பிரதாப் மட்டுமே எதையோ தவற விடுகிறோம், என யோசனையாகவே இருந்தான்.
அங்கிருந்த வட்ட மேஜையில் டியூஷன் சென்டரையும் வீட்டையும் சோதித்து, கைபற்றிய ஆதாரங்களான, கருப்பு ரெயின் கோர்ட், மாஸ்க், க்ளவுஸ், ஷு மற்றும் சர்ஜிக்கல் நைஃப், சிறிய அளவிலான டிரில்லர், கோணி ஊசி, நரம்பு, ஸ்டேபிளர் , கயிறு முக்கியமாக பலூன்களில் பயன்படுத்தும் ஹீலியம் கேஸ் ஸ்ப்ரேயர், இன்னும் இத்தியாதிகளை பாலிதீன் கவர்களில் பத்திரப்படுத்தி கமிஷனர் பார்வைக்கு வைத்திருந்தனர்.
டியூசன் சென்டரின் மாடிப் படிக்கு அடியிலிருந்த ஸ்டோர் ரூமிலிருந்து ஆரவி மற்றும் குழுவினரால்,கண்டுபிடிக்கப்பட்டு, சாரங்கனால் பரிசோதனையும் செய்யப்பட்டு, தொடர் கொலைகளில் பயன்படுத்தப்பட்டவை என உறுதி செய்யப்பட்டு இருந்தது. ஃபிங்கர் பிரிண்ட்ஸ் மட்டுமே உறுதி செய்யப்பட வேண்டும்.
பிரதாப், தங்களுக்கு ஆதாரமாகக் கிடைத்த பொருட்களையும், கொலைகளையும் சம்பந்தப்படுத்தி பெரிய உரையைக் கொடுத்தான். அதில் முக்கியமானது, அரசு மருத்துவர் வைஷ்ணவி ஆராய்ந்து சொன்ன, ஹீலியம் கேஸ் பயன்படுத்தி கொலையாளியை எதிர்ப்பு காட்டமுடியாமல் செய்ய முடியும், பிரேதப் பரிசோதனையில் கூட அதைக் கண்டுபிடிக்க இயலாது. அதனால் பெரிய எதிர்ப்பு இல்லாமல் கொலைகளைச் செய்துள்ளான் என்பது.
குட்வில் டியுசன் சென்டரின் ஆசிரியை நைனிகா ஒரு கொலையில் சம்பந்தபட்டு இருக்க, தற்போது மனோகர் முக்கிய குற்றவாளி என ஆதாரங்களோடு சிக்கியது, விவேகானந்தா நகரில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
கமிஷனர், குற்றவாளியையும் , ஆதாரங்களையும் கண்டுபிடித்ததுக்காகச் சிறப்புக் குழுவினரைப் பாராட்டிக் கொண்டிருக்க, பிரதாப்புக்கு நைனிகாவின் தாத்தாவிடமிருந்தும், கதிரவனுக்கு டைரியை வாசித்த பெண் கான்ஸ்டபிளிடமிருந்தும், பார்த்திபனுக்கு பலூன்காரனை பற்றிய தகவலும் வந்தது.
தொடர் கொலைகளைச் செய்தது, மனோகர் என காவல்துறையினர், ஆசுவாசம் அடையும் முன்,அடுத்த பரபரப்பு!
இரத்தம் உறையுள் உறைந்ததா? இன்னும் பெருகுமா?

Previous thread
Next thread