- Joined
- Sep 16, 2024
- Messages
- 746
- Reaction score
- 4,462
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
உறையுள் உறையும் உதிரம்
அத்தியாயம் 22
View attachment 700
புலனாய்வுக் கூட்டம் முடிந்து அனைவரும் சென்ற பின்னரும்கூட பிரதாப் தான் அமர்ந்திருந்த இருக்கையைவிட்டு எழாது, வலது கையால் நாடியை தாங்கியவாறு தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தான்.
பிரதாப்பின் மனம் இரட்டைக்கொலை நடந்துள்ளதாக ஜார்ஜ் தன்னிடம் கூறிய நொடி முதல் இந்த நேரம் வரையிலான தன்னுடைய ஓட்டம் ஒவ்வொன்றையும் மனதில் நிறுத்தி நிதானமாக அலசிக் கொண்டிருந்தான்.
அவனுள் மனோகரை எவ்வித கணிப்பிலும் முழுமையானக் குற்றவாளியாக நினைக்க முடியவில்லை. மனோகர் தான் கொலையாளி என்று அவனிடமே பிரதாப் அழுத்தமாக வாதிட்டிருந்தாலும், தற்போது அந்த அழுத்தங்கள் எல்லாம் ஏதோ ஒரு புள்ளியில் சிதறுவதாகத் தோன்றியது.
மனோகர் தான் கொலையாளி எனும் தீர்க்கமானப் பார்வையே தன்னிடமிருந்து கொலையாளியை தள்ளி வைக்கின்றது என்று எண்ணினான்.
"என்ன மேன் டீப் திங்கிங்?"
ஜார்ஜ் கேட்டிட பிரதாப் எவ்வித பதிலுமின்றி அவரை ஏறிட்டான்.
அந்நேரம் குறுக்கிட்ட திலீப்,
"ப்ரெஸ்க்கு தகவல் கொடுக்கலாம் சார்" என்றான்.
"என்னன்னு கொடுப்பீங்க திலீப்?" ஜார்ஜ் மீதான தன்னுடைய பார்வையை விலக்காது பிரதாப் கேட்டிருந்தான்.
"இவ்வளவு நாள் கில்லரை கண்டுபிடிக்க முடியாது காவல்துறை திணறுகிறதா? தூங்குகிறதா? அப்படின்னு நம்மளை ரோஸ்ட் பண்ணவங்களுக்கு குற்றவாளியைக் கண்டுபிடிச்சிட்டோம்னு சொல்ல வேண்டாமா சார்? கொடூரமான முறையில் கொலைகள் செய்திட்டு சாதாரணமா நடமாடிட்டு இருந்திருக்கான். அவனை மக்களுக்கு அடையாளப்படுத்த வேண்டாமா? இவன் தான் கொலையாளின்னு மீடியா முன்ன நிறுத்தி போலீஸ் கெத்தை காட்டணுமே" என்று உணர்ச்சிப் பொங்கக் கூறினான் திலீப்.
"கெத்துக்காட்டி?" என்ற பிரதாப் அசரத்தையாக திலீப் புறம் திரும்பினான்.
திலீப் புரியாது ஜார்ஜ் மற்றும் பிரதாப்பை மாற்றி மாற்றி பார்த்தான்.
"இப்போ என்ன சொல்லவர பிரதாப்?" ஜார்ஜ் கேட்டிருந்தார்.
"காலையில் எட்டு மணிக்கெல்லாம் டியூஷன் சென்டரில் ஆய்வு நடத்தியிருக்கோம். இந்நேரம் வரை இந்த நியூஸ் ப்ரெஸ் பீப்பிள்க்கு தெரியாம இருந்திருக்கும் நினைக்கிறீங்களா?" என்ற பிரதாப், "இந்நேரம் அங்கிருக்கும் யாரோ ஒருத்தர் தான் குற்றவாளின்னு அவங்க கற்பனைக்கு ஒரு கதை புனைந்திருப்பாங்க. வேணுன்னா நியூஸ் சேனல்ஸ் செக் பண்ணிப்பாருங்க" என்றதோடு, "வழக்கம்போல அவங்க கற்பனைக்குத் தீனிப்போடட்டும். நாம நம்ம வேலையைப் பார்ப்போம்" என்றான்.
"மனோகர் தான் கொலையாளின்னு தெரிஞ்சாச்சு. அவனோட இடத்திலிருந்து எவிடென்ஸ் கிடைச்சாச்சு. இதுக்குமேல நாம செய்ய வேண்டிய வேலை என்னயிருக்கு?" என்றார் ஜார்ஜ்.
"அவனே சொல்றதாலையோ, எவிடென்ஸ் அவனோட இடத்தில் கிடைச்சதாலையோ அவன் குற்றவாளி ஆகிட முடியாது சார்" என்ற பிரதாப்பிடம், "அந்த எவிடென்ஸ்சை ஃபாரன்சிக் பண்ணா மனோகர் கையாண்டது தெரியுமே" என்றான் திலீப்.
"சான்ஸ் இல்லை. மனோகரோடது மட்டுமில்ல. வேறெந்த ஃபிங்கர் மார்க் அண்ட் கொலையாளிக்கு எதிரா எதுவுமே கிடைக்காது. அப்படி கிடைக்கணும் அப்படின்னா நமக்கு மர்டர் நடந்த இடத்திலே கிடைச்சிருக்கணும். கில்லர் ரொம்பவே கிளவர்" என்று தோள்களை அசட்டையாக உயர்த்தி இறக்கினான் பிரதாப்.
"கொலை பண்ணது நான்(ந்)தான்னு அவனே ஒத்துக்கிறான். அப்புறம் வேறென்னய்யா உன் மண்டைக்குள்ள ஓடுது?" என்றார்.
"மனோகர்கிட்ட தெளிவு, நிதானமெல்லாம் அதிகமாவே இருக்கு. அந்தத் தெளிவு தான் என்னைக் குழப்புது" என்ற பிரதாப், "பொதுவா சைக்கோ, சீரியல் கொலைகளெல்லாம் பண்றவங்ககிட்ட நம்மளோட சாதாரணமான விசாரணையில் வார்த்தைகளை வாங்கிட முடியாது. அவங்ககிட்ட நமக்கான பதில் வரணும்னா, அவங்களைப்பற்றி நமக்குத் தெரிந்ததை சொல்லணும். அதன் மூலமா அவங்களை பேச வைக்கணும். அப்படி எங்க ரெண்டு பேருக்குள்ள நடந்தப் பேச்சு வார்த்தையில், கொலைகள்பற்றி நான் சொன்னதை மட்டும் தான் உங்ககிட்ட அவன் செய்ததா சொன்னான். நான் சொன்னதுக்கு மேல கூடவோ குறையவோ சிங்கிள் வோர்ட் கூட அவன் சொல்லல" என்றான்.
"நிறுத்தாமா சொல்லு... முடிஞ்சுதுன்னு ஆசுவாசப்படவிடுரியா நீ?" என்றார் ஜார்ஜ்.
"மோஸ்ட்லி இந்த மாதிரி கில்லர்ஸ், தான் பண்ண கொலைகளை சொல்ல வாய்ப்புக் கிடைக்குதுன்னா... ரொம்பவே ரசிச்சு எக்ஸ்ப்ளைன் பண்ணுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் மனோகர் அப்படி எதுவும் சொல்லலையே!" என்ற பிரதாப் எதோ சொல்லவர, நிறுத்து என்பதைப்போல் கை காண்பித்து தடுத்திருந்தார் ஜார்ஜ்.
"இப்போ என்ன? அவன் கில்லர் இல்லைன்னு சொல்றியா?" என்றார்.
"எஸ்... அவன் இல்லை. ஆனால் அவனுக்கு யாருன்னு தெரிஞ்சிருக்கு. அவங்களைக் காப்பாத்த இவன் பழி ஏத்துக்கிறான்" என்றான்.
"இது உன்னோட அனுமானம்... உண்மை இல்லாம போயிட்டால்?"
"உண்மையாவும் இருக்கலாம்."
"உன் உண்மையில தீ வைக்க" என்ற ஜார்ஜ், "மனோகர் கொலை பண்ணது நான்னு ஒத்துக்கிறான். ஆதாரமும் அவனுக்கு எதிரா கிடைச்சிருக்கு. இதைவச்சு இதை முடிச்சிவிட்டுடலாம் பிரதாப்" என்றார்.
பிரதாப் மௌனித்திருந்தான்.
"நீயென்ன அப்படியே நின்னுட்டு இருக்க. அவனுக்கு தோதா எதுவும் சொல்லேன்" என்று திலீப்பிடம் காய்ந்தார்.
முடிந்துவிட்டது என்று நினைத்திருக்கையில் பிரதாப் குழப்புவது அவருக்கு கடுப்பாக வந்தது.
"நம்ம அவசரத்துக்கு ஒரு நிரபராதியை மாட்டிவிட்டுடக்கூடாதுல சார்" என்றான் திலீப். பிரதாப்புக்கு ஆமோதிப்பாக.
"என்னவோ பண்ணுங்க" என்ற ஜார்ஜ், "எனக்கு இந்த கேஸ் இன்னும் ரெண்டு நாளில் முடியணும். அவ்ளோதான்" என்று எழுந்து சென்றுவிட்டார்.
"என்ன சார் இப்படி சொல்லிட்டுப்போறார்?" ஜார்ஜ் சென்ற திசையைப் பார்த்தவாறு திலீப் வினவினான்.
"நமக்கு அவரோட அழுத்தம் அப்படின்னா... அவருக்கு, அவருக்கும் மேலானவங்களோட அழுத்தம்" என்று இருக்கையிலிருந்து எழுந்த பிரதாப், இரு கைகளையும் தலைக்குமேல் உயர்த்தி கோர்த்துப் பிடித்தவனாக சோம்பல் முறித்தான்.
"டக்குன்னு முட்டுச்சந்தில் வந்து நின்ன மாதிரி இருக்கு சார்" என்றான் திலீப்.
மெல்லப் புன்னகைத்த பிரதாப்,
"சுவரை இடிச்சிட்டா பாதை கிடைக்குமே திலீப்" என்றான்.
"புரியல சார்."
"நமக்கு முன்னயிருக்க சுவர் மனோகர். அவனை கொஞ்சம் தள்ளி வச்சு யோசிப்போம்" என்ற பிரதாப், "அவன் காப்பாத்த நினைக்கிறான் அப்படின்னா... அந்த ஆளு அவனுக்கு வேண்டியவங்களாத்தானே இருக்கணும்" என்றான்.
"எக்ஸாக்ட்லி."
"மனோகர் டைரி வச்சு நமக்கு வேண்டியது கிடைக்குதா பார்ப்போம். இந்த டைரி மேட்டரெல்லாம் ரொம்ப ஓல்ட் திலீப். இருந்தாலும் நமக்கு வேற வழியில்லை" என்ற பிரதாப், கதிரவனுக்கு அழைக்க முயல, கதிரவனிடமிருந்தே அழைப்பு வந்தது.
"சார் மனோகர் டைரியில் கொலைகள் சம்மந்தமா எந்தவொரு லீடும் இல்லை" என்க, கதிரவன் சொல்வதை திலீப்பும் கேட்கட்டுமென்று ஒலிப்பெருக்கியை உயிர்ப்பித்திருந்தான் பிரதாப்.
"அவனோட பெர்சனல் லவ், மேரேஜ் லைஃப், சங்கத்து ஆட்கள் அவனோட நிலத்தை அபகரிக்க முயற்சி செய்தப்போ நடந்த நிகழ்வுகள் பற்றித்தான் எழுதியிருக்கான். எல்லாமே அவன் டியூஷன் ஆரம்பிக்கும் முன்ன எழுதியது. கடைசியா எழுதியது டியூஷன் ஆரம்பிக்க நல்லநாள் பார்த்த அன்னைக்கு" என்று கதிரவன் சொல்லி முடிக்கும் முன்னர்,
'டைரி வச்சு அடுத்த அடி போகலாம் நினைச்சது வேலைக்கு ஆகலையே' என பிரதாப் யோசனையாக நெற்றியைத் தேய்த்திட,
"ஆனால் மாதேஷ் தன்னோட ஃப்ரண்ட் அப்படின்னு அவங்களுக்கு இடையேயான சில நிகழ்வுகள் எழுதியிருக்கான் சார்" என கதிரவன் கூறியதில் பிரதாப்பின் முகம் ஒளிக்கொண்டது.
"என்ன மாதிரியான நிகழ்வுகள் கதிரவன்?"
"கலிவரதன் வீட்டில் தான் சார் ரெண்டு பேருமே குடியிருந்திருக்காங்க. கலிவரதனோட மாதேஷ்க்கு ஏதோ பிரச்சினை நடந்து, அந்த நேரத்தில் மனோகர் தான் மாதேஷ்க்கு துணையா இருந்திருக்கார் சார்" என்றான் கதிரவன்.
"என்ன பிரச்சினை அப்படின்னு ஏதும் எழுதியிருக்கானா?"
"இல்லை சார்" என்று கதிரவன் கூறிட,
"மனோகர்கிட்ட விசாரிக்க வேண்டியது தான்" என்றான் திலீப்.
"அடுத்த சந்தேகம் மாதேஷா சார்?"
ஆணையர் அலுவலகத்திலிருந்து மனோகரிடம் மாதேஷ் பற்றி விசாரித்திட தன்னுடைய காவல்நிலையம் நோக்கிச் செல்லும் வழியில் பிரதாப்பிடம் திலீப் கேட்டிருந்தான்.
"மாதேஷ் தற்கொலை பண்ணிக்கிட்டதா ராஜசேகர் சொன்னது நினைவில்லையா திலீப்?" என்ற பிரதாப், "மாதேஷ் தற்கொலைக்கு ஏதும் காரணமிருக்கணும். இறந்தவங்க எல்லாரும் மாதேஷ் இறப்புக்கு காரணமா இருந்திருக்கலாம். என்னோட கணிப்புதான் இது. மனோகர் மாதிரி மாதேஷ்க்கு வேண்டப்பட்ட இன்னொரு ஆள் கொலையாளியா இருக்கலாம்" என்று தன்னுடைய சிந்தனையில் உதித்த எண்ணத்தை நெற்றியைத் தேய்த்தவாறு கோர்வையாகக் கூறினான் பிரதாப்.
"இப்படி இல்லாமலும் இருக்கலாமே சார்."
"மே பீ" என்ற பிரதாப், "ரெண்டு பேரும் சேர்ந்துகூடக் கொலைகள் பண்ணியிருக்கலாம். இந்த கொலைகளுக்கெல்லாம் ஆரம்பம் கலிவரதன் தான். அவரோட மனோகர், மாதேஷ் ரெண்டு பேருக்குமே பிரச்சினை இருந்திருக்கு. ரெண்டு பேரும் நண்பர்களும் கூட. சோ, மாதேஷ்க்கு வேண்டப்பட்ட இன்னொரு ஆள் மனோகருடன் சேர்ந்து பண்ணியிருக்கலாம். அவங்க டார்கெட்டில் இன்னும் யாராவது மீதியிருக்கலாம். அதை இன்னொரு நபர் வெளியிருந்து முடிக்கட்டும்னு, நம்ம ஃபோகஸ் முழுக்க தன்மீதே வச்சிருக்க நினைச்சு என்கிட்ட உண்மையை சொல்லாத மனோகர், கமிஷ்னரிடம் நான்தான்னு ஒத்துக்கிட்டிருந்திருக்கலாம்" என்றான்.
"இந்த மாதிரி கில்லரெல்லாம் தனியா தான் கொலைப் பண்ணுவாங்கன்னு படிச்சிருக்கேன் சார்" என்று திலீப் கூற, பிரதாப்பின் நெற்றி மற்றொரு எண்ணத்தில் சுருங்கியது.
"இன்னொரு நபர் கொலைகள் செய்து, அந்த ஆளைக் காப்பாத்த மனோகர் தன்னை கொலையாளின்னு சொல்லியிருக்கலாம். சிம்பிள்" என்ற பிரதாப், "அந்த பிரேஸ்லெட் வச்சு நமக்கு கிடைத்த சின்ன லீட் M லெட்டர். அது மாதேஷுக்கும் பொருந்தும். மனோகரை விசாரிப்போம். அப்புறம் ஒரு முடிவுக்கு வருவோம்" என்றான்.
சில நிமிடங்கள் அமைதியிலும் அடுத்து என்ன என்ற யோசனையிலும் கழிய, "எனக்கு இன்னொரு டவுட் கூட வருது திலீப். ஆரம்பத்திலிருந்து எதையோ தவற விடுறேன்னு தோணிட்டே இருந்தது" என்ற பிரதாப், "காமிராவில் பதிவான உருவம் ஆறடிக்கு இருந்துச்சுல?" என்றான்.
"ஆமாம் சார்" என்ற திலீப் கண்கள் சுருக்கி, "மனோகர் ஆறடி இல்லையே" என்றான்.
"சின்ன விஷயம்ன்னு இதை கவனத்தில் கொண்டுவராம விட்டுட்டோம். எல்லாம் கோர்வையா கொண்டுவரும்போது மாட்டுச்சு. அதான் மனோகர் கில்லரா இருக்க வாய்ப்பில்லைன்னு இன்னொரு கோணத்தில் பார்க்க வைத்தது" என்றான்.
"அப்புறம் அந்த ஆறடி எப்படி சார்?" என்று சந்தேகமாக இழுத்த திலீப்பே, "ஹீல் பூட்ஸ் போட்டிருக்கலாமே" என்றான்.
"இருக்கலாம். இல்லைன்னா அந்த நபர் ஆறடியா இருக்கலாம். அது யாருன்னு... ஐ மீன் மனோகர் காப்பாத்த நினைக்கிற நபர் யாருன்னு கண்டுப்பிடிச்சிட்டு இதுக்கு வருவோம்" என்ற பிரதாப், காவல் நிலையம் வரவே, திலீப்புடன் நேராக விசாரணை அறையில் விசாரணை கைதியாக வைத்திருக்கும் மனோகரை நோக்கிச் சென்றான்.
எதிர்ப்பட்ட பார்த்திபன்,
"பஸ் ஸ்டாப்பில் வைத்து அந்த பலூன்காரனை பிடிச்சேன். அவன் தன்னோட திங்க்ஸ் வைக்க டியூஷன் இடத்தை பயன்படுத்தியிருக்கான். மத்தபடி அவனுக்கும் இதுக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை" என்றான்.
"வெல்" என்று நடையை நிறுத்தாது சென்ற பிரதாப், "தேவையில்லாத ஆட்களையெல்லாம் ஒதுக்கி வச்சிடுங்க. இனி நம்ம ஃபோகஸ் மனோகர் அண்ட் பெயர் தெரியாத கில்லர் மட்டும் தான்" என்றான்.
விசாரணை அறைக்குள் செல்லும் முன்பு திலீப் பார்த்திபனுக்கும், தங்களது குழு மற்ற உறுப்பினருக்கும் பிரதாப்பிற்கு இருக்கும் கணிப்பை சுருக்கமாகக் கூறினான்.
"மாதேஷ் யாரு?"
மேசைக்கு ஒருபுறம் மனோகர் அமர வைக்கப்பட்டிருக்க, மற்றொரு புறம் அமர்ந்த பிரதாப் நேரடியாகக் கேட்டிருந்தான்.
மின்னல் அதிர்வாக இருந்தாலும், மனோகரின் உடல்மொழியிலும் கண்ணாக இருந்த பிரதாப்பிற்கு, மனோகரின் கருவிழி ஓட்டம் அவனுக்கான பதிலை வழங்கியிருந்தது.
"மாதேஷ்... யாரு?", மனோகர்.
"சோ, உனக்கு அவனைத் தெரியாது?"
"என்ன ஏசிபி சார் உங்ககிட்ட மாட்டாப்போகும் அடுத்த அப்பாவியா அவன்" எனக் கேட்டான் மனோகர்.
பற்கள் தெரிய சத்தமின்றி சிரித்த பிரதாப்... "நல்ல டைவர்ட் பண்ற மேன் நீ" என்றான்.
மனோகர் குழப்பமாக பிரதாப்பை பார்க்க...
"செத்துப்போனவன் உயிரோடு இருக்க மாதிரி நம்ப வச்சு... அவன் பின்னாடி என்னை ஓடவச்சு கில்லரை காப்பாத்த நினைக்கிற ரைட்?" என பிரதாப் கூறியதில், மனோகரின் நிதானமெல்லாம் காணாமல் போனது.
"கொலை பண்ணது நான்னு ஒத்துக்கும்போது எதுக்கு தேவையில்லாத ஆளையெல்லாம் சந்தேகப்படுறீங்க ஏசிபி?" என்ற மனோகரிடம் லேசான எரிச்சல் தென்பட்டது. இதுவரை அவனது கோணத்தில் பயணித்த பிரதாப் தற்போது தனிப்பாதையில் செல்லும் பதற்றம்.
பிரதாப்புக்கு மனோகரின் எரிச்சல் போதுமானதாக இருந்தது. அவனின் பார்வை அர்த்தமாக தன்னுடைய உதவியாளர்களைத் தொட்டு மீண்டது.
"சொல்ல முடியாதா மனோகர்?" என்று இருக்கையைவிட்டு எழுந்த பிரதாப், "நீ கில்லர் இல்லைன்னு கண்டுபிடிச்ச எனக்கு, உண்மையான கில்லரை பிடிக்கிறது பெரிய விஷயமில்லை" என்றான்.
"முடிஞ்சா கண்டுபிடிங்க" என்ற மனோகர், "கொலை பண்ணது நான்" என்றான்.
"காலையில் நீ சொன்னப்போ இருந்த அலட்சிய பாவம் இப்போயில்லையே மனோகர்... நீதான் கில்லர்ன்னு என்னை நம்ப வைக்க ரொம்ப அழுத்தமா போராடுற மாதிரி இருக்கே. உன்னோட இந்த அழுத்தம் எனக்கு நீ கில்லர் இல்லைன்னு கன்ஃபார்ம் பண்ணுதே" என்று அவனருகில் சென்ற பிரதாப் மேசையில் கரம் ஊன்றி, அவனது முகம் நோக்கி தாழ்ந்து, "அவனை பிடிச்சிட்டு உன்னை மீட் பண்றேன்" என்று அவ்வறைவிட்டு வெளியேறினான்.
நைனிகாவின் தாத்தாவிடமிருந்து வந்த அழைப்பில் அவள் இன்னும் வீட்டிற்கு வரவில்லை என்ற தகவலை அறிந்து அவளுக்கு அழைக்க, அலைப்பேசி இணைப்புக் கிடைக்கவில்லை.
இருக்கும் கடினமானச் சூழலில் நைனிகா காணவில்லை எனும் பதற்றமும் தொற்றிக்கொண்டது பிரதாப்பிடத்தில்.
****************************
ஏற்கனவே கண்கள் முன்னால் பார்க்க நேரிட்ட உயிரற்ற உடல்கள், அதைத் தொடர்ந்து காவல் நிலையம், நீதிமன்றமென்று பெரும் அச்சத்திலிருந்து மீண்டு வந்திருந்த நைனிகா, இத்தனை கொலைகளுக்கும் காரணம் தன்னுடன் தினமும் பயணிப்பவன் என்பதில் வெகுவாக அதிர்ந்திருந்தாள்.
அதிலும் ஆரவியின் விசாரணையின் போது பிரதாப் உடனிருந்திருந்தாலும் அன்றைய நிகழ்வுக்குப் பின் விசாரணை என்றாலே உள்ளுக்குள் இயல்பாக பயம் எழுவதை அவளால் தடுக்க முடியவில்லை.
தைரியமாகக் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் தனக்குத் தெரிந்த பதில்களை சொல்லியிருந்தாலும், ஏற்பட்டிருந்த முன் அனுபவமும், இன்றைய தாக்கமும் நைனிகாவை வெகுவாக சோர்வுறச் செய்திருந்தது.
பயிற்சி நிலையத்தை முழுவதும் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட காவல்துறை, விசாரணையை முடித்த போதும், அங்கு காவலுக்கு இரு டாணாக்காரர்களை நிறுத்தி வைத்திருந்தது.
விசாரணை முடித்துக் கிளம்பிய நேரத்தில் தன்னுடைய வகுப்பில் தனது கைப்பையை விட்டுவிட்டு வந்துவிட்டதாக அஞ்சலி சென்றிருக்க அவளுக்காகக் காத்திருந்தாள் நைனிகா.
கைப்பையை எடுத்துக்கொண்டு வந்த அஞ்சலி, "வெயிட் பண்ண வச்சிட்டேனா?" எனக் கேட்டாள்.
"அதெல்லாம் இல்லை. இந்த போலீஸ் பார்த்தாலே என்னவோ மாதிரியிருக்கு. அந்த இன்சிடன்ட் அப்புறம்" என்றாள்.
"போலீஸ்காரர் பொண்டாட்டி சொல்றதா இதை" என்று சிரித்த அஞ்சலியை முறைக்க முடியாது நைனிகாவும் சிரித்தாள்.
"என்னயிருந்தாலும் போலீஸ், இன்ஸ்வெஸ்டிகேஷன் இதெல்லாம் ஒரு மாதிரி இருக்கு அஞ்சலி" என்றாள்.
"ஹோ... எனக்கும் தான்" என்ற அஞ்சலி, "இந்த கேஸ் முடியுற வரை இதுக்கு பழகித்தான் ஆகணும். ஆனால் உனக்கு லைஃப் லாங் பழகணும்" எனக்கூறி விஷமமாகக் கண்ணடித்தாள்.
"அஞ்சலி" என்று விரல் நீட்டி பத்திரம் காண்பித்த நைனிகா, "மனோகர் இப்படி பண்ணுவாருன்னு நினைக்கல" என்றாள்.
"ஹ்ம்ம்... ஆனால் எனக்கு என்னவோ இந்த கொலைகள் எல்லாம் கௌரி சொல்ற மாதிரி மனோகர் பண்ணியிருக்கமாட்டார்ன்னு தோணுது" என்றாள்.
"எப்படி சொல்ற?" எனக் கேட்ட நைனிகா தன்னுடைய வண்டியில் அமர்ந்து உயிர்ப்பிக்க, அவளின் பின்னால் அமர்ந்தாள் அஞ்சலி.
வண்டியை நைனிகா முடுக்கிட,
"மனோகர் பத்தி கொஞ்சம் தெரியும்" என்றாள் அஞ்சலி.
"ஆமா இது அன்னைக்கு நீ அவரோட கல்யாணம் பத்தி சொல்லும்போதே தோணுச்சு. அவரை எப்படி உனக்குத் தெரியும்?" என்று வினவினாள் நைனிகா.
"தெரியும். அவர் மூலம்தான் நான் இங்கே வேலைக்கு சேர்ந்தேன்" என்றாள்.
"ஓகே... ஓகே..." என்ற நைனிகா, "வீடு வந்தாச்சு" என்றாள்.
"வீட்டுக்கு வாயேன் நைனி. இதுவரை நீ வந்தது இல்லையே" என்று நைனிகாவை வீட்டிற்குள் அழைத்தாள் அஞ்சலி.
"ஹப்பா... இப்போவாவது வீட்டுக்குள்ள கூப்பிடணும்னு உனக்கு மனசு வந்ததா?" என்று கேட்ட நைனிகா, வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அஞ்சலியுடன் உள் சென்றாள்.
அடக்கமான அளவான வீடு. அதிகப் பொருட்களின்றி வெறிச்சென இருந்தது.
"தனியா எப்படித்தான் இருக்கியோ?" என்று திரும்பிய நைனிகா சுவற்றில் மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தைக் கண்டு யாரெனக் கேட்டுக்கொண்டே, அஞ்சலி காட்டிய இருக்கையில் அமர்ந்தாள்.
பதில் சொல்லாது சமையலறைக்குள் சென்ற அஞ்சலி, சில நிமிடங்களில் கோப்பையுடன் நைனிகாவின் முன் வந்தாள்.
"நீ மனோகர்கிட்ட கொடுத்து எனக்குக் கொடுத்த கெமோமைல் டீ" என்று நீட்டினாள்.
மென் சிரிப்போடு தேநீரை பெற்றுக்கொண்ட நைனிகா, ஒன்றுமில்லாத வீட்டைச்சுற்றி விழிகளை ஓட்டியவாறு தேநீரை சுவைத்திட, நீண்டக்கயிறுடன் அவளின் பின்னால் வந்த அஞ்சலி, நைனிகா உணரும் முன்பு நீண்ட கயிற்றை அவளின் உடல்மேல் சுற்றி இறுக்கினாள்.
“அஞ்சலி… என்ன செய்ற?”
அதிர்ச்சியில் நைனிகாவின் குரல் உடைந்து ஒலிக்க, அவளின் கையில் இருந்த கோப்பை சிதறி தரையில் விழுந்தது.
நொடிப்பொழுதில் அஞ்சலியின் கண்கள் எரியும் தீப்பொறி போலக் குளிர்ச்சியற்ற கோபத்தால் பொங்க, அவள் பிடியிலிருந்து தப்பிக்க நைனிகா துடித்தாலும், பட்டு வலையில்பட்ட பறவை போலத் திணறிப் போனாள்.
“பயப்படாத நைனிகா… உன்னை காயப்படுத்த நான் வரல. ஆனால்… இப்போ நீ தெரிஞ்சிக்கணும் நான் யார்ன்னு.”
அஞ்சலியின் குரல் ஒவ்வொரு சொல்லும் கத்தி போல நைனிகாவின் உள்ளத்தில் ஊடுருவியது.
இருக்கையில் கட்டுண்டு நடுங்கிக்கொண்டிருக்கும் நைனிகாவின் விழிகளில் பயம் நிழலாகப் பரவ, அஞ்சலியின் முகத்தில் அசுர சிரிப்பு மலர்ந்தது.
“அந்த சுவரிலிருக்கும் போட்டோ பார்த்தியே? யாருன்னு கேட்டல நீ?”
“யார் அவர்?” நடுக்கத்தில் நைனிகாவின் குரல் சீரற்று சிதைந்து ஒலித்தது.
அஞ்சலியின் முகம் ஒருவிதமான காதல் பேரானந்தத்தில் ஒளிர்ந்தது.
“மை லவ்… மை ஹஸ்பன்ட்…” என்றாள். கண்களை ரசனையாக மூடித் திறந்து.
“உனக்கு கல்யாணம்?!” அதிர்ச்சியில் நைனிகா.
“ஆமாம். அவர் பெயர்… மாதேஷ்.”
ஒவ்வொரு எழுத்தையும் மெதுவாக நாவால் நுகர்ந்து ரசித்தாள் அஞ்சலி.
“மா…தே…ஷ்…”
அவளின் குரலில் கொந்தளிக்கும் காதலும், பித்தளிக்கும் ஆவேசமும் கலந்திருப்பதை பார்த்த நைனிகாவின் இதயம் சிதறப்போவது போலத் துடித்தது.
அந்தக் கணத்தில் தான், அஞ்சலி இதுவரை தங்களிடம் காட்டிய முகமூடியின் பின்னால் மறைந்திருந்த கொடூர முகம் முழுவதும் வெளிச்சம் பெற்றது.
நைனிகாவின் தேகம் அப்பட்டமாக நடுங்கத் துவங்கியது.
“அஞ்சலி… விளையாடாத. எனக்கு பயமா இருக்கு." அச்சத்தில் அழுகையின் தடம் எழுந்தது.
"உனக்கு மட்டும் ஒரு உண்மை சொல்லட்டுமா?" என சிரித்தபடி, நைனிகாவை கட்டியிருந்த இருக்கையை சுற்றி சுழன்று மெலிதான அசைவுகளோடு நடனம் ஆடிய அஞ்சலி, நைனிகாவின் பின்னிருந்து தொப்பென்று முன் குதித்து விகாரமாகச் சிரித்திட்டாள்.
ஏற்கனவே அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருந்த நைனிகா, இருக்கையோடு ஒண்டினாள்.
"அஞ்சலி பிளீஸ்..." கண்ணீர் கன்னம் வழிய உதடு நடுங்கியது.
"நீயிப்படி அழுதா நான் அந்த உண்மையை எப்படி சொல்றது நைனி... நைனி..." என்று தனது இணையுடன் நடனம் ஆடுவது போன்று மெல்ல அசைந்த அஞ்சலி,
"உன் ஆள் காக்கி தேடிட்டு இருக்க ஆள் நான் தான்" என்றாள். இதழில் மென் சிரிப்பும். விழிகளில் பழிவாங்கும் குரோதத்தின் வெறியும் உறைந்திருந்தது.
நைனிகாவின் விழிகள் திணறின. சுவாசம் சீரற்றது. அவளது உலகமே புரண்டது.
"அஞ்சலி...?" காற்றாய் எழும்பிய நைனிகாவின் குரல் ஓசையின்றி முற்றுப்பெற்றது.
"எஸ்... நானே... அது நானே..." என்று அசைவில் அடவுகளை சேர்த்த அஞ்சலி...
புகைப்படத்தின் முன் நின்று, படத்திலிருக்கும் நிழலுருவை விரல்களால் வருடி,
“அஞ்சலி… மாதேஷ்…” என ஊன் சிதைய உயிர் உருக உச்சரித்திட்டாள்.

Previous thread
Next thread