- Joined
- Sep 16, 2024
- Messages
- 746
- Reaction score
- 4,462
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 23
View attachment 703
இருக்கையில் கட்டிப்போடப்பட்ட நிலையிலிருந்த நைனிகாவுக்கு அஞ்சலியின் புதிய ரூபத்தில் இரத்தம் உறைந்த நிலை!
நட்பும் கேலியுமாய் இருக்கும் கண்டிப்பான ஆசிரியைக்குள் இப்படியொரு கொடூர கொலையாளியா?
நைனிகாவின் விழிகளில் அந்தக் கேள்வி தொனித்ததோ என்னவோ! உருகிப்போன நிலையிலிருந்து திரும்பிய அஞ்சலி இயல்பானாள்.
“என்னைப் பாத்தா பயமா இருக்குல்ல? ஆனா மாதேஷ் எப்பவும் அப்பிடி நினைச்சதில்ல! அவருக்கு நான், எனக்கு அவர், எங்களுக்கு நிலா பாப்பானு ரொம்ப சந்தோசமா வாழ்ந்த நாட்கள்ல நான் எப்பவும் இந்த மாதிரி பிஹேவ் பண்ணுனதேயில்ல! ஏன்னு கேளேன்”
நைனிகாவுக்கு இன்னும் அச்சம் அகலவில்லை. அஞ்சலியின் கண்களில் தெரிந்த உணர்வை அவளால் ஒரு கொலைகார சைகோவின் உணர்வாகவே பார்க்க முடிந்தது.
“அஞ்சலி… ப்…ப்ளீஸ்! நா..நான்… உன்… ஃப்ரெ..ண்ட் தானே? ப்ளீஸ்…” அழுகையோடு அவள் குரல் நடுங்க அஞ்சலியோ பைசாசச்சிரிப்பு சிரித்தாள்.
அதுவே நைனிகாவை இன்னும் பயமுறுத்தப் போதுமானதாய்!
சட்டென அச்சிரிப்பு நின்றது. பரபரவெனச் சுற்றும் முற்றும் பார்த்தவள் சட்டென நைனிகாவின் அருகே வர அவள் ‘வீல்’ என்று அலறினாள்.
“ஃப்ரெண்ட்? ஆமால்ல! நீ என் ஃப்ரெண்ட்! என் மாதேஷுக்கு அப்புறம், மனோகர் அண்ணாக்கு அப்புறம் நான் உண்மையான அன்போட பழகுன ஃப்ரெண்ட். கரெக்ட்! உன்னை நான் இப்பிடியெல்லாம் பயமுறுத்துறது தப்பு”
சட்டெனச் சோகத்துக்குத் தாவினாள் அவள்.
‘உணர்வுகள் ஒரு நிலையில் இல்லாதவள்’ அந்தப் பயத்திலும் நைனிகாவின் மனம் அஞ்சலியின் மாற்றங்களைக் குறித்துக்கொண்டது.
“உன்னை மாதிரி தான் செத்துப்போன எல்லாரும் என்னை ஃப்ரெண்டா, வெல்விஷரா, கம்பேனியனா நினைச்சாங்க. கடைசில அவங்களுக்கு நான் குடுத்த பரிசு மரணம்”
நைனிகாவின் முகம் இரத்தப்பசையற்று வெளுக்க அஞ்சலி தொடர்ந்தாள்.
“ஆனா உன்னை நான் அப்பிடி பண்ணமாட்டேன்! ஏன்னா நீ அப்பிடி இல்ல! நீ நல்லவ நைனி. ரொம்ப நல்லவ. என் மாதேஷ் மாதிரி. என் நிலா பாப்பா மாதிரி”
“நி…லா.. பாப்பா”
“என் நிலா பாப்பா. அவளும் மாதேஷ் கூடவே போயிட்டா. என்னை விட்டுட்டு ரொம்ப தூரமா… அங்க”
அஞ்சலி கைகாட்டிய திசையில் தெரிந்த ஜன்னலில் யாரோ தீட்டிய ஓவியமாய் நிலவோடு தெரிந்தது கருமை பூசிய வானம்.
“இதுக்கெல்லாம் காரணமானவங்களைச் சும்மா விட முடியுமா? கொன்னேன்! துடிக்க துடிக்க, வேதனைய அனுபவிக்க வச்சு ரத்தம் சொட்ட சொட்ட கொன்னேன். உனக்கு ஒன்னு தெரியுமா? அவங்க சாகுறப்ப எனக்கு இரக்கமே வரல. சந்தோசமா இருந்துச்சு”
கண் மூடி அந்தச் சந்தோசத்தை அபிநயித்த அஞ்சலியை திணறலோடு பார்த்த நைனிகாவின் நிலை படுமோசம்!
“இது தப்புல்ல” நடுங்கியபடியே கேட்டுவிட்டாள் அவள்.
அஞ்சலியின் கண்களில் வெறி!
“எது தப்பு? என் புருசன், என் பிள்ளை சாகக் காரணமானவங்களைக் கொன்னதா? தப்பில்ல நைனி,. எதுவுமே தப்பில்ல. எல்லாரும் ரொம்ப மோசமானவங்க. ரொம்ப கேவலமானவங்க. அந்தச் செல்வநாயகம் ஒரு பொறுக்கி. ஒரு பொம்பளை சிரிச்சு பேசுனா அவளைத் தொடுறதுக்கு உரிமை இருக்குனு நினைக்குற ஸ்கவுண்ட்ரல்! அவன் பொண்டாட்டி வசுமதி புருசனை கூடையில வச்சு நாட்டியக்காரி வீட்டுக்குச் சுமந்துட்டுப் போன நளாயினி வம்சம். அந்தாளோட வக்கிர புத்திக்கு அவளும் சப்போர்ட்.
மனோகர் மூலமா அந்தப் பொறுக்கியும் அவன் பொண்டாட்டியும் ஒரு அப்பாவி நர்சோட நடத்தைய கேலிக்கூத்தாக்கி அவங்களுக்கு ரெண்டாவதா அமையவிருந்த வாழ்க்கைய கெடுத்த விசயம் தெரிய வந்துச்சு.
ராமலிங்கம்னு ஒருத்தன் அவங்களை மிரட்டுனதைக் கவனிச்சேன். அவன் என் குடும்பத்துக்கும் தொந்தரவு குடுக்குறான்னு சொல்லி அவங்க கிட்ட சூப்பர்மார்க்கெட்ல வச்சு அறிமுகமானேன். ரெண்டு பெருசுங்களுக்கும் அவனை எப்பிடி டீல் பண்ணனும்னு அட்வைஸ் பண்ணுற சாக்குல அப்பப்ப அங்கயே நேர்ல சந்திச்சுப் பேசிப் பழகுனேன். ஒரு வாரம்தான்! என்னை அவங்க நம்பிட்டாங்க. எவ்ளோ தூரம் தெரியுமா?
அவங்களைக் கொல்லுறதுக்காக அவங்க வீட்டுக்குப் போனப்ப உபசரிக்கத் தயாராகுற அளவுக்கு நம்புனாங்க. விப்ட் க்ரீம் தயாரிக்க உதவுற மிசினை மார்க்கெட்டிங் பண்ணுற கம்பெனில நான் வேலை பாக்குறேன்னு சொன்னதையும் அவங்களுக்கு புராடக்ட் காட்ட வந்திருக்கேன்னு சொன்னதயும் அச்சு பிசகாம நம்புனாங்க. அவங்க நம்பிக்கைக்குப் பரிசு குடுக்கணும்ல நைனி?”
நைனிகா அழுகையை அடக்கிக்கொண்டு தலையை எப்படி ஆட்டுவதெனத் தெரியாமல் விழித்தாள்.
“குடுக்கணும்ல? குடுத்தேன், என் கிட்ட இருந்த புராடக்டான நைட்ரஸ் ஆக்ஸைட் இருந்த மினியேச்சர் க்ரீம் சார்ஜர் சிலிண்டரை ஆன் பண்ணி அதுங்க முகத்துல கேஸை அடிக்குற வரைக்கும் நம்புனாங்க! அவங்களோட அதிர்ச்சி மறையுறதுக்குள்ள நைட்ரஸ் ஆக்ஸைட் வீரியத்துல மயக்கத்துக்குப் போயிட்டாங்க. அப்பிடியே செத்துட்டா என் ஆசை, என் டோபமைன் ஸ்பைக் ஆசை நிராசை ஆகிடுமே? பொறுமையா அதுங்களை இதோ உன்னைக் கட்டிப் போட்ட மாதிரி சேர்ல கட்டிப் போட்டேன். அதுங்களோட ரேடியல் நெர்வ், அல்நர் நெர்வைக் கட் பண்ணுனேன். ஃப்ரூட் ஜாம் மாதிரி கொளகொளனு ரத்தம் வடியறதைக் கண் குளிர ரசிச்சேன். நைட்ரஸ் ஆக்ஸைடு மயக்கம் தெளிஞ்சாலும் நான் போட்ட கட் வலிக்கும்ல. ரத்தம் போக போக ஸ்மரணையும் போய் …”
அஞ்சலி விவரித்த விதத்தில் நைனிகாவுக்குக் குமட்டிக்கொண்டு வந்தது.
விவரித்தபோது அஞ்சலியின் முகத்தில் மின்னிய பேரானந்தம், உதடுகளில் உறைந்திருந்த பைசாசச் சிரிப்பு, உடல்மொழியிலிருந்த சைகோபாத்தின் கொடூரம் அவளைச் சாவின் விளிம்பில் இருப்பவளைப் போல உணரவைத்தன.
“அடுத்து மதனகோபாலும் காயத்ரியும். வீட்டுல வாடகைக்கு இருந்தவங்க என்னமோ தர்மத்துக்கு இவங்க வீட்டுல குடியிருக்குற மாதிரி தொட்டதுக்குலாம் குறை சொல்லிருக்காங்க. அந்த தம்பதியும் வீடு மாறுறதுல உள்ள கஷ்டத்தை நினைச்சும், அவங்களோட பொருளாதார நிலைய நினைச்சும் பல்லைக் கடிச்சிட்டு அங்கயே இருந்திருக்காங்க”
“இதுக்…காகவா கொலை பண்ணுன? வீட்டு ஓனர்னா ரூல் போடத்தான் செய்வாங்க அஞ்சலி”
அஞ்சலியின் உதடுகளில் கேலிச்சிரிப்பு!
“வாடகை வீட்டுல இருந்திருக்கியா நீ? உங்க வீடு, தாத்தா வீடுனு ரெண்டுமே சொந்த வீடுல்ல. ப்ரிவிலெஜ்ட் ப்ளேஸ்ல சௌகரியமா வாழுற உனக்குச் சாமானிய மக்கள் படுற கஷ்டம் எங்க இருந்து புரியும்? என் நிலா பாப்பா அழுதா ஓனர் கிழவிக்குப் பிடிக்காது. டிவி பாக்க முடியலனு கத்துவா. இது சாதாரணமா தோணுதா உனக்கு? தோணுனாலும் தோணும். ஒருத்தர் பாதிக்கப்பட்டதைச் சொல்லுறப்ப அவங்க கோணத்துல இருந்து பாக்கத் தவறுறவங்களுக்கு இது சாதாரணமாதான் தோணும்”
தலையைக் குனிந்து அழுகையை அடக்கிக்கொண்டாள் அஞ்சலி.
பின்னர் நிமிர்ந்து “அந்த மதனகோபால் வீட்டோட பாதுகாப்புக்கு சி.சி.டிவி கேமரா வச்சிருக்கார். அது வாடகைக்கு இருக்குறவங்களோட ஹால் வரைக்கும் கவர் பண்ணுனதை அவங்க கேள்வி கேட்டதுக்கு “கேமரா வச்சு பாக்குற அளவுக்கு என்ன சீன் ஓட்டுறிங்கனு” அசிங்கமா பேசி நைட்டோட நைட்டா அவங்களை வீட்டை விட்டுத் துரத்திருக்காங்க மதனகோபாலும் அவரோட பொண்டாட்டியும். வாடகைக்கு இருந்தவங்க எங்க போவாங்க? என்ன பண்ணுவாங்கனு யோசிக்கல. அவங்க நைட் ஃப்ளாட்பார்ம்ல நின்னதை பாத்து மனோகர் என்ன ஏதுனு விசாரிச்சு அவருக்குத் தெரிஞ்ச லாட்ஜ்ல தங்க வச்சு இந்த விவரத்தை எல்லாம் கேட்டு வாங்குனார். நீ அந்த இடத்துல இருந்திருந்தா என்ன பண்ணிருப்ப நைனி?” என்று கேட்க நைனிகாவிடம் பதில் இல்லை.
“இத்தனை வருசம் நீ தங்கியிருந்த கூரை இனிமே உனக்கு இல்லங்கிற நிலமை வந்தாதான் உனக்குப் புரியும். மதனகோபாலும் காயத்ரியும் கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சி இல்லாம அந்தத் தம்பதிக்கு அட்வான்சையும் திருப்பிக் குடுக்காம ஏமாத்துனாங்க. அவங்க வீடு வாடகைக்குப் போர்ட் போட்டிருந்ததைப் பாத்தேன். ரெண்டு மூனு தடவை பேசுனேன். வாடகைக்குக் குடி வர்ற ஐடியா இருக்குங்கிற எண்ணத்தை விதைச்சேன். ஒரு சனிக்கிழமை என் மேல அவங்க வச்ச நம்பிக்கைய அடிப்படையா வச்சு வீட்டுக்குள்ள நுழைஞ்சேன். இருக்கவே இருக்கு விப்ட் க்ரீம் சார்ஜர் நிறைய நைட்ரஸ் ஆக்சைட். அவங்களையும் செல்வநாயகம், வசுமதி கிட்ட அனுப்பி வச்சிட்டேன்”
நைனிகாவுக்குத் தொண்டை உலர்ந்து போனது. அவள் எச்சில் விழுங்குவதைக் கண்டு தண்ணீரை எடுத்து வந்து புகட்ட எத்தனித்தாள் அஞ்சலி.
அவள் மிரள “பயப்படாத! உன்னைக் கொல்ல இங்க அழைச்சிட்டு வரல. குடி” என்றாள்.
நைனிகாவும் பயத்தோடு அவள் புகட்டிய தண்ணீரைக் குடித்தாள்.
தம்ளரை உரிய இடத்தில் வைத்தவள் “கதைக்குப் போகலாமா? அடுத்து டாக்டர் தனபாலை எப்பிடி நம்ப வச்சேன் தெரியுமா? நான் ஒரு பணக்காரி, எனக்குக் குழந்தை பிறக்க வாய்ப்பில்லனு அவனைக் கான்டாக்ட் பண்ணுனேன். நிறைய சொத்து, தோப்பு துரவு இருக்குறதா ஆதாரம் கூட காட்டுனேன். நம்பிட்டான். நேர்ல மீட் பண்ண ஒத்துக்கிட்டான். காசுக்காக எதையும் செய்யுற ஜென்மம். அவனுக்கு நைட்ரஸ் ஆக்சைடை யூஸ் பண்ண வேண்டிய அவசியம் வரல. பண்ணவும் தோணல. அவனோட பணத்தாசையால எத்தனை குழந்தைங்க பாதிக்கப்பட்டிருப்பாங்க. தத்தெடுக்குறது பத்தி விசாரிக்க அவனோட இடத்துக்குப் போறப்ப அவனும் முத்துவும் துப்பாக்கிய வச்சிருந்த இடத்தை நோட் பண்ணி வச்சிருந்தேன். கொலை பண்ண தேர்ந்தெடுத்த சனிக்கிழமைல, தனபால் அசந்த நேரத்துல கம்பவுண்டர் முத்துக்கு அவன் வாங்கி குடுத்த துப்பாக்கிய வச்சு மிரட்டி வீடியோ ரெக்கார்ட் பண்ண வச்சேன். துப்பாக்கி முனைல அவன் வாயைக் கட்டி அவனோட ரேடியல் நெர்வ், அல்நர் நெர்வைக் கட் பண்ணி அவன் சாகுறதைக் கண் குளிர ரசிச்சேன்” என்றாள் கண்களில் ஆர்வத்தோடு.
“ப்ச்! அப்புறம்தான் தண்டபாணி கிழவன் மாட்டுனான். அவனுக்கு ரகுனு ஒருத்தன் உதவியா இருந்தான். அவன் அனுப்புனதா சொல்லி அடிக்கடி கிழவன் வீட்டுக்கு ஆட்கள் வர்றதை கவனிச்சேன். அவன் அனுப்புனதா சொல்லி வீட்டுக்குள்ள போனேன். ஆனா இந்தத் தடவை என் செல்லத்தை வச்சுதான் அவனை அமைதியாக்குனேன்”
சொன்னவள் ஓடோடி போய் க்ரீம் சார்ஜர் எனப்படும் நைட்ரஸ் ஆக்ஸைட் குடுவையை எடுத்து வந்து காட்டினாள்.
“அடுத்து ரகுராம் – வத்சலா. அரக்கப்பிறவிங்க. மனோகர் அண்ணாவோட வாழ்க்கைய நாசமாக்குன இழிபிறவிங்க. சொந்த ரத்தத்தை அபார்சன் பண்ண வச்சு மனோகர் அண்ணா வாழ்க்கைய இருட்டா ஆக்குன ஆணவப்பேர்வழிங்க. அவங்க உயிரோட நடமாடுறதே எனக்கு ஒரு மாதிரி சஃபோகேட்டிங்கா இருந்துச்சு தெரியுமா? அதுங்க கிட்ட யாரோ என்னைத் துரத்திட்டு வர்றாங்கனு நடிச்சு ஏமாத்தி வீட்டுக்குள்ள புகுந்து ரொம்ப சந்தோசமா மேல அனுப்பி வைச்சேன். அதுங்களுக்குப் பரலோகப்ராப்தி குடுத்துட்டு வர்ற வழியில நீ என்னைப் பாத்துட்ட. உன்னை டைவர்ட் பண்ண மனோகருக்குக் கால் பண்ண வச்சேன். அவர் வர்ற வரைக்கும் சின்னதா ஒரு கேம் உன் கூட விளையாடுனேன்.”
சொல்லிவிட்டு அஞ்சலி கண் சிமிட்டவும் நைனிகாவுக்கு இனி இவள் தன்னை விட்டுவைப்பாள் என்ற நம்பிக்கை போய்விட்டது.
“இப்ப என்ன? என்னைக் கொல்லப்போறியா?”
சோர்வாய்க் கேட்டாள் அவள்.
அஞ்சலியின் தலை மறுப்பாய் அசைந்தது.
“நோ! நோ வே நைனி! உன்னை நான் எதுவும் பண்ணமாட்டேன். உன்னைக் கொல்லுறதுக்கான அவசியம் இப்ப எனக்கு இல்ல. உன்னை நான் இங்க வர வச்சதும் கொல்லுறதுக்காக இல்ல. நான் கொலை பண்ணுன யாரும் புனிதர்கள் இல்லனு சொல்லுறதுக்காக. கலிவரதன்ல ஆரம்பிச்சு ரகுராம் வரை எல்லாரும் இந்தச் சமுதாயத்துல வாழத் தகுதியில்லாத ஜந்துக்கள். ரொம்ப நாளா டோபமைன் இல்லாம வறண்டு போயிருந்த என் மூளைக்கு டோபமைன் தாகம் எடுத்தப்ப அவங்களா வந்து சிக்குனாங்க. அவங்களைக் கொல்ல கொல்ல எனக்குள்ள அப்பிடி ஒரு உற்சாகம்! சந்தோசம்! மூளைக்குள்ள ஜிவ்வுனு ஒரு உணர்வு! ஹெவன்லி ஃபீல்!”
கண் மூடி ரசனையோடு சொன்ன அஞ்சலி கூடவே “எனக்குனு இருந்த ஒரே ஒரு நட்பு நீ. அந்த உணர்வைப் புரிஞ்சிக்கிற திறன் என் மூளைக்கு இல்ல. அதுவும் டோப்பமைன் குடுக்குற கிளர்ச்சிதான் எனக்கு. ஆனா நீ என்னை நல்லவிதமா நடத்துன. இப்ப இல்லனாலும் என் நிலைமைய ஒரு நாள் புரிஞ்சிப்ப” என்று சொல்ல நைனிகாவுக்கு மனமெல்லாம் ரணமானது.
இந்த அஞ்சலி ஏன் கொலைகாரியாகி தொலைத்தாள் என்ற எண்ணம்!
“நான் உன்னை இங்க வச்சிருக்குறது உன் ஆளுக்காக”
குழம்பினாள் நைனிகா,.
“புரியல? இன்னும் கொஞ்சநேரத்துல அவர் இங்க வருவார் பாரு. ஹீரோவாச்சே! லூசு ஹீரோயினா இருந்தாலும் உனக்காக அவர் வந்துதானே ஆகணும்?”
“நீ… நீ… பிரதாப்பைக் கொல்ல… நோ! அஞ்சலி வேண்டாம். அவர்..”
முடிக்கும் முன்னர் கதறியழத் தொடங்கினாள் நைனிகா. பிரதாப்பின் கம்பீரமான ஆகிருதியானத் தோற்றத்துக்கு முன்னே அஞ்சலியின் உடல்பலம் தோற்கலாம். ஆனால் அவளுக்குள் இருக்கும் சைகோபாத்துக்கு அசுரபலம் இருக்கிறதே! அதை எண்ணி கதறினாள்.
“சீச்சீ! என்ன இது? அழாத. நான் உன் ஆளைக் கொல்லமாட்டேன். காட் ப்ராமிஸ். என் நிலா பாப்பா மேல, என் மாதேஷ் மேல ப்ராமிஸ்”
அஞ்சலி சத்தியம் செய்ய நைனிகாவின் அழுகை இன்னும் அதிகமானது. சைகோபாத்தை எப்படி நம்புவாள் அவள்?
“நான் செஞ்ச தப்பை எல்லாம் சொல்லி சரண்டர் அடையலாம்னு இருக்கேன்”
இப்போது நைனிகாவின் அழுகை நின்றது.
“ஆமா! மனோகருக்காக! அவர் வாழணும். என் சைகோபதிய கண்ட்ரோல்ல வைக்க எவ்ளோவோ உதவிருக்கார். அவர் வாழ்க்கை நாசமாகிடக்கூடாது”
சைகோபதியா? கிலி பரவியது நைனிகாவுக்குள்.
“நம்ப முடியலையா? போலீஸ் நம்மளை விசாரிச்சப்ப மனோகருக்காக கௌரி துடிச்சாளே! அதை நீ கவனிச்சியா?”
இப்போது புரிந்தது நைனிகாவுக்கு. இருந்தாலும் நீ அவ்வளவு நல்லவளா என்ற பார்வை மட்டும் மாறவில்லை.
அஞ்சலி சத்தமாகச் சிரித்தாள்.
“இத்தனை நாள் இப்பிடியெல்லாம் நான் யோசிக்கல. கௌரியோட பதற்றம் என்னை யோசிக்க வச்சுது. நேசிக்குறவங்களோட வாழுறது ஒரு வரம். அந்த வரம் பாதில என் கிட்ட இருந்து பிடுங்கப்பட்டது என்னோட தலைவிதி. மனோகரோட விதில அவருக்கு இன்னொரு வரம் கிடைக்குனு எழுதிருக்கப்ப என்னால அவர் ஏன் கஷ்டப்படணும்? எனக்காக அவர் ஏன் ஜெயிலுக்குப் போகணும்? இன்னொரு விசயம் சொல்லட்டுமா? இந்தக் கொலைய நான்தான் செஞ்சேன், நான்தான் போலீசை சுத்தல்ல விட்டேன்னு உலகத்துக்கு அறிவிக்குறதை நான் கர்வமா நினைக்குறேன். இந்த மாதிரி பாவிகளோட கண்கள் என்னைப் பயத்தோட பாக்குறது எனக்குள்ள ஆனந்தத்தை உருவாக்குது நைனி! திஸ் இஸ் ஃபார் மீ! ஃபார் மை டோபமைன் ஸ்பைக் (Dopamine spike)”
அவள் பேசும்போதே வெளியே பைக் வரும் சத்தம்!
“உன் ஆளு தான்!”
“ப்ளீஸ் அஞ்சலி”
கதவை நோக்கிப் போன அஞ்சலியிடம் கெஞ்சியபடி கண்ணீர் விட்டாள் நைனிகா. இன்னும் அவள் மீது நம்பிக்கை வரவில்லை.
கதவைத் திறந்தவள் பேசும் முன்னர் அங்கே கட்டிப்போடப்பட்ட நைனிகாவின் நிலையைக் கண்டதும் அஞ்சலியின் கழுத்தைப் பற்றியிருந்தான் பிரதாப்.
அஞ்சலியோடு நைனிகா சென்ற விபரத்தை டீக்கடைக்காரர் பார்த்துச் சொன்னதும் முகவரியை ஆரவியிடம் விசாரித்துவிட்டு நேரே இங்கே வந்தவனுக்கு வரும் வழியில் எல்லாம் நைனிகாவால் தொடர்பு கொள்ளமுடியாமல் போனாலும் அஞ்சலியின் போனிலிருந்து அழைத்து விவரம் சொல்லியிருக்கலாமே என்ற எண்ணம்! நைனிகாவின் நிலையைக் கண்டதும் உள்ளுணர்வு எதுவோ சரியில்லை என்று சொன்னதன் விளைவுதான் அவனது கை அவளது கழுத்தில் பதியக் காரணம்.
அஞ்சலியின் கண்களில் சட்டென வந்து போன கொலைவெறியைப் பார்த்தவனுக்கு இவள் சாதாரணப்பட்டவள் இல்லை என்பது புரிந்தது.
“பிரதாப்”
கதறினாள் நைனிகா.
அஞ்சலியின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்தவன் “மூவ்” என்று உறும அவளும் அவனோடு நைனிகாவை நோக்கி நடந்தாள்.
“கயிறைக் கழட்டு”
நைனிகாவைச் சுற்றியிருந்த கயிறை அவிழ்க்கச் சொன்னான் அவன்.
அஞ்சலியும் அவிழ்த்துவிட கோழிக்குஞ்சாய் நடுங்கியபடி அவனது கைவளையத்துக்குள் வந்துவிட்டாள் நைனிகா.
ஆனால் பிரதாப்பின் ரௌத்காரம் குறையவில்லை. அஞ்சலியை வெஞ்சினத்தோடு பார்த்தவன் “நீ பிரதாப் சக்கரவர்த்தியோட ஈகோவ டச் பண்ணிட்ட அஞ்சலி” என்று கர்ஜித்தான். ஐ.பி.எஸ் அதிகாரி என்ற முறையில் வந்த கோபமில்லை இது.
‘என் சரிபாதியை இவள் எப்படி வேதனைக்குள்ளாக்கலாம்’ என்ற வருங்காலக் கணவனின் நியாயமானச் சினம்!
“ஓஹ்! அப்ப என்னை அரெஸ்ட் பண்ணி அந்த ஈகோவ திருப்திப்படுத்திக்கோங்க ஆபிசர்” என்றாள் அவள் அலட்சியச்சிரிப்போடு.
‘இது என்ன புதுவகை நாடகம்?’ என அவன் பார்க்கையிலேயே “என்னை அரெஸ்ட் பண்ணுங்க. மனோகரை விட்டுருங்க” என்றாள் அஞ்சலி உறுதியானக் குரலில்.
சிறிது நேரத்தில் காவல் வாகனம் சைரனுடன் வர அதில் கைவிலங்குடன் ஏற்றப்பட்டாள் அஞ்சலி. உள்ளே செல்லும் முன்னர் அவளது விழிகள் நைனிகாவிடம் ‘போய் வருகிறேன்’ என்று சொன்னது போல!
நைனிகாவின் கண்களில் கண்ணீர் பெருகியது!
“மேம் நீங்க வாங்க! வீட்டுல விட்டுடுறோம்” ஆரவி அழைக்க பிரதாப்பைப் பார்த்தாள் அவள்.
கையில் ஏதோ மருத்துவக்கோப்புகளை வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தவன்
“போ! இங்க எனக்குக் கொஞ்சம் டாக்குமெண்ட்ஸ், சில எவிடென்ஸ் கிடைச்சிருக்கு. அதைக் கலெக்ட் பண்ணிட்டு வந்துடுறேன்” என்றான்.
நைனிகா ஆரவியுடன் கிளம்பிப் போன பிற்பாடு அந்த மருத்துவக்கோப்பில் இருந்த மருத்துவமனை எண்ணுக்கு அழைத்தான்.
அது பிரபல மருத்துவமனையின் வரவேற்பு எண். கோப்பிலிருந்த அஞ்சலியின் பெயரைச் சொன்னதும் மனநல மருத்துவர் ரகோத்தமனிடம் சிகிச்சை பெறுபவள் என்ற தகவல் கிடைத்தது.
ரகோத்தமனை இப்போது சந்திக்க முடியாதெனக் கறாராகப் பேசிய ரிசப்ஷனிஸ்ட் மறுமுனையின் பேசுபவன் காவல்துறை அதிகாரி என்றதும் குரலைத் தணித்தார்.
“சார் கிட்ட கால் கனெக்ட் பண்ணி விடுறேன்”
கான்ஃபரன்ஸ் கால் இணைக்கப்பட்டதும் “ஹலோ டாக்டர்! ஏ.சி.பி பிரதாப் சக்கரவர்த்தி பேசுறேன்” என்றவன் அஞ்சலியைக் குறிப்பிடவும்
“என் பேஷண்ட்ஸ் பத்தி நான் யார் கிட்டவும் தகவல்களைப் பகிர்ந்துக்க முடியாது சார். அது என் தொழில் விதிமுறைக்கு எதிரானது” என்று மறுப்பு சொல்ல
“அவங்க ஒரு சீரியல் கில்லர். அவங்களுக்கு ட்ரீட்மெண்ட் குடுத்த நீங்கதான் என் கேள்விகளுக்குப் பதில் சொல்லணும் டாக்டர்” என்றான் அவன் ஆணையிடும் குரலில்.
ரகோத்தமனும் வேறு வழியின்றி மறுநாள் அவனைச் சந்திக்க சம்மதித்தார்.
அன்றிரவு முழுவதும் எப்படி கடந்ததென அவனுக்கே தெரியவில்லை.
மறுநாள் மருத்துவரைச் சந்தித்ததும் அஞ்சலியின் மருத்துவக்கோப்புகளை அவர் முன்னே வைத்தவன் “இந்தப் பொண்ணு எட்டு பேரைக் கொடூரமான முறைல கொலை பண்ணிருக்கா. அவளே சரண்டர் ஆகவும் செஞ்சிருக்கா. அவளுக்கு நீங்க ட்ரீட்மெண்ட் குடுத்திருக்கிங்க. ஒரு தடவை கூடவா அவளோட உள்மன உணர்வுகளை உங்களால கண்டுபிடிக்க முடியல?” என்று கேட்டான் அதிருப்தியுடன்.
ரகோத்தமனுக்கு இன்னும் அதிர்ச்சி அடங்கவில்லை.
“நோ வே! ஷீ இஸ் அப்சல்யூட்லி நார்மல் நவ்” என்றார் நம்பாதக் குரலில்.
“இப்ப நார்மல்னா அப்ப முன்னாடி எப்பிடி இருந்தா?”
ரகோத்தமன் பெருமூச்சு விட்டவர் கோப்பினைக் காட்டினார்.
“இந்தப் பொண்ணு அஞ்சலிய மனோகர்னு ஒருத்தர் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி என் கிட்ட ட்ரீட்மெண்டுக்கு அழைச்சிட்டு வந்தார். எங்க கிட்ட வர்ற எல்லா பேஷண்டையும் நாங்க சில அனாலிசிஷுக்கு உட்படுத்துப்வோம். அப்பிடி எடுத்த ஒரு டெஸ்ட்தான் ‘ஹேர் சைக்கோபதி செக்லிஸ்ட்’ (Hare Psychopathy Checklist-Revised (PCL-R)… இந்த செக்லிஸ்ட் படி அஞ்சலியோட மார்க் முப்பத்தியொன்னு. அதாவது சைகோபதிங்கிற மனப்பிறழ்வுக்குறைபாட்டோட ஆரம்ப நிலைல அந்தப் பொண்ணு இருந்தா. அதைத் தொடர்ந்து அவளோட மூளையோட எம்.ஆர்.ஐ அண்ட் சி.டி ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பாத்தப்பதான் அவளோட பாதிப்பு மரபியல் சார்ந்ததுனு புரிஞ்சுது”
“புரியல டாக்டர். அப்ப இவ பரம்பரை சைகோவா?”
“பாத்திங்களா? பெரிய ஆபிசர், நீங்களே புரிதல் இல்லாம பேசுறிங்க. சைகோபதிங்கிற மனப்பிறழ்வு குறைபாட்டோட சாதாரணமா வாழ்ந்து செத்துப் போற மனுசங்களும் நமக்கு இடையில இருக்காங்க சார். உதாரணத்துக்கு டாக்டர் ஜேம்ஸ் ஃபாலன். இவர் நிறைய சீரியல் கில்லர்சோட மூளையைப் பத்தி ஆராய்ச்சி பண்ணுனவர். 2005ல தன்னோட ப்ரெய்ன் ஸ்கேன் ரிப்போர்ட்டை பாத்தப்ப பச்சாதாபம், ஒழுக்கம் மற்றும் சுயக்கட்டுப்பாடு இதெல்லாம் கண்ட்ரோல் பண்ணுற ஃப்ராண்டல் கார்டெக்ஸ் பகுதியும், டெம்பரல் லோப்சும் குறைவான செயல்பாட்டோட இருக்குறது தெரிய வந்துச்சு. சோ அவரும் ஒரு சைகோபதி பேஷண்ட். ஆனா அவர் வாழ்ந்த சூழல், வளர்ந்த விதம், அருமையான குழந்தைப் பருவம், அற்புதமான குடும்பம் இதெல்லாம் அவரைக் கிரிமினலா மாத்தல. அஞ்சலி விசயத்துலயும் இதுவே நடந்திருக்கலாம்.”
“தட் மீன்ஸ்?”
“அவங்களோட இழப்புகள்தான் அவங்களை இந்தளவுக்கு மாத்திருக்குனு சொல்ல வர்றேன். அவங்க மூளையோட அமிக்டலா பகுதி சரியான முறைல செயல்படல! பயம், கோவம் மாதிரியான உணர்வுகளை நமக்குப் புரியவைக்குற பகுதி அது. உணர்வுகளோட கண்ட்ரோல் செண்டர் மாதிரி. அதோட அவங்க மூளையோட ஃப்ராண்டல் கார்டெக்ஸ் பகுதி சரிவர செயல்படல. நம்ம சிந்திக்கும் திறன், சரி எது தப்பு எதுனு பகுத்தறியுற திறனை இந்தப் பகுதிதான் தீர்மானிக்கும். இதுல சின்னதா பாதிப்பு வந்தாலும் அந்த மனுசங்க சிந்திக்கும் திறனை இழந்துடுவாங்க. சரி தப்பு பத்தி கவலைப்படமாட்டாங்க. அடுத்தவங்க உணர்வுகளைப் பத்தி அவங்களுக்குக் கவலையே இருக்காது. இதுதான் அஞ்சலியோட நிலமை.
ஆனா பாருங்க, அவங்களோட Ventral Tegmental Area – இதைத்தான் மனுச மூளையோட ரிவார்ட் சிஸ்டம்னு சொல்லுவோம்... இந்தப் பகுதி ஹைபர் ஆக்டிவா இருக்கு. இந்தப் பகுதியில இருக்குற நியூரான்கள் டோபமைனை உருவாக்குது. அவங்க எந்தக் காரியத்தைச் செய்யுறப்ப Ventral Tegmental Area தூண்டப்பட்டு டோபமைன் சுரக்குதோ அதை மறுபடி மறுபடி செய்யுறதுக்கு அவங்களுக்குள்ள ஆசை உருவாகும். அவங்களுக்கு டோபமைன் ஸ்பைக் வேணும்னு நினைக்குறப்ப எல்லாம் அந்தக் காரியத்தைச் செய்வாங்க.
அவங்களால யாரையும் மேனிபுலேட் பண்ண முடியும். இன்ஃபேக்ட் மேனிபுலேசன்தான் அவங்களோட அடையாளம்னு கூட சொல்லலாம். தங்களோட சைகோபதி பசிக்கு அவங்க இரை தேட மேனிபுலேசனைத் தான் ஆயுதமா பயன்படுத்துவாங்க.
இந்த நிலமைலதான் அஞ்சலி என் கிட்ட வந்தாங்க. அந்தப் பொண்ணோட குடும்பமும், பெத்தவங்க காட்டுன அன்பும் இந்தக் குறைபாடுகள் இருந்தப்பவும் அவளை சைகோபாத்தா மாறவிடல. அவங்க இறந்ததும் மாதேஷ் அவ வாழ்க்கைக்குள்ள வந்ததா சொன்னா. அவங்க ரொம்ப சந்தோசமா வாழ்ந்திருக்காங்க சார். அவரோட காதல் அவளுக்கு வேணும் வேணும்ங்கிற டோபமைனைக் குடுத்திருக்கு. காதலோட அடையாளமா நிலானு ஒரு பொண்குழந்தை பிறந்ததாவும் சொன்னா. பட் ஏதோ சீரியஸான ஃபேமிலி பிரச்சனைல மாதேஷ் இறந்து அவங்க குழந்தையும் இறந்துடுச்சு. இந்த இடத்துல அவளுக்கு அன்பு காட்டவோ, அவளை அரவணைக்கவோ ஆள் இல்ல. அவளுக்கு இந்தச் சொசைட்டியில இருந்த நிறைய பேர் மேல கோவம் இருந்துச்சு. அந்த இடத்துல அவளுக்குள்ள சைகோபதிங்கிற மனப்பிறழ்ச்சி குறைபாடு தீவிரம் அடைஞ்சிருக்கலாம். ஆனா மனோகர் அவளை என் கிட்ட சிகிச்சைக்கு அழைச்சிட்டு வந்துட்டார். கொஞ்சம் கொஞ்சமா ட்ரீடெம்ண்டுக்கு ஒத்துழைச்சு, மருந்து மாத்திரை எடுத்துக்கிட்டு ரெகவரானா”
“அப்ப அவளுக்கு வந்த குறைபாடு இன்னும் குணமாகலையா டாக்டர்?”
“ஒருவேளை சில விசயங்கள் தன்னைச் சுத்தி நடக்குறப்ப அவளுக்குள்ள உறங்குற சைகோபதிக்கான ட்ரிக்கர் ஆரம்பிச்சிருக்கலாம். இதுவும் சாத்தியம்தான் சார். ஆனா ஒன்னு, அவளுக்குள்ள இருந்த குறைபாட்டுக்கு இதுவரை அவளை நேசிச்சவங்க, அவ நேசிச்சவங்க பலியாகிருக்க வாய்ப்பில்லனு மட்டும் என்னால சொல்ல முடியும். நட்பு, காதல் எல்லாம் அவளுக்கு வெறும் டோப்பமைன் குடுக்குற ரிவார்ட் ஃபீலிங் மட்டும்தான்! ஆனா அதை அவ மதிச்சா, மதிப்பா. அந்த நம்பிக்கைல சொல்லுறேன்”
ரகோத்தமன் சொன்ன விபரங்களை உள்வாங்கிக்கொண்டான் பிரதாப்.
“இந்தக் கேஸ்ல உங்களோட ஒத்துழைப்பு எங்களுக்குத் தேவைப்படும். கோர்ட்டுக்கு வரவேண்டியது இருக்கும். சோ கைண்ட்லி கோ-ஆபரேட் வித் அஸ்”
“கண்டிப்பா சார்”
அவரிடம் கைகுலுக்கி விடைபெற்றவனின் மனதில் ஆயிரம் கேள்விகள்! அனைத்துக்கும் விடை தரப்போகிற அஞ்சலி எந்தக் கவலையுமின்றி காவல்துறை விசாரணைக்குத் தயாராகிக்கொண்டிருந்தாள்.

Previous thread
Next thread