- Joined
- Sep 16, 2024
- Messages
- 746
- Reaction score
- 4,462
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
உறையுள் உறையும் உதிரம் 6
View attachment 667
மறுநாள் காலை ஏழு மணி...
சென்னை விவேகானந்தா நகரில் நடந்த தொடர் மர்மக் கொலைகள்! கொலையாளி யார்? நடந்தது என்ன?
தொலைக்காட்சித் திரையில் கீழே இவ்வரிகள் ஓடிக் கொண்டிருக்க, இது வரை நடந்த மூன்று கொலைகளைப் பற்றியும் விவரித்துக் கொண்டிருந்தார் செய்தியாளர்.
முதல் இரண்டும் திட்டவட்டமாக கொலை என்று கூறிய போலீசார் மூன்றாவதாக நடந்த மரணத்தைக் கொலையா தற்கொலையா என்று இன்னும் ஆராய்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள் என்று தொடர்ந்து செய்தியாளர் பேசிக் கொண்டிருக்க,
அந்தத் தொலைகாட்சியைப் பார்த்தவாறு சென்னைப் புறநகர்ப் பகுதியில் ஒரு குடிசையில் அமர்ந்திருந்தான் ராமலிங்கம்.
"என்னமா ரசிச்சு ரசிச்சு கொலை செஞ்சிருக்கான் பார்த்தியாடா? கொலைனா இப்படிச் செய்யனும்டா.. கண்ணுல தெரியுற மரண வலியை பார்த்து ரசிச்சு அவன் வலில துடிக்கிறதைப் பார்த்து ஆனந்தப்பட்டு... ம்ப்ச் நாமளும் தான் இருக்கோமே சட்டுனு பொருளெடுத்தோமா பட்டுனு போட்டோமானு இதுல என்னடா கிக் இருக்கு. அது தான்டா உண்மையான கொலை" என்று தன்னருகில் தரையில் அமர்ந்திருந்த எடுபிடியிடம் கூறியவனாய் கஞ்சாவை இழுத்துக் கொண்டிருந்த ராமலிங்கம், தனது குடிசையின் வெளியே தன்னை உளவு பார்க்க வந்த உருவத்தின் நிழல் குடிசையை விட்டு விலகி செல்வதைப் பார்த்துத் தனக்குள்ளேயே குரூரமாய்ச் சிரித்துக் கொண்டான்.
அதே நேரம் அங்கே புறநகரில் இருந்த கடற்கரையில் கரையைத் தொடுவதும் பின் வாங்குவதுமாய் விளையாடிக் கொண்டிருந்த கடலலையைப் பார்த்தவாறு அமர்ந்திருந்த நைனிகாவின் மனம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.
அருகில் அமர்ந்திருந்த பிரதாப்பை முறைத்துப் பார்த்தாள் நைனிகா.
'நேத்து நைட் போன்ல பேசும் போது காலைல பீச்க்குப் போகலாம் நைனினு இவர் சொன்னதும், ஏதோ என் மேல் தான் அன்பு பொங்கிக் கூப்பிடுறாரோனு நினைச்சி ஆசை ஆசையா ஓடோடி வந்த என்னைச் சொல்லனும்' என்று மனத்தோடு புலம்பியவளாய் இவள் அமர்ந்திருக்க,
தனது கூலிங் கிளாஸ் கண்களால் கூர்மையாய் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தவாறு அமர்ந்திருந்த பிரதாப்பின் மூளையோ கேசைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தது.
அவனின் நினைவுகள் முதல் கொலையுண்டவர்களின் மகனான வருணிடம் முந்தைய நாள் இரவு காணொளி மூலமாக நடத்தப்பட்ட விசாரணைக்குச் சென்றது.
"உங்க அப்பா அம்மா கொலைல, உங்களுக்கு யாரு மேலயாவது சந்தேகம் இருக்கா?" என்று பிரதாப் கேட்டதும்,
சற்று யோசித்த வருண், "ஆமா சார். ராமலிங்கம்னு ஒருத்தர் மேல சந்தேகம் இருக்கு" என்று கூற, பிரதாப்பும் திலீப்பும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
"யாரு அந்த ராமலிங்கம்?" என்று பிரதாப் வினவ, "இந்த ஏரியா கவுன்சிலர் ஓட சொந்தகாரன் சார் அவன். கவுன்சிலர் சார்பா எங்க வீட்டை எழுதி கேட்டு தகராறு செஞ்சிருக்கான்" என்றான்.
"இதை ஏன் நீங்க முதல்ல விசாரிக்கும் போதே சொல்லலை?" கூர்மையாய் அவனைப் பார்த்தவாறு பிரதாப் கேட்க,
பிரதாப்பின் கண்களை நேராய் நோக்கியவனாய், "அப்ப அந்த ராமலிங்கம் மேல சந்தேகம் இல்லை சார். எனக்கு இந்தப் பிரச்சினை பத்தியெல்லாம் தெரியாது சார். அப்பா அம்மா இறந்த பிறகு எங்க வீட்டுல வேலை செய்ற காமாட்சி அம்மா தான் இவன் மேல சந்தேகம் இருக்கிறதா சொன்னாங்க. மூனு மாசமா எங்க வீட்டுக்கு வாடகைக்கு ஆளு வராம இருந்ததுக்கும் இவன் தான் காரணம்னு சொன்னாங்க" என்றவன் சொன்னதும்,
"மூனு மாசமா நீங்க உங்க அப்பா அம்மாகிட்ட பேசலையா? அவங்க இதைப் பத்திலாம் உங்ககிட்ட சொல்லலையா?" எனக் கேட்டான் பிரதாப்.
"மூனு மாசமா கொஞ்சம் வேலை கெடுபிடியா இருந்தனால ரொம்பப் பேசலை சார். வீட்டு வாடகைக்கு ஆளுங்க யாரும் வர மாட்டேங்குறாங்கனு மட்டும் சொன்னாங்க" என்றவன் சொன்னதும், புருவத்தைக் கீறியவாறு எதையோ சிந்தித்தவனாய், "உங்களுக்கு மேலிடம் பழக்கம்லாம் உண்டோ?" என்று கேட்டான்.
வருண் புரியாது கண்களைச் சுருக்கியவன் பின் புரிந்தவனாய், "சார் அது போலீஸ் இந்தக் கேஸை திருட்டு கேஸூனு முடிக்கப் பார்த்தாங்க. அதான் மேலிடத்து மூலமா மூவ் செஞ்சேன்" என்றான்.
'என்னையா குறை சொல்ற?' என்பது போல் திலீப் வருணை முறைக்க, பிரதாப்பின் பார்வை திலீப்பைத் தொட்டு வருணிடம் வந்து நின்றது.
"உங்க வீட்டுல வேலை செஞ்ச காமாட்சி எங்கே இருக்காங்க?" பிரதாப் கேட்டதும், "அம்மா அப்பா இறந்த பிறகு அவங்க சொந்த ஊரான திருச்சிக்குப் போய்ட்டாங்க சார்" என்றவன் சொன்னதும் பிரதாப் திலீப்பின் புறம் திரும்பிப் பார்க்க,
"அவங்களை விசாரிக்க ஏற்பாடு செய்யச் சொல்லிடுறேன் சார்" என்றான் திலீப்.
"ஓகே, உங்களுக்கு வேற யாரு மேலயாவது சந்தேகம் வந்தாலோ இல்ல ஏதாவது தோணுச்சுனாலும் எங்களை கான்டேக்ட் பண்ணுங்க. சின்ன விஷயமா இருந்தாலும் கூடச் சொல்லுங்க. அதோட, இந்தக் கேஸ் முடியுற வரை, நாங்க காண்டேக்ட் செய்யும் போதெல்லாம் அவைல்லபுளா இருக்கிற மாதிரி பார்த்துக்கோங்க. திலீப், வருணோட வைஃப் காண்டேக்ட்டையும், வேற எதுவும் காண்டேக்ட் வருண்கிட்ட இருந்தாலும் கலெக்ட் செஞ்சிக்கோங்க" என்று கூறிவிட்டு பிரதாப் எழுந்து கொள்ள, வருணிடம் பேச்சைத் தொடர்ந்தான் திலீப்.
அன்றிரவு வீட்டை அடைந்த பிரதாப்பிற்கு அழைத்த அவனின் தாய் கோமளா நல விசாரிப்புகளுக்குப் பிறகு நைனிகா தன்னிடம் அவனைப் பற்றிப் புகார் அளித்ததைக் கூறி, அவளுக்காக நேரம் ஒதுக்கிப் பேசுமாறு அறிவுறுத்தினார்.
அவர் நைனிகா பேரை எடுத்ததும் தான் அவளின் நினைவே வந்தது அவனுக்கு. அவள் கூறிய கெமோமைல் டீ பேக்கை எடுத்துக் கோப்பையில் கலந்து கையில் எடுத்தவனாய் நைனிகாவிற்கு அழைத்துத் தேநீரைப் பருகியவாறே பேசியவன் மறுநாள் காலை கடற்கரையில் சந்திக்கலாம் என்று கூறி இணைப்பைத் துண்டித்தான்.
கேஸைப் பற்றிச் சிந்தித்தவாறே அறையைச் சுற்றிச் சுழல விட்டவனின் பார்வை அறையில் நடுநாயகமாகச் சுவற்றில் மாட்டியிருந்த கரும்பலகையில் வந்து நின்றது.
அந்தப் பலகையில் கேஸ் சம்பந்தமாக ஒட்டப்பட்டிருந்த புகைப்படங்களில் ஒரு படத்தை அவன் வட்டமிட்டு வைத்திருந்ததைப் பார்த்ததும் அவனின் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன.
சுந்தரியின் தற்கொலை செய்தியைக் கேட்ட அன்று குற்றம் நடந்த வீட்டிற்குச் சென்ற பிரதாப், வேலைக்காரி தேவகியை விசாரித்து விட்டு, அவ்வீட்டை அலசியவனின் பார்வை, இறந்த சுந்தரியின் மணிக்கட்டில் நரம்பு தெரியுமாறு இருந்த இரண்டு மூன்று வெட்டுகளை ஆராய்ந்து அதற்கு நேரே கீழே சிறு குட்டையாகி இருந்த ரத்தத்தில் சென்று நின்ற போது அவனது காலில் ஏதோ தட்டுப்பட்டது.
அதனைக் குனிந்து எடுத்த போது தான் சுந்தரி கணவனின் புகைப்படத்தைப் பார்த்து திலீப்பிடம் கண்களைக் காண்பித்தான் பிரதாப்.
கீழே குனிந்து எடுத்த பொருளை தனது பாக்கெட்டில் போட்டு வைத்தவன், சாரங்கனைத் தனியாகச் சந்தித்த போது, அதனைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு சாரங்கனிடம் கொடுத்தான்.
"என்ன சார் இது? ஏதோ பேப்பர் மாதிரி இருக்கு?" என்று சாரங்கன் கேட்க,
"ஆமா ஏதோ பாண்ட் பேப்பரைக் கிழிச்ச துண்டு பேப்பர் மாதிரி இருக்கு. சுந்தரி வீட்டுல இருந்து எடுத்தேன்" என்றவன், "இதுல எதுவும் பிங்கர் பிரிண்ட் தெரியுதானு பாருங்க" என்றான்.
'எப்படி இதை மறந்து போனோம்? இந்தப் பத்திரம் பேப்பரைப் பத்தி விசாரிக்கனும்' என்று சிந்தித்தவாறே தேநீரைப் பருகிக் கொண்டிருந்தவனின் வாயில் தேநீர் தட்டுப்படாமல் போகவும் தான் தேநீர் காலியானதை உணர்ந்தான். அடுத்தச் சில நிமிடங்களில் தேநீரின் பலனால் உறக்கம் கண்களைத் தழுவ, தன்னை மீறியே உறங்கியிருந்தான் பிரதாப்.
காலை நான்கு மணியளவில் எழுந்திருக்கும் போதே அத்தனை புத்துணர்வாய் உணர்ந்தான் பிரதாப்.
சுறுசுறுப்பான மனநிலையில் எழுந்தவன் காலை கடன்களை முடித்து விட்டு சுவற்றில் இருந்த கரும்பலகையின் முன்பு வந்து நின்றான்.
மூன்று மரணத்திற்கும் துப்பு துலக்கியதை ஒவ்வொரு கேஸ்ஸிற்குக் கீழும் பாயிண்ட் பாயிண்ட்டாய் வரிசையாய் எழுதிக் கொண்டு வந்தவன், மூன்றிலும் ஒத்துப் போகும் பாயிண்ட் ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்தான்.
முதல் கொலையிலும் மூன்றாம் கொலையிலும் ராமலிங்கம் சம்பந்தப்பட்டிருக்க, இரண்டாம் கொலையிலும் மூன்றாம் கொலையிலும் கைச்சங்கிலி சம்பந்தப்பட்டிருந்தது.
இன்று தடவியல் நிபுணரையும் உடற்கூறாய்வு செய்த மருத்துவரையும் சந்திக்க வேண்டுமெனக் குறித்துக் கொண்டவனாய் கிளம்பி நைனிகாவின் வீட்டிற்குச் சென்று அவளை அழைத்துக் கொண்டு கடற்கரைக்குச் சென்றிருந்தான்.
"பிரதாப்.. பிரதாப்" என்று அவனை அவள் உலுக்கவும் நிகழ்விற்கு வந்தவனாய்,
"ம்ப்ச் என்ன நைனி? எதுக்கு டிஸ்டர்ப் செய்ற?" என்று எரிச்சலுடன் கேட்டிருந்தான்.
"இவ்வளோ நேரமா காட்டுக் கத்தலா கத்திக் கூப்பிட்டும் திரும்பிப் பார்க்காம இருந்துட்டு, நான் டிஸ்டர்ப் செய்றேனா? நீங்க உங்க விசாரணை உலகத்துல இருக்கிறதுக்கு என்னை எதுக்குப் போலீஸ்கார் கூட்டிட்டு வந்தீங்க?" என்று கோபமாகக் கேட்டவள் எழுந்து நின்றாள்.
"வாங்க கிளம்புவோம். இதுக்கு மேல இங்கே இருந்தோம்னா கோபத்துல நான் ஏதாவது கத்தி விட்டுடுவேன்" என்று கோபத்தை அடக்கிய குரலில் பேசியவளை நிமிர்ந்து பார்த்துச் சமாதானமாய்ப் பேச முற்பட்ட சமயம், அவனின் அலைபேசி ஒலிக்க,
"பேசுங்க. பேசிட்டு வாங்க" என்றவள் கடலலையை நோக்கிச் சென்றாள்.
அலைபேசியைக் காதில் கொடுத்து பேசியவன், "சொல்லுங்க திலீப்" என்றதும், "ராமலிங்கம் இருக்கிற இடத்தைக் கண்டுபிடிச்சிட்டோம் சார். அவனை ஃபாலோ செய்ய கான்ஸ்டபுளை அனுப்பிருக்கேன்" என்றான்.
"அவனை ஸ்டேஷனுக்கு வரச் சொல்லுங்க திலீப்" என்று பிரதாப் சொல்லவும்,
"முன்னாடி கொலை கேஸ்லயே கூப்பிட்டதுக்கு வர மாட்டேன்னு தெனாவெட்டா சொன்னவன் சார். இப்ப அவன் மேல இருக்கச் சந்தேகத்தை ஊர்ஜிதம் செஞ்சிட்டு கூப்பிடலாமேனு நினைச்சேன்" என்று தயங்கியவாறே உரைத்தான் திலீப்.
"மை ஃபூட். அரசியல்வாதி ஆளுனா பெரிய ஆளா அவன். ஆல்ரெடி அவனைச் சஸ்பெக்ட் லிஸ்ட்ல போடுற அளவுக்குத் தான் போய்ட்டு இருக்கு விசாரணை. ஸ்டேஷனுக்கு வரச் சொல்லுங்க. வர மாட்டேன்னு சொன்னானா... வர வைப்போம்" வார்த்தையில் கனல் பறந்த போதும் முகத்தில் கனிவு படர நின்றிருந்தான் பிரதாப்.
"திலீப் இன்னிக்கு ஃபோரென்சிக் அண்ட் போஸ்ட் மார்டன் ரிப்போர்ட் வந்திடும் தானே! சாரங்கனையும் டாக்டர் வைஷ்ணவியையும் மீட் செய்ய ஏற்பாடு பண்ணுங்க" என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.
கைகளைக் கட்டிக் கொண்டு தூரத்து வானத்தை வெறித்தவாறு கால்களை வருடும் கடலலையின் ஸ்பரிசத்தையும் உணராது நின்றிருந்தவளின் அருகே வந்து நின்ற பிரதாப், "ப்ளீஸ் நைனி" என்று தொடங்கும் போதே, கோபத்துடன் அவனை முறைத்தவளாய், "வாழ்க்கை முழுசுக்கும் ப்ளீஸ் ப்ளீஸ்னு சொல்லியே என்னை ப்ளீஸ் செஞ்சிடலாம்னு நினைப்பா போலீஸ்கார்" என்றாள்.
"எனக்கு நாக்கும் வாக்கும் ஒன்னு தான் நைனி" அழுத்தமாய் உரைத்தவனைப் புரியாத பார்வை இவள் பார்க்க,
"நான் ஏற்கனவே சொல்லிருக்கேன். சமயம் வரும் போது சும்மா சொல்லாம நல்லாவே ப்ளீஸ் செய்வேன்னு" உல்லாசப் புன்னகையுடன் அவன் கூறவும், இவளின் முகம் குப்பெனச் சிவந்து போக உதடு வேறு சிரிக்க முற்பட, பற்களைக் கடித்துக் கொண்டு அடக்கியவளாய், 'நேரங்கெட்ட நேரத்துல இந்தச் சிரிப்பு வேற வந்து தொலையுது' என்று எண்ணியவாறு தலையிலேயே அடித்துக் கொண்டாள்.
"சிரிப்பு வந்தா சிரிக்கனும்ங்க டீச்சர். எப்பவும் டீச்சர் மாதிரி உர்ருனே உருட்டி மிரட்டிட்டு இருக்கக் கூடாது டீச்சர்" கேலிப் புன்னகையுடன் இவன் உரைக்கவும்,
"ஆஹா ஹா ஹா.. அப்படியே நான் மிரட்டினதும் நீங்க மிரண்டுடுவீங்க பாருங்க" என்றவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
இருவரின் பாதங்களையும் கடலலை நனைக்க, அவளின் கைகளைப் பற்றித் தன்னை நோக்கித் திருப்பியவன், "நான் உன் கூட ஸ்பெண்ட் செய்ற ஒவ்வொரு நொடியையும் என்ஜாய்ச் செய்யப் பழகிக்கோ நைனி" மென்மையான குரலில் உரைத்தான்.
"ஒரு நாளைக்கு ஒரு நொடி தான் போலீஸ்காரன் பொண்டாட்டிக்கு புருஷன் கூடப் பேசவே நேரம் கிடைக்கும்னு சொல்றீங்களா? அப்புறம் நாம எப்படிப் புள்ளையைப் பெத்து வளர்த்து?" என்று அவள் இழுக்க,
"அதெல்லாம் ஆல் ஏரியா ஐயா கில்லி டீச்சர்.. சேம்பிள் காட்டவா" கண் சிமிட்டி கேட்டவனாய் விளையாட்டாய் முத்தமிடுவது போல் அவளருகே இவன் செல்லவும், "ஆத்தி" என்று பதறி விலகி நின்றாள் நைனிகா.
அவளின் விலகலில் இவன் வாய்க்குள் சிரிக்க, "போதும் போதும் இதுக்கு மேல நாம ஒன்னா இருந்தா சரிப்பட்டு வராது. வாங்க கிளம்பலாம்" அவனின் கையை இழுத்துக் கொண்டு நடந்தவளாய் அவனின் வண்டியை நோக்கிச் சென்றாள்.
நைனிகாவை அவளின் வீட்டில் இறக்கி விட்டு அப்படியே அவன் கிளம்பப் பார்க்க, அவளின் பாட்டியோ, அவன் சாப்பிட்டுவிட்டு தான் போக வேண்டுமென அடம்பிடித்து அவனை வீட்டிற்குள் அழைத்துக் காலை உணவை உண்ண வைத்து விட்டே அனுப்பி வைத்தார்.
காலை பத்து மணியளவில் காவல்துறை அலுவலகத்தில் கேஸ் ஃபைலைப் பார்த்தவாறு பிரதாப் அமர்ந்திருக்க, அருகில் அமர்ந்திருந்த திலீப்பிடம், "ஃபைல்ல எல்லா டீடெய்ல்ஸூம் அப்டேட் செஞ்சிட்டீங்களா திலீப்" என்றவன், "முதல் கொலை நடந்த வீட்டையும் டெட் பாடியையும் முதல்ல பார்த்த ஆளு பைக் ஷோரூம்ல வேலை செய்றதா சொன்னீங்களே? அவர்க்கிட்ட விசாரிச்சதுல பெரிசா எதுவும் துப்பு கிடைக்கலை போலயே" கோப்பை பார்வையிட்டவாறு கேட்டான்.
"ஆமா சார்" என்று திலீப் கூறவும், "அங்கே அக்கம் பக்கத்து வீட்டுல சிசிடிவி ஃபுட்டேஜ் எதுவும் கிடைக்குதானு பார்த்தீங்களா? அதைப் பத்தி எதுவும் ஃபைல்ல இல்லையே" எனக் கேட்டான்.
"இல்ல சார். அதெல்லாம் பார்க்கலை" திலீப் தயங்கியவாறு உரைக்க,
"கொலை நடந்து ஒரு மாசம் ஆகுது. இன்னும் சிசிடிவி ஃபுட்டேஜ் பார்க்கலை. திருட்டுக்காக நடந்த கொலைனு கேஸ்ஸை க்ளோஸ் செய்யவும் எவிடன்ஸ் ஏதாவது வேணும் தானே திலீப்" என்று சற்று காரமாய் இவன் கேட்டிருக்கும் போதே,
அறைக்குள் வர அனுமதிப் பெற்றவனாய் உள்ளே வந்த எஸ் ஐ சிவராம் விரைப்பாய் சல்யூட் வைத்தவனாய், "சார் ரோஷன் போட்டிருக்கப் பிரேஸ்லெட், கொலை நடந்த பிறகு இப்ப ரீசண்ட்டா வாங்கினது சார்" என்றவனாய் நகைக்கடையின் பில் காபியைக் கொடுத்தான்.
"ஹ்ம்ம் நைஸ்" என்றவனாய் அந்தப் பில் காபியை வாங்கிப் பார்த்தான் பிரதாப்.
சிவராம் விடைப்பெற்றுச் செல்ல, ராஜசேகர் இவனைப் பார்க்க வந்திருப்பதாய் வந்து உரைத்து விட்டுச் சென்றார் ஒரு காவலர்.
உள்ளே வந்த ராஜசேகரை அமர பணித்தவன் அவனளித்த கைச் சங்கிலியை 360 டிகிரி கோணத்தில் போட்டோ எடுத்தவாறே, "ராஜசேகர், உங்களுக்கு ரெண்டாவது கல்யாணம் ஆகிடுச்சு தானே" எனக் கேட்டான்.
"ஆமாம் சார்" என்றவன் சொன்னதும், "அப்புறம் ஏன் உங்க முதல் மனைவியை வேவு பார்க்க ஆள் அனுப்பிச்சீங்க?" எனக் கேட்டான்.
ராஜசேரின் முகம் பதட்டமாக, கண்களை மட்டும் நிமிர்த்தி அவனை ஒரு பார்வைப் பார்த்து விட்டு போட்டோ எடுப்பதில் கவனம் செல்லுத்திய பிரதாப், "முதல் மனைவி மேல அவ்ளோ காதலோ?" எனக் கேட்டான்.
"ஆ.. ஆமா.. ஆமா சார். என்னைத் தவிர வேற யார்கிட்ட அவ பேசினாலும் எனக்கு ஒரு மாதிரி பொசசிவ் ஆகிடும் சார். அதனால் தான் நாங்க பிரிஞ்சதே சார். நான் அவளை ரொம்பக் கன்ட்ரோல் செய்றதா சொல்லி தான் டிவோர்ஸ் கேட்டு வாங்கிட்டா சார்" என்று வேதனையான குரலில் கூறினான்.
"ஓஹோ உங்க பொசசிவ் குணத்தால தான் வேவு பார்க்க ஆள் அனுப்புனீங்களா? டிவோர்ஸ் வாங்கின பிறகு அவங்களை அப்படி ஃபாலோ செய்ய ஆள் அனுப்புறது கிரைம்னு தெரியுமா? அதுக்காகக் கூட உங்களை நாங்க அரெஸ்ட் செய்யலாம்" கடுமையான குரலில் பிரதாப் சொன்னதும் இவனின் உள்ளம் நடுங்குவது முகத்தில் அப்பியிருந்த பயத்தில் தெரிய,
"சார் நாகேந்திரன் மூலமா அடிக்கடி அந்த வீட்டுக்கு ராமலிங்கம்னு யாரோ வந்துட்டுப் போறதா கேள்விப்பட்டேன் சார். நான் ராமலிங்கத்தைப் பத்தி விசாரிச்சதுல அவன் பேக் ரவுண்ட் சரியில்ல. பொம்பிளை விஷயத்துலயும் அவன் நல்லவன் இல்லனு தெரிஞ்சிது சார். அவனால என்னோட பொண்ணுக்கு எதுவும் பிரச்சினை வந்துடக் கூடாதுனு தான் வேவு பார்க்க ஆள் வச்சேன் சார். அப்பாவா ஒருத்தன் தன்னோட பொண்ணோட சேப்டியை கவனிச்சிக்கிறது தப்பா சார்" என்றான்.
நிமிர்ந்து அமர்ந்து ராஜசேகரனைக் கூரிய விழிகளால் ஆராய்ந்தவன், "ராமலிங்கம் பத்தி வேற என்ன விஷயங்கள் உங்களுக்குத் தெரியும்?" எனக் கேட்டான்.
"ராமலிங்கம் ஒரு தடவை சுந்தரிகிட்ட அந்த வீட்டை எழுதித் தரச் சொல்லிக் கேட்டதா கேள்விப்பட்டேன் சார். அது நான் ஜீவனாம்சமா சுந்தரிக்குக் கொடுத்த வீடு சார்" என்றான்.
உடனே சட்டென அன்று அவனது காலில் தட்டுப்பட்ட அந்தப் பத்திரப் பேப்பரின் நினைவு வந்தது பிரதாப்பிற்கு.
கர்வப் பார்வையும் வெற்றிப் புன்னகையுமாய் மீசையைத் திருகியவன், 'புலி வசமா சிக்கிடுச்சு' என்று மனத்தில் நினைத்துக் கொண்டான்.
அதன் பிறகு சில நொடிகள் பிரேஸ்லெட்டை ஆராய்ந்தவாறு யோசனையுடன் அமர்ந்திருந்த பிரதாப் அதை ராஜசேகரிடம் கொடுத்தவனாய், "சரி நீங்க போகலாம் ராஜசேகர்" என்று அவனை அனுப்பியதும்,
"இந்தாளு முன்னுக்குப் பின் முரணா பேசுறான்ல சார்" என்றான் திலீப்.
"இவனை ஃபாலோ செய்ய ஏற்பாடு செய்யச் சொன்னேனே என்னாச்சு?" எனக் கேட்டான் பிரதாப்.
"இவனையும் நாகேந்திரனையும் ஃபாலோ செய்ய இரண்டு கான்ஸ்டபுளை அரேஞ்ச் செஞ்சிட்டேன். இன்னிக்கு நைட் வந்து ரிப்போர்ட் செய்யச் சொல்லிருக்கேன் சார்" என்ற போது திலீப்பின் அலைபேசி அலறவும், "எக்ஸ்க்யூஸ் மீ" என்றவன் அழைப்பை ஏற்றவனாய் வெளியே சென்றான்.
பிரதாப் பார்வையைக் கோப்பில் பதித்திருக்க, பரபரப்புடன் உள்ளே வந்த திலீப், "சார் இரண்டு முக்கியமான அப்டேட் கிடைச்சிருக்கு" என்று படபடப்புடன் உரைத்தான்.
"யெஸ் திலீப்" என்றவன் நிமிர்ந்து அவனைப் பார்க்க,
"சுந்தரியோட போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்ல அது கொலை தான்னு கன்பார்ம் செஞ்சிருக்காங்க" என்றவன் சொன்னதும் இவனின் இதழில் முறுவல் வந்து போக,
"நெக்ஸ்ட்"
"செகண்ட் விக்டிம் பொண்ணு காருண்யா, அவங்க ஹஸ்பெண்ட் ரோஷன் ரெண்டு பேரோட ஃபோன் ரெக்கார்ட்ஸ் செக் பண்ணதுல கொலை நடந்த நேரத்துல ரோஷனோட மொபைல் நெட்ஒர்க் கொலை நடந்த டவர்ல காட்டுது சார்" என்றான்.
***
கருத்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் மக்களே...
இதுவரை 2 சரியான பதில்கள் வந்துள்ளன.
எழுத்தாளர் பெயர் தப்பா சொன்ன எபிசோடில் திரும்ப பதில் சொல்லலாமா என ஒரு வாசகர் கேட்டார்.
சரியான பதில் அந்த அத்தியாயத்திற்கு சொல்லாத பட்சத்தில் திரும்ப சொல்ல வாய்ப்பு உண்டு. (நானே குறிப்பிட்டு விடும் அத்தியாயத்திற்கு)
மீண்டும் நீங்கள் சொல்லும் பதில் சரியானதாக இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படும்.
முதல் அத்தியாயத்திற்கும், ஐந்தாவது அத்தியாயத்திற்கும் மட்டும் சரியான பதில் இதுவரை வந்துள்ளது. மற்ற அத்தியாயத்திற்கு உங்கள் பதிலை மீண்டும் சொல்லலாம்.
அதோடு இந்த அத்தியாயம் எழுதிய எழுத்தாளர் யாராக இருக்கும்? உங்கள் கணிப்பையும், அத்தியாயம் பற்றிய உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Previous thread
Next thread