- Joined
- Sep 16, 2024
- Messages
- 746
- Reaction score
- 4,462
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம்: 7
View attachment 670
விசாரணைக்காக வந்திருந்த காருண்யாவும், ரோஷனும் நட்சத்திர விடுதி ஒன்றில் அறையெடுத்துத் தங்கியிருந்தனர். இப்பொழுது அதன் உணவகத்தில் இருக்கின்றனர். ரோஷன் வேண்டியதை வாங்கி மேஜையையும், வயிற்றையும் நிரப்ப, காருண்யா எதையும் தொட்டுப் பார்க்காது சற்றுக் குழப்பத்துடன் அமர்ந்திருந்தாள்.
“சாப்பிடு ஹனி.”
“புது பிரேஸ்லேட் வாங்கினதை ஏன் எங்கிட்டச் சொல்லலை?” என்றாள் காட்டமாக.
“அது இப்பப் பிரச்சினையா?”
“அந்தப் போலீஸ்காரர் கரெக்டா நோட் பண்ணிக் கேள்வி கேக்குறானே! அப்ப அது பிரச்சினை தான்.”
“அதெல்லாம் ஒன்னுமில்லை. நீ தான் பதில் சொல்லிட்டியே!”
“சட்டுன்னு பொய் சொல்ல வரலை. ஆனா நம்பின மாதிரித் தெரியலை. பழைய பிரேஸ்லேட் எங்க?”
“தெரியலை.”
“என்ன, தெரியலையா? அது எங்கப்பாவோட ஸ்பெஷல் பிரேஸ்லேட். கொடுக்க மாட்டேன்னு சொன்னவர் கிட்டயிருந்து, உங்க ஞாபகார்த்தமா இதையாவது தாங்கன்னு கெஞ்சி வாங்கிட்டு வந்தது.”
“பரவாயில்லை, உங்கப்பா இதையாவது தந்தானே? மாமனார் தந்த ஒரே பரிசுன்னு நினைச்சுக்கிறேன்.”
“ஏன் சொல்ல மாட்ட. எங்கப்பா என் கல்யாணத்துக்குன்னு சேர்த்து வச்ச 60 சவரன் நகையைத் தூக்கிட்டு வந்ததுக்கு அப்புறம் தான், நீ என்னைக் கல்யாணமே பண்ண... அது மொத்ததையும் வித்துச் சூதாடுனது தெரிஞ்சி உன்ன அடிச்சித் துரத்தி விட்டாரு எங்கப்பா.” என்றாள் காருண்யா.
“அதான் திரும்பக் குடும்பமா சேர்ந்திட, ரிட்டயர்மெண்ட் விழாவுக்கு ஏற்பாடு பண்ணேன்.” என ரோஷன் அலட்சியமாகக் கூறினான்.
“அப்பயும் சும்மா இருந்தியா! அவரோட ரிட்டயர்மெண்ட் அமௌண்ட கேட்டுச் சண்டை போட்ட…”
“நான் என்ன பண்ண? பணம் தேவைப்படுது. பிஸினஸ்ல கொஞ்சம் லாஸாகிப் போச்சி.”
“என்ன பிஸினஸ்? அந்தச் சூதாட்ட க்ளப் தானே? ச்சே… எல்லாம் உன்னால வந்தது. அப்பாவாச்சும் பொண்ணுக்காக அதைத் தந்திருக்கலாம். மாட்டேன்னு சொல்லி… அதுக்காகச் சண்டை போடாம இருந்திருந்தா, நாம இப்படிப் பண்ணிருக்கவே மாட்டோம். அந்தப் பழைய பிரேஸ்லெட்னால போலீஸ்கிட்ட மாட்டிக்குவோமோன்னு தோணுது. எங்க அதை மிஸ் பண்ணின நீ…”
“கூல்… கூல்… ஹனி, பார்த்துக்கலாம். பிரேஸ்லேட் என்ன பெரிய விசயமா! அது மாதிரிக் கடைல ஆயிரம் இருக்கு. நீ நேத்து பேங்க் போனியே என்னாச்சு? மேனேஜர் என்ன சொன்னான்? காசு எப்ப வருமாம்?”
“VAO ஆபிஸ்ல இருந்து வாரிசுச் சான்றிதழ் வாங்கிட்டு வரச் சொன்னான். அப்ளை பண்ணி வர்றதுக்கு ஒரு மாசம் ஆகுமாம்.”
“லஞ்சம் கொடுத்துச் சீக்கிரமா வர்ற மாதிரி ஏற்பாடு பண்ணிடு.”
“அதைத்தான் செஞ்சிட்டு வந்திருக்கேன். அதைக் கொடுத்திட்டுப் பணத்தை ட்ரான்ஸ்பர் பண்ணிட்டா இனி இந்தப் பக்கமே வரவேண்டியது இல்ல.”
“அதெப்படி வராம இருக்க முடியும்? அந்த வீடு இருக்கே ஹனி… அதுவும் உங்கப்பா அம்மா பேர்ல தான் இருக்கு. அதை நம்ம பேருக்கு மாத்தி வித்துடலாம். சென்னைல ஒரு க்ரவுண்ட் என்ன ரேட் தெரியுமா? வீட்ட வித்திட்டு லைஃப்ல செட்டிலாகிடுவோம். ஏற்கெனவே ராமலிங்கம்னு ஒருத்தன் நேத்து எனக்குக் கால் பண்ணி நல்ல ரேட்டு தர்றதா சொன்னான். டீல் பேசி முடிச்சிடுவோம். வர்ற லட்சுமியை வேண்டாம்னு சொல்லக் கூடாது.” என்று சுற்றம் மறந்து பேசிக் கொண்டிருக்கும் போதே, இவ்வளவு நேரமாக அவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த உருவம் அதை ஒலி-ஒளியென இரு வடிவிலும் பதிவு செய்து கொண்டிருந்ததைக் கவனிக்கத் தவறி விட்டனர்.
***
பிரதாப்பின் கண்கள் திரையில் ஓடிக் கொண்டிருந்த சிசிடிவி பதிவுகளின் அசைவுகளுக்கு ஏற்றார் போல் மெல்லிய அசைவுடன் உருண்டு கொண்டிருந்தன. கூர்ந்து கவனிக்கிறான் என்பதைச் சுருங்கிய நிலையில் இருக்கும் அவனின் கதிராளியே சொல்லும்.
அவை, முதல் கொலை நடந்த செல்வநாயகம்-வசுமதி தம்பதியரின் வீட்டைச் சுற்றி உள்ள சிசிடிவி பதிவுகள். செல்வநாயகம் வீட்டைச் சுற்றி மூன்று சிசிடிவிகளின் காட்சிகள் கிடைக்கப் பெற்றன. அதில் இரண்டு குடியிருப்பு வீடுகளிலிருந்து பெறப்பட்டன. இரண்டு வீடுகளிலுமே செல்வநாயகத்தின் வீட்டின் பின் பகுதியும், பக்கவாட்டுப் பகுதியும் மட்டுமே தெரிந்தது. அங்கே வந்து செல்பவர்கள் யார் யார் என்று சொல்லும் வண்ணம், வாசல் தெரியும் படியான காட்சிகள் கிடைக்கப் பெறவில்லை.
மற்றொரு பதிவு, ஒரு பல்பொருள் அங்காடியின் வாயிலிலிருந்து கிடைக்கப் பெற்றது.
இதுவரை ஆராயாது இருந்த அதை இன்று காலை பிரதாப் கடிந்து கொண்டதன் காரணமாக, திலீப் இன்றே அதைப் பார்க்க உத்தரவிட்டிருந்தான். அத்தோடு, காருண்யாவின் பெற்றோர்களான மதன கோபால்-காயத்ரி தம்பதியரின் வழக்கில் கிடைத்த பதிவுகளையும் ஆராய உத்தரவிட்டிருந்தான். சந்தேகிக்கும்படி ஏதேனும் இருந்தால் அழைக்குமாறு சொல்லிச் சென்றான்.
வேலையை முடித்து விட்டு வீடு செல்ல இருந்த நேரம், நாகேந்திரனையும், ராஜசேகரையும் கண்காணிக்கச் சொல்லிப் பணித்த காவலர்கள் தங்களின் ரிப்போர்ட்டைக் கொண்டு வந்து நீட்டினர். அதை வாசித்த வண்ணம் இருந்தவனின் பார்வை ராஜசேகர் பற்றிக் கொடுத்த ரிப்போர்ட்டில் அழுத்தமாகப் படிந்தது. அதில் உள்ள சில வார்த்தைகளைப் பேனாவால் வட்டம் வேறு போட்டு வைத்தான். பின்,
“திலீப், நாளைக்கு ரோஷனையும் காருண்யாவையும் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லிடுங்க. தனித் தனியாக நான் அவங்ககிட்ட இன்வெஸ்டிகேட் பண்ணணும்.”
“ஓகே சார். அப்புறம் செல்வநாயகம் வீட்டுல வேலை பார்த்த காமாட்சி கிட்ட ஃபோன்ல விசாரணைக்கு வரச் சொல்லிப் பேசியாச்சு சார். வர்றதா கன்பார்ம் பண்ணிருக்காங்க. அப்புறம் ராமலிங்கத்தை விசாரணைக்குக் கூப்பிடப் போன கான்ஸ்டபிள்ஸை கவுன்சிலர் ஆளுங்க மிரட்டி விரட்டி விட்டிருக்காங்க.” என்க, பிரதாப்பிற்குள் சுள்ளென்று கோபம் உண்டானது. அப்பொழுது அறைக் கதவைத் தட்டினான் சிவா.
உள்ளே வந்தவன், “சார், லீட் கிடைச்சிருக்கு.” என்றதும் இருவரும் சென்று பார்த்தனர்.
பிரதாப், “என்ன லீட் சிவா?” என்றபடி அவன் உடன் நடந்தான்.
“சார், ரெண்டு வீட்டுல இருந்து எடுத்த ஃபுட்டேஜ்ல முக்கியமாக எதுவும் கிடைக்கலை. காரணம் வீட்டோட பேக் சைடும், லெஃப்ட் சைடும் மட்டும் தான் கவராகியிருக்கு. ஆனால் அந்த ஏரியா சூப்பர் மார்க்கெட்ல இருக்குற கேமரால, நமக்கு உபயோகமான நிறைய விசயம் பதிவாகியிருக்கு சார்.” என்றவன் அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு பல்பொருள் அங்காடியின் பதிவுகளைப் போட்டுக் காட்டினான்.
“இது ஒன்னு தான் இந்தப் பகுதில இருக்குற ஒரே சூப்பர் மார்க்கெட் சார். விக்டிம் வீட்டுக்கு ரொம்பப் பக்கத்துலயும் இருக்கு. செல்வநாயகம், தினமும் காலைல ஆறு மணிக்கெல்லாம் இந்தக் கடை வழியாக வாக்கிங் போறதும், திரும்பி வரும்போது இந்தக் கடைல திங்ஸ் வாங்கிட்டுப் போறதும் பதிவாகி இருக்கு. அவர் இறந்து போன நாள் தவிர்த்துத் தவறாமல் இது ரிப்பீட் மோடுல நடந்திருக்கு சார்.”
“இது தான் லீடா சிவா!” என்ற திலீப்பிற்கு ஆயாசமாக வந்தது. கமிஷனர் கொடுத்த கெடு முடிய ஐந்து தினங்களே உள்ளன. அதற்குள் குற்றவாளியைப் பிடித்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் நெருங்கினால் கூடப் போதும். ஆனால், இன்று வரை யார் கொலையாளி என்பதற்கு எந்தத் துப்பும் கிடைக்கவில்லையே என்ற அயர்வு அவனிடம் இருந்தது.
ஆனால், பிராதாப்பிடம் இல்லை போலும். சாந்தமாக, நிதானமாக அதே நேரம் கூர் தீட்டிய கண்களால் அனைத்தையும் உள் வாங்கிக் கொண்டு, ‘எதையும் முடிக்க முடியும்.’ என்ற உறுதியுடன் நின்றான்.
“இதுதான் சார் நான் சொன்ன லீட்.” என்று ஒரு சில காட்சிகளை ஓட்டிக் காட்டினான் சிவா.
முதல் காட்சியில், பொருள்களை வாங்கிக் கொண்டு திரும்பும் செல்வநாயகத்திடம் ராமலிங்கம் எதுவோ பேசுவது போல் பதிவாகியிருந்தது. அதில் ராமலிங்கத்துடன் சிரித்துப் பேசியபடியே அவர் நடந்து செல்கிறார்.
அடுத்த காட்சியும் அதே போல் தான் இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த காட்சியில் சற்றுக் கோபமாக ராமலிங்கத்தைத் திட்டி விட்டுச் செல்கிறார் செல்வநாயகம்.
இதுவரை இருவர் மட்டுமே இருந்த நிலையில் அடுத்த காட்சியில் ராமலிங்கம் உட்பட மூன்று பேர் இருந்தனர். அதில் ஒரு வெள்ளை வேட்டி அணிந்த நபரும் அடக்கம்.
அந்த வெள்ளை வேட்டி செல்வநாயகத்திடம் எதுவோ சொல்ல, இவரும் மறுத்து மறுமொழி சொல்ல, அங்குக் காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. ஒரு கட்டத்தில், ஆவேசமாக ராமலிங்கம் செல்வநாயகத்தின் சட்டையைப் பிடிக்கும் காட்சியும் இருந்தது.
அதைக் கண்ட பிரதாப்பின் முகத்தில் சிறு புன்னகை. கர்வம் என்று கூடச் சொல்லலாம். ஏனெனில், இதுவரை ராமலிங்கத்தை நேரடியாக விசாரணை வளையத்திற்குள் இழுக்கும் படியான புகார்கள், சாட்சியங்கள் இல்லை. சந்தேகங்கள் மட்டுமே இருந்தன.
அன்று விசாரணை நடத்திய போதே வருணிடம் ராமலிங்கத்தின் மீது கம்ளைண்ட் ஒன்றை மின்னஞ்சல் அனுப்பும்படி கூறியிருந்தான். அது இன்று மாலை தான் வந்து சேர்ந்திருந்தது. இப்பொழுது இந்தக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பிடிவாரண்ட் வாங்கி போலீஸ் கஸ்டடிக்குக் கொண்டு வந்து விசாரிக்க முடியும். முரண்டு பிடித்தால் கைது கூடச் செய்து இழுத்து வரலாம். கூடவே கவுன்சிலரையும் தூக்கிக் கொண்டு வரலாம்.
“இது எப்ப நடந்தது?”
”இந்த இன்சிடென்ட் கொலை நடக்குறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி பதிவானது சார்.”
“குட் ஜாப் சிவா.” எனப் பாராட்டியவன்,
“இன்னைக்கி நமக்குக் கிடைத்த மூனாவது குட் நியூஸ் இது. நைஸ் கோயிங். கீப் இட் அப் கைஸ்” என்று தன் சக ஊழியர்களை உற்சாகமூட்டியவன்,
“கொலை நடந்த அன்னைக்கு, அதாவது ஈவ்னிங் ஆறு முப்பதுல இருந்து நடந்ததைக் கொஞ்சம் ப்ளே பண்ணுங்க.” என்று நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டான்.
அது வெளிச்சம் மங்கத் தொடங்கும் நேரமென்பதால் ஆள்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தன. ஊதக்காற்றுடன் மேகங்கள் திறளத் தொடங்கி, வெளிச்சத்தை ஓரம் கட்டியதால், ஏழு மணிக்கு மேல் மெல்லக் குறையத் தொடங்கிய நடமாட்டம், அடுத்த சில நிமிடங்களிலேயே யாருமற்ற சாலையாக வெறிச்சோடிப் போனது. ஏழு இருபத்து ஐந்திற்குக் கருப்பு கோர்ட் அணிந்து ஓர் உருவம் நிதானமாக, எவ்விதப் பதட்டமும், படபடப்புமின்றி சர்வசாதாரணமாக நடந்து சென்றதைக் காட்டியது.
“சார்! இது சுந்தரி கேஸ்ல நமக்குக் கிடைத்த ஃபுட்டேஜ்ல இருக்குற ஆள் மாதிரியே இருக்கு. தேவகி அதை ராமலிங்கம்னு சொன்னாங்க. அப்ப… இதுவும்…”
“வாய்ப்பிருக்கு திலீப். ஆனால் நாம இன்னும் சுந்தரி கேஸ்லயே அது ராமலிங்கம்னு கன்பார்ம் பண்ணலையே. பண்ணனும்னா ராமலிங்கத்தைத் தான் விசாரிக்கணும்.” என்று பொருள் பொதிந்த பார்வையுடன் தலை அசைக்க, திலீப்பும் அசைத்தான்.
“மதன கோபால் வீட்டச் சுத்திக் கிடைச்ச ஃபுட்டேஜைப் பார்த்துட்டீங்களா?”
“பார்த்திட்டே இருக்கோம் சார்.”
“குட்… அதையும் சீக்கிரமாக முடிச்சிடுங்க. அப்புறம் ரெண்டாவது சிசிடிவில செல்வநாயகம் வீட்டோட ஜன்னல் ஒன்னு கவரான மாதிரி இருக்குன்னு சொன்னீங்களே, அதையும் கொஞ்சம் கவனமாகப் பாருங்க. சின்னச் சின்ன விசயமாக இருந்தாலும் அதை நோட் பண்ணி வையுங்க.” என்றவன்,
திலீப்பிடம், “நாளைக்குக் காலைல முதல் வேலையாக நாம சாரங்கனைப் பார்க்கணும் திலீப்.” என்று விட்டுப் புறப்பட்டுச் சென்றான்.
மறுநாள் காலையில் தலை துவட்டியவாறே, பலகையின் முன் வந்து நின்றவன், கால்சட்டை அணிந்து கொண்டே வரிசையாக எழுதி வைத்திருந்தவற்றைப் பார்வையிட்டு விட்டு, சிறு புருவ முடிச்சுடன் மார்க்கரை எடுத்தான். இதுவரை எழுதி வைத்திருந்த தகவல்களுக்கு மத்தியில் 'black coat' என்று எழுதி வட்டமிட்டு வைத்தான்.
‘ரெண்டு கேஸ்லயும் இருக்குற காமனான விசயம் ராமலிங்கமும், இந்தக் கருப்புக்கலர் கோட்டும் தான். ரெண்டுமே ஒரே ஆளா? இல்ல வேற வேறயா?’ என்று சிந்தனைகள் சென்று கொண்டிருந்தபோது அவனின் வீட்டு அழைப்பு மணி, ஓசை எழுப்பிக் கலைத்து விட்டது.
அணிந்து கொண்டிருந்த காக்கிச் சட்டையின் பட்டனை மாட்டியவாறே சென்று கதவைத் திறந்தபோது நைனிகா நின்றிருந்தாள்.
ஆகாய வண்ணப் புடவையில், இன்று பூத்த சங்குப் பூவைப் போல் பொலிவுடன் காணப்பட்டவளின் கையில் பெரிய கூடை ஒன்று இருந்தது.
"குட் மார்னிங் போலீஸ்கார்." எனப் புன்னகையுடன் அவன் அணிந்திருந்த காக்கி உடைக்கு ஒரு சல்யூட் அடிக்க, பிரதாப்பின் இறுகிய இதழ்கள் விரிந்தன.
"குட் மார்னிங் டீச்சர், என்ன இந்தப் பக்கம்?"
"ஏன்னு காரணத்தைச் சொல்லிட்டா, வாசல்ல வச்சே பேசி அனுப்பிடப் போறிங்களா…" என்றவளுக்குப் பாதையை விட்டவன்,
"ப்ளீஸ்…" என்று கரம் விரித்து வரவேற்றான்.
'இப்பயும் அதே ப்ளீஸ்! எல்லாத்துக்கும் இதை மட்டும் தான் யூஸ் பண்ணுவார் போல. ஹும்…’ என இதழ் கோணி முணுமுணுத்துக் கொண்டே உள்ளே வந்தாள்.
தலையைச் சுழற்றி வீட்டை அளந்து கொண்டிருந்தவளிடம், “நைனி, நீ இங்க வந்திருக்குறது உன்னோட வீட்டுக்குத் தெரியுமா?”
அவனைத் திரும்பிப் பார்த்தவள், “எங்க வீட்டுக்கு மட்டுமில்ல போலீஸ்கார், உங்க அப்பா அம்மாட்டயும் அனுமதி கேட்டுட்டுத் தான் வந்தேன். நம்ம கல்யாணம் நடக்க இன்னும் நாலு மாசம் தான் இருக்கு.” என்றுவிட்டு வேக நடையுடன் உணவு மேஜையை நோக்கி நடந்தாள்.
“நாலு மாசமா!” என வியந்தவன், “டீச்சர், உங்க கணக்குத் தப்பா இருக்கு.” என்றபடி அவளைத் தொடர்ந்து வந்தான்.
“நான் இயற்பியல் டீச்சர். நான் போடுற கணக்கு சாதாரணமான ஆளுங்களுக்குப் புரியாது.” என்று திரும்பி அவனைப் பார்த்துச் சொன்னவள்,
“ஒரு காபி சாப்பிட ரெஸ்டாரன்ட்டுக்குப் போனால், ஃபோன் கால் வந்திடுது. சரி, பீச்ல உக்காந்து கொஞ்சம் பேசி ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சிக்கலாம்னா, அப்பயும் ஃபோன் கால். சரி நைட் நான் கால் பண்ணா, பிஸி. எப்பத்தான் நாம பழகுறது? அதான் இன்னைக்கி எல்லாத்தையும் ஒன்னா முடிச்சுடலாம்னு வந்திருக்கேன். வாங்க…” என்று புன்னகையுடன் கொண்டு வந்த கூடையைப் பிரித்துக் கேரியரைப் பரத்தி, தண்ணீர், தட்டு உள்ளிட்டவற்றை எடுத்து வைத்து நாற்காலியை இழுத்துப் போட்டாள்.
அவன் வந்து அமர்ந்ததும், “என்ன கிச்சன்ல ஒன்னு ரெண்டு ஜாமானைத் தவிர வேற எதுவுமில்லை?”
“நான் மட்டும் தான நைனி. அதுனால சிம்பிளாகச் சமையலை முடிச்சிடுவேன்.” என்றவனை இடையில் கரம் வைத்துக் கொண்டு முறைத்தவள்,
“அந்த ரெண்டு மூணு பாத்திரத்தை வச்சி அப்படி என்ன சமைப்பீங்க போலீஸ்கார்?”
“தோசை, ப்ரெட், ஆம்ப்லேட்…” என்றவன்,
“காலேஜ் படிக்கன்னு அப்பா அம்மாவை விட்டுத் தூரமாக வந்ததுல இருந்து, காலைல இது மாதிரிதான் சாப்பிடுவேன். லன்ச்சும் டின்னரும், ஃப்ரெண்ட்ஸோட, இல்லைன்னா கொலீக்ஸோட சேர்ந்து முடிச்சுப்பேன். சம் டைம் நானே கூடச் சமைப்பேன். பிரியாணி, வெஜிடபிள் ரைஸ் மாதிரி.”
“பாவம் தான் போலீஸ்கார் நீங்க… நல்ல சாப்பாட்டைச் சுட்டுக் கொன்னுட்டு தான் தோள்ல மெடல் வாங்கிக் குத்திருக்கீங்க போல.” எனப் பரிதாபப்பட,
“நிஜம்மா, நான் நல்லா சமைப்பேன் நைனி. இப்பக் கூட உனக்காக…” என அவன் எழும் முன் கரம் பற்றித் தடுத்தவள்,
“வேண்டாம்… வேண்டாம்... இங்க நடக்குறதை அத்தை அப்டேட் பண்ணச் சொல்லிருக்காங்க. உங்களைச் சமைக்க விட்டு, நான் சாப்பிட்டேன்னு சொன்னா அவ்ளோ தான். கல்யாணத்துக்கு முன்னாடியே என் பையனை வேலை வாங்குறியான்னு சண்டைக்கு வந்திடுவாங்க. எனக்குச் சண்டை போடுறதெல்லாம் பிடிக்காது.” என்க, அவன் புன்னகையுடன்,
“சண்டை போடுறது பிடிக்காதா! ஏன் டீச்சர் பொய் சொல்றீங்க? ரெண்டு நாளுக்கு முன்னாடி கூடப் பஸ்ல வச்சி சண்டை போட்டிங்களாமே. போலீஸ் கம்ளைண்ட் கூடக் குடுத்ததா அத்தை சொன்னாங்க.” என்றதும் மலர்ந்திருந்த முகம் வாடியது போலானது.
“என்னாச்சு நைனி, எனி திங்க் சீரியஸ்.”
“எஸ்… அது சீரியஸ் தான்.” என்றதும் “என்ன நடந்தது?” என்றான் காவலனாக.
“இன்டர்வியூ முடிச்சிட்டுப் பஸ்ல வீட்டுக்கு வந்திட்டு இருந்தேன். கூட்டம் அதிகமாத்தான் இருந்தது. அப்ப மூணு பேர் உக்காருற சீட்ல, ஜன்னல் பக்கம் ஒரு கிழட்டு நாய் உக்கார்ந்திருந்தது. ஆள் இறங்கவும் என்னைப் பாத்து ‘வாம்மா! வந்து உக்கார்ந்துக்க.’ ன்னு சொன்னான். அப்பப் பத்து வயசுப் பையனோட, கைல ஒரு குழந்தைய வச்சிட்டு ஒரு அம்மா ஏறுனாங்க. நான் அவங்களை உக்காரச் சொன்னேன். பையனை அந்தக் கிழவன் பக்கத்துல உக்கார வச்சிட்டு, அடுத்து உக்கார்ந்தாங்க.
அந்தக் கிழட்டுக் கபோதி, அந்தப் பையன் கிட்டயும் அந்தம்மா கிட்டயும் பேசிட்டே வந்தான். அதுவும் அந்தச் சின்னப் பையன் தொடைல தட்டித் தட்டி. கொஞ்ச தூரம் போனதும் பையன் அம்மாமேல் சாஞ்சு தூங்கிட்டான். ஆனாலும், அந்தாளு தொடைல வச்ச கையை எடுக்கலை. அதைக் கொஞ்சம் கொஞ்சமா நகர்த்திப் பையனோட… அங்க வரைக்கும் கொண்டுட்டுப் போயிட்டான். கூடவே அவனோட வேட்டிக் குள்ளயும்… சொல்லவே அருவறுப்பாக இருக்குது பிரதாப். என்னால பார்த்திட்டுச் சும்மா இருக்க முடியலை. ஆம்பளை, அதுவும் வயசானவன்னு தான் பையனைப் பக்கத்துல உக்கார வச்சாங்க. அந்தச் சின்னப் பையனையும், பாலியல் ரீதியாகச் சீண்டுவானா?
முதல்ல பொண்ணுங்களுக்குத் தான் இந்த மாறி டார்ச்சர் கொடுத்திட்டு வந்தானுங்க. அடுத்து வயசுக்கு வராத பொம்பளப் பிள்ளைகள்ல ஆரம்பிச்சு, பிறந்த குழந்தையைக் கூட விட்டு வைக்காமல் சித்திரவதை பண்ணானுங்க. இப்ப ஆம்பளைப் பசங்களையும் விட்டு வைக்காமல்… ச்சீ…” எனக் குரல் வராது சில கெட்ட வார்த்தைகளை உதிர்த்தவள்,
“குட் டச்… பேட் டச் னு பெண் குழந்தைங்களுக்கு மட்டுமில்லை, ஆண் குழந்தைங்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டிய நிலைக்கு நம்ம சமுதாயம் மாறிக்கிட்டே வருது. அதுலயும் சபல புத்தி இருக்குற இந்த மாதிரிக் கிழவனுங்க தொல்லை தான் அதிகம். ‘என் பேத்தி மாதிரிப் பார்த்துக்கிறேன். பேரன் மாதிரிப் பார்த்துக்கிறேன்’னு மடில உக்கார வச்சி… கண்ட இடத்துல கை வைக்குங்க. வயசான காலத்துலயும் அடக்க முடியாத இவனுங்களை மாதிரிக் கிழவனுங்களைப் பார்த்தா நாலு அறை அறையணும் போல ஆத்திரம் ஆத்திரமா வருது. என்னால அடிக்க முடியலை, அதான் நான் கம்ப்ளைண்ட் கொடுத்திட்டு வந்தேன்.
பப்ளிக் ப்ளேஸ்ல இப்படி ஆபாசமாக நடந்துக்கிறது தண்டனைக்குரிய ஒன்று. ஜெயில் தண்டனை உண்டு. கண்டிப்பாக அந்த நாய்க்கு நான் வாங்கித் தருவேன்.” என்று ரௌத்திரம் தெறிக்கக் கூறியவளை வித்தியாசமாகப் பார்த்தான் பிரதாப்.
இதுவரை தான் பார்த்த நைனிகா அல்ல இது. புதிதாகத் தெரிந்தாள். அவளின் நியாயமான கோபம் கூட அழகாகத் தெரிந்தாலும், அவளும் இது போன்று பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பது அவளின் வலி நிறைந்த வார்த்தைகளின் மூலம் நன்கு உணர முடிந்தது பிரதாப்பிற்கு.
அவளின் கரத்தை ஆதூரமாகப் பற்றியவன், அதில் அழுத்தம் கொடுத்து அவளின் பேச்சை நிறுத்த, விழிகளை மூடித் திறந்தவள், “ஸாரி… உங்க நல்ல மூடை ஸ்பாயில் பண்ணிட்டேன்.”
“இல்லை நைனி. நாம கல்யாணம் பண்ணிக்க ரெடியாகிட்டு இருக்கோம். நமக்குள்ள புரிதல் ரொம்ப முக்கியம். அந்த வகையில் ஐ ஆம் சோ லக்கி” என்றவன் அவளுக்கும் ஒரு தட்டை எடுத்து வைக்க, இருவரும் உணவை மட்டுமல்லாது உணர்வுகளையும் பரிமாறிக் கொண்டனர்.
****
தொடர்ந்து கருத்தைகளை பகிர்ந்து கொள்ளும் அனைவருக்கும் நன்றிகள் மக்களே...
எழுத்தாளர்கள் பெயரை நீங்கள் ஆவலுடன் கணிப்பதில் மகிழ்ச்சி. சரியான பதில் வருவதுதான் குறைவு. பரவாயில்லை உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்.
இந்த எபிசோட் பற்றி உங்கள் கருத்துக்களையும், இந்த எபிசோடின் ஆசிரியர் யாராக இருக்கும் என்ற உங்கள் கணிப்பையும் அறிய ஆவலுடன் இருக்கிறோம்.

Previous thread
Next thread