- Joined
- Sep 16, 2024
- Messages
- 746
- Reaction score
- 4,462
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 9
View attachment 678
அந்த பெரிய இருட்டறையில் முடிந்தவரை தன் ஒளியினால் நிரப்பப் போராடித் தோற்றுப் போனது, அறையின் நடுவே தொங்கிக் கொண்டிருந்த அந்த மின்குமிழ்.
எத்தனை மணி நேரம் தான் அதையே சலிக்காமல் பார்த்துக் கொண்டிருந்தானோ அந்த அப்பாவி ஜீவன்.
"அப்பவே அப்பா சொன்னார் ஒழுங்கா படிடா, படிக்காட்டி மாடு தான் மேய்ப்பேன்னு... அப்ப படிச்சனா? சரி படிப்புதான் வரலை, அவர் சொன்ன மாதிரி மாடாவது மேய்க்கப் போயிருக்கலாம். மாடு விரட்டும்னு கிராமத்தை விட்டு இங்கே வந்து நாலு பேரை நாம மிரட்டி பிழைப்போம்னு பார்த்தா, மாட்டை விடக் கேவலமா நடத்துறீங்களேடா! எங்களுக்கு மாடே மிதிச்சு, குடல் வெளியே வந்தாக்கூட இவ்வளவு வலிச்சிருக்காதே! அடிக்கிறது தான் அடிக்கிறீங்க, ஒரேயடியா அடிச்சுட்டு போங்களேன்டா! எதுக்குடா இன்ஸ்டால்மென்ட்ல அடிக்கிறீங்க?” புலம்பியவன் குரல் கேட்டு,
“என்னடா அங்க புலம்புற? இப்போ அங்க வரவா?” குரலை மட்டும் அதிகாரமாய் உள்ளே அனுப்பினார் யாரோ அதிகாரி. அந்த அதட்டல் குரலில் தன்னை குறுக்கிக் கொண்டு சுவரோடு சாய்ந்து அமர்ந்தவன்,
“உள்ளே வந்தா மட்டும் வடை பாயாசத்தோட விருந்தா வைக்கப் போறீங்க, மீதி எந்த இடத்துல இருந்து ரத்தம் வரேலன்னு பார்த்து, அதிலேயே மிதிக்கப் போறீங்க” இம்முறை புலம்பியவன் குரல் வெளியே போகாதவாறு பார்த்தவனுக்கு, தன் உடம்பிலிருந்த காயங்களைப் பார்த்து அழுகை தான் வந்தது. உதட்டோரம் ஏதோ ஊறல் எடுப்பது போல் இருக்க, அந்த இடத்தை விரல் ஒத்தி எடுத்தவன்,
“ரத்தம்…! ம்மா, நீ தந்த பாலை எல்லாம் பிதுக்கியே எடுக்குறாங்கம்மா” வாய் விட்டு அழவே ஆரம்பித்து விட்டான். திடீரென ஒன்றன் பின் ஒன்றாகக் கால் தடங்களின் ஒலியானது மிக அருகில் கேட்பது போல் இருக்க, வாசலைப் பார்த்தவனை ஏமாற்றாது விறைப்பாக உள்ளே வந்தனர் பிரதாப்பும் திலீபனும்.
“என்ன மாப்பிள்ளை! மாமியார் வீட்டு விருந்தெல்லாம் திருப்தியா இருந்துச்சா?” குசல விசாரிப்பில் அத்தனை நக்கல் இழையோட, அங்கிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அவன் முன் அமர்ந்த பிரதாப், அவன் தலையினைச் சாதாரணமாக வருடத்தான் கையினை உயர்த்தினான், ஆனால் விமலோ அடிக்கத்தான் கையை உயர்த்துகிறான் என நினைத்து, தலையை ஆமை போல் கழுத்துக்கு இழுக்க முற்பட, அதைக் கண்டு உதட்டினுள் நகைத்தவன்,
“இப்போவாவது உண்மையை சொல்றியா? இல்லைன்னா இன்னும் கவனிக்கச் சொல்லவா?”
“சார், என்னைக் கரப்பான் பூச்சியாட்டம் கவுத்துப் போட்டு மிதிச்சாலும், உண்மை அது தான் சார். எனக்கு எதுவும் தெரியாது. அவர்கிட்ட இருந்து விலகி அஞ்சு மாசமாச்சு” என்றான் அப்பாவியாய்.
“ஹாங்! உனக்கு ஒன்னுமே தெரியாது...” திலீப் அதை எடுங்க.” என்றதும் தன் கையிலிருந்த கோப்பிலிருந்து அந்தக் காகிதத்தை உருவி எடுத்து அவனிடம் கொடுக்க, அதை விமல் முன் அசைத்துக் காண்பித்த பிரதாப்,
“இந்த பேப்பர் என்னன்னு தெரியுதா?” என்றான் அவனை ஆழப் பார்த்து. அவன் காட்டிய காகிதத்தைப் பார்த்ததும் திருதிருவென முழித்தவன்,
“தெ...தெரியலை…”
“ஓ… தெரியலை… தெரியாமல் தான் உன் பைக்கில் வந்துச்சா?”
“அ… ஆ…” அவன் நாக்கு இரண்டு மடங்காக தந்தியடித்தது.
“யோவ்... இவன் சரிப்பட்டு வரமாட்டான். அந்த லத்தியை எடு...”
“வேண்டாம் சார்…. வேண்டாம்... நா… நான் உண்மையைச் சொல்லிடுறேன். உண்மையாவே சக்கரபாணி அய்யாட்ட வேலையை விட்டு அஞ்சு மாசமாச்சு, ஆனா இடை இடையிலே அய்யா கால் பண்ணுவார். ஏன்னா என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தன் இருக்கான், அவன் ஒருத்தங்களோட ரைட்டிங்கை பார்த்தான்னா, அச்சு பிசகாம அதே போல எழுதுவான். அதனால அதை சக்கரபாணி அய்யா தன்னோட தேவைக்கு பயன்படுத்திப்பார். எனக்கும் அதனால கொஞ்சம் காசு வர்றதால, நானும் அவர் குடுக்கிற வேலையை மறுக்காம செய்வேன்.” என்றான்.
“அடுத்தவன் சொத்தை ஆட்டையை போடுறதை சர்வ சாதாரணமா சொல்லுற! ஏட்டு இவனை அந்தக் கொரில்லா சிறையில் போடுங்க வந்து கவனிக்கிறேன்.” என்றவன், அடுத்ததாக நின்றது நிவேதிதா நகர் காவல் நிலையத்தில் தான்.
அங்கிருந்த எஸ்.ஐ திவாகருடன் கை குலுக்கி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பிரதாப்,
“உங்க கன்ட்ரோல்ல இருக்குற ஏரியாவுல நடந்த சூசைட் கேஸ் பத்தி நேத்து நீங்கப் பேசினதா, எஸ்.ஐ சிவராம் சொன்னார். நீங்க சொன்ன டீடெய்லை வெச்சு பார்க்குறப்போ ஏற்கனவே எங்க ஏரியாவில் நடந்த கொலைகளோட ஒத்து போறமாதிரி இருக்குறதனால, கமிஷனர் என்ன ஏதுன்னு விசாரிக்க சொல்லியிருக்கார் திவாகர். அதனால அந்த ஃபைலை நான் பார்க்கலாமா?” என்க,
“ஸ்யூர் சார்” எனத் தானே சென்று அந்த ஃபைலை எடுத்து வந்து பிரதாப்பிடம் கொடுக்க, ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிப் பார்த்தவனது புருவங்கள் ஏறி இறங்கியது.
“எப்படி சார் இதை சூசைட்னு சாதாரணமா முடிச்சீங்க? இதில் இருக்கிறது பார்த்தா கொஞ்சமாவது லாஜிக் இருக்கா? தற்கொலை பண்றவன் எவனாவது வாயைக் கட்டி தற்கொலை செய்வானா? அதோட இறந்தவர் டாக்டர். தற்கொலை செய்யணும்னா, வலிக்காம தற்கொலை செய்ய ஆயிரம் வழி அவருக்கு தெரிஞ்சிருக்கும், அப்படி இருக்குறப்போ, கொடூரமா கையக் கிழிச்சு ரத்தம் வடிஞ்சு கொஞ்சம் கொஞ்சமா சாகணும்னு என்ன இருக்கு? எந்த அடிப்படையில் சார் இதைத் தற்கொலைக்கு…?” கோபம் ஆற்றாமையாக மாற ஃபைலை மேசைமேல் போட்டவன்,
“ஏன் சார்... நீங்க மீடியா எல்லாம் பார்க்கிறது இல்லையா? இதே பாணியில் தானே சார் எல்லாக் கொலையும் நடந்திட்டிருக்கு. அப்படி இருக்கும்போது சூசைட்னு கேஸை முடிச்சிட்டீங்க.”
“சார்... அது... அங்க இருந்த கத்தியில் டாக்டர் தனபாலோட கை ரேகை தான் இருந்துச்சு சார். அதோட அவரோட போன்ல தன்னோடு சாவுக்கு யாரும் காரணமில்லைன்னு வீடியோன்னு ரெகார்ட் பண்ணி வெச்சிட்டு தான் இறந்திருக்கார். இதுக்கு மேல என்ன ஆதாரம் சார் வேணும். அதான்…” திவாகர் இழுக்க,
“ஃபைல்ல பார்த்தேன். இருந்தாலும் எனக்கு எங்கேயோ இடிக்குது.” என்றவனுக்குத் தான் எங்கேயோ தவறு விடுவது போல் தோன்ற, மீண்டும் ஃபைலை எடுத்தவன் பார்வையில் விழுந்தது அந்தக் கவர்.
அதைக் கண்டதும் விழிகள் அகல விரிய,
“இது…”
“தகவல் தெரிஞ்சு போனப்போ அங்கே இருந்து எடுத்தது சார். அப்போ சூசைட்ன்னு கன்ஃபார்ம் ஆகலை. அதனால் இதுவும் ஒரு ஆதாரமா இருக்குமேன்னு எடுத்து வெச்சோம்” என்றார் அவனை முந்திக்கொண்டு.
“ஓ…” என்றவன் தான், அவனால் மேலே எந்தக் கேள்வியும் கேட்க மனம் வரவில்லை.
“எனக்கு இந்த கேஸோட காப்பி கிடைக்குமா?” என்க,
“கண்டிப்பா சார்” என்ற திவாகரும் அதில் ஒரு பிரதியைக் கொடுத்து அனுப்பி வைத்தார்.
ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவன் சிந்தையைக் கலைப்பது போல்,
“சார்… சார்…” திலீப் தான் அழைத்தான். அதில் திடுக்கிட்டு விழித்தவன், எதிரில் நின்றிருந்த திலீப்பை ஒன்றும் புரியாது குழந்தைபோல் காண,
“ஸ்டேஷன் வந்துடுச்சு சார்.” என்றான்.
“ஹாங்...” அவன் கூறியது ஏனோ காதுக்கு எட்டியதே தவிர, மூளைக்கு எட்டவில்லை.
“என்ன சார்! ஏதாவது பிரச்சனையா?” எள் என்றால் எண்ணெய்யாக நிற்பவனது தடுமாற்றம் அவனைத் தெரிந்தவர்களுக்குத் தெரியாதா?
“அ… அது… ஒன்னுமில்லை திலீப்… நீங்கப் போங்க நான் வர்றேன்.” என அவனை உள்ளே அனுப்பியவனுக்கு, கொஞ்சம் மாறுதல் தேவைப்பட்டது போல, செல்லை எடுத்து நைனிகாவின் இலக்கத்திற்கு அழைத்து விட்டுக் காத்திருந்தவனை ஏமாற்றவில்லை அவள்.
“என்ன போலீஸ்காரரே… என்ன நீங்களா கூப்பிட்டிருக்கீங்க?” என்றாள் அவனே அழைத்த குதூகலத்தில்.
“என் பொண்டாட்டியை நான் கூப்பிடாம யார் கூப்பிடுவாங்களாம்!” அவன் மட்டும் சளைத்தவனா என்ன?
“இல்லையே... போலீஸ்கார் டியூட்டில இருக்குறப்போ இப்படி எல்லாம் பேச மாட்டாரே! போலீஸ்கார் உடம்புல ரொமான்ஸ் பேய் புகுந்துடுச்சா என்ன?”
“இல்ல… நைனிகாங்கிற காதல் பேய் புகுந்துடுச்சு.”
“அய்யோடா… இப்பிடியே புகுந்துட்டாலும்… போதும் விளையாட்டு. நான் பசங்களுக்கு கிளாஸ் எடுத்துட்டு இருக்கேன். கிளாஸ் முடிஞ்சதும் கூப்பிடுறேன் அப்போ விளையாடிக்கலாம்” என்க,
“கூப்பிடுறதா…? நோ வே... எனக்கு உன்னைப் பார்க்கணும்.”
“பார்றா! நிஜமாவே போலீஸ்காரருக்கு ஏதோ ஆயிடுச்சு போலத்தான். சரி சரி, அப்படின்னா ஆறு மணிக்கு சென்டருக்கு எதிர்ல இருக்குற டீக்கடைக்கு வந்துடுங்க” என்றவள் போனை வைத்து விட்டாள்.
இதற்காகவே காத்திருந்தவன் போல், மணி ஆறு என்றதும் டீக்கடை வாசலில் நிற்க, யாருடனோ பேசி சிரித்தவாறு வந்தவள் அவனைக் கண்டுவிட்டு அவளிடம் ஏதோ கூற, அவள் பார்வையும் இவன் நிற்கும் திசை திரும்பி மீண்டதும் தான், இருவரும் பிரிந்து போக, நைனிகா இவனை நோக்கிச் சிரிப்புடன் வந்தாள்.
“ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா போலீஸ்கார்?” என்றாள்.
“இப்பத்தான் ஒரு அரை மணி நேரமா.” என்றதும் வாய் மேல் கை வைத்தவள், உங்க வரலாற்றில் இது சாதனை தான்”
“உனக்காக இது மாதிரி எத்தனை சாதனையும் செய்யலாம்” காதலாய் கிசுகிசுத்தவன் பேச்சில் சிவந்து தான் போனாள் பெண்ணவள்.
“போதும், சூடா டீ குடிச்சா ஏறின பித்தம் தெளிஞ்சிடும்” அவனைக் கடந்து விறுவிறு என உள்ளே சென்றவளுக்கு அவன் முன் நிற்க வெட்கம் பிடுங்கித் தின்றது.
அங்கிருந்த மேசையில் ஒன்றை ஆக்கிரமித்துக் கொண்டார்கள் இருவரும்.
“தம்பி... ரெண்டு டீ” எனச் சத்தமாகக் கூவினாள் அவள். அவளுக்குத்தான் பழக்கப்பட்ட கடையாயிற்றே, அதனால் அவர்களிடம் எந்தக் கூச்சமும் படமாட்டாள்.
அவள் கேட்ட தேநீரும் வர, ஒன்றை நகர்த்தி அவன் புறம் வைத்தவள்,
“ம்... எடுத்து அடிங்க போலீஸ்கார்” என்று விட்டு, கப்பில் ஓர் வாய் வைத்தவள்,
“டேய் தம்பி... என்ன கேமமைலா?” என்றாள் அதன் சுவையைக் கண்டுபிடித்து விட்டாள் என்ற பெருமையில்.
“ஆமாக்கா. யாராச்சும் தலைவலின்னு வந்து டீ கேட்டா, இப்பிடி ஒரு டீ இருக்கு குடிச்சு பார்க்கிறீங்களான்னு கேட்டு போட்டு குடுப்போம். அதுக்குன்னு ஸ்பெஷலா காசும் வாங்குவோம். சாதாரண டீக்கு அவங்கு தர பணம் ” போதாதே” என்றான்.
“ஓ... கஸ்டமரை கைக்குள்ளே போட பழகிட்ட போல... அது சரி, இப்போ எனக்கு தலைவலி புடிச்சிருக்குன்னு உனக்கு எப்படி தெரியும்?” கேள்வி என்னமோ அவனிடம் என்றாலும், விழிகள் எதிரே இருந்தவனை கடைக்கண்களால் பார்த்தது.
“அதெல்லாம் எப்படிக்கா தெரியும்? நீங்க சொன்னதால தானே இந்த டீ
பாக்கெட்டை யூஸ் பண்ண ஆரம்பிச்சோம். உங்களுக்கில்லாம எப்படி? ஆமா கேக்க மறந்துட்டேன் சார் இந்த டீ குடிப்பாருல்ல?” அவளுக்கு தெரிந்தவன் என்றால் எப்படியும் குடிப்பான் என்ற நம்பிக்கையில் போட்டு விட்டான். இருந்தும் கேட்கும் கடமை அவனுக்கு இருக்கிறதே.
“அதெல்லாம் குடிப்பாருடா! இப்பல்லாம் இவருக்கு இந்த டீ குடிச்சா தான் நிம்மதியான ஒரு தூக்கம் வருதாம்.” என்க.
“ஆமாக்கா ஒரு வாட்டி குடிச்சவங்க மறு நாளே வந்து அது என்ன டீ தூள்? எனக்கும் வாங்கி தான்னு கேக்குறாங்க. இப்போ சைட்ட இந்த பிஸினஸும் ஓடுதுன்னா பாருங்களேன்.” என்க,
“ஆனா இது எல்லாக் கடையிலும் கிடைக்காதேடா”
“ஆமாக்கா… அதான் நீங்க ஒரு நம்பர் தந்தீங்களே, ஆன்லைன்ல ஷாப்பிங் செய்யலாம்னு... மறந்துட்டீங்களா?” என அவள் மறந்ததை நினைவுபடுத்த,
“ஆமால்ல… சரி, நீ வேலையைப் பாரு” என அவனுடனான பேச்சை நிறுத்தி விட்டு இவன் புறம் திரும்ப, இருவரது பேச்சையும் சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தவன்,
“என்ன பேசி முடிச்சாச்சா? பேசுறதே இல்லைன்னு சண்டை போடுற... பேசக் கூப்பிட்டா யார் கூடவோ கதை அளக்குற… இதுல நாங்க தலைவலியா போனோம் உங்களுக்கு?” விளையாடுவது தெரியும், ஆனால் வம்பிழுக்க வேண்டுமே!
“சும்மா…” என உதட்டைச் சுழித்தவள் செயலில் தொலைந்துதான் போனான் பிரதாப்.
“இதுவே கடைசி முறையாக இருக்கட்டும் நைனிகா… அப்புறம் இடம் பொருள் பார்க்காம கடிச்சு வைச்சிடுவேன்.” என்க. அதில் அவன் பார்வை போன இடமே எதை கடித்து வைப்பான் என கூறுவது புரிய, லேசாக செம்மை பூசிய கன்னத்தோடு,
“பொது இடத்தில் அநாகரிகமா பேசாதிங்க போலீஸ்கார். ஏற்கனவே உங்க மேல யாருக்கும் மரியாதை இல்ல. இப்பிடியும் செய்தா, பேப்பர்ல பக்கம் பக்கமா சிரிக்கும்.” விளையாட்டாக தந்தான் பேசினாள். ஆனால் அதுவரை விளையாடிக் கொண்டிருந்தவனுக்கு, அவள் போலீஸ், மீடியா என்றதும் தான், தான் எதற்கு வந்தோம் என்பது நினைவில் வர விறைப்பாக நிமிர்ந்து அமர்ந்தவன், கப்பிலிருந்த டீயை ஒரு மிடறு முழுங்கி விட்டு, அந்த கேள்வியை கேட்டான்.

Previous thread
Next thread