Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Joined
Sep 25, 2025
Messages
88
Reaction score
93
Points
18
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 5

நால்வரும் மாலையில் கல்யாண ரிசப்ஷனுக்குச் செல்ல, அவர்களைக் கண்டதும் சிரித்த முகத்துடன் வரவேற்றதே யாழினிதான். யாழினியைக் கண்டதும் நடராஜன் முகம் மலர்ந்து, அவளைக் கண்டு புன்னகைத்தபடியே, தன் குடும்பத்தினர் மூவருக்கும் மட்டும் கேட்குமாறு, “அதுதான் பொண்ணு...” என்று மெதுவாக முணுமுணுத்தார்.

மெஜந்தா நிறச் சேலையில், தலையில் மல்லிகைப் பூவும் அளவான நகைகளும் அணிந்திருந்த யாழினியைக் கண்டதும், மித்ரனின் கண்கள் அப்படியே நிலைத்துவிட்டன. எப்பொழுதும் பேசிக் கலகலக்கும் மித்ரனுக்கு அந்தத் தருணத்தில் வார்த்தைகளே வரவில்லை.

மலரை மொய்க்கும் வண்டாக அவனது பார்வை அவளையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தது. தான் பார்ப்பதை யாராவது கவனித்துவிடுவார்களோ என்ற பயம் ஒருபுறம் இருந்தாலும், அவளிடமிருந்து பார்வையை விலக்க அவனது மனம் இடம் கொடுக்கவில்லை.

அவள் பவ்யமாக நடந்து வரும் அழகை ரசித்தபடி நின்றிருந்த மித்ரனை, மித்ரா மெல்ல இடித்து, "என்ன அண்ணா... அப்படியே ஷாக் ஆகி நிக்கிறாய்?" என்று கிண்டலாகக் கேட்ட பிறகுதான் அவன் சுயநினைவுக்கே வந்தான்.

சிறிது நேரத்தில் யாழினியே அவர்களுக்குப் பருகுவதற்குப் பழச்சாறு கொண்டு வந்து கொடுத்தாள். அப்பொழுது எதிர்பாராதவிதமாக ஆனந்தியின் சேலைத் தலைப்பில் மிதித்துவிட்டாள்.

யாழினி காலை வைத்தாலும் சட்டென்று தூக்கிவிட்டாள். அப்படியிருந்தும் அவள் தெரியாமல் காலை வைத்துவிட்டு எடுத்ததிலேயே, ஆனந்தி சரியாகக் குத்தாமல் வந்திருந்த சேலை முந்தானையின் ஊக்கு சட்டென்று விடுபட்டுவிட்டது. முந்தானை கீழே விழுந்துவிடாமல், தன் கைகளால் லாவகமாகப் பிடித்துக்கொண்டார் ஆனந்தி.

அவரைக் கண்டு மிகுந்த சங்கடத்துடன் பார்த்த யாழினி யாரும் அவரைப் பார்க்கவண்ணம் அவரை மறைத்து நின்ற படி, “சாரிங்க... தெரியாம மிதிச்சுட்டேன். சேலையில இருந்த ஊக்கு கழன்றுடுச்சுன்னு நினைக்கிறேன். வாங்க... நானே குத்திவிடுறேன்," என்று தான் ஏதோ பெரும் குற்றம் செய்துவிட்டதைப் போன்ற பாவனையில் பவ்யமாக ஆனந்தியிடம் கேட்டாள் யாழினி.

ஆனந்தியும் தான் முந்தானைச் சேலையைக் கவனிக்காமல் இருந்ததாலேயே அவள் கால் அதில் பட்டது என்பதையும், அவள் கால் வைத்ததை அவள் மூளை உணர்ந்த உடனேயே காலை எடுத்துவிட்டாள் என்பதையும் கண்டவர், அவளின் தப்பை பெரிதுபடுத்தவில்லை.

“நீ தெரியாமத்தானேம்மா செஞ்ச... விடுமா. நான் என் பொண்ணைக் கூப்பிட்டுப் குத்திக்கிறேன்," என்று ஆனந்தி சொல்ல,

“இல்லைங்க... என்னால்தானே கழன்றது? நீங்க மணப்பெண் அறைக்கு வாங்க, நானே குத்திவிடுறேன்," என்று அவரைப் பணிவோடு அழைத்தாள் யாழினி.

ஆனந்தி ஒரு கணம் தயங்கித் தன் கணவனைப் பார்த்தார். நடராஜனும் "போ" என்று கண்ணால் சைகை காட்ட, ஆனந்தி யாழினியோடு சென்றார்.

மணப்பெண் அறையில் ஆனந்தியுடைய முந்தானைக்கு ஊக்கைக் குற்றியபடியே, தான் செய்த சின்னப் பிழைக்கு பலமுறை மனதார மன்னிப்புக் கேட்ட யாழினியை முதல் சந்திப்பிலேயே ஆனந்திக்குப் பிடித்துவிட்டது. யாழினி ஊக்கு குத்திவிட்டபின், ஆனந்தி புன்சிரிப்போடு வந்து நாற்காலியில் அமர, "பொண்ணு எப்படி இருக்கு?" என்று மனைவியிடம் மெதுவாகக் கேட்டார் நடராஜன்.

"பார்க்கவும் பேசவும் நல்ல பொண்ணாத்தான் இருக்கு," என்று அங்கே இன்னுமொரு விருந்தினருக்கு ஜூஸ் கொடுத்து உபசரித்துக்கொண்டிருந்த யாழினியைப் பார்த்தபடி சொன்னார் ஆனந்தி.

அப்போது ஏதோ பதற்றமாக யாழினியின் அருகில் வந்து நின்ற ஒரு பெண் அவளிடம் குசுகுசுவென்று ஏதோ பேச, யாழினியின் பார்வை சட்டென்று மித்ரனை நோக்கிப் பாய்ந்தது. பிறகு சிறிது நேரத்தில் அந்தப் பெண் யாழினியின் கையைப் பிடித்து அவர்களை நோக்கி அழைத்து வருவதைக் கண்ட மித்ரனுக்கு தாங்கள் பெண்பார்க்க வந்த விசயத்தை யாரும் விசக்கிருமிகள் கண்டுபிடித்துவிட்டார்களோ என்ற பதட்டம் மேலோங்க,"அப்பா... அந்தப் பக்கத்துல வர்ற பொண்ணு யாரு?" என்று யாருக்கும் கேட்காதவாறு மெதுவாகக் கேட்டான்.

"அவ தங்கச்சி நறுமுகை. நம்மகிட்டத்தான் வர்றாங்க போல... இரு என்னன்னு கேட்போம்," என்று நடராஜனும் யோசனையுடன் காத்திருக்க, “சார்...” என்று நடராஜனை அழைத்தாள் யாழினி.

நடராஜன் தன் மூக்குக்கண்ணாடி வழியாக அவர்கள் இருவரையும் கேள்வியுடன் நோக்க, “சார்... உங்க பையனா ரேடியோ ஜாக்கி மித்ரன்? என் தங்கச்சி அவரோட பெரிய ஃபேன். யாரோ இவகிட்ட உங்க பையன் மித்ரன்தான் ரேடியோவுல வேலை செய்யுறாருன்னு சொன்னாங்களாம். உங்க பையன்கிட்ட ஒரு ஆட்டோகிராப் வாங்கித் தரச் சொல்லி இவ கெஞ்சுறா," என்று பக்கத்தில் மித்ரனைத் தன் கனவு நாயகனாகக் கண்ட பரவசத்துடன் நின்ற நறுமுகையைக் காட்டித் தயக்கத்துடன் கேட்டாள் யாழினி.

தந்தை பேசுவதற்கு முன்பே அவசரக்குடுக்கையாக முந்திக்கொண்ட மித்ரன், "நான் அந்த எஃப்.எம்லதான் வேலை செய்யுறேன், ஆனா நான் ஆர்.ஜே இல்லைங்க உதவி இயக்குனர். ஆர்ஜே மித்ரன் இன்னொருத்தர். உங்களுக்கு ஆட்டோகிராப் வேணும்னா சொல்லுங்க, அவர்கிட்ட கேட்டு வாங்கித் தாரேன்," என்றான்.

ஏற்கனவே பேச்சுப் பயிற்சிக்குப் போன இடத்தில் சகாயனை மித்ரன் என்று தப்பாகக் கணித்துவிட்டு, அவனின் பேச்சு பொருந்திப்போனாலும், அவன் நடையுடை பாவனைகள் அவன் வானோலியில் சொல்லியதற்கு எதிராக இருக்கக்கண்டு, "ஆர்ஜே மித்ரனிடம் காணப்படும் துள்ளலைக் காணோம், இது ஆர்ஜே மித்ரன் இல்லை போலக்கா" என யாழினியின் காது பிய்ந்து தொங்கும் அளவுக்குப் புலம்பித் தள்ளி இருந்தாள் நறுமுகை.

ப்போதுதான் சகாயனை ஒரு பேச்சுப் பயிற்சியாளராக மட்டும் ஏற்றுக்கொண்டு அமைதியாகப் போய்க்கொண்டிருந்தவள், மீண்டும் அக்காவிடம் வந்து குழப்பத்தை உண்டாக்கியதைக் கண்டு யாழினிக்குக் கோபம் வந்தது.

சரியான தகவலைச் சேகரித்துக்கொண்டு வருவதில்லையா என நறுமுகையை ஒருமுறை முறைத்தபடி, "ஓ... சாரி," என்றாள் யாழினி.

அந்த நேரம் ஆடிட்டர் பஞ்சாட்சரமும், யாழினியின் தந்தை நெடுமாறனும் அங்கே வந்தனர். "என்ன சார்... உங்களுக்கு எல்லாம் ஓகேயா?" என்று மறைமுகமாக நடராஜனிடம் கேட்டார் பஞ்சாட்சரம்.

பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, "எனக்கு அண்ணி டபுள் ஓகே!" என்று சத்தமாகவே சொல்லிவிட்டாள் மித்ரா. அங்கே என்ன நடக்கிறது என்று தெரியாமல் அக்காவும் தங்கையும் முழிக்க, "அண்ணி... நாங்க உங்களைத்தான் பொண்ணு பார்க்க வந்திருக்கோம். எங்க அண்ணா உங்களைப் பார்த்து ஜொல்லு ஊத்துற அழகிலேயே உங்களுக்குத் தெரியலையா?" என்றாள் மித்ரா குறும்பாக.

யாழினி தன் அப்பாவை கேள்வியாகப் பார்க்க, "ஆமாம்" என்பது போல நெடுமாறன் தலையசைத்தார். அவர் அருகில் நின்று கொண்டிருந்த நண்பரான ஆடிட்டர் பஞ்சாட்சரம், "நீ தம்பி கூடப் போய் பேசிட்டு வாம்மா. உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசுவோம்," என்றார்.

மித்ரன் அவள் பதிலை எதிர்பார்க்காமல் டக்கென்று நாற்காலியிலிருந்து எழும்ப, அவனுக்கு யாழினியைப் பிடித்துவிட்டது என்பதை அங்கிருந்தவர்களுக்கு அவனது அந்தச் செய்கையே உணர்த்தியது.

நடராஜனும் ஆனந்தியும் ஒருவரை ஒருவரைப் பார்த்துப் புன்னகைத்துக் கொள்ள, மித்ரா தன் அண்ணனின் அவசரத்தைப் பார்த்துத் தன்னுள் சிரித்துக் கொண்டாள். "தம்பி... போயிட்டு வாங்க," என்று ஆடிட்டர் பஞ்சாட்சரம் சொல்ல,

மித்ரன், "நீங்க முன்னாடி போங்க..." என்று யாழினியிடம் சொல்ல, அவள் முன்னே நடந்து செல்ல, அவளது மெஜந்தா நிறச் சேலையின் அசைவையும், பின்னலில் சூடியிருந்த மல்லிகைப் பூவின் மணத்தையும் ரசித்தபடி அவளைப் பின்தொடர்ந்து அவனும் அமைதியாகச் சென்றான்.

நெடுமாறன் தன் மனைவியிடத்தில் நடராஜனையும் ஆனந்தியையும் அறிமுகப்படுத்தி வைக்கக் கூட்டிக்கொண்டு வருவதாகச் சொல்லிப் புறப்பட, "இல்லை... நாங்க மணப்பெண்ணையும் பார்க்கணும்," என்று சொல்லிவிட்டு நெடுமாறனுடனேயே நடராஜன் தம்பதியும் மணப்பெண் அறைக்குச் சென்றார்கள்.

அங்கே அந்த இடத்தில் நிற்கவா, இல்லை உள்ளே மணப்பெண் அலங்காரத்துக்கு உதவிக்கொண்டிருக்கும் தன் தாய்க்கு உதவி செய்யவா என்று குழப்பத்தில் நின்ற நறுமுகையைக் கண்டு, "இங்கே உட்காருங்க... நானும் ஆர்ஜே மித்ரன் ஃபேன் தாங்க! சொல்லுங்க..." என்று மித்ரா நறுமுகையிடம் நட்புக் கரம் நீட்டினாள்.

மித்ராவின் கலகலப்பான பேச்சில் நறுமுகையின் தயக்கம் மெல்லக் கரையத் தொடங்க, தான் பேச்சுப் பயிற்சி நிலையத்திற்கு ஒழுங்காகச் சென்று வருவதால், இப்போது வார்த்தைகள் திக்காமல், சரியான இடைவெளிகளுடன் அவளால் பேச முடிந்தது. என்பதால், "நிஜமாவா? உங்களுக்குப் பிடிக்குமா?" என்று நறுமுகை ஆச்சரியமாகக் கேட்க,

அவளிடம் ரசிகைக்கு அப்பாற்பட்ட ஆர்வம் தெரிவதைக் கண்ட மித்ரா, "என்னங்க நீங்க... சிண்ட்ரெல்லாவுல வர்ற பிரின்சஸ் மாதிரி இருந்துகிட்டு, ஒரு கல்யாணமான அங்கிளை சைட் அடிக்காதீங்க! நம்ம லிமிட், 'அவர் வாய்ஸ் ஸோ ஸ்வீட்' அப்படீன்றதோட நின்னுடணும். அதுக்கு அப்புறம் அவரை கணக்குல எடுத்துக்கிட்டு இருந்தா, நம்ம வாழ்க்கையோட அழகான பக்கங்களை எப்ப ரசிக்கிறது?" என்று பகிடிபோல் சொல்லிய மித் ரா நறுமுகையை தன்னோடு அமர வைத்துக்கொண்டாள்.

இருவரும் சேர்ந்து கதிரையிலிருக்க, ஆர்ஜே மித்ரனின் பேச்சை தங்களுக்கு இடையில் கொண்டுவராமல் நறுமுகையின் கைகளைப் பிடித்துக்கொண்ட மித்ரா, "சொல்லுங்க... நான் உங்க அக்காவோட நாத்தனாராக வந்தால் உங்களுக்கு ஓகேயா? எனக்கு உங்க அக்காவைப் பிடிச்சிட்டு! என் அண்ணா, தேவைப்பட்டால் உங்க அக்கா கால்ல விழுந்தாவது அவங்களைச் சம்மதிக்க வைச்சிடுவான். அவனுக்கு ஆர்.ஜே ஆகுற அளவுக்குக் குரல் இல்லாட்டியும், அவனின் ஓட்டைக் குரலை வைச்சே பெண்களைப் பேசிக் கவுக்க நல்லாவே தெரியும். ஒருவேளை உங்க அக்கா மட்டும் இப்ப கல்யாணம் வேண்டாம்னு சொன்னால், இன்னும் கொஞ்ச நாளைக்கு எங்க வீட்டிலேயே குப்பை கொட்டணுமேன்ற பயத்துலேயே, அண்ணன் எப்படியாவது பேசி அவங்களை சம்மதிக்க வைச்சிடுவான்" என்று குறும்பாகச் சிரித்தாள்.

நறுமுகை, ‘இவள் மித்ரனைப் பெருமையாகப் பேசுகிறாளா இல்லை அவனைப் பங்கம் பண்ணுகிறாளா?’ என்று புரியாமல் அவளையேப் பார்த்துக்கொண்டிருக்க, "நாம எல்லாம் இனி ஒண்ணுக்குள்ள ஒண்ணு டியூட்!" என்று சொல்லிக் கண்ணடித்தாள் மித்ரா.
 
Last edited:
Previous thread
Next thread

Latest threads

Top Bottom