Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Status
Not open for further replies.
Writer✍️
Joined
Nov 6, 2024
Messages
37
Reaction score
23
Points
8
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
தவமா? வரமா? தெரியவில்லை 1​



சாமி வள்ளியம்மை தம்பதிக்கு ஒரே மகள் மீனா.
அவளுக்கும் ஆனந்த்துக்கும் படிக்கும் போதே காதல்.இருவரும் ஒரே கல்லூரியில் படித்தனர்.

மீனாவின் தந்தை விவசாயம் செய்கிறார். தென்னந்தோப்பு சில ஏக்கரில் தண்ணீருக்கும் பஞ்சம் இல்லை . வசதியான குடும்பம்.

படிப்பை முடித்ததும் மீனாவுக்கு மாப்பிள்ளை தேட...மீனா அவள் காதல் விஷயத்தை வீட்டில் சொல்லிவிட்டாள்.
வள்ளிக்கு விருப்பம் இல்லை இருந்தாலும் மகளின் விருப்பத்தை எண்ணி ஒத்துக்கொண்டார்.
ஆனால் சாமி ,

வசதி பற்றி அவர் பெரிதாக எண்ணவில்லை. மனிதர்களை மதிப்பவர் அவர்.

தங்கள் அளவு சொத்துபத்து தான் இல்லையே ஒழிய ...நல்ல குடும்பம் மாப்பிளை அரசு ஊழியர்.
மகளின் தேர்வில் சாமிக்கு திருப்தியே .

இதோ,
பத்து நாட்கள் முன் ஆனந்த் மீனா திருமணம் முடிந்திருந்தது.

இதோ ஒருவாரம் மறுவீடு விருந்து வந்தவர்கள்
இன்று தான் புகுந்த வீடு செல்ல இருக்கிறார்கள். உறவுகள் எல்லாம் இங்கேதான் .
மீனாவை வழியனுப்பிவைக்க வந்துவிட்டார்கள் .

அவர்களுக்கான வண்டியும் வாசலில் காத்திருக்கிறது .
இதோ,
மீனா அவள் உடமைகளை எல்லாம் எடுத்துவைக்க;
"ஒவ்வொரு பையாக வண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தனர்."

மகளை தேவையானதை எடுத்துக்கொள் என்றுவிட்டார் வள்ளி .
மகள் இன்னும் ஒரு வாரத்தில் மாமியார் வீட்டில் இருந்து கணவனுடன் சென்னை செல்கிறாள்.

அவருக்கு பெருமை.இருக்காதா
மகள் ,
மாமியார் தொல்லை இல்லாமல் வெளியூரில் தனிக்குடித்தனம் செல்கிறாள் .
இதோ இன்னும் ஒருவாரம் மட்டும் தான் இங்கே இருப்பார்கள் என்று வந்திருந்த உறவுகளிடம் வாயடித்து உலாவிகொண்டிருந்தார் .

எல்லாம் தயாராகி இருந்தது. ஆனந்த்தும் கிளம்பி வந்தவன்
சற்று தள்ளிவந்து தாய்க்கு அழைத்தான்.

------------------------------------------

ஜானகி இல்லம்

"யாரும்மா போன்ல ?"...

"நம்ம ஆனந்த் தான் கணேசா..."

சரிம்மா நீங்க பேசுங்க. "நானே போட்டு சாப்பிடுறேன்".

போனை தள்ளி வைத்துவிட்டு

வேண்டாம்... வேண்டாம்...நானே வைக்கிறேன்.
" நீ உட்காருப்பா." என்றுவிட்டார் ஜானகி .

மூத்தமகனை அமர வைத்தவர் அவனுக்கு தட்டு வைத்து காலை உணவை பரிமாறினார்.

மறுபடியும் ஆனந்திடம் இருந்து அழைப்பு வந்தது.
இந்த முறை கணேசனே அலைபேசி எடுத்து ஆன் செய்து தாயிடம் பேசும்படி கொடுத்துவிட்டான்.

என்ன கணேசா நீ...?லேசான கண்டிப்பில்

அதான் சாப்பாடு வச்சாசே ..."நீங்க பேசுங்கம்மா..."
புன்னகை முகமாய் கணேசன் சொன்னான்.

அலைபேசியை வாங்கி காதில் வைத்து "என்னப்பா கிளம்பிட்டீங்களா?..".

ஆமாம்மா...

"நாங்க இப்போதான் இங்க இருந்து கிளம்புறோம்".

இன்னும் கொஞ்ச நேரத்தில் நாங்க நம்ம வீட்டுக்கு வந்துருவோம்.
அப்படியா ஆனந்த்(து)...

"நல்லதுப்பா பார்த்துவாங்க".
சரிம்மா.

அவன் பேசிவிட்டு திரும்ப ,
அங்கே வள்ளி .

என்கிட்ட தாங்க மாப்பிளை...உங்க அம்மா தானே...நான் பேசணும்.

ஜானகிக்கு அந்தபக்கத்தில் ஆனந்திடம்,
"அவன் மாமியார் என்னவோ சொல்லுவது புரிந்தது."

சரி என்னவா இருந்தாலும்,

" மகனே சொல்லட்டும்" என்றவர் எதுவும் கேட்கவில்லை.

அலைபேசியை அணைத்து வைத்துவிட்டார்.
ஆனந்த் மனைவியை தேட அவளும் இருவரையும் பார்த்து வந்துவிட்டாள்.
ஆனந்தை அவன் மாமியார் வள்ளியம்மை விடுவதாய் இல்லை.

"மீனா" அவள்
ஆனந்த் மனைவி. அவள் கூட...

" அம்மா நீங்க சும்மா இருங்க" என்றுவிட்டாள்.

"என்ன மீனா நீ..".

நீ சும்மா இரு . உனக்கு ஒன்னும் தெரியாது.உன்
அம்மா நான்... ,
உனக்கு நான் என்ன செய்தாலும்,
" நல்லத்துக்கு தான் செய்வேன்" என்று கூறி அவள் வாயடைத்துவிட்டார் .

நீங்க போன் பண்ணி தாங்க மாப்பிளை. நான் உங்க அம்மா கிட்ட பேசுறேன்.
மனைவியை முறைத்துக்கொண்டு
வேண்டா வெறுப்பாய்
மறுபடியும் தாய்க்கு அழைத்தான் .

அங்கே ஜானகி ,
ஆனந்திடம் பேசிவிட்டு அப்போதுதான் பெரியமகனுடன் சாப்பிட அமர்ந்தார்.

இப்போது மறுபடி அழைப்பு வந்ததும் சாப்பிட அமர்ந்தவர் எழுந்துவிட்டார்.

என்னதம்பி சொல்லு...
"ம்மா.." மகன் தயங்கினான்.

மீனாக்கு வள்ளியை தெரியும் ஆதலால் தந்தையை தேடி சென்றாள் .

ஜானகிக்கு வள்ளியின் துடுக்கு பேச்சு பிடிக்காது. ஆனந்தை "மாமியார் வேறு விடுவதாய் இல்லை".
"அம்மா வேறு என்ன சொல்லுவாரோ ..."என்றே மகன் தயங்கினான் .

"என்ன தம்பி சொல்லுய்யா ..."மகன்
என்னவோ சொல்ல தயங்குவது புரிந்து மகனை ஊக்கினார்.

இன்னும் அந்த பக்கம் ஆனந்த் மாமியார் வள்ளியம்மை வாய் மூடவில்லை . அவனிடம் இருந்து அலைபேசியை வாங்க,
அவனை வற்புறுத்திக்கொண்டிருந்தார்.

இங்கே ஜானகிக்கு பொறுக்கவில்லை. என்னவாண்டா அந்தம்மாக்கு ?
நீ அவங்ககிட்ட கொடு நான் கேட்கிறேன்.
ஆனந்த் திருமண பேச்சு ஆரம்பித்ததில் இருந்து அவரும் வள்ளியை
பார்த்துக்கொண்டு தானே இருக்கிறார்.

எத்தனை நாட்கள் அவரும் அமைதியாக இருப்பார்.

அந்த நொடி மருமகனிடம் இருந்து அலைபேசியை பறித்துகொண்டார் வள்ளி.

காதில் வைத்துக்கொண்டு வாயெல்லாம் பல்லாக
நல்ல இருக்கீங்களா மதனி?.

அதெல்லாம் இருக்கட்டும் நீங்க சொல்லவந்தத சொல்லுங்க முகத்தில்
அடித்தார் போல...


ஜானகி பேசுவதில் வள்ளிக்கு கோவம் வந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை.
சிரித்துக்கொண்டே
அது ஒன்னும்மில்ல மதனி பொண்ணும் மாப்பிளையும் வரும் நேரம்
உங்க மூத்த மகன் வீட்டில் இருந்தால்
அவர கொஞ்சம் உள்ள இருந்துக்க சொல்லுங்களேன்.

என்ன ?அதிர்ச்சியில் ஜானகி கேட்டார் .
ஆமா மதனி. அதான்,"கணேசு தம்பிய தான் சொல்லுறேன்."

"அவர் வாழ்க்கையை இழந்துட்டு நிக்குறாரு". இப்போ புதுசா கல்யாணம் பண்ணி வருவது அவருக்கு தம்பியா இருந்தாலும்...
கண்ணுபட்டுடும் . சொல்லடி பட்டாலும் கண்ணாடி படக்கூடாதுன்னு சொல்லுவாங்களே மதனி.வெள்ளந்தியாய் பேசுவது போல் அவர் பேசினாலும் அவர் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நெருஞ்சி முட்களாய் குத்தியது.


என்ன பேசுறீங்க?இறுக்கமாய் வந்தது ஜானகியின் குரல் .

அது... தப்பா எடுத்துக்காதீங்க மதனி.
என்ன இருந்தாலும், "என் மக உங்க வீட்டுக்கு வாக்குபட்டு புதுசா வாழ வந்துருக்கா"

அப்போ ஏன் அவரு கண்ணுல முழிச்சிட்டுனுதான் ..."

கொஞ்சம் இடை விட்டு ...
...
...

"நான் சொல்லுறது தப்பில்லேங்களே மதனி" என்று ஜனகியிடமே கேட்டார்.
ஜானகி பதில் சொல்லும் மனநிலையில் இல்லை. போனை அப்படியே கீழே போட்டு விட்டார்.

கை கால் நடுங்க தரையில் அமர்ந்துக்கொண்டார்.
திடீரென, பேசியை கீழே போட்டுவிட்டு அன்னை தரையில் அமர்ந்ததும்
அந்த சத்தத்தில் கைகழுவ சென்றிருந்த கணேசன் பதறியடித்து ஓடி வந்தான்.

ஓடிவந்த மகனை காண்கையில் ஒரு தாயாய்
தன்னிடமே இப்படி பேசுகின்றவர்கள் ,
"மகனிடம் என்று நினைக்கையில் மனம் படும்பாடு"
"ஐயோ!"
எல்லாம் அவளால் வந்தது. அவமட்டும் ஒழுங்கா இருந்திருந்தா?...
இந்நேரம்,
"என் மகனுக்கு இந்த பேச்சேல்லாம் வந்துருக்குமா..."

பாவி மோவா, எங்கள அசிங்கபடுத்தி
"ஊருக்குள்ள கேவலப்படுத்திட்டு போய்ட்டாளே..."

அவள உள்ளங்கையில் வச்சி தாங்குனானே...
என்பிள்ளைக்கு அவா(அவள்) பண்ண துரோகத்துக்கு அவா நல்ல இருப்பாளா..

ஐயோ கடவுளே ,

இன்னும் என்னவெல்லாம் கேட்க இருக்கோ ? எனக்கு தெரியலையே ?

கணேசனுக்கு புரிந்துபோனது ,போனில் தன்னை பற்றி எதுவோ தவறாக பேசிருக்கிறார்கள்.அதனால் அம்மா இப்படி நடந்து கொள்கிறார் .

அவனும் இந்த ஒருவாரமாய் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறான்.

ம்மா..
சரி விடுங்கம்மா விடுங்க...
தாய் அருகில் அமர்ந்து அவர் கையை பிடித்துகொண்டான்.

கணேசா, ஐயா!
"என்ன மன்னிச்சிருய்யா".

"என்னால,
என்னால் தான எல்லாம்.."

அவர் உணர்ச்சி மிகுதியாய் பேச
..ம்மா ம்மா.. அமைதி கொஞ்சம் பொறுமையா இருங்க .
ஒன்னும் இல்ல... அவரை சமாதான படுத்த முனைந்தான்.

ஜானகி அமைதி ஆகுவதுபோல் தெரியவில்லை.

அம்மாவை மன்னிச்சிரு தம்பி.

இன்னைக்கு இந்த வள்ளியம்மை, "என்னவெல்லாம் பேசுறா?"

என்ன மாதிரியான பொம்பள அவள் .
"கொஞ்சம் கூட நெஞ்சில் ஈரம் இல்லாமல் எப்படியெல்லாம் பேசுறா?"
" நாக்குல நரம்பு இல்லனா எப்படி வேணுனா பேசலாமா?" கண்களில் வழிந்த நீரை முந்தானையில் துடைத்த்துக்கொண்டே மகனிடம் நியாயம் கேட்டார் .

மகன் கன்னம் தடவி ,
ஆண்டவா.." என் மகனுக்கு இப்படி எல்லாம் நடக்கலாமா?"

இப்படி பட்ட வார்த்தைகளை கேட்க வச்சிட்டியே ...

இதையெல்லாம் பார்த்துட்டு நான் இன்னும் உயிரோடு இருக்கலாமா?
என்று நெற்றியில் அடித்துக்கொண்டு அழுதார்.
என்ன தான் இரும்பான மனிதியாக இருந்தாலும் தன் பிள்ளைக்கு ஒரு அவமானம் என்கையில்

"அம்மா, ..ம்மா நிப்பாட்டுங்க; நிப்பாட்டுங்கன்னு சொல்லுறேல்ல..."
...
அதட்டலிட்டான் . அது கொஞ்சம் அவரிடம் வேலை செய்தது.

அவருக்கு ஏற்கனவே சரியில்லாத உடம்பு.
இதில் இப்படி அழுதால்,
"என்ன செய்வது?"

இப்போது அழுகை நின்று இருந்தது.
பெரும்பாடு பட்டு அவரை சமாதன படுத்திகொண்டிருந்தான் கணேசன்.
.............
சரியாக அந்த நேரம் ,
சாமி மீனாவின் தந்தை வந்துவிட்டார்.அவருக்கும் மனைவியின் வாய் தெரியும் . இருந்தாலும் மகளின் மாமியாரிடமே .....இந்த பேச்சு அதிர்ச்சியாக இருந்தது .

அவர்தான்
வள்ளி என்ன பேசுற... ஏய்! "இந்தா போனை கொண்டா ..."
மாமனாரின் சத்தத்தில் தான் உணர்வுக்கு வந்தான்.

ஆனந்துக்கே அதிர்ச்சிதான். தன் அன்னையிடமே தன் அண்ணனை எப்படியெல்லாம் பேசுகிறார் .

வள்ளி இப்படி பேசுவார் என்றேல்லாம்..,அவன் நினைக்கவில்லை.
முதலில் அதிர்ச்சியில் பார்த்துட்டு இருந்தவன்
வள்ளியிடம் இருந்து
போனை வாங்கி என்ன பேசுறீங்க?

(ஆனந்தின் சத்தத்தில் உள்ளே இருந்தவர்கள் வெளியே வந்தனர் )

கையை அவரை நோக்கி நீட்டி, "நீங்க எல்லாம் ...

ச்சை நீங்க ..உங்கள ..."

உங்ககூட பேசி என்னை நானே தாழ்த்திக்க விரும்பல,

நின்ற இடத்தில் திரும்பி தன் பக்கத்தில் நின்ற மீனாவை நோக்கி அவன் கோவம் திரும்பியது .
"உங்க அம்மா குணம் தான்.. உனக்கு இருக்குன்னா இங்கேயே விட்டுடுவா... "

இல்லையா ...?"
சொல்ல வந்ததை சொல்லலாமல் ,
அவர்கள் புறப்பட தயாராய் இருந்த வண்டியில் ஏறிவிட்டான்.

கணவன் பேசியதில் அவமானமாக இருந்தது. புது மண தம்பதியாய் விருந்துக்கு வந்த இடத்தில்
தன் அம்மாவே இப்படி செய்துவிட்டார்.

இதில் அவள் கணவனும் அத்தனை பேர் கூடி இருந்த இடத்தில் தன்னை இப்படி சொல்லிவிட்டான்.

அதிலும் சொந்தபந்தங்கள் எல்லாம் பாவமாய் அவளை பார்த்தனர்.
இதில் கூட்டத்தில் சில சலசலப்புகள்.

மீனாவுக்கு கண்கள் கரித்துக்கொண்டு வந்தது.
இவன் என்னை இன்னும் புரிந்துக கொள்ளவில்லையா?

இவ்வளவு தானா என் காதல். மனதோடு மருகி நின்றாள் .கண்கள் சொல் கேட்காமல் நீர் வடித்தது.
பார்பவர்களுக்கே
பாவமாய் இருந்தது.

மீனா அப்படியே சாமியின் குணம் .தன்மையான் குணம் .

சாமிதான் சூழல் கண்முன்னே கைமீறி சென்றதை உணர்ந்து மருமகனிடம் சென்றார்.
தம்பி

நான்.. மன்னிப்பு கேட்கிறேன் .
"அவ ஒரு புரியாத கழுதை" .

வள்ளி வாய் திறக்க ..

"ஏய்! இங்க நிற்காத போடி ..."

நான் இப்போ என்ன தப்பா பேசிட்டேன்...
என்று கணவரிடம் எகிறினார் வள்ளி.

ஏற்கனவே ,மனைவி பேசியதின் தாக்கம் மகள் கண்கலங்கி நிற்கிறாள்.

இன்னும் தான் பேசியது சரி என்று நிற்கும் மனைவியை என்ன செய்ய...?
ஓங்கி ஒன்று விட்டார்.

"இனி வாய் திறந்த கொன்னுருவேன்".
கையில் ஆள்காட்டி விரல் மட்டும் நீட்டி ...
அண்ணே !

அவங்கள விடு,
இனி பேசமாட்டாங்க...

நீ மகளையும் மாப்பிளையும் கவனி என்றார் தனம். அவர் சாமியின் தங்கை .

இதில் அங்கே நின்ற உறவுகளுக்கு வள்ளி பேசியது எல்லாம் தெரியாது. அவர்கள் எல்லாருக்கும் வள்ளியின் வாய் தெரியுமாதலால்
பார்த்துக்கொண்டிருந்த பெண்கள் கூட
வள்ளிக்கு இன்னும் ரெண்டு போடலாம் என்று
தங்களுக்குள் சலசத்துக்கொண்டிருந்தனர்.

உறவு சூழ மருமகன் மகள்என்று அனைவரும் கூடி நின்ற வீட்டின் வாயிலில்
கணவன் தன்னை அடித்தது; வள்ளிக்கு மிகவும் அவமானமாக இருந்தது.

சத்தமில்லாமல் நகர்ந்துவிட்டார் .

வள்ளிக்கு மதனி ஒருவர்
"ஒத்த புள்ள பெத்துவச்சிடு ,அவள நல்லபடியா புருஷன் வீட்டுக்கு
அனுப்பும் போது இந்த பேச்சு தேவையா"?
என்று வள்ளியை திட்டிக்கொண்டிருந்தார்.

கூட்டத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் ஒவ்வொன்று
சொல்ல சொல்ல மீனாவுக்கு வேதனையாக இருந்தது.இதில் கணவன் பேசியது என்று
மௌனமாக கண்களில் நீர் வழிய நின்றிருந்தாள் .

அவள் மனதில்,

"எத்தனை வருடகாதல் காத்திருந்து திருமணம்.
அவள் தாய் பேசியது மிக பெரிய தவறுதான். அதற்காக
"என்னை தெரியாதா?"

இதோ அத்தனையும் ஒன்றும் இல்லாமல்
என்னை, "என்ன பேசிவிட்டான் இவன்?".

யார் பேசுவதும் காதில் விழாமல் கல்லாய் சமைந்து நின்றாள் மீனா.
காதலுக்கு எப்போதுமே நியாயங்கள் வேறுதான்.மீனாவும் அப்படிதான் பார்க்கிறாள்.


பக்கத்தில் நின்ற அவள் தந்தை மகளை
மருமகனுடன் வண்டியில் ஏற்றிவிட்டார் .

அப்போதுதான் உணர்வுக்கு வந்தவாள் மீனா.
"யாரையும் நிமிர்ந்து பாராமல் தந்தைக்கு மட்டும் தலையசைத்தாள்".
சாமி,
மகள் தலையை தடவிக்கொடுத்து
வழியனுப்பிவைத்தார் .
 
Last edited:
Status
Not open for further replies.

Latest threads

Top Bottom