20 – காதலின் ரீங்காரம்

👁️ 1196 Views

அத்தியாயம் – 20

மயூரன் வீட்டிற்குள் நுழைந்த போதே மாடியறையிலிருந்து சத்தம் கேட்டது.

கீழே இருந்தே மாடியை அண்ணாந்து பார்த்து கைகளைப் பிசைந்து கொண்டு தவிப்புடன் நின்றிருந்தார் கவிதா.

அவரின் அருகில் நின்று மாடியை பார்த்துக் குரைத்துக் கொண்டிருந்தது பெப்பி.

“பேப், கோ டூ யுவர் பிளேஸ்…” என்றவனின் குரலில், பெப்பியுடன் கவிதாவும் திரும்பி பார்த்தார்.

எஜமானின் உத்தரவை கேட்டாலும் அங்கிருந்து செல்லாத பெப்பி மயூரனையே சுற்றி சுற்றி வந்து ஏதோ சொல்ல முயன்றது.

“சாப்பாடு செய்து வச்சுட்டு, சொல்லிட்டு போக மதும்மாவை கூப்பிட்டேன் தம்பி. அவங்க கதவை திறக்கவே இல்லை. ஆனா, உள்ளே ஏதோ சத்தம் கேட்டுட்டே இருக்கு…” என்று கவிதா தகவல் சொல்ல,

“நான் பார்த்துக்கிறேன் க்கா. நீங்க வீட்டுக்கு கிளம்புங்க…” என்றான் அமைதியாக.

மேலே ஒரு முறை தயக்கத்துடன் பார்த்துவிட்டு, தலையை அசைத்துவிட்டுக் கவிதா சென்றுவிட, பெப்பி இன்னும் அவனைச் சுற்றி வந்தது.

“பேப்!” என்றுமில்லாமல் கடுமையுடன் அதட்டினான் மயூரன்.

அவனின் கோபத்தைப் புரிந்து கொண்டு தீனமாக ஒரு சத்தத்தைக் கொடுத்துவிட்டு, வீட்டின் வெளியே இருந்த தன் இருப்பிடத்தை நோக்கி ஓடியது பெப்பி.

வீட்டின் பிரதான கதவை மூடிவிட்டு மாடியேறியவன், தங்கள் அறை கதவை தட்டி, “மது… கதவை திற!” என்று அதட்டலுடன் அழைத்தான்.

உடனே கதவை திறந்த மதுமதி, வெளியே நின்றிருந்தவனைக் கண்டதும், “ஏய்… நைட் என்னை என்னடா செய்த?” என்று கோபத்துடன் கேட்டபடி அவனின் சட்டையைப் பிடித்திருந்தாள் மதுமதி.

“உனக்கு என்ன ஜென்ஸ் சட்டைனா ரொம்பப் பிடிக்குமா? எப்ப பார்த்தாலும் ஒன்னு உன் அப்பா சட்டையைப் பிடிக்கிற. இல்லைனா என் சட்டையைப் பிடிக்கிற?” என்று கேட்டபடி அவனின் சட்டையில் இருந்த அவளின் கையை விலக்கி விட்டவன், சட்டை பொத்தானை ஒவ்வொன்றாகக் கழற்ற ஆரம்பித்தான்.

“என்ன செய்ற நீ?” என்று கண்களை விரித்துக் கேட்டபடி பின்னால் நகர்ந்தாள் மதுமதி.

“உனக்கு என் சட்டை தானே வேணும்? அதான் கழட்டி கொடுக்கிறேன்…” என்றபடியே அறையைச் சுற்றிப் பார்த்தான்.

போர்வை படுக்கையில் பாதியும், தரையில் பாதியுமாகக் கிடந்தது. தலையணை சுவரில் மாட்டியிருந்த தொலைக்காட்சியின் மீது பாதிச் சொருகி, மீதி தொங்கிக் கொண்டிருந்தது.

தொலைக்காட்சி முன் இருந்த மேஜையில் இருந்த பொருட்கள், பெட்சைட் டேபிளில் இருக்கும் பொருட்கள், கண்ணாடியின் முன் இருந்த பொருட்கள் என அனைத்தும், அறை முழுவதும் சிதறிக் கிடந்தன.

“என்ன இது?” என்று புருவம் உயர்த்தி, அறையைச் சுட்டிக்காட்டி கேட்டான்.

“நீ முதலில் நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுடா. என்னை என்ன பண்ணின? காலையில் ஏன் நான் அப்படி இருந்தேன்?” என்று கோபத்தில் முகம் சிவக்க கேட்டாள்.

“ஏன், உனக்கு ஞாபகம் இல்லை?” என்று கூர்மையுடன் அவளைப் பார்த்து கேட்டபடி தன் சட்டையைச் சுழற்றி அவளின் இடையைச் சுற்றி போட்டபடி தன்னை நோக்கி இழுத்தான்.

“என்ன… என்ன இது? விடு…” என்று அவள் அவனின் பிடியிலிருந்து விடுபட முயல,

“பதிலைச் சொல்லுடி…” என்று நாக்கை மடக்கி அதட்டினான்.

“எனக்கு எதுவும் நினைவு இல்லை. நைட் தலை ரொம்ப வலிச்சது. தைலம் தடவிட்டுப் படுத்துட்டேன். அப்புறம்… நீ ரூமுக்குள் வந்த மாதிரி இருந்தது… அதுக்குப் பிறகு… அதுக்குப் பிறகு… என்னை என்னடா பண்ணின? நீதான் என்னை ஏதோ பண்ணிட்ட. எனக்கு ஏன் எதுவுமே நினைவு இல்லை?” என்று அவனைச் சந்தேகமாகப் பார்த்துக் கேட்டாள்

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

“ஓஹோ… நான் உன்னை என்ன பண்ணினேனா கேட்கிற… உனக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கணும்? நீதான் நைட் தலைவலி தாங்காம கட்டிலில் உருண்டு எங்கிட்ட வந்த. வந்ததோட சும்மா இருந்தியா? தலைவலி தாங்கவே முடியலை. ஏதாவது செய்து என் தலைவலியை போக வைன்னு என்னைப் போட்டு பாடாப்படுத்தின. அதோட விட்டியா நீ? கப்புன்னு என்னைக் கட்டிப்பிடிச்சு இங்கேயே கிஸ் பண்ணிட்ட…” என்று தன் கீழ் உதட்டை பிதுக்கிக் காட்டினான்.

“பொய்! பொய்! நீ பொய் பொய்யா சொல்ற. நான் அப்படி எல்லாம் பண்ணலை. நீ ஏதோ என்னைப் பண்ணிட்டு நான் பண்ணதா பொய் சொல்ற…” என்று கோபமும் அழுகையாக அவனின் மேலாடையில்லா மார்பில் சட் சட்டென்று அடித்தாள்.

“ஷ்ஷ்! ஆஆ!” என்று அவன் வலியுடன் முனக,

“வலிக்கட்டும்! நல்லா வலிக்கட்டும்!” என்று அவள் மீண்டும் அடிக்கப் போக, அவளைச் சுற்றிப் போட்டிருந்த தனது சட்டையைத் தூக்கிப் போட்டுவிட்டுத் தன்னை அடித்துக் கொண்டிருந்த அவளின் கையைச் சட்டென்று பிடித்தான்.

“விடுடா! விடு!”

“அடியேய்! முயல் குட்டி… நைட் எல்லாம் நானும் இப்படித்தான்டி உன்கிட்ட கதறினேன். விட்டியா என்னை?” என்று அவன் கண்கள் சிரிக்கச் சொல்ல, ‘ஆஆ’ என்று வாயை லேசாகப் பிளந்து அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்.

“என்ன இதையும் பொய்னு சொல்ல போறீயா? நான் பொய் சொல்றேன்னா இல்லையான்னு இங்கே பாருடி…” என்றவன் தன் மார்பை உயர்த்தி அவளிடம் காட்டினான்.

“ஏய்… ச்சீ…” என்று அவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள முயல,

“பிச்சுப்புடுவேன்… பிச்சு… நீ செய்து வச்ச காரியத்தைப் பாருடி…” என்று குரலை உயர்த்தி அதட்டினான்.

அவன் பக்கம் முழுதாகத் திரும்பாமல், ஓரக்கண்ணால் அவனின் மார்பை பார்த்தாள்.

மயூரனின் மார்பில் ஆங்காங்கே நகக்கீறல்களும், பல்தடமும் இருப்பதைப் பார்த்த மதுமதிக்குத் தூக்கி வாரிப்போட்டது. அவளது கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.

“பார்த்தியா நீ என்ன செய்து வச்சிருக்கன்னு. இது மட்டுமா? இங்கேயும் பாரு…” என்றவன் திரும்பி நின்று அவனின் முதுகை காட்டினான். அங்கே பல இடங்களில் நகக்கீறல்கள் இருந்தன.

“இது… இது நான் பண்ணதா? இல்லை… இல்லை… நீ பொய் சொல்ற. நான்… நான் ஏன் அப்படிப் பண்ணப் போறேன்?” என்ற அவளது குரல் நம்ப முடியாமல் தழுதழுத்தது.

“பின்ன யாருடி பண்ணுவா? ரூமுக்குள்ள நாம ரெண்டு பேர் தானே இருந்தோம்? ‘புருஷா… புருஷா… மய்யூ… மய்யூரா…’ன்னு புலம்பிட்டே நேத்து நைட் நீ என்னைப் படுத்தின பாடு இருக்கே… அப்பப்பா! விடியற வரைக்கும் நீ என்னை ஒரு நிமிஷம் கூடத் தூங்க விடலை. ஒன்னுமே தெரியாத பாப்பா மாதிரி இருந்துட்டு என்னை ரேப் பண்ணிட்டியேடி பாவி! ஷ்ஷ்… ஆஆ… உடம்பு எல்லாம் எரியுதே!” என்று அவன் முகம் சுருக்கி அப்பாவியாகச் சிணுங்க,

மதுமதிக்குத் தலை சுற்றியது.

“நான்… நான்…” என்று திணறியவளால் இன்னும் நம்ப முடியவில்லை. தலையைக் குலுக்கி யோசித்துப் பார்த்தாள்.

‘தலை வலிக்குது’ என்று அரற்றியபடி அவனை ஒட்டிப் படுத்தது போல ஏதோ நிழலாய்த் தெரிந்தது. அதற்கு மேல் என்ன யோசித்தும் அவளின் நினைவிற்கு எதுவும் வரவில்லை.

“எனக்கு… எனக்கு ஏன் எதுவுமே நினைவுக்கு வரலை? நீ எனக்கு எதையும் கொடுத்திட்டியா?” என்று சந்தேகத்துடன் கேட்டவளை கடுமையுடன் முறைத்தான் மயூரன்.

“அப்படி உன்னை ஏதாவது கொடுத்து மயக்கி என் கூட வாழ வைக்கணும்னு நான் நினைச்சிருந்தால், அதுக்கு எதுக்குடி நான் இந்த ஒன்னே கால் வருஷம் காத்திருக்கணும்? அதுவும் நாம இத்தனை நாளும் ஒரே பெட்டில்தான் படுத்திருக்கோம். ஒரு நாளாவது நான் அத்துமீறி நடந்திருக்கேனா? இல்லை, உன்னை என் கூட வாழச் சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கேனா? உனக்கு எதையாவது கொடுத்து மயக்கியிருக்கேனா? சொல்லுடி…” என்று அவளின் தோள்கள் இரண்டையும் கைகளால் பற்றி உலுக்கிக் கேட்டான்.

மதுமதியின் கண்களிலிருந்து சரசரவெனக் கண்ணீர் இறங்கியது.

அவன் கேட்பது எல்லாமே நியாயம்தான்! அவன் நினைத்திருந்தால் அவளைத் தன்னுடன் தக்க வைத்துக்கொள்ளத் தாம்பத்தியத்தை ஆயுதமாகப் பயன்படுத்தியிருக்க முடியுமே! வாயால் சீண்டுவானே தவிர, அவளை உடல் ரீதியாக அவன் அணுகியதே இல்லையே… திருமணம் முடிந்த புதிதில் அவள் இடையில் கத்தியை சொருகி வைத்துக் கொண்டிருந்ததுண்டு. ஆனால், அவன் தன்னை உறக்கத்தில் கூட நெருங்காமல் இருக்க, தன்னாலேயே அவன் மீது நம்பிக்கை வந்து அதன்பின் அவள் கத்தியே வைத்துக் கொள்வதில்லை. ஒரு ட்ராயரில் போட்டு வைத்திருந்தாள். அதைப் பார்த்து அவன் கிண்டலாகச் சிரித்தானே தவிர, அதன்பின்னும் அவளை நெருங்கவில்லை.

இப்போது மட்டும் அவனின் மீது பழி சொல்வது அபத்தமாக இருந்தது. கூடவே, இரவின் நிகழ்வில் அவளின் உடலில் அவன் ஏற்படுத்திய அடையாளங்களை விட, அவன் உடலில்தான் அதிகக் காயங்கள் இருப்பது போல இருந்தன. அதை ஏற்படுத்தியது தான்தான் என்று உறுதியாகவும், தன்னையே கீழாக நினைத்தாள் மதுமதி. மெல்ல மெல்ல ஆரம்பித்த அவளின் அழுகை கதறலாக ஒலிக்க ஆரம்பித்தது.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com