👁️ 1196 Views
தரையில் மடிந்து அமர்ந்து அவள் அழ ஆரம்பிக்க, “ஏய்… மது… என்னடி? ஏன் இப்படி அழற?” என்று அவசரமாகக் கீழே குனிந்து அவளைத் தூக்க முயன்றான் மயூரன்.
மதுமதி அவனது கைகளை உதறிவிட்டுத் இன்னும் சத்தமாக விக்கி விக்கி அழுதாள். “என்னைத் தொடாதே! போ… போ… என் பக்கத்தில் வராதே! எனக்கே என்னைப் பிடிக்கல… நான்… நான் எப்படி இப்படி நடந்துகிட்டேன்? எனக்கு உன்னைப் பிடிக்காதுன்னு தானே இவ்வளவு நாளா சொல்லிட்டு இருக்கேன். அப்புறம் எப்படி… எப்படி நேத்து மட்டும்…? நான் கெட்டப் பொண்ணா ஆகிட்டேன். நான்… நான் போய் அசிங்கமா நடந்துகிட்டேன். அசிங்கம்! நான் அசிங்கம்! நான் கெட்டப் பொண்ணு… நான் ரொம்ப ரொம்பக் கெட்ட பொண்ணு!” என்று தன் முகத்திலேயே கையால் அடித்துக் கொண்டே கதறினாள் மதுமதி.
“ஏய்… நிறுத்துடி! நிறுத்து! மது… இங்கே பார்… என்னைப் பார்! தங்கப்பெண்ணே… என்னைப் பாருடி…” என்று அவளின் கையைப் பற்றித் தடுத்துத் தன்னைப் பார்க்க வைக்க முயன்றான் மயூரன். ஆனால், அவளோ திமிறியபடி, அவனின் முகம் பார்க்காமல் கதறி தீர்த்தாள்.

“என்னைத் தங்கப் பொண்ணு சொல்லாதே! நான் தங்கம் இல்லை… அசிங்கம்… அசிங்கம்…” என்று சொல்லி சொல்லி அவள் அழ,
“போதும்டி போதும்! நிறுத்து!” என்று அந்த அறையே அதிர கத்தினான் மயூரன்.
அதில் திடுக்கிட்டு அவள் அரண்டு போன முகத்துடன் கணவனின் முகம் பார்த்தாள். பயத்தில் அவளது அழுகை சட்டென்று நின்று போயிருந்தது.
“லூசாடி நீ? புருஷன் கூட இருந்ததைப் போய் அசிங்கம்னு சொல்றது தான்டி அசிங்கம், முட்டாள்!” என்று கடுமையாகத் திட்டினான்.
“ஆனா… ஆனா… எனக்கு… உன்னைப் பிடிக்காதே!” என்று தேம்பிக்கொண்டே கேட்டாள்.
“பிடிக்காதா? பொய் சொல்லாதே! நைட் எல்லாம் மய்யூ… மய்யூரான்னு என்னை எப்படி ஆசையா கொஞ்சின தெரியுமா? பிடிக்காத புருஷனை யாராவது கொஞ்சுவாங்களாடி?” என்று புருவம் உயர்த்தி ஆச்சரியமாகக் கேட்டான்.
அவள் ஒரு முறை அழைத்ததுதான் அவனின் நினைவில் இருந்தது. அதிலேயே அவன் பூரித்துப் போயிருந்தான்.
அதிலும் அவள் தன் பெயரை சொல்லி, புருஷனுடன் இருப்பதாக நினைத்துத்தான் அவள் தன்னோடு கூடி களித்தாள் என்பது வேறு கூடுதலாக அவனைச் சிறகில்லாமல் பறக்க வைத்துக் கொண்டிருந்தது.
“உன் பெயரையா சொன்னேன்?” என்று நம்ப முடியாமல் கேட்டாள்.
“ஆமா… நீ நம்பலைனா அடுத்த முறை நீ என் பெயர் சொன்னதை ரெக்கார்ட் பண்ணி வச்சு போட்டு காட்டுறேன்…” என்றான் சிரிக்காமல்.
“எதே! அடுத்த முறையா? உனக்கு அந்த ஆசை வேற இருக்கா? பிச்சுப்புடுவேன் பிச்சு!” என்று ஒற்றை விரலை நீட்டி எச்சரித்தவளின் விரலை மடக்கிப் பிடித்தவன், “என் டைலாகை எனக்கே திருப்பிச் சொல்றியா? காப்பிப் பண்ணாம சொந்தமா யோசிடி…” என்று கிண்டல் செய்தவனின் கையிலிருந்து தன் கையை விலக்கிக் கொள்ள முயன்றாள்.
அதற்கு விடாமல் அவளின் விரலை பிடித்துத் தன்னை நோக்கி வேகமாக இழுத்தான். அவனின் மீதே அவள் மோதி, நெற்றியோடு நெற்றி முட்டிக் கொள்ள, “ஏய்… என்ன பண்ற?” என்று திமிறினாள்.
“அப்போ போனில் ஏன்டி அசிங்கமா பேசின?” என்று அவளின் கண்களைப் பார்த்துக் கோபம் துளிர்க்க கேட்டான்.
“அது… அது… ஏதோ பதற்றத்தில்… கோபத்தில்…” என்றவளுக்கு மீண்டும் சொல்ல கூடக் கூசும் அந்த வார்த்தையைத் தானே சொன்னதை நினைத்து குன்றலுடன் வெட்கினாள்.
“கோபத்தில் என்ன வேணா பேசுவியா? அதுவும் கால் கேர்ள் ரேஞ்சுக்கு உன்னையே கீழே இறக்கி. இனி ஒரு முறை அப்படிப் பேசிப் பாரு… நேரில் இருந்திருந்தால் அப்போவே அடிச்சு பல்லை கழட்டியிருப்பேன்…” என்றான் பற்களைக் கடித்துக் கொண்டு.
“எனக்கு மட்டும் அப்படிப் பேசணும்னு ஆசையா? காலையில் எழுந்து பார்க்கும் போது வெறும் போர்வை மட்டும் என் மேல் இருக்கு. அப்போ நான் என்ன நினைப்பேன்? உன் மேல்தான் கோபம் கோபமா வந்துச்சு… அதான்…” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.
அவளின் தாடையைப் பற்றித் தன்னைப் பார்க்க வைத்தவன், “இனி கோபத்தில் கூடத் தப்பான வார்த்தை உன் வாயிலிருந்து வரக் கூடாது. வந்துச்சு… இந்த உதட்டை அப்படியே கடிச்சு வச்சிருவேன்…” என்று அவளின் உதடுகளைக் கடிப்பது போல் பாவனைக் காட்டினான்.
“ச்சீ… போ…” என்று வேகமாக அவனை விட்டு விலகி எழுந்த மதுமதி… அவனை முறைப்புடன் பார்க்க, தானும் நிதானமா எழுந்தவன், “அப்புறம் தங்கப் பெண்ணே… திரும்ப எப்ப என்னை ரேப் பண்ணுவ? என்று அவன் ஆர்வமாகக் கேட்க,
“அசிங்கமா பேசாதேடா…” என்று கீழே விழுந்து கிடந்த ஒரு தலையணையைத் தூக்கி அவனின் முகத்தின் மீதே கோபத்துடன் விட்டெறிந்தாள்.
தலையணையைப் பிடித்துத் தூரப் போட்டவன், “என்ன அநியாயம் இது? என் கற்பை கடலை மிட்டாய் சாப்பிடுவது போலச் சூறையாடிட்டு… நான் அசிங்கமா பேசுறேனா? ஒரு கட்டப் பிரம்மச்சாரிக்கு பொண்ணு வாசனையைக் காட்டியது நீதான். இத்தனை நாளும் நல்ல பையனா நான் தள்ளிதான் இருந்தேன். ஆனா… நீதான் எனக்கு ருசி காட்டி ஆரம்பிச்சு வச்சிருக்க. அதனால் இனி எனக்குத் தினமும் வேணும்…” என்று கால்களை உதைத்துக் கொண்டு அவன் அடமாகச் சிணுங்க, அவளோ உஷ்ணமாக அவனைப் பார்த்தாள்.
“என்னடி உன் மய்யூவை ரொம்ப ஆசையா பார்க்கிற போல?” என்று அவன் தொடர்ந்து சீண்ட, அவளின் முகமோ யோசனையில் சுருங்கியது.
தனக்கு ஏன் எதுவும் நினைவில்லை என்பதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தாள். கூடவே தனக்குத் தலைவலி வரும் அன்று எல்லாம் அப்படி நினைவு இல்லாமல் போவது ஏதோ உறுத்தியது. தனக்கு வருவது சாதாரணத் தலைவலி இல்லையோ? என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
அவளின் யோசனை படிந்த முகத்தைப் பார்த்த மயூரன், தன் சீண்டலை விட்டுவிட்டு, “என்ன யோசிக்கிற மது?” என்று கேட்டான்.
“எனக்கு எதுவும் பெரிய வியாதி இருக்குமா?” என்று பயத்துடன் அவனிடம் கேட்டாள்.
“ஏய் மது… ஏன் இப்படி எல்லாம் கேட்கிற?”
“நீ நைட் நடந்ததைப் பற்றி என்னென்னவோ சொல்ற. ஆனா, எனக்கு ஏன் எல்லாமே மறந்து போச்சு? எனக்குத் தலைவலி வந்தாலே அப்படித்தான் மறந்து போகுது. நைட் என்ன நடந்துச்சுன்னு நினைவே இருக்க மாட்டிங்குது. அப்போ எனக்கு ஏதோ பெரிய வியாதி இருக்குன்னு தானே அர்த்தம்?” என்று லேசாக உடல் நடுங்க கேட்டாள்.
‘உனக்கு மறந்து போறதுக்குக் காரணம் வியாதி இல்லைடி. அந்தத் தைலம் தான்’ அவளிடம் சொல்ல முடியாமல் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டவன், “எதையாவது உளறாதே! அப்படி எல்லாம் எதுவும் இருக்காது. நீ உன் வேலைக்காக ரொம்ப நேரம் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் பார்க்கிற. அதோட… ஏதாவது கஷ்டமான வேலை பார்த்து அதைப் பத்தியே யோசிச்சுட்டு இருந்திருப்ப. அதான் வேற எதுவும் உன் மைண்ட்ல ஏறி இருக்காது…” என்றான் சமாதானமாக.
“எனக்கு வேலை முடிக்க முடியாம ரொம்ப ஸ்ட்ரெஸ் கொடுக்குற அன்னைக்கு மட்டும் தான் தலைவலி வரும். அதனால்தானோ?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள்.
“அப்படித்தான் இருக்கும். உனக்கு ஒருவேளை பயமா இருந்தால், வா போய்த் தலைவலிக்கு டாக்டரை பார்த்துட்டு வரலாம்…” என்று அழைத்தான்.
“அதெல்லாம் ஒன்னும் வேணாம். எனக்கு இன்னும் இரண்டு நாளில் ஒரு வெப்சைட் ரெடி பண்ணி கொடுக்கிற வேலை இருக்கு. ஒரு ஹாஸ்பிட்டலுக்காக ரெடி பண்ற வெப்சைட் அது. நேத்து அதில்தான் கொஞ்சம் சொதப்பிட்டேன். அதை நினைச்சு டென்ஷனில் தான் தலைவலி வந்துச்சு…” என்று சொல்லிக் கொண்டே குளியலறைக்குச் சென்றுவிட்டாள்.
அவளை எப்படியோ சமாளித்துவிட்டோம் என “உஃப்!” என்று பெருமூச்சு விட்டான் மயூரன். கூடவே, கணவனுடன் இருந்ததற்கே கெட்ட பெண் என்று சொல்லிக் கொள்கிறாள். அசிங்கம் என்கிறாள்… தன்னையே கீழாக நினைத்து உடைந்து போகிறாள். இதே அந்தக் காணொளி பற்றித் தெரிந்திருந்தால்? என்று யோசித்துப் பார்த்தவனுக்கு அதற்கு மேல் நினைக்க முடியவில்லை. அதை அவளிடம் சொல்லாமல் மறைத்ததே நல்லது! இனியும் அவளுக்கு அவ்விஷயத்தைத் தெரியவிடவே கூடாது என்று மீண்டும் தனக்குள் உறுதியாகச் சொல்லிக் கொண்டான் மயூரன்.
அதன்பின் மதுமதி அவர்களுக்குள் நடந்ததைப் பற்றி எதுவும் பேசவில்லை என்றாலும், ‘தானா அப்படி?’ என்று அவள் மெல்ல முணுமுணுத்துக் கொண்டதை கேட்டிருக்கிறான். ஏதோ தவறு செய்துவிட்ட பாவனையில் அவள் வருந்திக் கொள்வதையும் பார்த்தான்.
அவள் அப்படிக் கவலைப்படுவதைப் பார்த்து, தன் மேலே பழியைப் போட்டுக் கொண்டிருக்கலாமோ என்று மயூரன் நினைத்ததுண்டு. ஆனால், அப்படிச் சொன்னால், அவள் தன்னை இன்னும் வெறுத்து ஒதுக்கி விலகி விடவே நினைப்பாள். அது அவர்களது உறவில் மீள முடியாத விரிசலை ஏற்படுத்திவிடும் என்று நினைத்தவன், ஒரு பாதி உண்மையைச் சொன்னதே நல்லது என்று நினைத்துக் கொண்டான்.
அவனின் எண்ணத்திற்கு ஏற்ப மதுமதி அதன்பின் அவனை அவ்விஷயத்தில் குற்றம் சொல்லவில்லை. அதே நேரம் விக்ரம், பிரிவு, தந்தைக்குத் தண்டனை என்றும் பேசவில்லை. அவளின் மனத்தில் தற்போது என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் என மயூரனுக்குத் தெரியவில்லை.
“என்ன ரொம்ப அமைதியா இருக்க?” என்று கூடக் கேட்டுப் பார்த்துவிட்டான்.
‘ஒன்றுமில்லை’ என்பதுபோல் தலையை அசைத்துவிடுவாள்.
அந்நிலையிலேயே இரண்டு மாதங்கள் விரைந்து ஓடியிருக்க, ஒரு நாள் காலை எழுந்து குளியலறை செல்ல போனவள் வழியிலேயே தள்ளாடி விழப் போனாள். ஜாக்கிங் செல்ல கிளம்பிக் கொண்டிருந்த மயூரன், “ஏய், மது…” என்று வேகமாக வந்து அவளைத் தாங்கிப் பிடித்து மீண்டும் கட்டிலில் அமர வைத்தான்.
தலையைத் தலையை அவள் குலுக்கிக் கொள்ள, “என்னடி செய்து? திரும்பத் தலைவலிக்குதா?” என்று கேட்டான்.
“தலை கிறுகிறுன்னு சுத்துது…” என்றவள், தலையிலேயே கையால் தட்டிக் கொள்ள,
“என்ன பண்ற நீ?” என்று அவளின் கையைப் பிடித்துத் தடுத்தவன், “இந்தத் தண்ணியைக் குடி…” என்று தண்ணீர் பாட்டிலை அவளிடம் கொடுத்தான்.
அதை வாங்கி அருந்தியவள் அப்படியே ஓங்கரிக்க, “என்னடி மது… என்ன?” என்று அவளின் மார்பில் அவன் தடவிக் கொடுக்க, அந்நிலையிலும் அவனின் கையைப் பிடித்துத் தள்ளிவிட்டவள், வேகமாக குளியலறை சென்று தண்ணீரையே வாந்தியாக எடுத்தாள்.
பயந்து போன மயூரன் அவளின் பின்னால் ஓட, அதற்குள் தானே முகம் கழுவிவிட்டு ஏதோ யோசனையுடன் மதுமதி சோர்வாக எதிரே வர, “என்னடி ஆச்சு உனக்கு? எதுக்குத் தலைச் சுத்தல் வாந்தி வருது?” என்று கேட்டவனுக்கே ஏதோ பிடிபடுவது போல் இருக்க, மனைவியின் முகத்தை ஆர்வத்துடன் பார்த்தான்.
முகம் வெளுக்க நின்றிருந்த மதுமதியின் நிலையே அவனின் சந்தேகத்தை உறுதிப்படுத்த, “மது…” என்று உற்சாகத்துடன் கூவினான் மயூரன்.
©nandhavanamnovels.com