ஓருயிரென வாழ..!!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 13)
அதானே பார்த்தேன், சண்முகியா கொக்கா...? எந்த மாமியார், மகன் பொண்டாட்டிக்கு சப்போர்ட் வந்தா உடனே சும்மா விட்டிருக்காங்க...? ஜீவி இப்ப பார்க்கிறது, கேட்குறதெல்லாம்
ரொம்ப கம்மி. எல்லா மாமியாரும் கடைசியா ஒரு அஸ்திரத்தை யூஸ் பண்ணுவாங்க பாருங்க...
அது தான் உலகத்துலயே பெரிய அபத்தம். அதாவது, "கல்யாணமாகி ஒரே நாள்ல அப்படி என்ன சொக்குப்பொடி போட்டு, எதை காட்டி மயக்கிட்டான்னு தெரியலையே" என்கிற அபத்தமான வார்த்தைத் தான் அது. அதுலேயும், கௌதம் வேற கல்யாணம் வேணாம், வேணாம்ன்னு மறுத்திட்டு இப்ப இப்படி பொண்டாட்டிக்கு சப்போட்டா வித்தா சும்மாவா விட்டுடும் சண்முகி, முழிசா சந்திரமுகியா மாறிடுச்சா இல்லையா..? (இந்த வார்த்தையை என்னை சொன்னதுக்கு, என் புருசன் அதாவது என் மாமியாரோட மகன் 'நீ அப்பாவுக்கு என்ன சொக்குப்பொடி போட்டியோ, எதை காட்டுனியோ.. அதேத்தான் என் பொண்டாட்டி எனக்கும் செய்தா, நீ செய்தா அதுக்கிப்பேரு புனிதம், அதையே நாங்க செய்தா அசிங்கமான்னு', நச்சுன்னு ஒரேயொரு வார்த்தை தான் கேட்டாரு.. அதற்கப்புறம் கொஞ்சம் வாயை அடக்குனாங்க.
அது மட்டுமா, எங்க மாமியார் ஒருபடிமேலயே போய், அடிக்கடி என்னை "நீ நாசமா போயிடுவேன்னு" சொல்லுவாங்க, ஒருத்தடவை இவர் உள்ள இருக்கிறது தெரியாமல் அப்படி சொல்லப்போய், அதை இவர் கேட்டுட்டு, இவரு உடனே வெளியே வந்து "எப்படி அவ நாசமா போகணும், நான் செத்து அவ நாசமா போகணுமா, இல்ல அவ செத்து நான் நாசமா போகணுமா" ன்னு பட்டுன்னு கேட்டுட்டாரு. அன்னைக்குத் தான், அவருக்குத் தன்னோட அம்மாவோட மறுபக்கமே தெரிஞ்சது. நான் சொன்னப்பவெல்லாம் அவர் காதுலயே வாங்கிக்கலை, அவரே சில வார்த்தைகளை கேட்டப்பிறகு தான் அவருக்கு என்னோட நிலைமையே புரிஞ்சது, எங்களுக்கு குழந்தை வேற இல்லையா...? அப்படின்னா எத்தனை வலிகளை தாங்கி இருப்பேன்னு... அப்பத்தான் அவருக்கு என்னோட வலியும், வேதனையும் புரிஞ்சது. (எனக்கு கர்பப் பை பெருசா இருந்ததால, எல்லா வேலைகளையும் நானே குனிஞ்சு, நிமிர்ந்து பார்த்ததால கர்ப்பம் தங்க முடியாமல் கலைஞ்சு, கலைஞ்சு வெளியே வந்திடும்).
இன்னைக்கு, மகதியும் ஜீவிதாவும் அந்த வலிகளை்த் தான் அனுபவிச்சிட்டு இருக்காங்கன்னு தோணுது..
திரும்ப பழசையெல்லாம் ஞாபகாப்படுத்திட்டாங்கன்னும் தோணுது.
நிசமாவே எனக்கு கடந்த மூணு அத்தியாயங்களை படிக்கிறச்ச என் பீபி ஒரேயடியா எகிறுது.
தயவுசெய்து, என் சார்பா சண்முகிக்கு கௌதம் மூலமா ஒரு நல்ல பாடம் சொல்லி கொடுக்குற மாதிரி செய்யுங்களேன் ப்ளீஸ்.
ஏன்னா, மகதி சொன்ன மாதிரி ஒரு பெண்ணுக்கு பிறந்தவீடும் சொந்தமில்லாமல், புகுந்த வீடும் சொந்தமில்லாமல் தவிக்குறது தான் ரொம்ப கொடுமையே.
அதுலேயும் கோகுல் மாதிரி
எதைச் சொன்னாலும் அம்மா கோண்டு மாதிரி மண்டையை ஆட்டுறவன் கிடைச்சிட்டால் அதை விட கொடுமை வேறெதுவும் இல்லை.



CRVS (or) CRVS 2797