- Joined
- Sep 16, 2024
- Messages
- 738
- Reaction score
- 4,423
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் - 32
ஊரில் இருந்து வந்திருந்த வெண்ணிலாவின் உறவுகள் மனோகர் ஏற்பாடு செய்திருந்த ஒரு வேனில்… பனிமலர் மட்டும் கணவன் மகனுடன் அவர்கள் பைக்கில்…
சுரேன் வீட்டு மனிதர்கள் அவரவர் கார்களில்… அவர்களுடன் பயணித்து மணமகன் இல்லம் வந்து சேர்ந்தனர் மணமக்கள்.
சுதாவும் ரஞ்சனியும் ஆலம் சுற்றி மணமக்களை வரவேற்று வீட்டுக்குள்ளே அழைத்துச் சென்றார்கள்.
நளினி பெண் வீட்டினரை வந்து வரவேற்று உட்காரச் சொல்லிவிட்டு, “யமுனா” என்று குரல் கொடுக்க…
யமுனா உள்ளே இருந்து வந்தவர், “வாங்க” சொல்லி அனைவரையும் வரவேற்று அஞ்சனாவிடம் அவர்களுக்குக் குடிக்கக் கொடுக்கச் சொல்லிவிட்டு,
“வாம்மா நிலா!” என்று வெண்ணிலாவின் கையைப் பற்றிக்கொள்ள… சர்வா தலை சுற்றியது போல் பாவனை செய்ய… சுரேன் அவனை யாரும் அறியாமல் கிள்ளி வைத்தான்.
“த்சூ விடுடா வலிக்குது. பின்ன என்னடா மாப்ள, உங்கம்மா அதிசயத்துல அதிசயமா இப்படி அன்பா நடந்துக்கிட்டா மயக்கம் வருதுல்ல?”
“சர்வா… என் அண்ணியையே கிண்டல் பண்ணுவியா?” என்று விசாலி மகனை மெல்லிய கண்டிப்புடன் பார்த்தார்.
“இன்னைக்காச்சும் உன் வாயைப் பொத்தி வச்சிட்டு அடக்கமா இரு டா. கெஸ்ட் முன்னாடி விளையாடாத மச்சான்.” சுரேன் சன்னக் குரலில் சர்வேஷிடம் சொன்னான்.
“டேய்… சொல்றது நீ தானா மாப்ள? கல்யாணம் ஆன உடனே உனக்கு என்னடா ஆச்சி? எதுவும் நல்ல முனி கினி வந்து மேல ஏறியிருக்கா?”
“கடுப்பேத்தற மச்சான்!” சுரேன் மீண்டும் சர்வேஷை கிள்ள…
“உன்ட்ட குட்டும் கிள்ளும் வாங்குறதுக்கா விசாலி ஆத்தா என்னைய பெத்து எடுத்துப் பாத்து பாத்து வளர்த்து விட்டிருக்கு? பாரு கைல இருக்குற பாதி சதைய காணோம்!”
சுரேன் சட்டென அவன் மச்சானின் கையைப் பார்க்க… சர்வா சிரிக்க… சுரேன் தன்னை வாறிய மச்சானைக் கடுமையாக முறைத்தான்.
“கல்யாணம் பண்ணுனா உலகமே மறந்து போகும்னு சொல்றது உண்மை தான் போல.” என்றான் சர்வா சுரேனின் காதருகே சென்று.
“நீயும் மாட்டுவல்ல அப்ப இருக்குடி!”
சர்வா சன்னச்சிரிப்புடன் சுரேனை அர்த்தத்துடன் பார்த்தான்.
“ஏற்கனவே சிக்கிட்ட! அப்படித்தானடா? இது எப்படா நடந்திச்சி… பொண்ணு யாரு மச்சான்?”
“ஏய் நீ இவ்வளவு எக்சைட் ஆகுற அளவுக்கு ஒகட்டி லேதுடா மாப்ள. நான் அவங்கள பார்த்ததே உங்க ரிசெப்ஷன்ல தான். இனி மேல தான் யாரு எவருன்னு கேட்டுத் தெரிஞ்சிக்கணும்.”
“எனி ஹெல்ப் மச்சான்?”
“வேணாஞ்சாமி! நானே பார்த்துக்குவேன்.” என்று சொல்லி சர்வா அவசரமாக இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி ஒரு கும்பிடு போட… சுரேன் நமுட்டுச் சிரிப்போடு அவனைப் பார்த்தான்.
வெண்ணிலாவுக்கு இவர்களின் பேச்சுக் கேட்கா விட்டாலும் என்னவோ என்று கேள்வியுடன் சுரேனைப் பார்த்தாள்.
“ஒன்னுமில்லை” என்பதுபோல் அவன் உதடசைக்க… சர்வேஷ் பார்த்துவிட்டு இருவரையும் ஓட்டிக்கொண்டிருந்தான்.
“நல்ல நேரம் முடியுறதுக்குள்ள மருமகள விளக்கேத்த சொல்லு யமுனா.” நளினி குறிப்புக் காட்டினார்.
அவரால் உற்சாகமாக எழுந்து இழுத்துப் போட்டுச் செய்ய முடியவில்லை. இல்லையென்றால் ஆசை மகனின் மனைவி முதல் முதலாய் புகுந்த வீடு வந்திருக்கும் நல்ல நாளில் இப்படி அசந்து அசந்து உட்கார்ந்து இருப்பாரா?
“சுரேன், வெண்ணிலாவ கூட்டிப் போய் விளக்கேத்துப்பா. வாம்மா நிலா. அஞ்சனா, ரஞ்சனி வாங்க இப்படி. அண்ணி வாங்கண்ணி.” என்று சொல்லி விசாலியையும் உடன் அழைத்துக்கொண்டார்.
பனிமலர் யமுனா கூப்பிடாமலேயே அண்ணன் மகளைத் தொடர்ந்து சென்றார். கூடவே அவர் மகனும்.
நளினி தான் கவனித்து, ஹாலில் ஓரமாக நின்றிருந்த நிலாவின் மூத்த பெரியப்பா, பெரியம்மா இருவரையும் பார்த்து மணமக்களுடன் போகச் சொன்னார்.
“நீங்களும் வாங்களேன் பெரிம்மா.” சுரேன் அவரையும் கூப்பிட செய்ய… அவனிடம் மயக்கம் தலைசுத்தல் என்று உள்ளதைச் சொல்லி விட்டு யார் பேச்சு வாங்குவது?
“அதான் இத்தனை பேரு கூட இருக்காங்கல்ல சுரேனு. நீங்க போயி விளக்கேத்தி வச்சிட்டு நல்லா கும்பிட்டு வாங்க.”
“அட, வாங்க பெரிம்மா. எந்திரிங்க. எழுப்பி விடவா?” சுரேன் நளினியை வற்புறுத்தவும்,
“பொறுடா நானே எந்திரிச்சு வரேன். முட்டு வலின்னு அக்கடான்னு கொஞ்ச நேரம் உக்காரலாம்னு பாத்தா விடுறானா பாரு.” என்றார் அலுப்புடன்.
“அப்படிச் சொல்ல வேண்டியது தான பெரிம்மா. நீங்க இருங்க.” என்றுவிட்டு நிலாவின் கை பிடித்து பூஜை ரூம் அழைத்துச் சென்றான்.
பூஜை ரூம் சதுரமாக நல்ல அமைப்புடன் இருந்தது. ஒரு ஏழெட்டுப் பேர் வரை இடைஞ்சல் இல்லாமல் நிற்க முடியும்.
வெண்ணிலா சுரேனுடன் வெண்ணிலாவின் பெரியப்பா, பெரியம்மா, விசாலி, யமுனா மற்றும் ரஞ்சனி மட்டும் உள்ளே நிற்க, மற்றவர்கள் கதவருகே வெளியே நின்றுகொண்டார்கள்.
விசாலியும் யமுனாவும் வழி நடத்த, அவர்கள் சொன்னது போல் விளக்குத்திரியை நறுவிசாகத் திரித்து, முனையை மெல்லிசாக உருட்டியென ரெடி பண்ணிவிட்டு விளக்குகளை ஏற்றி வைத்தாள் வெண்ணிலா.
விளக்கேற்றி முடித்ததும் தீபாராதனை காட்டினாள். சுரேனை மனைவிக்கு நெற்றி வகிடில் குங்குமம் வைக்கச் சொல்ல, அவன் அவ்வாறே செய்தான்.
ரஞ்சனி, “தாலிலையும் வச்சி விடுடா.” எனவும்… சுரேன் வாய் கொள்ளா புன்னகையுடன் நிலா முகத்தைப் பார்த்தபடி மஞ்சள் பூச்சுடன் மின்னிய மாங்கல்யத்திலும் வைத்துவிட்டான்.
தாலிக்கொடியை எடுத்து அவனுக்கு ஏதுவாகப் பிடித்து நின்ற நிலாவுக்கு உடல் சிலிர்த்துப் போனது. இருவரும் உளமார தெய்வங்களை வணங்கிவிட்டு, பெரியவர்களிடம் ஆசி பெற்று வெளியே வந்தார்கள்.
வெளியே வந்ததும் நளினி அருகில் சென்ற சுரேன், “திருநீறு பூசிவிடுங்க பெரிம்மா.” சொல்ல… அவருக்கு மனம் பொங்கி தழும்பியது. திருநீறு பூசிய கையோடு மகன், மருமகள் இருவரையும் அணைத்துக்கொண்டார்.
புதுப்பெண், மாப்பிள்ளை இருவரையும் உட்கார வைத்துப் பாலும் பழமும் கொடுக்க… உறவுகள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க… ஒரே சிரிப்பும் கலாய்ப்புமாக நேரம் சென்றது.
மண்டபத்தில் இருந்து சதாசிவம், ரமணன் அழைக்கச் செய்ய, சர்வேஷ் அங்கே புறப்பட்டுப் போயிருந்தான்.
வெண்ணிலா களைப்புடன் இருந்தாலும் மகிழ்வுடனே அத்தனை நிகழ்வுகளிலும் ஈடுபட்டாள். ஆனால், நேரம் செல்லச் செல்ல அவளுடைய உற்சாகம் குறைந்து போனது.
அதே நேரம் சுரேனுக்கு ஏதோ அழைப்பு வரச் செய்ய… மனைவியின் நிலை அவனுக்குத் தெரியாமல் போனது.
அவன் அவளிடம், “முக்கியமான கால் நிலா. நீ பேசிட்டு இரு. இல்ல நம்ம ரூம்ல போயி ரெஸ்ட் எடு. அஞ்சு நிமிசத்துல வந்திர்றேன்.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.
புது இடம். சுற்றிலும் புது உறவினர்கள். நாலைந்து நாட்களாகச் சரியாக உறங்காதது என்று சேர்ந்து அவளுக்கு ஒருவித அசௌகரியமான உணர்வு எழுந்தது.
சரியாக அந்த நேரம் தான் சுரேனும் வெளியே போக வேண்டுமா? ஐந்து நிமிடம் தானே வந்துவிடுவான் என நிலா இருக்க… அவன் ஐந்து நிமிடங்கள் சென்றும் வரவில்லை.
வெண்ணிலாவுக்கு அத்துணை அயர்ச்சி. அவள் வீட்டுக்குச் சென்று அவள் அறையில் ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. இப்போதே அவள் வீட்டை மிஸ் செய்தாள்.
அன்று இரவும் மறுநாள் முழுவதும் வெண்ணிலா வீட்டில் தான் புது மணத்தம்பதியர் தங்கும்படி ஏற்பாடு ஆகியிருந்தது. ஆனால், அவர்கள் அங்கு செல்ல இன்னும் நேரம் இருக்க…
வெண்ணிலாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. தலைவலி வேறு மண்டையைப் பிளப்பது போல் இருந்தது.
அவளருகே சில பெரியவர்கள் மட்டும் இருந்தார்கள். அவள் சொந்தம் சுரேன் சொந்தம் சிலர் கலைந்து சென்றிருக்க… சிலர் அயர்வில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள்.
சட்டென வானிலை மாறின உணர்வு அவளுக்கு. அம்மாவையும் அப்பாவையும் தேடியது மனது. யாருக்கும் அழைத்துப் பேச முடியாத நிலை வேறு.
அவள் ஃபோன் அவள் அம்மாவிடம் இருந்தது. மறந்து விட்டு வந்திருந்தாள். அந்தச் சூழ்நிலையை வெறுத்தாள். அவள் கண்கள் கலங்கும் போலிருக்க அடக்கிக்கொண்டாள்,
“நம்ம ரூம்ல போய் ரெஸ்ட் எடுன்னு சொன்னா ஆச்சா. அந்த நம்ம ரூம் எங்கடா இருக்கு? இந்தப் பெருசுக கிட்டப் போயி உன் ரூமுக்கு போகணும்னு எப்படிக் கேக்குறது?
கல்யாணம் ஆன அன்னைக்கே நல்லா வச்சி செய்யுறடா பக்கி!” என்று மனத்தில் கணவனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.
ஸ்மிர்த்தி அழுதுகொண்டே இருக்க, சுதா மகளைத் தங்கள் ரூம் அழைத்துச் சென்றுவிட்டாள். என்ன செய்தும் அவளால் மகளைச் சமாதானப்படுத்த முடியவில்லை.
அதனால், மாமியாரை அழைத்து உடன் வைத்துக்கொண்டாள். யமுனாவுடன் விசாலியும் போக, இருவருமே அங்கு தான் இருந்தார்கள்.
நளினிக்கு தலைசுற்று, தலைவலியென அதற்கு மேல் சமாளிக்க முடியாமல் போக… அவரொரு அறையில் படுத்துவிட்டார்.
அஞ்சனாவின் கணவன் வர, இருவரும் அவள் அம்மா வீடு சென்றுவிட்டனர். இவளிடமும் சுரேனிடமும் முன்னரே சொல்லிவிட்டுத் தான் போயிருந்தனர்.
வெண்ணிலாவின் பொறுமை மெல்ல மெல்ல குறைந்து, அவள் கண்களில் நீர் கோர்த்த நிலையில் அங்கே வந்தான் சுந்தர்.
“என்னம்மா நீ மட்டும் தனியா உட்கார்ந்து இருக்க?” சுந்தர் கேட்க…
கொட்டாவி விட்டபடி சோஃபாவில் சாய்ந்திருந்த அவன் அம்மா பக்கச் சொந்தமான அத்தையும் பாட்டியும், “எங்கள பாத்தா ஆளா தெரியலையா சுந்தரு?” என்று பிடித்துக்கொண்டார்கள்.
அவர்களைச் சமாளித்து வெண்ணிலாவிடம் திரும்பினான்.
“உங்க தம்பிக்கு ஒரு முக்கியமான கால் வந்தது. பேசிட்டு வர்றேன்னு போனார் சுந்தர் அத்தான். அக்கா பாப்பாவைத் தூங்க வைக்கப் போனாங்க.”
அவள் குரல் சுரத்தே இல்லாமல் ஒலித்தது. ஒரு பார்வையில் அவளின் சோர்வைக் கண்டுகொண்டான் சுந்தர். தம்பிக்கு அழைக்க, அவன் அழைப்பை ஏற்கவில்லை.
“சரி நீ வாம்மா நிலா. உங்க ரூம் காட்டுறேன். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. ரொம்ப டயர்டா தெரியுற. உன்ன இப்படி விட்டிட்டு இந்த அம்மா பெரிம்மா எல்லாம் எங்க போனாங்க?” கேட்டபடி அவளுடன் நடந்தான்.
சுந்தர் சுதா ரூம் தாண்டி தான் சுரேன் ரூம் செல்ல முடியும். அவன் ரூம் பக்கம் போனதும் உள்ளே இருந்து பேச்சுக் குரல்கள் கேட்க… ஸ்மிர்த்தி இன்னும் சிணுங்கி கொண்டே இருந்தாள்.
“அந்த ரூம் தான் உங்கது. அவன் ரூமுக்கு யாரும் வர மாட்டாங்க. நீ ஃப்ரீயா இருக்கலாம். போம்மா… அம்மா இல்ல சுதாவ இப்ப அனுப்புறேன்.” என்று வெண்ணிலாவுக்கு வழி காட்டினான்.
வெண்ணிலா சுரேனின் அறைக்குள் நுழைந்தாள். தனியாக அந்த ரூம் செல்ல நேரிடும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. சங்கடத்துடன் தான் உள்ளே போனாள்.
“இப்படி யாருக்காவது நடந்திருக்குமா!” புலம்பல் வேறு.
ரூம் துப்புரவாக இருந்தது. ஆனால், புத்தகங்கள், கோப்புகள் என்று ஒரு பக்கம் முழுவதும் எடுத்துக்கொள்ள அளவு சின்னதாகத் தெரிந்தது.
இதில் அவள் உடைமைகள் என இரண்டு சூட்கேஸ்கள் ஒரு பக்கச் சுவரை ஒட்டி ஓரத்தில் வைக்கப்பட்டிருந்தன.
அவளுக்கு உடல் கச கசவென இருந்தது. அலங்காரம், புடவையெனக் களைந்து வேறு உடை அணிந்துகொள்ள நினைத்தாள். ஆனால், அதற்கு உதவி வேண்டுமே?
உதவிக்கு வந்த பனிமலர் அத்தையைக் காணவில்லை.
“நிலா என் பொறுப்பு. நா பாத்துக்குறேன் அண்ணின்னு அங்க அம்மாட்ட வாயடிச்சிட்டு வந்தது என்ன. இப்ப அரவமில்லாம எஸ்ஸாகிட்டியேத்த!”
சின்ன அத்தையைத் திட்டியபடி முதலில் ரெஸ்ட் ரூம் சென்று வந்தாள். புடவை கொஞ்சம் நலுங்கிவிட்டது. அந்த ரூமில் இருந்த ஆளுயர வாட்ரோப் கண்ணாடி பார்த்து அதைச் சரி செய்ய ஆரம்பித்தாள்.
அவளால் புடவையைச் சரியாகக் கட்டிக்கொள்ள முடியவில்லை. ஏகப்பட்ட சேஃப்டி பின். அதில் ஒன்று அவள் வலது ஆள்காட்டி விரலில் குத்திவிட்டது.
“ஸ்ஆ… இருக்கிற டயர்டுக்கு ஏற்கனவே கண்ண கட்டுது. இது வேலைக்கு ஆகாது!”
முயற்சியைக் கைவிட்டு விட்டுப் பேசாமல் படுத்துக்கொள்ளலாம் என அவள் நினைத்த நேரம் யமுனா ரூமுக்குள்ளே வந்தார்.
“நிலா… நீ இன்னும் படுக்காம அங்க என்ன பண்ணிட்டிருக்க?”
“சேரி கழண்டு வரும் போல இருக்குத்த.”
“இப்படி வா. நா சரி பண்ணிவிடறேன்.”
“இருக்கட்டுங்கத்த இப்ப கொஞ்ச நேரம் படுக்கத்தான போறேன்.”
மாமியாரை வேலை வாங்குவதா? அதுவும் கல்யாணம் ஆன முதல் நாளே?
“அதுவும் சரி தான். நீ தூங்கி எந்திரிச்சதும் சரி பண்ணிக்கலாம்.”
“ம்ம்.”
“தாகமா இருக்கா… எதுவும் குடிக்கக் கொண்டு வந்து தரவா நிலா?”
“இல்ல வேணாம்த்த. இப்ப தான் தண்ணி குடிச்சேன். அப்புறமா வேணும்னாலும் இங்க தண்ணி இருக்கு.” என்று பாட்டிலை காட்டினாள்.
“சுரேன் உன் கூட இருக்கான்னு இருந்திட்டேன் டா நிலா. பாப்பா அழுதிட்டே இருக்காள்னு சுதா கூப்பிட்டாளா. என்ன ஏதுன்னு கூட இருந்து பார்த்துட்டு வர்றேன்.
குட்டி நேத்து ராத்திரில இருந்தே நை நைன்னு தான் இருந்தா. கூட்டத்துல இருந்ததா இல்ல இடம் மாறி மண்டபத்துலயே நேத்து முழுக்க இருந்தாள்ல. அதனாலயா? என்னமோ தெரியலை.
சுதாவுக்கும் தூக்கம் கெட்டு ஒரு மாதிரி இருக்கா.”
“பரவாலைங்கத்த. இப்ப பாப்பா ஓகேயா?”
“அவ அப்பா வந்து தான் இப்ப அழுகைய நிப்பாட்டி இருக்கான். சரி நீ கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுத்துக்கோ. சாயந்திரம் டீ, டிபென் சாப்பிட்டதும் உங்க அம்மா வீட்டுக்குப் போகணும். இரண்டு நாளைக்கு அங்க தான் தங்க போறீங்க.
இன்னைக்கி ராத்திரி சடங்குக்கு நேரம் குறிச்சிருக்கு உங்களுக்கு. நல்லா தூங்கு எந்திரிச்சு ரெடியாகிடு நிலா.”
‘நேத்து வரைக்கும் என் வீடா இருந்துச்சு. இப்ப என் அம்மா வீடா?’
வேறு சமயம் என்றால் வெடுக்கெனக் கேட்டிருப்பாள். இந்த வீட்டில் முதல் நாள். சொன்னது அவள் மாமியார். அமைதியாக இருந்து கொண்டாள்.
அதிலும் அவர் சொன்ன ‘ராத்திரி சடங்கு’ என்ற வார்த்தை அவள் வாயைப் பூட்டியது.
‘இந்தச் சடங்கெல்லாம் கபுள்ஸ் பிரைவசி தான… மத்தவங்களுக்கு ஏன் தெரியணும்? இதையெல்லாமா மருமகட்ட வெளிப்படையா இவங்க சொல்லுவாங்க?’
“சரிங்கத்த. அப்புறமா யாரையாச்சும் அனுப்புறீங்களா? சேரி மாத்திக்கணும். கச கசன்னு இருக்கு. நகையும் ஹெவியா இருக்கு. கழட்டி வைக்கணும்.”
“நல்லா கேட்ட போ! இந்தப் புடவைல தான் உங்க வீட்டுக்குப் போகணும் நிலா. வேணும்னா இந்தப் பெரிய ஹாரத்தையும் காசு மாலையையும் இப்ப கழட்டி வச்சிடு.
ஆனா, உங்க வீட்டுக்குக் கிளம்பும் போது மறக்காம போட்டுக்கணும் என்ன? அப்புறம் நாலரை மணிக்கு எல்லாம் தயாரா இரு!”
‘நீங்க போனாத்தான நான் படுத்துக்க முடியும்?’ மனத்துக்குள்ளே கேட்டுக்கொண்டாள்.
“ம்ம் சரிங்கத்த.” என்றாள் வெளியே.
யமுனா வெளியே போனதும் வெண்ணிலா அங்கே கண்ணில் பட்ட தைலத்தைத் தடவி கொண்டு படுத்துவிட்டாள்.
சுரேன் ரூம் வந்தது, அவளையே ஆசையாகப் பார்த்து நின்றது, பின்னர் ரிஃப்ரெஷ் செய்துகொண்டு கட்டிலின் மறுபக்கம் வந்து படுத்தது எதுவும் வெண்ணிலாவுக்குத் தெரியவில்லை.
அவனும் அவளுக்குத் தொந்திரவு இல்லாத வகையில் சத்தம் எழும்பாமல் பார்த்துக்கொண்டான்.
அவள் விழிக்கும் போது அவன் அருகில் படுத்திருக்கவும் அதிர்ந்து அவசரமாக எழுந்துகொள்ள…
அந்த அரவத்தில் சுரேன் விழித்துக்கொண்டான்.
“ஈஸி ஈஸி. என்ன அவசரம். இன்னும் டைம் இருக்கு. ரிலாக்ஸ் பண்ணிக்கோ ருஜ்ஜு குட்டி.”
“ம்கூம் ருஜ்ஜு குட்டியாம்! இதுக்கெல்லாம் மயங்கிருவேனா?” முணு முணுப்பாகச் சொன்னாலும் அவன் காதில் விழ...
“மயங்கினதால தான் நாம இப்ப புருசன் பொண்டாட்டியாகி இப்படி ஒரே ரூம்ல இருக்கோம் ஐஸ் கட்டி.” மந்தகாசமான குரலில் குறும்பு பொங்கி வழியச் சொன்னான்.
சுரேன் வாய்மொழியாக, “புருசன் பொண்டாட்டி” என்று கேட்டது வெண்ணிலாவுக்கு உவகையாக இருந்தது. மனத்தில் மகிழ்ச்சியில் பட்டாம் பூச்சிகள் சிறகடித்துப் பறக்கச் செய்ய…
அவள் உதட்டில் மெல்லிய புன்னகை மலர, ஒரு வித எதிர்பார்ப்பும் கலக்கமும் கூடவே எட்டிப் பார்த்தது. அவன் கவனித்துவிடக்கூடாது என்பதற்காக வேறு பக்கம் தலையைத் திருப்பிக்கொண்டாள்.
அவனா கவனிக்காமல் போவான்? சுவரசியமாய் மனைவியைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“ஐஸ் கட்டி” சொல்லி அவளை எட்டிப் பிடித்தான் சுரேன். அவள் முகத்தைப் பற்றிய அவன் கையைத் தட்டி விட்டாள்.
“அழகி பெத்த மவளே கொல்லுறடி!” அவர்களின் தனிமை அவனைப் பிதற்ற வைத்தது.
அவளுக்கும் அந்தத் தனிமை ஏதோ போல் வித்தியாசமாக இருந்தாலும், அவன் மேல் சிறுது கோபம் தலை தூக்கவும் சமாளித்துக்கொண்டாள்.
“உளறாதீங்க. எங்க அம்மாவ அழகின்னு சொல்லிட்டு! காதல் வசனம் பேசுன மாதிரி இதுல இளிப்பு வேற!”
“மொத நாளே டேமேஜ் பண்ணுறாளே! சுரேனு சைலண்டா இருடா. சில மணி நேரத்துல நைட்டு வந்திரும். அப்புறம் நீ நினைக்கிறது எதுவும் நடக்காம போகப் போகுது. உன் ப்ளானுக்கு ஆப்பு கீப்பு வச்சிற போறா!” பொய்யாகப் புலம்ப…
வெண்ணிலா நெற்றியில் தட்டிக்கொண்டாள். அவன் சொன்னதைக் கேட்டு நெஞ்சில் ஒரு குறு குறுப்பு வரத்தான் செய்தது. என்ன ப்ளான் பண்ணி இருக்கானோ என்று சன்னமான அதிர்வு ஊடுருவியது.
“நீங்க ஃபோன் பேசிட்டு உள்ள வந்ததும் என்னை எழுப்பி விட்ருக்கலாம்ல?”
“எல்லாம் சுயநலம் தான் டா.” சொல்லி கண் சிமிட்டினான்.
“என்ன சுயநலம்?” என்று ஆரம்பித்து அவன் பார்வை காட்டிய மொழியைப் படித்தவளாக…
“உங்கள பத்தி தெரிஞ்சும் கேட்டேன் பாரு! சரி சரி எப்ப வந்தீங்க? அஞ்சே நிமிசத்துல வர்றேன் சொல்லிட்டு அரை மணி நேரத்துக்கு மேல வரவே இல்ல நீங்க.
கொட்டுக் கொட்டுன்னு ஹால்ல தனியா உட்கார்ந்துட்டு இருந்தேன் தெரியுமா? தலைய வேற வலிச்சது. அப்படி ஒரு டயர்ட். நல்ல வேளை சுந்தர் அத்தான் வந்தாங்க.” பட படத்தாள் நிலா.
“என்னது தனியா ஹால்ல உட்கார்ந்து இருந்தியா? மத்தவங்க எல்லாம் எங்க போனாங்க? உன்ட்ட சொல்லிட்டுத் தான போனேன் நம்ம ரூம்ல போய் ரெஸ்ட் எடுன்னு?”
“என் கிட்ட கேட்டா? எனக்குத் தெரியாத சில பெரிசுங்க மட்டும் பக்கத்துல இருந்தாங்க. உன் ரூம் எதுன்னு தெரியாம எங்க போவேன்?”
“ஆமா இது பெரிய பங்களா… அம்மணி தொலைஞ்சி போறதுக்கு. இருக்கிற நாலு ரூம எட்டிப் பார்த்தா தெரியாதா? அம்மா, ரஞ்சுக்கா, சுதா அண்ணின்னு யாருமே உன் கண்ணுல படலையாடி?”
“ம்ப்ச்… இது என்ன தப்பை உங்க பேர்ல வச்சிட்டு இப்படிப் பேசுறீங்க? மொதல்ல நீங்க எங்க போனீங்க புது இடத்துல என்னைத் தனியா விட்டிட்டு?”
“இங்க தான் டா பின் தோடத்துல இருந்தேன். முக்கியமான கால்னு சொன்னேன்ல. அது வந்து…” சற்று நிறுத்தி, “ஒரு அர்ஜெண்ட் கான்ஃபெரென்ஸ் காலா தொடர்ந்து பேச வேண்டியதா போச்சு.
என்ன பண்ணுறது. ஒரு பக்கம் புது பொண்டாட்டி. ஒரு பக்கம் என் வேலை. உன்னை நம்ம ரூமுக்குள்ள எப்படி வெல்கம் பண்றதுன்னு எல்லாம் யோசிச்சி வச்சிருந்தேன் தெரியுமா?”
“போதும் உங்க பில்ட் அப். ஃபர்ஸ்ட் டேயேவா?”
“பில்ட் அப்பா? நிஜமா சொல்றேன்டி. என்னை நம்பலை நீ?” என்று கேட்டவன் அவளின் மூக்கைப் பிடித்து நிமிண்ட… அவன் கையைத் தட்டிவிட்டு அவள் கட்டிலைவிட்டு எழ முயன்றாள்.
அவனோ அவளை வளைத்துப் பிடித்தான். புது ஹஸ்பண்ட் மோடில் அவனுக்கு நேரமும் சுற்றுப்புறமும் மறந்து போனது.
சட்டென ஒரு கூச்சம் வெண்ணிலா உடல் முழுவதும் பரவியது. அவள் எதிர்வினை ஆற்றும் முன் ரூம் கதவைத் தட்டும் ஓசை கேட்டது.
“நம்மளை சுத்தி நிறைய கரடிங்க சுத்திட்டு இருக்குடி பட்டர் பட்டு. எப்படிச் சரியான நேரத்தில வந்து டிஸ்டர்ப் பண்ணுறாங்க பாரு. நான் உன்னை ஹக் பண்ண நினைச்சாலே அவங்க மூக்குல வேர்த்துப் போகுது போல. நெருங்க விட மாட்றாங்களே!”
ஆசை நிராசை ஆனதில் அவன் முகம் ஏமாற்றத்தைக் காண்பிக்க… கணவன் சொன்ன விதம் நிலாவுக்குச் சிரிப்பைத் தருவித்தது.
களுக்கிச் சிரித்தவளின் உள்ளங்கையில் கிள்ளியவன் அவள் எதிர்பாராத நொடியில் அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டு அந்தக் குண்டு கன்னத்தில் தன் உதடுகளை அழுத்தமாகப் புதைத்தான்.
“வெண்ணிலா! சுரேன்!” குரலும் கேட்கச் செய்ய… சுரேன் மனசே இல்லாமல் நிலாவை விடுவித்தான்.
அஞ்சனா தான் கதவைத் தட்டியது. சுரேன் கதவை நோக்கிச் செல்ல, வெண்ணிலா ஆழ மூச்செடுத்துவிட்டுத் தன்னைச் சமன்படுத்தினாள்.
“என்னக்கா?”
“என்னடா இன்னும் ரெடியாகலையா நீ? வெண்ணிலா ரெடியா இருக்காளா? ஹெல்ப் எதுவும் வேணுமா?”
“எனக்கு ஒரு பத்து நிமிஷம் போதும் க்கா ரெடியாக. மொதல அவளுக்கு என்னன்னு பார்த்து ரெடி பண்ணிவிடுக்கா. டிபென் வந்திடுச்சா?”
“அதெல்லாம் ஷார்பா நாலு மணிக்கு வந்திருச்சு. கெஸ்ட் எல்லாம் சாப்டிட்டு இருக்காங்க.”
“அண்ணி நா ரிஃப்ரெஷ் பண்ணிட்டு வர்றேன்.” என்று சொல்லிவிட்டு ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டாள்.
அவள் வெளியே வரும் போது ஏலத்தின் மணத்துடன் அவளுக்காகத் தேநீரும் டிபெனும் காத்திருந்தது. சுரேனும் அஞ்சனாவும் எடுத்து வந்திருந்தனர்.
“சாப்பிடு வெண்ணிலா. அப்புறமா ரெடியாகலாம்.” என்று பாக்குத் தட்டை நீட்டினாள் அஞ்சனா.
பொன்னிறத்தில் மெல்லிய முறுகலுடன் மூன்று குழிப்பனியாரங்கள், ரவா கிச்சடி, சின்ன கப்புகளில் சாம்பார், சட்னி, ஒரு மினி சமோசா, முளை கட்டிய பச்சைப்பயிரில் செய்த சாலட், பாதாம் அல்வா, ஜலேபி எனப் பதார்த்தங்கள் நிறைந்த தட்டைப் பார்த்ததும்,
“எனக்குப் பசிக்கல. டீ மட்டும் போதும்.” நிலா சொல்ல…
மாற்று உடைகளை எடுத்துக் கொண்டிருந்த சுரேன், “என்னது பசிக்கலையா? இப்படிக் குடுக்கா அந்தத் தட்டை.” என்றான்.
அஞ்சனா தட்டைத் தம்பியிடம் கொடுத்தாள். “நீங்க சாப்பிடுங்க, இதோ வர்றேன்.” என்று வெளியே சென்றுவிட்டாள்.
“மத்தியானமும் சரியா சாப்பிடல நீ. காலைல முகூர்த்ததுக்கு முன்னால சாப்பிட கூடாதுன்னு தடை விதிச்சிட்டாங்க. இதுல பசிக்கலன்னு சொல்ற. அது எப்படிப் பசிக்காம போகும்.
ஆ காட்டு. இந்தா…” சொல்லி ஒரு பீஸ் ஜலேபியை எடுத்து மனைவியின் வாயில் வைக்கப் போக,
“நெஜமா பசிக்கல சுரேன். உனக்க… உங்களுக்குப் பசிச்சா நீங்க சாப்பிடுங்க. டோண்ட் ஃபார்ஸ் மீ!” என்றாள் நிலா.
அவள் குரல் உயரவில்லை. ஆனால், அதில் கோபத்தின் சாயல் தெரிந்தது.
“நீ பசிக்கும் போது சாப்பிடு.” சொல்லிவிட்டு அவனே அந்தத் தட்டைக் காலி செய்துவிட்டுத் தான் நிமிர்ந்தான்.
தேநீரையும் சேர்த்து அவனே குடித்துவிட்டு ரூம் விட்டு வெளியே போனான்.
திகைத்துப் போனாள் வெண்ணிலா!
கட்டிலில் உட்கார்ந்து பின்னலைக் கழற்ற ஆரம்பித்தவளுக்கு அழுகை வரும் போலிருந்தது. சுரேன் தேநீரையும் சேர்த்துக் குடித்துவிட்டுப் போனது அவளுக்குக் கோபத்தை உண்டாக்கியது.
ஆனால் , அவளால் அவன் மேல் கோபம் கொள்ளவும் முடியவில்லை. அவளுக்காகப் பார்த்துத்தானே டிஃபென்னை ரூமுக்கு எடுத்து வந்திருக்கிறான். நகத்தைக் கடிக்கத் தொடங்க… அஞ்சனா உள்ளே வந்து அவளுக்கு ரெடி ஆக உதவி செய்தாள்.
இந்த ஜலேபி, ஜாங்கிரி எல்லாம் எப்போதுமே நிலாவுக்குப் பிடிக்கவே செய்யாது. ஜலேபியை டிஃபன் தட்டத்தில் பார்த்ததில் அவளுக்கு வயிற்றைப் பிரட்டுவது போலிருக்க…
சுரேன் சரியாக அதே ஜலேபியை எடுத்து ஊட்ட வந்ததும் எரிச்சலில் பேசிவிட்டாள். அவன் வேறு எந்த ஐடெத்தை எடுத்து ஊட்டியிருந்தாலும் கொஞ்சமாவது சாப்பிட்டிருப்பாள்.
முதல் நாளே இந்த நிலைமையா? அவர்கள் இல்லறம் எப்படி இருக்குப் போகிறதோ என்று நினைத்துக் கவலைகொண்டாள் வெண்ணிலா.

Previous thread