யுத்தம் செய்தாய் என்னுள்ளே ..!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 10)
அச்சோ...! இதுக்குத்தான் அப்பவே எல்லாரும் இருக்கும்போதே, அம்மா கிட்ட ஏன் இப்படியொரு பெண்ணை என் கொழுந்தனார்க்கு காட்டுறிங்கன்னு இந்துமதி நேருக்கு நேராவே கேட்டிருந்தால், இப்ப இந்த நிமிசம் இவங்களுக்குள்ள இத்தனை சங்கடங்கள் வந்திருக்காது தானே...? இதுக்குத்தான் சொல்றது,
எதை, எப்ப, எப்படி கேட்கணுமோ... அதை, அப்ப, அப்படியே கேட்டு முடிச்சிடணும்'ன்னு சொல்லுவாங்க. இப்ப பாருங்கள், வெளிப்புகைச்சலை தவிர்க்கப்போய், உள் புகைச்சலை கொண்டு வந்த மாதிரி ஆகிடுச்சா இல்லையா ?
எந்த உறவானாலும் அது கண்ணாடி பாத்திரம் மாதிரி, ஒருத்தடவை கை தவறி விட்டுட்டோம்ன்னா உடைஞ்சது உடைஞ்சது தான், என்ன தான் அதை திரும்ப ஒட்டினாலும், மறுபடியும் பழைய மாதிரி புழக்கத்துல ஆண்டவும் முடியாதோட, அதோட விரிசல் கையில பட்டு உறுத்திக்கிட்டே இருக்கும்.
அது மாதிரி தான் இப்ப புருசன் பொண்டாட்டி நிலைமையும், மாமியார் மருமகள் நிலைமையும். இனி பழைய நெருக்கம் இருக்குமான்னா கிடையாது, இருந்தாலும் அடிமனசுல உறுத்திக்கிட்டே இருக்கப் போகுது. இதான் உறவுகளோட நிலைமை கரெக்ட்டா...?



CRVS (or) CRVS 2797