- Joined
- Sep 16, 2024
- Messages
- 747
- Reaction score
- 4,466
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 15
மாதவப்பெருமாளின் உற்சவ சிலையைப் பார்த்து அதிர்ந்தவளாய் நின்றவள், "நான் கனவுல பார்த்த பெருமாள் சிலை இங்கே பாதுகாப்பா இருக்கும் போது, எனக்கு ஏன் அடிக்கடி அப்படிக் கனவு வந்துச்சு. அந்தச் சாமியார் சொல்ற மாதிரி நான் இங்கே செய்ய வேண்டிய காரியம் தான் என்ன?" எனச் சிந்தித்தவாறு சிலையைப் பார்த்திருந்த நேரம், "உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க மேடம்" என்றார் ஓட்டுனர் முருகேசன்.
அதில் களைந்தவளாய் சிலையின் மீதிருந்த பார்வையை விலக்கியவள், "யாருண்ணா வந்திருக்காங்க" எனக் கேட்டாள்.
"இந்தக் கோவிலோட சிவலிங்கத்தை மீட்க கேஸ் போட்டவர் மேடம். வக்கீல் ராஜா சொல்லி வந்திருக்கிறதா உங்ககிட்ட சொல்லச் சொன்னாரு. ஆபிஸ் ரூம்ல வெயிட் பண்றாங்க" என்றவர் சொன்னதும்,
'வக்கீல் ராஜா சொன்ன ஆளா! இவர்கிட்ட பேசினா ஒரு வேளை, இங்கே என்னைச் சுத்தி என்ன நடக்குதுனு ஏதாவது க்ளூ கிடைக்குமோ' என்று யோசித்தவளாய் அலுவலக அறை நோக்கிச் சென்றாள்.
தன்னைக் காண வந்திருப்பவர் வயதானவராய் இருப்பார் என்றெண்ணி வந்தவளுக்கு, தனக்கு இணையான வயதில் கணவன் மனைவியெனத் தம்பதியராய் இருவர் நின்றிருப்பதைக் கண்டு ஆனந்த அதிர்ச்சி உண்டாயிற்று. மேலும் மனத்திற்குள் ஏதோ இனம்புரியாத உணர்வு அவளை ஆட்கொண்டது.
அவ்விடத்தில் தெய்வீக அதிர்வலையை உணர்ந்தாள். உள்ளம் பரவசத்தில் துள்ளுவது போல் உணர்ந்தாள்.
தான் விரும்பி வணங்கிய தெய்வத்தை நேரில் காண்பதை போன்ற பேரின்ப மனநிலையில் மெய்யுருகியவளாய் நின்றிருந்தாள் தாமரை.
"வணக்கம்" என்றவாறு அவர்களை நோக்கி இரு கரத்தினையும் கூப்பியவளாய் நின்றவளுக்கு, இவ்வாறு தான் வணங்கியவாறு அவர்களின் எதிரில் நிற்கும் இந்தக் காட்சியை முன்பே தான் பார்த்திருப்பது போன்ற உணர்வு எழுந்தது.
அவளின் உள்ளம் பேருவகையில் திளைத்திருந்தது.
"நான் வணங்குற தெய்வத்தை நேர்ல பார்க்கிற மாதிரி இருக்கு!" என்றவளாய் தன்னை மீறி அவர்களின் பாதத்தில் பணிந்து வணங்கினாள்.
அவளின் எதிர்பாரா இச்செயலில் இருவரும் திடுக்கிட்டு பின்னே நகர்ந்தனர்.
"என்ன காரியம் செய்றீங்க மேடம்! நாங்க ரொம்பச் சின்னவங்க. எழுந்திரிங்க" என்றவளாய் தாமரையின் தோள் தொட்டுத் தூக்கினாள் இளவஞ்சி.
சக்தீஸ்வரனும் இளவஞ்சியும், 'ஏன் இவங்க இப்படிச் செய்றாங்க' என நினைத்தவர்களாய் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
நேற்றிலிருந்து உடலில் நடக்கும் பலவிதமான உணர்வுகளின் மாறுதலில், தன்னிலை வந்த தாமரைக்குத் தலைச் சுற்றுவது போன்றிருந்தது.
சுதாரித்தவளாய் தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்தவாறு அவர்களைப் பார்த்தவள், "வாங்க! உட்காருங்க" என்று இருக்கையைக் காண்பித்தாள்.
"வணக்கம் மேடம். என் பேரு சக்தீஸ்வரன். இவங்க என் மனைவி இளவஞ்சி! ராஜா உங்ககிட்ட பேசியிருப்பாங்கனு நினைக்கிறேன்" என்றான் சக்தீஸ்வரன்.
"ஆமா பேசினேன் அண்ணா! நீங்க சொல்லித் தான் அவர் சிவலிங்கத்தை மீட்க கேஸ் போட்டதா சொன்னாரு. உங்களுக்கு எப்படி இங்கே சிவலிங்கம் காணாம போயிருக்குனு தெரிஞ்சிது?" எனக் கேட்டாள்.
அவளின் கேள்வியில் மென்னகைப் புரிந்தவனாய், "உங்களுக்குக் கடவுளின் அனுகிரகத்து மேல் நம்பிக்கை இருக்காம்மா?" எனக் கேட்டான்.
"முன்னாடி இருந்துச்சு! இப்ப இல்லண்ணா! ஆனா இந்த ஊருக்கு வந்ததுலருந்து என்னைச் சுத்தி தெய்வீகமா எதுவோ நடக்குற மாதிரியே தோணுது" கவலையுற்ற முகத்துடன் உரைத்தாள்.
இருவரையும் தனது மனத்துக்கு நெருக்கமானவர்களாய் உணர்ந்ததால் மனத்தில் உணர்ந்தவை எல்லாவற்றையும் அவர்களிடம் கூற முனைந்தாள் தாமரை.
"அதை ஏன் இவ்வளோ சோகமாச் சொல்றீங்க தாமரை?" எனக் கேட்டாள் இளவஞ்சி.
"ஏன்னா அதனால என் மனசுல நிறையக் கேள்விகளும் குழப்பங்களும் தான் மிஞ்சி இருக்கு அரசிமா" தான் அரசி என்று உரைத்ததைக் கூட உணராது அவள் பேசிக் கொண்டே செல்ல,
சக்தீஸ்வரனும் இளவஞ்சியும் அதிர்ச்சியுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
"தாமரை! உங்களுக்கு எப்படி என்னோட இந்தப் பேரு தெரியும்?" எனக் கேட்டாள் இளவஞ்சி.
"என்ன பேரு? முத்தரசி தானே உங்க பேரு. சிவநேசன் அண்ணா உங்க பேரை அப்படித் தானே சொன்னாங்க"
தான் அரசிமா என்று சுருக்கி அழைத்ததைக் கூட உணரவில்லை அவள்.
தாங்கள் இருவர் மட்டுமே அறிந்த தங்களின் முன்ஜென்மப் பெயரைக் கொண்டு அவள் அழைத்ததைப் பார்த்து பேரதிர்வுக்குள்ளானார்கள் இருவரும்.
"தாமரை" இருவரும் ஒரு சேர அதிர்ச்சியுடன் அவளின் பெயரை உச்சரிக்க, கேள்வியுடன் அவர்களைப் பார்த்திருந்தாள் அவள்.
சக்தீஸ்வரன் இளவஞ்சி என்ற அவர்களின் பெயர் அவளுக்கு முத்தரசி சிவநேசன் என்று தான் கேட்டிருந்தது. அவளின் மனத்திலும் அவ்வாறு தான் பதிந்திருந்தது.
"தாமரை உங்களுக்கும் எங்களுக்கும் ஏதோ முன்ஜென்ம தொடர்பு இருக்கு போலயே! இல்லனா எங்க இரண்டு பேருக்கு மட்டுமே தெரிஞ்ச எங்களோட முன்ஜென்ம பேரு உங்களுக்கு எப்படித் தெரிஞ்சிது?" படபடப்புடன் கேட்டிருந்தாள் இளவஞ்சி.
தாமரை புரியாது அவர்களைப் பார்க்க, "எங்களோட பேரு சக்தீஸ்வரன், இளவஞ்சி! உங்ககிட்ட எங்களை அப்படித் தான் நான் அறிமுகம் செஞ்சேன்மா! ஆனா முத்தரசி சிவநேசன்னு உங்க காதுல விழுந்ததா சொல்றீங்களே" என்றான் சக்தீஸ்வரன்.
இப்பொழுது அதிர்வது அவளின் முறையானது.
'கடவுளே! நான் இந்த ஊருக்கு வந்ததுலருந்து அமானுஷ்யமா என்னென்னவோ நடக்குதே' என்று பயந்தே போனாள் தாமரை.
அவளின் முகமெல்லாம் வியர்த்து நெஞ்சம் படபடக்கத் துவங்கவும், அவளின் இந்நிலையைப் பார்த்து அருகில் சென்ற இளவஞ்சி, அவளின் தோளைத் தொட்டு, "என்னம்மா என்னாச்சு! ஏன் இப்படி வேர்க்குது உங்களுக்கு! ஆர் யூ ஆல்ரைட்?" எனக் கேட்டாள்.
மனத்திற்குள் தோன்றிய பய உணர்வு இவளின் அண்மையில் குறைந்து ஒருவித நிம்மதியை உணர்த்தவும் இளவஞ்சியின் கைகளை இறுகப் பற்றியவளாய், "நான் இந்த ஊருக்கு வந்ததுலருந்து என்னைச் சுத்தி ஏதேதோ நடக்குற உணர்வு அரசிமா! நீங்க சொல்ற மாதிரி உங்களுக்கும் எனக்கும் முன்ஜென்ம தொடர்பு இருக்குனா, எனக்கு உதவி செய்றீங்களா ப்ளீஸ்" எனக் கேட்டிருந்தாள்.
இவர்கள் இருவரும் தனக்கு உதவுவார்கள் என்று அவளின் ஆழ்மனம் உணர்ந்து உந்தித் தள்ளியதால் இவ்வாறு கேட்டிருந்தாள்.
"சொல்லுமா, என்ன உதவி நாங்க செய்யனும்" என்று கேட்டான் சக்தீஸ்வரன்.
தான் இந்த ஊருக்கு வந்ததிலிருந்து நடந்தவைகள் அனைத்தையும் கூறியவள், "அந்தச் சாமியார் சொல்ற மாதிரி இங்கே எனக்காக என்ன காரியம் காத்து இருக்குனு புரியலை எனக்குண்ணா" என்றாள்.
அவளின் கைகளைப் பற்றியவளாய் நின்றிருந்த இளவஞ்சி, "அதுக்கு நீங்க முதல்ல மாதவனைக் கல்யாணம் செய்யனும் தாமரை" என்றாள்.
"என்ன?" என்று அதிர்வுடன் இளவஞ்சியைப் பார்த்தவளுக்கு, 'இவங்களை மாதவன் தான் அனுப்பியிருப்பாரோ?' என்று தோன்றியது.
"ஏன் அப்படிச் சொல்றீங்க அரசிமா?" எனக் கேட்டாள் தாமரை.
"அந்தச் சாமியார் உங்ககிட்ட என்ன சொன்னாரு?" எனக் கேட்டான் சக்தீஸ்வரன்.
"நானும் மாதவனும் ஈருடல் ஓருயிராய் இணைந்து வாழ பிறவி எடுத்தவங்க. நாங்க சேர்ந்து செய்ய வேண்டிய காரியம் எங்களுக்காகக் காத்திருக்கு! ஆத்மநல்லூருக்கு வந்தவங்க இன்னும் அந்தக் காரியத்தைச் செய்யாம இருக்கோம்னு சொன்னாரு" என்றாள்.
"உங்க கேள்விக்கான விடை இதுலயே இருக்கு தாமரை. இங்க நீங்க தனியா எவ்ளோ போராடினாலும் நீங்க செய்ய வேண்டிய காரியம் என்னனு உங்களால கண்டுபிடிக்க முடியாதுமா. எதுக்காக நீங்க இரண்டு பேரும் பிறவி எடுத்திருக்கீங்கனு நீங்களும் மாதவனும் சேர்ந்து கேட்கும் போது தான் அதுக்கான விடைக் கிடைக்கும்" என்றான் சக்தீஸ்வரன்.
சக்தீஸ்வரனின் அருகில் அமர்ந்திருந்த இளவஞ்சியும் ஆமெனத் தலையசைத்தாள்.
அவர்களின் பேச்சைக் கேட்ட அவளின் ஆன்மாவுக்கு அவள் வணங்கும் தெய்வமே நேரில் வந்து வழிக் காண்பிப்பது போல் உள்ளுணர்வுக்குள் தோன்றினாலும், இம்மனித மூளைக்கு அவர்கள் மீது சந்தேகமே தோன்றியது.
"உங்களுக்கு மாதவனை முன்னாடியே தெரியுமா?" என்று சந்தேகத்துடன் அவள் கேட்கவும், இருவரும் வாய்விட்டுச் சிரித்திருந்தனர்.
"நீங்க சொல்ற அந்த மாதவன் யாரு எவரு? எங்கே இருக்காரு? எப்படி இருப்பாருனு எதுவும் எங்களுக்குத் தெரியாதுமா" என்றான் சக்தீஸ்வரன்.
"எங்க வாழ்க்கை அனுபவத்தை வச்சி தான் நீங்களும் மாதவனும் சேரனும்னு நான் சொன்னேன் தாமரை" என்றாள் இளவஞ்சி.
"எங்க ரெண்டு பேரைத் தவிர வேற யாருக்குமே தெரியாத எங்க முன்ஜென்மப் பெயரை நீங்க சொன்னதால உங்களுக்கு எங்களோட முன்ஜென்ம கதையைச் சொல்றேன் தாமரை" என்றவளாய் இளவஞ்சி தங்களது வாழ்வில் நிகழ்ந்தவைகளை விரிவாக உரைத்தாள்.
இடையிடையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் கூறிக் கொண்டே வந்த சக்தீஸ்வரன்,
"இரண்டு வருஷமா வாழ்க்கைல ஏற்பட்ட பிரச்சினைனால இந்தப் பக்கமே வராம இருந்துட்டோம். போன வாரம் இந்தக் கோவிலுக்கு வந்தப்ப, உன்னோட ஈசன் மனக்குறையோட இருக்கும் போது உன் மனசு எப்படியா நிறையும்னு ஒரு வயசான பாட்டி என்கிட்ட சொன்னாங்க. ஈசனுக்கு என்ன மனக்குறை, அதை எப்படிச் சரி செய்றதுனு நானும் வஞ்சியும் தினமும் தியானத்துல இருந்து ஈசன்கிட்ட கேட்டுட்டு இருந்தோம். நேத்து வஞ்சி கனவுல, "நான் வணங்கும் பெருமாளுக்கு இருக்கும் குறையை நிவர்த்திச் செய்யுங்கள்! இது தான் என் மனக்குறை" அப்படினு அசரீரி கேட்டுச்சாம். யோசிக்கும் போது தான் ஈசனும் பெருமாளும் வேற வேற இல்லையே! இங்கே பெருமாளுக்கு எதுவும் பிரச்சினை இருக்குமோனு நினைச்சி உங்களைப் பார்க்க வந்தோம். நீங்களும் வஞ்சி மாதிரியே கனவு கண்டதா சொல்லவும் எங்களுக்கு நடந்ததே உங்களுக்கும் நடந்திருக்கேனு ஆச்சரியமா போச்சு! இனி இங்கிருக்கப் பிரச்சினையை நீங்களும் மாதவனும் தான்மா கண்டுபிடிக்கனும். இங்கிருக்க ஈசனுக்காகப் பிறவி எடுத்தவங்க நாங்கனா, இங்க இருக்கப் பெருமாளுக்காகப் பிறவி எடுத்தவங்க நீங்க! அதனால நீங்களும் மாதவனுமா சேர்ந்து பிரகலாதப் பெருமாள் கோவில் போங்க. அங்கே உங்களுக்கான விடைக் கிடைக்கும்னு என் மனசு சொல்லுது" என்றவனாய் எழுந்தவன்,
"சரிமா! அப்ப நாங்க கிளம்புறோம். அப்புறம் எங்க வாழ்க்கைக் கதையை யாருகிட்டயும் சொல்ல மாட்டீங்கனு நம்புறோம். உங்க மாதவன்கிட்ட கூடச் சொல்ல வேண்டாம். அது எங்க பர்சனல்" என்று கேட்டுக் கொண்டான்.
தனது விசிட்டிங் அட்டையை அவளிடம் கொடுத்தவனாய், "உங்களுக்கு எந்த நேரத்துல என்ன உதவி தேவைப்பட்டாலும் என்னைக் கான்டேக்ட் செய்யலாம்" என்று கூறிவிட்டு விடைப்பெற்றனர் இருவரும்.
இருவரும் விடைப்பெற்று சென்ற பிறகு குழப்பத்துடன் அமர்ந்து விட்டாள் தாமரை.
"என்னடா இது, நான் மாதவனை விட்டு விலகிப் போகனும்னு முடிவு செஞ்ச பிறகு யாருனே தெரியாதவங்கலாம் வந்து என்னை அவரோட சேர்த்து வைக்கப் பேசிட்டுப் போறாங்க" என்று சிந்தித்தவளாய் அமர்ந்திருந்தவளை கலைத்தது அவளின் கைப்பேசி பாடல்.
ஒரு பாதிக் கதவு நீயடி…
மறு பாதிக் கதவு நானடி…
என்று கைப்பேசி ஒலிக்கவும்,
மாதவனிடம் தான் சென்று நின்றது அவளது மனம்.
'இந்த ரிங்டோன் கேட்டுட்டு நீ இன்னும் உன்னோட எக்ஸ் ஹஸ்பெண்ட்டை மறக்கலையோனு நினைச்சேன்' என்று மாதவன் உரைத்தது நினைவில் வந்ததும்,
"முதல்ல இந்த ரிங்டோனை மாத்தனும்" என்று நினைத்துக் கொண்டவளாய் கைப்பேசி அழைப்பை ஏற்றுப் பேசியவளை, உடனே அலுவலகத்திற்கு வருமாறு அழைத்திருந்தார் அவளின் மேலதிகாரி.

Previous thread
Next thread