- Joined
- Sep 16, 2024
- Messages
- 747
- Reaction score
- 4,466
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 9
அந்த விடுதியின் அறையினுள்ளே சென்றவன் பொத்தெனக் கட்டிலில் விழுந்தவனாய், "ம்ப்ச் தாமரை கூடவே இருக்கலாம்னு நினைச்சா இப்படி ஆகிப் போச்சே" என்று வாய்விட்டே புலம்பியவாறு படுத்திருக்க,
அதே நேரம் அங்கே தான் தங்க வேண்டிய அரசுக்குடியிருப்பின் வீட்டிற்குள் சென்றவளாய் தனது பணியினில் சேருவதற்கு அவசரம் அவசரமாகக் குளித்து விட்டு, கிளம்பிக் கொண்டிருந்தாள் தாமரை.
அச்சமயம் அவளின் வீட்டுக்கதவை யாரோ தட்டும் ஓசைக் கேட்டு கதவைத் திறந்து பார்த்தாள்.
நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டுடன் முகத்தில் கனிவு பொங்க, மங்கலகரமாய்ப் பழைய காலத்து பண்டரிபாய் போன்ற சாந்தமான தெய்வீகக்களையான முகத்துடன் நின்றிருந்தார் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர்.
அவரைப் பார்த்ததும் அவளின் கைகள் தானாக மேலெழும்பி வணங்கின. ஆயினும் இவரைப் பார்த்ததும் மனத்திற்குள் ஏதோ வித்தியாசமான உணர்வை உணர்ந்தாள். அவ்வுணர்வு இன்னதென்று பிரித்துணர முடியவில்லை அவளால்.
"வணக்கம் மா! உள்ளே வாங்க! யாரு நீங்க?" எனக் கேட்டிருந்தாள்.
தனக்கு மிகவும் பரிச்சயமான முகமாய் அவரின் முகம் தோன்றியது அவளுக்கு.
"எனக்குப் பக்கத்து வீடு தான்மா" என்றவர் சொன்னதும், மூவுருளியில் வரும் போதே அரசு குடியிருப்பிற்கு அருகில் காட்டுப் பங்களா போன்ற வடிவமைப்பில் பெரியதாக இருந்த அந்த வீட்டைப் பார்த்திருந்தாள்.
'அந்த வீட்டு அம்மாவா இவங்க' என்று மனத்திற்குள் நினைத்தவளாய் அவரை அவள் பார்த்திருக்க,
"இங்கே எந்த ஆபிசர் தங்க வந்தாலும், அவங்களுக்குச் சாப்பாடு எங்க வீட்டுலருந்து கொடுப்போம்மா. அதான் உங்களுக்குக் காலை டிபன் கொண்டு வந்திருக்கேன்" என்றவராய் உள்ளே மேஜையில் உணவுப்பையை வைக்க,
"அய்யோ உங்களுக்கு ஏன் வீண் சிரமம்" என்று பதறியவளாய் தடுத்தாள் தாமரை.
"இல்லம்மா என்னை உன் அம்மாவா நினைச்சிக்கோ! தினமும் என் கணவருக்கும் மகனுக்கும் சமைக்கிறதுல ஒரு கைப்பிடி உனக்கும் சேர்த்துச் சமைக்கப் போறேன். அவ்ளோ தானே" என்றவர் சொல்லியும் அமைதியாக அவள் நிற்க,
"என்னம்மா அப்படியே நிக்கிற? வேலைக்கு நேரமாகிடுச்சு தானே! வா நானே உனக்குப் பரிமாறுறேன்! சாப்பிட்டு போ" என்று அவளைக் கட்டாயப்படுத்தி உணவருந்த அமர வைத்தார்.
தாமரைக்குத் தாயின் நினைவு வந்து கண்கள் கலங்கியது.
"என்னம்மா அம்மா ஞாபகம் வந்துடுச்சா?" என்றவராய் அவளின் தட்டில் இட்லியை அவர் அடுக்க,
"ஆமாம்மா உங்க பேரு என்ன?" எனக் கேட்டவாறு உண்ணத் தொடங்கினாள்.
"என் பேரு செந்தாமரைமா" என்றவர் சொன்னதும்,
"அட என் பேரும் தாமரை தான்மா" என்றவளாய் உண்டவள்,
"நான் இன்னிக்கு வரேன்னு உங்களுக்கு யாரு சொன்னது?" எனக் கேட்டாள்.
"ஜீப் டிரைவர் முருகேசன் தான் சொன்னான்மா. உனக்கு முன்னாடி இங்க இருந்த ஆபிசர் பையன் கூட உன்னை மாதிரி கல்யாணம் ஆகாதவன் தான். நல்ல பையன். ஆனா இப்படி அல்பாயுசுல போவான்னு நினைக்கலையே?" கண்களில் பொங்கிய கண்ணீரைத் துடைத்தவராய் அவர் உரைக்கவும்,
'என் கழுத்துல தாலி இல்லாதனால கல்யாணமாகாத பொண்ணுனு நினைச்சிக்கிட்டாங்க போல! சரி அப்படியே நினைச்சிக்கட்டும்' என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டவளாய் அமைதியாக அவர் பேசுவதைக் கேட்டிருந்தாள்.
"என்ன ஏதுனே தெரியலைமா இந்த தோரணகிரி மாவட்டத்துக்கு அறநிலைய ஆபிசரா வரவங்க எல்லாரும் அல்பாயுசுல போயிடுறாங்க. உனக்கு ஆயுசு கெட்டியா இருக்கனும்னு உனக்காக நான் சாமிக்கிட்ட வேண்டிக்கிறேன் கண்ணு. உன் அம்மாகிட்ட சொல்லி இங்கிருக்க சோலைவன அய்யனாருக்கு வேண்டி முந்தானைல காசை முடிஞ்சி வைக்கச் சொல்லு கண்ணு. அந்த அய்யன் உன் உசுரைக் காத்து நிப்பாருமா" என்றவர் சொன்னவுடன் உண்டு கொண்டிருந்தவளுக்குப் புரையேறியிருந்தது.
அவளின் தலையில் தட்டிக் குடிக்க நீரைக் கொடுத்தார் செந்தாமரை.
"என்னது? இங்க வர ஆபிசர்லாம் அல்பாயுசுல போய்டுறாங்களா?" அதிர்ச்சியுடன் அவள் கேட்டிருக்க,
"ஆமாமா இந்த சேதி தெரியாதா உனக்கு? ஒன்னு செத்துப் போறாங்க இல்ல டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போறாங்க. உனக்கு அப்படி எதுவும் நடந்திடக் கூடாதுனு தான் காலைலயே வந்து இப்படிப் பேசிட்டு இருக்கேன். உங்கம்மாகிட்ட சொல்லி நான் சொன்னதைச் செய்யச் சொல்லு கண்ணு" என்றவர் கூறியதை ஜீரணிக்கவே சில நொடிகள் தேவைப்பட்டது அவளுக்கு.
'அய்யோ அந்த வக்கீல் ராஜாகிட்ட பேசிட்டு வந்திருக்கனும் நானு' தன்னைத் தானே திட்டிக் கொண்டவளாய், 'ராஜாவுக்கு எப்படியாவது போன் செஞ்சி பேசிடனும்' என்றவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே,
ஒரு பாதிக் கதவு நீயடி
மறு பாதிக் கதவு நானடி
என அவளது கைப்பேசி ஒலித்தது.
படுக்கையறையினுள்ளே சென்று கைப்பேசியை எடுத்து பெயரைப் பார்த்தவளுக்கு இன்ப அதிர்ச்சி.
'என்னதிது நினைச்சதும் அவரே போன் செய்றாரு' என்றெண்ணியவளாய் அழைப்பையேற்று, "ஹாய் ராஜா சார்!" என்றவாறு உணவு மேஜையில் வந்தமர்ந்தாள்.
"தாமரை மேடம்! உங்களுக்கு எப்படி என்னைத் தெரியும்?" ஆச்சரியத்துடன் மறுபக்கம் ராஜா வினவியிருக்க,
இந்த ஊருக்கு பணியிட மாறுதல் கிடைக்கப்பெற்ற செய்தி வந்தது முதல் இந்த ஊரைப் பற்றித் தான் கேள்விப்பட்ட செய்திகளை உரைத்தவளாய் அவனது அலைபேசி எண்ணை தனது பக்கத்து வீட்டினரான லிங்குசாமியிடம் வாங்கியதையும், அவனை அழைத்துப் பேச நேரமில்லாது கிளம்பி வந்துவிட்டதையும் உரைத்தாள்.
ராஜாவும் இங்கு ஆத்மநல்லூர் மாதவப்பெருமாள் கோவிலில் சக்தீஸ்வரன் மூலமாகச் சிவலிங்கத்தை மீட்டது பற்றி உரைத்தவனாய்,
"கொஞ்சம் கேர்புல்லா இருங்க மேடம். உங்களுக்கு அந்தக் கோவில் ஆக்டிவிட்டீஸ் ரிலேடட்டா என்ன சந்தேகம் வந்தாலும் சொல்லுங்க. இனி இந்தக் கோவில் வச்சி எந்த உயிரும் போய்டக் கூடாதுனு தீர்க்கமா இருக்காரு சக்தி. அவரே நாளைக்கு உங்களை நேர்ல வந்து பார்த்துப் பேசுவாரு" என்றவாறு இணைப்பைத் துண்டித்தான் வக்கீல் ராஜா.
தாமரை சாப்பிட்டு முடித்ததும் பாத்திரங்களை எடுத்து வைத்தவராய், "மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துடுமா. அப்படி வர நேரமாகும் வெளியே சாப்பிட்டுக்கிறனாலும் எனக்குப் போன் செஞ்சி சொல்லிடுமா" என்றவராய் தனது கைப்பேசி எண்ணை அளித்தார் செந்தாமரை.
அலுவலுக்குக் கிளம்பியவளாய், அவளுக்கென வெளியே ஓட்டுனருடன் நின்றிருந்த அரசாங்க வண்டியில் ஏறிய தாமரையின் மனத்திற்குள் எண்ணற்ற கேள்விகள் எழுந்தன.
மலையிலிருந்து இருபது கொண்டை ஊசி வளைவுகளை கடந்து வண்டி கீழே இறங்கவும், "எங்கே போறோம் அண்ணா" எனக் கேட்டாள்.
"ஆபிஸ்க்கு போறோம் மேடம்"
"ஆபிஸ் இங்க ஊருக்குள்ளே இல்லையா?"
"இல்ல மேடம். ஆத்மநல்லூர் ஊருக்குள்ள தான் ஆபிஸ் இருக்கு. ஆத்மநல்லூர் ஊர், கீழே மலையடிவாரத்துல இருக்கு" என்றவர் சொன்னதும்,
'அப்புறம் ஏன் மலைல கவர்மெண்ட் க்வாட்டர்ஸ் கட்டி வச்சிருக்காங்க! தினமும் இப்படி டிராவல் செஞ்சி தான் போய்ட்டு வரனுமா' என்று சிந்தித்தவளாய்,
"ஓ ஓகே அண்ணா!" என்றவள்,
"நான் தங்கியிருக்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டு அம்மா யாரு?" எனக் கேட்டாள்.
"ஏன் மேடம். அந்தம்மா எதுவும் தொந்தரவு செஞ்சாங்களா?" என்றவராய், "ஆனா செந்தாமரை அம்மா அப்படி எதுவும் செய்ய மாட்டாங்களே! சாப்பாடு போட்டுத் தானே கொல்லுவாங்க" என்றவர் கேள்வியாய் சொல்லவும்,
"என்னது கொல்லுவாங்களா?" அதிர்ச்சியுடன் அவள் கேட்க, 'அந்தம்மா அல்பாயுசுல போய்டுவாங்கனு சொல்றாங்க. இவரு கொல்லுவாங்கனு சொல்றாரு! என்னடா நடக்குது இங்க' நொடிக்குள் உள்ளம் படபடவென வேகமாய் துடித்திருந்தது அவளுக்கு.
"சும்மா பேச்சுக்குச் சொன்னேன் மேடம்" என்றவர் சொன்னதும் தான் ஆசுவாசமானாள் அவள்.
ஏனோ இந்தச் சோலைவனத்திற்கு வந்ததிலிருந்து மனத்திற்குள் ஒருவிதமான திகிலை உணர்கிறாள் தாமரை.
"செந்தாமரை அம்மாக்கு மத்தவங்களுக்குச் சமைச்சி போடுறது ரொம்பப் பிடிக்கும் மேடம். அதனால அவங்க அந்தக் கவர்மெண்ட் குடியிருப்புல எத்தனை பேரு வந்து தங்கினாலும் அவங்களே சமைச்சி கொடுப்பாங்க" என்றார்.
"ஓ அவங்க ஹஸ்பண்ட், பையன்லாம் எதுவும் சொல்ல மாட்டாங்களா?"
"அவங்க பையன் மலைக் காட்டுக்குள்ள இருக்க பிரகலாதப் பெருமாள் கோவில் பூசாரி மேடம். அந்தக் கோவிலே கெதினு கிடப்பான். வீட்டுக்கு தூங்கத் தான் வருவான். அவங்க கணவர் இந்த ஊரு தலைவராக இருந்து இப்ப எம் எல் ஏ ஆகிட்டாரு. அதனால கட்சி வேலைகள் கவர்மெண்ட் வேலைனு வெளியூர்ல தான் பெரும்பாலும் இருப்பாரு. அதனால அந்தம்மா இப்படித் தன்னால முடிஞ்ச உதவியை மத்தவங்களுக்குச் செஞ்சிட்டு பொழுதை போக்கிக்கிறாங்க" என்றவர் சொன்னதைக் கேட்டுக் கொஞ்சமாகச் செந்தாமரை அம்மா மீது நல்லவர் என்ற நம்பிக்கை வந்திருந்தது தாமரைக்கு.
'இந்தப் பிரகலாதப் பெருமாள் பேரு கேள்விப்பட்ட மாதிரி இருக்கே! என்னடா இது இந்த ஊருக்குள்ள வந்ததுலருந்தே என்னமோ பேரலல் யுனிவர்ஸ்ல உலவுற மாதிரி எல்லாமே பரிச்சயமான பேரா எல்லாருமே பரிச்சயமான நபரா தோணுது மனசுக்கு' என்று தனக்குத் தானே பேசிக் கொண்டாள்.
தனது அலுவலகத்திற்குச் சென்று அங்கே தனக்கான பொறுப்புகளைப் பற்றி மேலதிகாரியிடம் பேசச் சென்றாள்.
அவளின் மேலதிகாரி, "நீங்க சென்னைல வேலைப் பார்த்த மாதிரி உங்க கட்டுப்பாட்டுக்குள்ள ஒரு வட்டத்துல இருக்கக் கோவில் மட்டும் தர மாட்டாங்க இங்க. இந்தத் தோரணக்கிரி மாவட்டத்துல இருக்க எல்லாக் கோவில்களும் உங்க கட்டுப்பாட்டுக்குள்ள தான் வரும். ஏன் சிட்டிக்கும் கிராமத்துக்கும் அந்த வித்தியாசம்னா இங்கே பல கோவில்கள் சைலண்ட் டெம்பிள்லா தான் இருக்கும். அதாவது பெரிசா மக்கள் போக்குவரத்து இல்லாத கோவிலா தான் நிறையக் கோவில் இருக்கும். சின்னக் கோவிலா வேற இருக்கும். ஆனா கோவிலோட ஹிஸ்ட்ரி பார்த்தீங்கனா ஆயிரம் ஆண்டு இரண்டாயிரம் ஆண்டுப் பழமையான கோவிலா இருக்கும். சிட்டில தான் உடனே கோவில் கட்டி கும்பலை வரவச்சிடுறாங்க. ஊருக்குள்ள பழைய கோவில்கள்லாம் ஆளுங்க சீண்டாம கிடக்கு. ஆக உங்க கட்டுப்பாட்டுல இருக்கக் கோவில்ல நீங்க முக்கியமா பார்க்க வேண்டியது ஆத்மநல்லூர் மாதவப்பெருமாள் கோவில் தான். அது தான் உங்க லிஸ்ட்ல இருக்கிறதுலயே பெரிய கோவில். மக்கள் போக்குவரத்து அதிகம் இருக்கக் கோவில் அது மட்டும் தான்" என்றவராய் அவளது கட்டுபாட்டிற்குள் வரும் கோவில்களின் விபரங்கள் அடங்கிய கோப்புகளை அவளிடம் அளித்தார்.
"அசட் ஆபிசரா நீங்க பொறுப்பு எடுத்துக்கிட்டதும் என்ன செய்யனும்னு தெரியும் தானே தாமரை" எனக் கேட்டார்.
"தெரியும் சார். எனக்குக் கீழ வர்ற எல்லாக் கோவிலோட அசையும் சொத்து அசையா சொத்துலாம் இது வரைக்கும் சரியா நிர்வகிச்சிருக்காங்களானு பார்த்து உங்களுக்கு ரிப்போர்ட் தரனும்" என்றாள்.
"ஆமா தாமரை. ஆனா இப்ப ஆத்மநல்லூர்ல திருவிழா நடக்கிறனால உங்களுக்கு அந்தச் செக்லாம் செய்ய நேரம் இருக்காது. பத்து நாள் டைம் எடுத்துக்கிட்டு ரிப்போர்ட் அனுப்புங்க"
'என்ன இது? இந்த ரிப்போர்ட் உடனே அனுப்பலைனா என் பேர்ல தானே ரிமார்க் ஆகும். லேட்டா தந்தாலும் பரவாயில்லைனு சொல்றாரு' மனத்திறகுள் நினைத்ததை நேரடியாகவே அவள் கேட்டிருக்க,
"அது பார்த்துக்கலாம் தாமரை! கிராமத்துல எல்லாமே நம்ம விருப்பம் தான். அப்புறம் என்னோட பொறுப்புக்கு கீழே அஞ்சு மாவட்டம் இருக்கு. அதனால நான் வாரத்துக்கு ஒரு தடவைத் தான் இந்த ஆபிசுக்கு வருவேன். உங்களுக்கு எந்த விஷயமாகப் பேசனும்னாலும் என்னோட நம்பருக்கு கால் செய்யுங்க" என்றவராய் தனது கைப்பேசி எண்ணை அளித்தார்.
மேலதிகாரி அறையிலிருந்து வெளியே வந்தவளின் ஆழ்மனத்தின் உள்ளுணர்வோ, 'இங்கே எதுவோ சரியில்லை' என்று அவளுக்கு உணர்த்தியிருந்தது.

Previous thread
Next thread