Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Joined
Sep 25, 2025
Messages
95
Reaction score
97
Points
18
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 10

இப்படியாக அப்பாவும் பிள்ளையும் முரண்பட்டு நிற்க, அந்த நேரத்தில் நறுமுகை ஒரு குர்த்தாவைக் கொண்டு வந்து மித்ரனிடம் கொடுத்து, "அத்தான்... இது உங்க சைஸா?" என்று கேட்டாள். நறுமுகை இதைத் தெரிந்து செய்தாளோ அல்லது தெரியாமல் செய்தாளோ, அந்தக் குர்த்தாவைக் கொண்டுவந்ததன் மூலம் அங்கே நிலவிய ஒரு சிறிய போர்ச் சூழலைத் தடுத்து நிறுத்தியிருந்தாள்.

"நீ புடவை பார்க்கப் போகலையா?" என்று மித்ரன் கேட்க, "எனக்கு எப்பவுமே அக்காதான் செலக்ட் பண்ணுவா... அங்கே அக்காவும் மிதுக்காவும் கடையையே புரட்டிப் போட்டுக்கொண்டிருக்காங்க. எனக்கு போரடிச்சுதுன்னு ஜென்ஸ் செக்ஷனுக்குப் போனேன். இது கண்ணில் பட்டிச்சு... உங்களுக்கு டிரஸ் எடுக்கிற பொறுப்பை என்கிட்டத்தான் அக்கா கொடுத்திருந்தா..." என்றபடி அவள் கையிலிருந்த அந்த குர்த்தாவை அவனிடம் நீட்டினாள் நறுமுகை.

அந்தக் குர்த்தா மிகவும் அழகாக இருக்க, அதைத் தன் மேல் வைத்து அழகு பார்த்த மித்ரன், "இது எங்க அண்ணா சைஸ் நறுமுகை... எனக்கு இதைவிட ஒரு சைஸ் கம்மியா வேணும்" என்றான்.

அங்கே நின்ற சகாயனைப் பார்த்தபடி, "டாக்டர் சார்... இது உங்களுக்கும் நல்லா இருக்கும். அத்தானுக்கும் உங்களுக்கும் ஒரே மாதிரி வாங்கித் தந்தா கல்யாணத்துக்குப் போடுவீங்களா?" என்று நறுமுகை கேட்க,

"ம்..." என்று சகாயன் லேசாகப் புன்னகையுடன் தலையசைக்க, அந்த ஒரு சிறிய 'ம்'மிலேயே அந்த இடத்தின் இறுக்கம் சற்றே குறைந்தது போலத் தெரிந்தது.

"சூப்பர் டாக்டர் சார்! அப்போ அத்தானுக்கும் உங்களுக்கும் இதே டிசைன்ல எடுத்துடலாம்" என்று சொல்லிவிட்டு அவள் துள்ளிக் குதித்துச் செல்ல, சகாயன் மனதுக்குள் ஒரு நிம்மதி பரவியது.

சிறிது நேரத்தில் நறுமுகையே சகாயனிடமும் மித்ரனிடமும் ஓடி வந்து, “அத்தான் இது உங்களுக்கும், டாக்டர் சாருக்கும்!” என்று இன்னும் இரண்டு காசுவல் உடைகளைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

அந்தப் பையை வாங்கியபடியே திறந்து பார்த்த மித்ரன், “இது எதுக்கு?” என்று புரியாமல் கேட்க, “எப்படியும் கல்யாணம் முடிஞ்சதும் சொந்தபந்தங்கள் வீட்டுக்குச் சாப்பிடப் போகணும் தானே? அப்ப அக்கா மட்டும் புதுசு போடுவா, நீங்க என்ன பழசையா போட முடியும்? நீங்க இரண்டு பேரும் மாப்பிள்ளைக் கணக்கா புதுசு போடுங்க" என்றாள் மித்ரனிடம் உரிமையாக.

“எனக்குச் சரி.. என்ன இது பக்கத்துல இருக்கிற புல்லுக்கும் பாயுது?” என்று சகாயனிடம் கொடுத்த பையையும் பார்த்துக் கேட்டான் மித்ரன். “அவரும் புது மாப்பிள்ளை தானே? அவருக்கும் தேவைப்படும்!” என்றாள் நறுமுகை.

“அவனுக்குப் பிடிக்குமோ?” என்று மித்ரன் இழுக்க, “எனக்கு என் அத்தானுக்கும், அவர் அண்ணாவுக்கும் வாங்கிக் கொடுக்கணும் போல இருந்திச்சு... நான் வாங்கித் தந்துட்டேன். அவருக்கு அந்த உடுப்பு பிடிக்காட்டி பில் என்கிட்டதான் இருக்கு, மாத்திக்கட்டும்!” என்று நறுமுகை சகாயனிடம் பில்லை நீட்டினாள்.

அவள் நீட்டிய பில்லைப் பார்த்தவன், “ஒருத்தர் அன்பா வாங்கித் தந்ததைத் தூக்கி எறியுற மாதிரி என் அப்பாவும் அம்மாவும் என்னை வளர்க்கலை!” என்று பக்கத்தில் எதற்கும் சம்பந்தமில்லாதது போல அக்கடா என்று நின்று கொண்டிருந்த நடராஜனைத் தன் பேச்சால் ஒரு குட்டு வைக்கத் தவறவில்லை சகாயன்.

தந்தை தன்னைத் தள்ளி வைத்தாலும், தான் இன்னும் அதே வளர்ப்பில்தான் இருக்கிறேன் என்பதை அவர் முகத்தில் அடித்தாற்போலச் சொல்லிவிட்டு, அந்தப் பையைச் சிரித்தபடியே வாங்கிக்கொண்டான்.

அந்தத் தருணத்தில் நடராஜனின் முகத்தில் ஒரு மெல்லிய அதிர்வு மின்னல் போலத் தோன்றி மறைந்தது. ஆனந்தியின் முகத்திலும் தங்கள் பையன் முழுவதுமாகத் தங்கள் கையைவிட்டுச் செல்லவில்லை என எண்ணிச் சட்டென்று ஒரு புன்னகை அரும்பியது.

"தேங்க்ஸ்!" என்று நறுமுகையிடம் சகாயன் சொல்ல, "டாக்டர் சார்... அப்ப என் பீஸைக் கொஞ்சம் குறைக்கிறீங்களா?" என்று கேலியாகக் கேட்டாள் நறுமுகை. "என் வீட்டுப் பொண்ணுக்கு எப்பவுமே ஃப்ரீதான்!" என்று அவனும் பளிச் என்ற புன்னகையுடன் சொல்ல, அங்கே ஒரு குடும்பத்திற்குரிய நெருக்கம் தானாகவே மலர்ந்தது.

"அப்பா... அப்ப நீங்க டாக்டர் சாருக்குக் கொடுக்க வேண்டிய பீஸையும் என்கிட்ட தள்ளுங்க, நான் போய் எனக்கு இரண்டு சுடிதார் வாங்கிட்டு வர்றேன்!" என்று அங்கே நின்றுகொண்டு மகள் பேசுவதைப் பார்த்துக்கொண்டிருந்த நெடுமாறனிடம் நறுமுகை கேட்க, "அடியேய்! இன்னைக்கு ஃபுல் கடையையும் காலி பண்ணிட்டுப் போற ஐடியாவிலிருந்து வெளியே வாடி... உன்னோட முடியலை!" என்று பூங்குழலி தன் தலையில் அடித்துக்கொள்ள, "அம்மா... ப்ளீஸ்மா... ஒரே ஒரு சுடிதார்!" என்று தாயிடம் கெஞ்சினாள்.

ஆனந்தியோ தன் பெரிய மகனுக்கும் சேர்த்து உடுப்புக்கள் எடுத்துக் கொடுத்ததினால் உள்ளம் குளிர்ந்து இருந்தவர்"நீ போய் எடும்மா... அத்தை காசு கொடுக்கிறேன்" என்று பாசத்துடன் முன்வந்தார்.

உடனே பூங்குழலி, "நீங்க வேற சம்பந்தி... அவள் தனக்குன்னு உடுப்பை வாங்கிப் பீரோவில் பத்திரமா வச்சிட்டு, உடுப்பே இல்லைக்கான்னு யாழினியோட பீரோவிலிருந்துதான் எடுத்துப் போட்டுட்டுத் திரிவாள். இந்தா... இன்னைக்குப் போட்டிருக்கிறதும் யாழினியோடதுதான்!" என்று போட்டுக் கொடுக்க,

நறுமுகையோ அசட்டுப் புன்னகை ஒன்றை உதித்தபடி, "அக்கா தங்கச்சின்னு ஒரே வீட்டிலிருந்தால் மாறி மாறிப் போட்டுக்குறது சகஜம் தானே? அதிலென்ன இருக்கு? என்ன அத்தான்... நீங்க உங்க அண்ணாவோட சட்டையைச் சுட்டுப் போட்டதே இல்லையா?" என்று நறுமுகை மித்ரனிடம் கேட்டாள்

“முதல்ல போடுவேன்... இப்ப இல்லை" என்று மித்ரன் இறுக்கமான குரலில் சொன்னான். அவனது அந்த ஒற்றை வரியில் ஒரு பழைய கசப்பான நினைவாடல் வந்து போனது.

ஒருமுறை சகாயனின் சட்டையொன்றை எடுத்து மித்ரன் போட்டுக்கொண்டு மாலுக்குப் போயிருந்தான். அங்கே ரிதன்யா, இவனின் முதுகுப் புறத்தைக் கண்டு சகாயன் என நினைத்து ஓடிவந்து அழைக்க, மித்ரன் திரும்பி அவளைப் பார்த்துச் சிரித்தான். ஆனால் அது ரிதன்யா சகாயனுக்குப் பரிசளித்த சட்டை என்பதால், அவளுக்குக் கோபம் தலைக்கேறியது.

“உனக்கு வீட்ல உடுப்பேயில்லையா? எதுக்கு என் சகாவோடதை எடுத்துப் போட்டுட்டுத் திரியிற? டிரஸ் எடுக்கக் காசு இல்லாட்டிச் சொல்லு, நானே தர்றேன்! இப்படி ஒருத்தரோட உடுப்பை எடுத்து அசிங்கமே இல்லாம போட்டுட்டுத் திரியுறியே... நாளைக்கு நான் சகாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்புறம், அவர்னு நினைச்சு உன்னைக் கட்டிப்பிடிச்சுட்டேன்னா, அண்ணின்னு பார்க்காம ரசிச்சிருப்பாய் போல!” என்று மிகக் கேவலமாகப் பேசிவிட்டாள்.

ரிதன்யா அன்று எறிந்த அந்த வார்த்தைகள் மித்ரனின் மனதில் ஆறாத வடுவாக அப்படியே தங்கிவிட்டன. ஒரு புனிதமான அண்ணன் தம்பி உறவையே இத்தனை அசிங்கமாகச் சித்தரித்த அவளது எண்ணத்தை நினைக்கையிலேயே அவனுக்கு இப்போதும் குமட்டிக்கொண்டு வந்தது. அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அண்ணனின் சட்டையில் கையே வைப்பதில்லை என்று அவன் எடுத்த முடிவு இன்றுவரை உறுதியாக இருந்தது.

கதையை வாசித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள் நட்புக்களே..
 
Last edited:
Previous thread
Next thread

Latest threads

Top Bottom