Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Joined
Sep 25, 2025
Messages
95
Reaction score
97
Points
18
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 9

எப்பொழுதுமே மித்ராவும் மித்ரனும் சகாயனின் நலன் கருதி, ரிதன்யாவைப் பெரிதாகப் பகைத்துக் கொள்ள விரும்புவதில்லை. ஆனால் இன்று மித்ரா அத்தனைப் பேர் முன்னிலையிலும் வெடித்தது ஆனந்திக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ரிதன்யாவிற்கு ஏனோ தான் மட்டுமே எந்த இடத்திலும் முன்னிலையில் இருக்க வேண்டும், தன்னை மட்டுமே எல்லோரும் கவனிக்க வேண்டும் என்றொரு பேராசை. அதற்காக எந்த எல்லைவரையும் செல்வாள்.

அதனால் சகாயன் தன்னைச் சந்திப்பதற்காக மித்ரனையும் மித்ராவையும் சேர்த்து கூட்டிக்கொண்டு வந்தால், சகாயனுடைய கவனம் தன் மேல் மட்டும் இருக்காமல் அவர்களிடமும் இருப்பது அவளுக்குப் பிடிக்காது.

சகாயன் இல்லாத நேரங்களில் மித்ரனிடமும் மித்ராவிடமும் தன்னுடைய அந்தப் பொல்லாத குணத்தைக் காட்டி அவர்களை நோகடிக்கப் பார்ப்பாள்.

ரிதன்யா இவர்களது உறவுக்குள் வந்த பிறகு, தம்பியும் தங்கையும் சகாயனை விட்டு ஒரு அடி தள்ளி நிற்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

மித்ரனும் மித்ராவும் தள்ளி நிற்கும் இந்தச் சூழலைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட ரிதன்யா, சகாயனை இன்னும் நெருங்கி அவனை மொத்தமாகத் தன் வயப்படுத்திக் கொண்டாள்.

மித்ரனுக்கும் மித்ராவுக்கும் சகாயன் இப்போது அவளது சொல் கேட்டு ஆடும் ஒரு பொம்மையாகவே தெரிந்தான்.

சகாயனுக்குச் சிறிது நேரம் கிடைத்தாலும் அவளுக்குத்தான் போன் பண்ணிப் பேச வேண்டும் என்பது அவளது எழுதப்படாத விதி. அந்த நேரத்தில் அவன் அன்னையோடோ அல்லது வேறு யாருடனோ பேசிக்கொண்டிருந்தால், கோபத்தில் போனை பிளாக் பண்ணிவிடுவாள். சில நேரங்களில் ஆத்திரத்தில் சிம் கார்டையே கழட்டி வைத்துவிட்டுத் தலைமறைவாகிவிடுவாள்.

சகாயனோ, இதையெல்லாம் அவள் தன் மேல் வைத்துள்ள அளவில்லா அன்பினால் செய்கிறாள் என்று தவறாகப் புரிந்து வைத்திருந்தான். அவள் செய்யும் தவறுகளுக்குக் கூட, இறுதியில் சகாயன் தான் இறங்கிப் போய் அவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியிருக்கும். அந்தளவுக்கு அவனது சிந்தனையைத் தன் பிடிக்குள் வைத்திருந்தாள் ரிதன்யா.

இன்று இன்னொரு குடும்பமும் முன்னிலையில் இருக்கும் பொழுது, தன் தாயைப் பணத்துக்காகத்தான் ரிதன்யாவின் குடும்பத்தைத் தேடுகிறார் எனப் பேசியது மித்ராவிற்கு அறவே பிடிக்கவில்லை. அதனால் ரிதன்யாவின் போலித்தனமான முகமூடியைக் கிழித்து, அவளது உண்மையான குணத்தைத் தோலுரித்து எல்லோருக்கும் முன்னிலையிலும் சொல்லிவிட்டாள் மித்ரா.

ஆனந்தி மகளின் இந்தப் பேச்சைக் கேட்டுத் திகைத்து நிற்க, பூங்குழலிக்கோ ரிதன்யாவைப் பார்த்த முதல் பார்வையிலேயே நல்ல அபிப்பிராயம் ஏற்படவில்லை. "என்ன இது... இப்படி ஒரு குணம் கெட்ட பெண்ணா என் பெண்ணின் ஓரகத்தியாக வரப்போகிறாள்? இவளால் என் மகளின் வாழ்க்கைக்கு ஏதும் தீங்கு விளையுமோ?" என்று நினைக்கும் போதே அவருக்கு நெஞ்சு பக்கென்று இருந்தது.

பக்கத்திலிருந்த யாழினிக்கும், நறுமுகைக்கும் அந்த வீட்டில் நடக்கும் உட்கட்சிப் பூசல் பற்றி மித்ரா மற்றும் மித்ரன் வாயிலாக ஏற்கனவே கொஞ்சம் தெரிந்திருந்தாலும், இப்போது நேரில் நடப்பதைப் பார்க்கும் போது சகாயன் தான் ஒரு பாவப்பட்ட ஜீவனாகத் தெரிந்தான்.

மற்றவர்களுக்காகவும், மற்றவர்களின் சந்தோஷத்திற்காகவும் வாழும் ஒரு குடும்பத்தில், இப்படித் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தும் ஒருத்தி வந்து சேர்ந்தால், அதுவும் சகாயன் போன்ற ஒரு அமைதியான மனிதனுக்கு இவள் துணையாக அமைந்தால் என்னவாகும் என்ற கவலையே அக்காவுக்கும் தங்கச்சிக்கும் வந்தது.

ரிதன்யா சொன்னது பொய்யா? மித்ராவுக்கு எப்படி இது தெரிந்தது? என்று சகாயன் குழப்பத்தில் நிற்க, அங்கே புடவைகளை அலசிக் கொண்டிருந்த ரிதன்யாவுக்குத் தன் குட்டு உடைந்தது தெரியவே இல்லை.

தனக்கான புடவையை எடுப்பதும், அதைத் தன் மேல் வைத்துப் பார்ப்பதும், பிறகு அதில் ஏதாவது ஒரு குறையைக் கண்டுபிடித்து அடுத்த புடவையைத் தேடுவதுமாக நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தாள். அவளது மொத்த கவனமும் எப்படியாவது யாழினி தேர்ந்தெடுக்கும் புடவையை விடத் தன்னுடையது விலை உயர்ந்ததாகவும், சிறந்ததாகவும் இருக்க வேண்டும் என்பது மட்டும்தான். அந்தப் போட்டி மனப்பான்மையில் சுற்றியிருப்பவர்களின் முக மாற்றத்தையோ, மித்ராவின் வெடிப்பையோ அவள் கவனிக்கத் தவறிவிட்டாள்.

சில நிமிடங்களிலேயே மித்ரா சகஜமாகிப் புடவை பார்க்கத் தொடங்க, அங்கே மீண்டும் சிரிப்பும் லூட்டியுமாகப் புடவை எடுக்கும் வைபவம் களைகட்டியது. ஒரு வழியாக அந்த இடத்தின் இறுக்கம் தளர்ந்து, கலகலப்பு ஒட்டிக்கொண்டது. ஆண்கள் மூவரும் ஏற்கனவே தங்களுக்குத் தேவையான உடைகளைத் தேர்ந்தெடுத்துவிட்டு வந்து, இப்போது பெண்களுக்கு உதவிக்கொண்டிருந்தனர்.

சகாயனுக்குத் தான் மட்டும் தனித்துப்போய்விட்டது போல ஒரு தோற்றம். தன் தெரிவு சரிதானா? அவன் நேசித்தவள் நல்லவள் தானா என்ற ஐயம்? வாழ்க்கைத் துணையுடன் காலம் முழுவதும் வாழ முடியுமா? என்ற கேள்வி எனப் பல எண்ணங்கள் மனதை அரித்துக் கொண்டிருக்க, சகாயன் இரு தரப்புடனுமே சேராமல் தனியே ஒரு கதிரையில் அமர்ந்து போனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் மித்ராவின் கலகலப்பான சிரிப்புச்சத்தம் சகாயனின் காதை எட்ட, அவன் தன் தனிமையிலிருந்து மீண்டான்.

புடவைகளைத் தேர்ந்தெடுப்பதில் முழு கவனமாக இருந்த ரிதன்யாவிடம், "நீ புடவை பாரு, நான் அப்பாகிட்ட எனக்கு வேண்டின டிரஸ் சைஸ் சரியா இருக்கான்னு செக் பண்ணிட்டு வர்றேன்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அவனுக்கு மித்ரா சொன்னது உண்மையா? என்று ரிதன்யாவிடம் கேட்டுவிட வேண்டும் என்று இருந்தாலும், அவள் வாயிலிருந்து இப்பொழுது மட்டும் உண்மை வெளிவரும் என்று என்ன நிச்சயம். இதுக்கு இன்னொரு பொய்யைச் சொல்லி ஈடுகட்டிவிடுவாள் என்று அவளிடம் கேட்கவே போகவில்லை.

சகாயன் யாழினிக்கு புடவை பார்த்துக்கொண்டிருந்த இடத்துக்குக்கு வர, "அம்மா... ப்ளீஸ், இந்தப் புடவையும் அக்காவுக்கு நல்லா இருக்கும்" என்று நறுமுகை கெஞ்ச, "அக்காவுக்கு ஏற்கனவே அஞ்சு புடவை எடுத்தாச்சு, போதும்டி!" என்றார் பூங்குழலி அலுத்தபடி.

"அம்மா... அப்ப அண்ணிக்கு நாம எடுக்கலாம்" என்று மித்ரா சொல்ல, "அண்ணிக்கு நல்லா இருக்கும்னு நீ ஏழு புடவை எடுத்துட்டடி! இப்படி ஒரேடியா வாங்கினால் ஃபேஷன் போயிடும்" என்று ஆனந்தி மித்ரா, நறுமுகை இருவரையும் அதட்டினார்.

அவர்கள் இருவரின் முகமும் தேய்பிறை எனச் சுருங்க, அது பொறுக்காமல், "முதல்ல உங்களுக்குப் பாருங்க" என்று யாழினி சொல்ல,

"நீங்க செலக்ட் பண்ணித் தந்தாதான் ஆச்சு" என்று மித்ராவும் நறுமுகையும் பிடிவாதம் பிடித்தனர். இருவரும் முதலே ஒரே மாதிரியான புடவையைக் கட்டப்போகிறோம் என்று பேசி வைத்திருந்தது தெரிந்த யாழினி "சரி வாங்க... உங்க ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி புடவை பார்ப்போம்" என்று அவர்களைக் இன்னுமொரு பகுதிக்குக் கூட்டிச் சென்றாள்.

அங்கே வந்த சகாயனைப் பார்த்த நடராஜன், "புடவை எடுத்தாச்சுன்னா பில் போடலாம்டா" என்றார்.

"அப்பா என் உடுப்பு எங்கே?" என்று சகாயன் கேட்க, ரிதன்யாவை நோக்கிப் பார்வையைத் திருப்பிய நடராஜன், "என் தேர்வு உனக்கு பிடிக்காது என்று எடுக்கலைடா.." என்றார் ஒருவித அந்நியத்துடன்.

சகாயன் தன் தந்தையைத் திகைப்புடன் பார்த்தான். அண்ணனின் நிலையைக் கண்ட மித்ரனுக்குப் பாவமாக இருக்க, "நீ வாண்ணா... நாம இரண்டு பேரும் சேர்ந்து செலக்ட் பண்ணலாம்" என்று அவனை அழைக்க,

நடராஜன் மித்ரனைத் தன் பார்வையாலேயே தடுத்து நிறுத்தியவர், பெரிய மகனிடம், "நீ மருமகளைக் கூட்டிட்டுப் போய் செலக்ட் பண்ணுப்பா... அவளுக்கு நாங்க எடுத்தா பிடிக்குமோ என்னவோ தெரியலை!" என்று சொன்னார்.

நடராஜனுக்குத் தங்களைப் பொய் சொல்லி ஏமாற்றி இருக்கிறாள் ரிதன்யா என்று தெரிந்தவுடன் கட்டுக்கடங்காத கோபம். தன் குடும்பத்தையே மதிக்காமல், ஒரு முக்கியமான விசேஷத்திற்குப் பெற்றோரைத் திட்டமிட்டுத் தவிர்த்துவிட்டு, பொய் சொன்னதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஆனந்தி தான், "சகாயனுக்காகப் பொறுத்துக்கோங்க... இன்னைக்கு நல்ல நாள்" என்று அவரிடம் கெஞ்சி கொஞ்சம் சமாதானப்படுத்தியிருந்தார்.
 
Previous thread
Next thread

Latest threads

Top Bottom