Writer✍️
- Joined
- Oct 17, 2025
- Messages
- 13
- Reaction score
- 1
- Points
- 3
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
நீண்டதோர் பயணத்தின் பின்னர் ஆட்டோவனாது பெரியதோர் அடுக்கு மாடி கட்டடத்தின் முன்னால் சென்று நின்றது. அதிலிருந்து இறங்கியவனோ,
"இடம் வந்துட்டுது இறங்கு" என்றான். அவளும் அந்தக் கட்டடத்தையே வாய் பிளந்து ஆராய்ந்தவாறு இறங்க,
"இங்க தான் நான் சொன்ன வீடு இருக்கு. வா!" என்றான்.
"எது... இந்த மாடி கட்டிடத்திலயோ...?" நம்பமுடியாது கேட்டவாறு இறங்கியவளை பார்த்து சிரித்தவனோ,
"நீ பயப்பிடுற மாதிரி இங்க ஒண்டும் இல்ல.. எல்லாமே குடும்பமா, குடி இருக்கிற வீடுகள் தான். அதில இனி நீயும் ஒருத்தி."
"அப்பிடியே...? அப்ப பழகிறதுக்கு நிறைய ஆட்கள் இருப்பினம்"
"எங்க இங்கயாே..? இது என்ன கிராம் எண்டு நினைச்சிட்டியோ? ஒரே கட்டிடத்தில குடி இருக்கினம் எண்டு தான் பெயர். முழுத்தும் பற்றி போடாத ரோபோக்கள். பக்கத்து வீட்டில யார் இருக்கினம் எண்டு கூட தெரியாததுகள். பழகிறன் எண்டு பக்கத்து வீட்டு கதவை தட்டிடாத, கள்ளி எண்டு பொலிஸ்ல புடுச்சு குடுத்துடுங்கள்." என்றான் அந்த நகரத்தின் நிலையினை எடுத்துக் கூறுவது போல்.
"அய்யோ...! ஏன் அப்புடி?" விழி விரித்து அப்பாவி போல் கேட்டவளை பார்க வினோதம் தான், ஆனால் விளக்கம் சொல்லும் பொறுமை அவனிடம் இல்லை.
"இப்ப உனக்கு விளக்கம் சொல்லுறதோ, இல்லை எண்டா வீட்ட காட்டுறதோ!" என்றான் கடமை நிறைந்தவனாய்.
"இல்ல இல்ல... வாங்கோ போய் வீட்டை பாப்பம்." எங்கே மேலும் கேள்விகள் தொடுத்தால், வீடு காெடுக்காமல் போய் விடுவான் என்ற பயம் அவளுக்கு.
"ம்ம் அப்ப வா!" கட்டிடத்தை நோக்கி உள்ளே நுழைந்தவன் பின்னே அவள் ஓட, அங்கிருந்த மின் தூக்கி பொத்தனை அழுத்திவிட்டு காத்திருந்தவன் சொல்லுக்கு கட்டுண்டு, அந்த மின் தூக்கியும் கதவுகளை திறந்து கொள்ள உள்ளே நுழைந்தவன், "நீயும் வா" என்றான் அதில் ஏறாது தயங்கி நின்றவளை பார்த்து.
ம்ம் என்று வெறும் தலையசைப்புடன் அவளும் ஏறிக்காெள்ள, பதின் ஆறாவது நம்பர் பொத்தனை அழுத்தியவனையும் அந்த பொத்தனையும் மாறி மாறிப் பார்த்தவள்,
"இவ்ளோ உயரத்திலயோ வீடிருக்கு?" என்றாள் கண்களை விரித்து.
"ஏன் அவ்வளவு உயரத்தில இருந்தா இருக்க மாட்டியோ!" நக்கலாக ஒலித்த குரலின் மாற்றத்தை உணர்ந்தவள்,
"ச்சீ ச்சீ.... அப்பிடி எல்லாம் இல்ல... அவசரத்துக்கு வீடு கிடைக்கிறதே கஷ்டம். இதில கடவுள் மாதிரி வந்து உதவி செய்யிற நீங்கள், கழுத ஒரு ஓலை கொட்டில்ல இரு எண்டா கூட இருக்க மாட்டனா அண்ணா" அவன் காலை தொழுவதைப் போல், கடைசியில் காலை வாரியவள் பேச்சானது தன்னை புகழ்கிறாளா இகழ்கிறாளா என்பது கூட தெரியாது.
"சரி சரி என்னை புகழ்ந்தது காணும்... நேரம் போறதுக்குள்ள வா! வீட்டை பாப்பம்." என நின்ற மின்தூக்கியிலிருந்து இறங்கி நடுவில் நின்றவனுக்கு, இடது பக்கம் போவதா வலது பக்கம் போவதா என்ற குழப்பம் போல. எத்திசை போவதென தெரியாது இரண்டு பக்கமும் காலை வைப்பதும் எடுப்பதும் என அவன் தடுமாறுவதை கண்டவள்,
"என்ன தடுமாறுறீங்கள்...? கட்டிடம் ஏதும் மாறி கூட்டிக்கொண்டு வந்துட்டீங்களோ!" என அவள் கேட்டதும் தான் தாமதம்,
"ச்சீ ச்சீ.... கட்டிடத்த மாத்தி கூட்டிட்கொண்டு வர நான் என்ன அரணையா? என்ன.. இந்த கட்டிடம் பூராத்தையும் நானே வாடகைக்கு எடுத்து விடுறதால, எந்த வீடு ஆள் இல்லாம இருக்குது என்டதை மட்டும் மறந்திட்டன்." தட்டுத் தடுமாறி பதில் சொல்லிக் கொண்டு போனவன் கண்களோ ஒரு இடத்தில் நிலை குத்தி நிற்க.
"நீ தங்க வேண்டிய வீடு அது தான்" என்று விழியானது நிலை குத்தி நின்ற வீட்டின் கதவை காட்டியவன்,
"இதிலையே நிண்டு கதைக்காம வா வேளைக்கு உள்ள போவம்" என அவசரமாக கதவின் அருகே சென்றவன், கையிலிருந்த பையினை துளாவி ஓர் திறப்புகொத்தை வெளியே எடுத்தன்.
அவனுக்கு கையிலிருந்த திறப்புக் கொத்தில், எந்தச் திறப்பு அந்த வீடடின் திறப்பு என்பதிலும் குழப்பம் தொற்றிக் கொண்டது.
ஒவ்வொரு திறப்பாக எடுத்து உள்ளே புகுத்திப் பார்த்தவனை கண்டு உதடு பிதுக்கியவள்,
'இவ்வளவு திறப்பு வைச்சிருக்கிறான் எண்டா பெரிய ஆள் தான் போல' தனக்குள் எண்ணிக் கொண்டிருந்த நேரம், அவன் புகுத்திய திறப்பில் ஒன்று பொருந்தி கதவும் திறந்து கொண்டது.
"அப்பாடா..." பெருமூச்சு விட்டவனாய்,
"உள்ளுக்குள்ள வா" என்று உள்ளே நுழைந்ததும் கதவை அடைத்தவன்,
"நான் இதில இருக்கிறன், நீ வீட்டை சுத்திப்பாத்துட்டு வா!" என்றான் அங்கிருந்த கதிரை ஒன்றில் சுவாத்தியமாக அமர்ந்து.
அவன் சொல்லுக்கு இணைந்து வீட்டை நின்ற இடத்திலிருந்து மேலோட்டமாக பார்த்தவள் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்ததது.
உண்மை தான். வீடானது அவள் நினைத்ததை விட, பல மடங்கு விசாலமாகவும், ஒரு வீட்டுக்கு என்னென்ன தேவையோ அதை தாண்டிய பொருட்களுடன், ஆடம்பர பொருட்களும் அதுவும் விலையில் உயர்ந்த பொருட்களாவும் இருப்பது அதன் தோற்றத்திலேயே தெளிவாக தெரிய,
"அண்ணா நீங்கள் சரியான வீட்டுக்குத் தானே என்னை கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீங்கள்?" என்றாள் அந்த வீட்டின் தோற்றத்தை பார்த்து.
"ஓம்! ஏன் இந்த கேள்வி?" கேட்டவனுக்கு தெரியும் அவளது கேள்வி எதனால் என்பது.
"ஓ... இங்க இருக்கிற பொருளுகளை பாத்து கேக்கிறியாே! இதுல ஆச்சரிய பட என்ன இருக்கு.? நான் தான் ஏற்கனவே சொன்னனே, இந்த வீடு வெளிநாட்டில இருக்கிறவேன்ர வீடு எண்டு. அவயல் வீட்டுக்கு தேவையான சாமன் எல்லாம் வாங்கி வைச்சிடுவினம். ஆக இங்க இருக்க வாரவ, சமையலுக்கு தேவையான சாமான மாத்திரம் வாங்கி சமைச்சு சாப்பிடுறது தான் வேல. மற்றம்படி எதுவும் வாங்க தேவையில்ல. நீ எத்தினை நாளைக்கு இருக்கோணுமோ அதுக்கேத்த காச தந்திட்டு இருக்கலாம். சொல்லு உனக்கு எத்தினை நாளுக்கு வீடு வேணும்?" என்றான் எங்கு விட்டால் தொடர் கேள்வி கேட்டு குடைவாள் என்ற பயத்தில்.
"எத்தினை நாளைக்கோ... அது... அது.. எனக்க சொல்ல தெரியாது. ஆதே நேரத்தில இங்க இருக்கிற சாமானையும், வீட்டையும் பாத்தா, வாடகையும் கூட வரும் போல இருக்கு. தொடந்து இந்த வீட்டில என்னால இருக்க ஏலாது. எவ்வளவுக்கு வேளைக்கு வீடு பாக்கிறனோ அவ்வளவுக்கு நல்லது. வீடு பாத்த கையோட வெளிக்கிட்டிடுவன். அதால ஒரு பத்து நாளைக்க இருக்கிறது போல ஏற்பாடு சொய்யுங்கோண்ணா..." என்றாள் அங்கிருக்கும் அறைகளை எண்ணியவாறு.
ஆம் அந்த வீட்டில் நாலு கதவுகள் இருப்பது வரவேற்பறையில் நின்று பார்க்கவே தெளிவாக தெரிந்தது. நாலு அறை என்பது அவள் ஒருத்திக்க அதிகப்படியே! ஒருத்திக்கு அதிக செலவில் எதற்கு வீடு? முடிந்த வரை காசை மிச்சம் பிடிக்க வேண்டும். இல்லை என்றால் எல்லாமே சிரமம் ஆகிவிடும். என நினைத்தவள்,
"பத்து நாளைக்கு எண்டா எவ்வளவு அண்ணா முடியும்?" என்றாள்.
"பத்து நாளைக்க... ஒரு ஏழாயிரம் வரும். அவ்வளவு ஒண்டும் நீ எனக்கு தர வேண்டாம். ஆறாயிரம் தந்த காணும்." என்றான் பெரிய மனதோடு.
அவனது பதிலில் அதிர்ந்த விழி விரித்தாலும், "பெரிய மனசு தானண்ணா உங்களுக்கு... ஆனாலும் இந்த மாதிரி சலுகை குடுத்தீங்கள் எண்டா, நட்டத்தில போயிட போகுது அண்ணா உங்கட தொழில்." என்றாள் பத்து நாளுக்கு இது ஓவர் என்ற எரிச்சலை உள்ளடக்கியவாறு நக்கலாக.
"என்னம்மா செய்யிறது? எனக்கு கொஞ்சம் இளகின மனம். அதால எதை பற்றியும் யோசிக்காம சொல்லிடுவன். நீ வேற திக்கில்லாம நிண்ட, உதவி செய்யிறன் எண்டு வலிய கூட்டிக் கொண்டு வந்திட்டு நிறைய காசு கேக்க ஏலுமே. " அவள் தன்னை கேலி செய்கிறாள் என்பது தெரிந்தும், எங்கே அதை காட்டிக் கொண்டால், முதலுக்கு மோசம் ஆகிடும் என்ற பயம். அதனால் மேலும் தன் பெரிய மனது தன்மையை அவிழ்த்து விட்டான்.
"எப்பவும் இந்த பெரிய மனச யாருக்காகவும் விட்டுடாதீங்கோ அண்ணா" என்று மேலும் அவளது கேலியை கண்டு கொள்ளாதவனோ,
"கதைச்சது காணும் தங்கச்சி... தரவேண்டிய காச தந்திட்ட எண்டா நான் பாட்டுக்கு போய் கொண்டிருப்பன்." என்றான் அவசரமாக.
"என்ன...? இப்பவே காசா? ஏன் பத்து நாளையில வெளிக்கிட தானே போறன். அப்ப தாரன்"
"அப்பவோ.. அதெல்லாம் இல்ல... வீடு காட்டின உடனம் தரோணும். இல்லை எண்டா இப்பவே வீட்டை விட்டு வெளிக்கிடும்மா... நான் வேற யாரையாச்சும் பிடிக்கிறன்." என்றான் இதுவரை இல்லாத கறார் குரலில்.
"என்ன வெளிக்கிடுறதோ... இந்த நேரத்தில நான் எங்க போவன்." முணுமுணுத்தவள் புலம்பல் விளங்கியவனோ,
"தெரியுது தானே! என்னை தவிர இந்த நேரத்தில உதவ ஆரும் வர மாட்டினம் எண்டு. கதைய வளக்காம காச எடும்மா... நான் வேற ஆளை பிடிக்கோணும்." என்றான் மீண்டும் விடாது. அவளுக்குமே வேறு வழியில்லையே! பையிலிருந்த காசில் அவன் கேட்ட பணத்தினை எடுத்து நீட்டினாள் வேண்டா வெறுப்பாக.
"உதவி செய்யிறன் எண்டதும் பல்ல காட்டுறது. அதுக்கு காச கேட்டா மட்டும் முகத்தை சுழிக்கிறது." புடுங்காத குறையாக அவள் கையிலிருந்த காசை இழுத்து எடுத்தவன், அடுத்த நொடி
தாமதிக்காது, திறப்பினை அவளிடம் கொடுத்து விட்டு, அந்த வீட்டை விட்டு வெளியேறினான்.

Previous thread