- Joined
- Sep 16, 2024
- Messages
- 740
- Reaction score
- 4,437
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
ஓர் எழுத்தை மாற்றி எழுதினால் அதன் அர்த்தமே மாறிவிடும். சிலர் அந்த வேறுபாடு அறியாமல் விடும் பிழைகள் பல.
இன்று சிலர் அறியாமல் விடும் சில சொற்களைப் பற்றி பார்ப்போம்.
தோல் :-
மனிதன், விலங்கு முதலியவற்றின் தசையின் மேல் உறைபோல் மூடியிருப்பது. (Skin) சருமம்.
உதாரணம் :
நெருப்புப் பட்ட இடத்தில் தோல் கருகிவிட்டது.
தோல் சீவிய உருளைக் கிழங்கு.
தோள் :-
மனித உடலில் கழுத்தின் இரு பக்கங்களிலும் நீண்டு அமைந்து கைகள் தொடங்கும் பகுதி. (Shoulder) தோள்பட்டை
உதாரணம் :
மூட்டையைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டார்.
அவன் அவளின் தோளைத் தொட்டான்.

உரை :
தெரிவித்தல்; கூறுதல்
உதாரணம்:
அவன் தனக்கு வேலை கிடைத்துவிட்டதாக அவளிடம் உரைத்தான்.
அந்த நல்ல செய்தியை அவனிடம் ஆர்வமாக உரைத்தாள்.
உறை :
கெட்டித் தன்மை அடைதல்; கெட்டியாதல்
உதாரணம்:
விபத்து நடந்த இடத்தில் இரத்தம் திட்டுத்திட்டாக உறைந்திருந்தது.
எவ்வளவு சொன்னாலும் உனக்கு உறைக்காதா?
இரவில் திடீரென்று கூக்குரல் சத்தம் கேட்டதும் பயத்தால் உறைந்துபோனான்.
அவன் உரைத்த செய்தியைக் கேட்டு அதிர்ந்து உறைந்து நின்றாள்.

எத்தனை :
எத்தனை என்பது எண்ணிக்கை சார்ந்தது.
உதாரணம்:
எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்?
எத்தனை மணிக்கு வருகிறாய்?
உனக்கு எத்தனை தடவை சொல்வது?
எத்துணை :
அளவு, பருமன், குணம், நிறம் பற்றியது.
உதாரணம்:
அவர் எத்துணை
நல்லவர்?
இத்துணை அகலமா?
நீங்கள் செய்வது எத்துணை நன்மை தெரியுமா?
எத்துணை அளவு உழைக்கிறோமோ, அத்துணை அளவு பயனுண்டு.

Previous thread
Next thread