நந்தவனப்பூக்கள்
- Joined
- Sep 19, 2024
- Messages
- 453
- Reaction score
- 225
- Points
- 43
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
சுண்டைக்காய் நல்ல சுத்தம் பண்ணி 100கிராம் அளவு எடுத்து கொள்ள வேண்டும். வெங்காயம் 1.சோம்பு பிடித்தால் சோம்பு இல்லை சீரகம் எடுத்து கொள்ளலாம் 1/2ஸ்பூன் அளவு. தக்காளி 1.இஞ்சிபூண்டு பேஸ்ட் கொஞ்சம். சீரகம் பொடி 1/2ஸ்பூன் . 1மிளகாய் வத்தல் பொடி 1ஸ்பூன்.கொத்தமல்லிபொடி 1ஸ்பூன். மஞ்சள் பொடி கொஞ்சம். உப்பு தேவைக்கேற்ப. குழம்பு பொடி இருந்தாலும் 1ஸ்பூன் எடுத்து கொள்ளலாம் மேலே உள்ள பொடி இல்லை என்றால். செய்முறை. வானொலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து வெங்காயம் வதக்கிய பின்பு இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கிய பின்பு சுண்டைக்காயை நிறம் மாறும் வரை வதக்கிய பின்பு தக்காளி போட்டு வைக்கவேண்டும். பின்னர் பொடி வகைகள் எல்லாம் போட்டு வதக்கி 5நிமிடம் கொஞ்சம் தண்ணீர் தெளித்து மூடிவிட சுண்டைக்காய் வதக்கல் ரெடி. சுண்டைக்காய் சாப்பிடதவர்கள் கூட சாப்பிடு வாங்க.
Last edited:
Previous thread
Next thread





























