Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

காதலின் ரீங்காரம் - முன்னோட்டம்

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 6
  • Views Views 1K
Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
740
Reaction score
4,430
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
ஹாய் மக்களே...
நேத்து எனது எழிலன்பு நாவல்ஸ் தளத்தில் "பேதையின் பேரன்பில்" கதைக்கு டீசர் போட்டேன். இன்னைக்கு இன்னொரு கதைக்கான தலைப்பு அறிவிக்க வந்திருக்கேன். அதனுடன் குட்டி டீசரும்...

இந்தக் கதையின் நாயகனை உங்களுக்கு ஏற்கெனவே தெரிஞ்சிருக்கும். இவனுக்கு கதை வரும்னு போன வருஷம் சொல்லியிருந்தேன். இப்பதான் இவனை எழுத நேரம் வந்திருக்கு.

யார் அந்த ஹீரோ?

டீசரை படிச்சுப் பாருங்க. உங்களுக்கே தெரியும். கண்டுபிடிக்க முடியாதவங்க டீசர் கடைசியில் பார்த்து தெரிஞ்சிக்கோங்க.

இந்தக் கதை விரைவில் வரும்...

கதையின் தலைப்பு

"காதலின் ரீங்காரம்"
View attachment 775
ஒரு குட்டி டீசர்...​

"எனக்கு உன்னை பிடிக்கலை... பிடிக்கலை... பிடிக்கலை..." என்று குரலை உயர்த்தி ஆங்காரமாக கத்தினாள் மதுமதி.

"ஷப்பா!" என்று நிதானமாக காதை விரலால் குடைந்துவிட்டுக் கொண்ட மயூரன், தன் புத்தம் புது மனைவியை நிதானமாகப் பார்த்தான்.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவனை உக்கிரமாய் முறைத்துக் கொண்டிருந்தாள் மதுமதி.

"ஏசி பத்தலையோ... பலமா அனலடிக்குது..." என்று கையால் முகத்தில் விசிறிக் கொண்டே, மேஜை மீதிருந்த ஏசியின் ரிமோட்டை எடுத்து இன்னும் சற்று அளவைக் குறைத்து வைத்தான்.

அவன் தன்னைச் சீண்டுவதாகத் தோன்ற, அவளின் பார்வையில் உஷ்ணம் கூடியது.

பார்வையாலேயே அவனைச் சுட்டெரித்தாள். ஆனால் அவளின் பார்வை வீச்சு எதிரில் இருந்தவனைச் சிறிதும் அசைக்கவில்லை.

நெற்றியில் அடம் பிடித்து விழுந்த தன் அடர்ந்த சுருள் கேசத்தை ஒதுக்கிவிட்டு, அவளைத் துளைப்பது போலப் பார்த்தான்.

அவனது கூர்மையான வில்லென வளைந்த அடர்ந்த புருவங்கள், அவன் நெற்றியைச் சுருக்கியதில் ஒன்றோடு ஒன்று தொட்டுக்கொண்டன.

அவனின் பார்வை அவளை அழுத்தமாகத் துளைக்க, அந்தப் பார்வையின் வீச்சைத் தாங்க முடியாமல் தலையைச் சிலுப்பிக்கொண்டு திருப்பினாள் மதுமதி.

அவளின் அருகில் எட்டு வைத்து நிதானமாக வந்த மயூரன், அவளின் நாடியில் கைவைத்து திருப்பித் தன் முகம் பார்க்க வைத்தான்.

தன்னைத் தொட்ட அவனின் கையை அவள் தட்டிவிட முயல, இன்னொரு கரம் கொண்டு அவளின் முயற்சியைத் தடுத்தவன்,
"தங்கப் பொண்ணுக்கு ஏன் இவ்வளவு கோபம், ம்ம்? கோபப்படும் நேரமா இது?” என்றான். அவனின் பார்வை படுக்கையைத் தொட்டு மீண்டது.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த அறை, அந்த இரவுக்கான முக்கியத்துவத்தை பறைசாற்றிக் கொண்டிருந்தது.

ஆனால், அதைப் புரிந்து கொள்ள வேண்டியவளுக்கோ கோபமும், ஆத்திரமும், ஆவேசமும் மட்டுமே மிஞ்சியது.

அன்று காலையில் தான் மணம் முடித்த மணப்பெண் போன்ற படபடப்போ எதிர்பார்ப்போ இல்லாமல், தன்னை அக்னியாய்ச் சுட்டெரிப்பவளை நிதானமாகவே கையாண்டான் மயூரன்.

அவளுக்கு இருந்த ஆத்திரத்தில் அவனின் அடர்ந்த சுருள் கேசத்தைப் பிடித்து உலுக்கி மாவாட்ட வேண்டும் போல் இருந்தது.

தன்னைப் பிடித்திருந்தவன் கையை வெடுக்கென்று தட்டிவிட்டுப் பின்னால் விலகி நின்றவள், “உனக்கு கொஞ்சம் கூட வெட்கமா இல்ல? உன்னைப் பிடிக்கலைன்னு உன் மூஞ்சிக்கு நேரா சொல்றேன்... கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லாம பெட்டை ஜாடை காட்டி கூப்பிட்டுட்டு இருக்க! ச்சை…” என்று அருவருப்பாகச் சொன்னாள்.

தொடர்ந்து, “உன்கிட்டயும் வேற என்ன எதிர்பார்க்க முடியும்? என் மனசுல வேற ஒருத்தன் தான் இருக்கான்னு தெரிஞ்சும் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டவன் தானே நீ!” என்றாள் பற்களைக் கடித்தபடி.

“இருக்கான்னு பிரஸண்ட் டென்ஸ்ல சொல்றியே தங்கப்பொண்ணு? அவன் தான் பாஸ்ட் டென்ஸ் ஆகிட்டானே… அப்புறம் ஏன் எனக்கு வெட்கம், சூடு, சொரணை எல்லாம் வரப் போகுது?” என்று கேட்டவனை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்தாள்.

“என்னோட விக்ரம் செத்துட்டா அவன் பாஸ்ட் டென்ஸ் ஆகிடுவானா? அவன் இன்னும் என் மனசுல வாழ்ந்துட்டு தான் இருக்கான். அவனுக்கு மட்டும் தான் என் மனசுல எப்பவும் இடமிருக்கும். அந்த இடத்தைப் பிடிக்க உன்னால் முடியாது!” என்றாள் சவாலாக.

“அப்படியா சொல்ற? அதையும் தான் பார்த்துடுவோம் தங்கப் பொண்ணு…” என்றான் மயூரன்.

அவனின் உதடுகளோரம் ஒளிந்து கொண்டிருந்த குறும்புப் புன்னகையைப் பார்த்தவளுக்கு இன்னும் வெறியானது.

“என்னைத் தங்கப்பொண்ணுன்னு சொல்லாதே! கேட்கும் போதே நாராசமா இருக்கு…”

“சரி தங்கப்பொண்ணு…” என்றான் இப்போது நன்றாகவே தன் புன்னகையைக் காட்டி.

“அப்படியே உன்னை கடிச்சு கொதறிடுவேன்…” பற்களைக் கடித்துக் கொண்டு அவனைக் கடிப்பது போல கோபமாக அருகில் வந்தாள்.

“காத்திருக்கேன் தங்கப்பொண்ணு. உன் விருப்பம் போல எங்க வேணுமானாலும் கடிச்சுக்கோ…” என்று இரண்டு கைகளையும் விரித்து, தலையை அசைத்து புன்னகையுடன் அவளை வரவேற்றான் மயூரன்.
*****
இந்தக் கதையின் நாயகனும் நாயகியும் எனது "உதிரா நேசம்" கதையில் வருவாங்க. இவங்க கதை என்னன்னு அந்தக் கதையிலேயே உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். தெரியாதவங்களுக்கும் இந்தக் கதையில் தெரிய வைப்பது போல் தான் காட்சி அமைப்புகள் இருக்கும். எலியும், பூனையுமா டாம் ஜெர்ரி ஆட்டம் ஆடப் போறாங்க இந்த நாயகனும் நாயகியும்.

கதை தலைப்பும், டீசரும் எப்படி இருக்குன்னு சொல்லிட்டு போங்க...

உதிரா நேசம் கதை படிக்க நினைப்பவர்கள் எனது ப்ரீமியம் தளத்தில் படிக்கலாம் லிங்க் -> உதிரா நேசம்
 
சூப்பர். ஓ... அவங்களா இவங்க. ஆனால், மதுரன் நிலைமைத் தான் ரொம்ப ரொம்ப பாவம் போலவே.

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
அவனா நீ?வழக்கம் போல பேர் மறந்தாச்சு
 
சூப்பர் ஹீரோ.
 
சூப்பர். ஓ... அவங்களா இவங்க. ஆனால், மதுரன் நிலைமைத் தான் ரொம்ப ரொம்ப பாவம் போலவே.

😀😀😀
CRVS (or) CRVS 2797
ஆமாம் ஆமாம் 😀
சூப்பர் 👌 👌 👌 👌
நன்றி
அவனா நீ?வழக்கம் போல பேர் மறந்தாச்சு
அவனே
சூப்பர் ஹீரோ.
நன்றி
 
நம்மஹீரோ ரொம்ப பாவம் ஆத்தர் ஜி
இப்படி அவனை படாய் படுத்துறாளே அவன் மனையாள்😀
 

Latest threads

Top Bottom