காதலின் ரீங்காரம்..!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 6)
மதுமதியோட காதல் பொய்யில்லைத்தான், உண்மையான நேசம் தான். விக்ரம் தான் பொய்யானவன், ஏமாத்துக்காரன், நயவஞ்சகன்..
எல்லாம் சரி, ஆனால், மதுமதியோட அந்தரங்கமான காணொளி விக்ரம் கிட்ட இருக்குன்னா, அதெப்படி உண்மையான காதலாகும்...? உண்மையான காதல்ன்னா திருமணத்திற்கு முன்பே தன்னை இழப்பதா..? காதலிக்கலாம், அதில் எவ்வித தவறுமில்லை. ஆனால் அந்த காதல் சில அத்துமீறல்களை மீறும்போது அது உடைந்த காதலாகி விடுகிறது. பிறகு அதெப்படி உண்மை காதலாகும்...? அது சரீர காதல் என்று தானே அழைக்கப்படும். ஊரை கூட்டி கல்யாணம் பண்ணலைன்னாலும், அட்லீஸ்ட் ரிஜீஸ்டர் மேரேஜ் கூட பண்ணாமல் மதுமதியால் எப்படி அந்தரங்கம் அளவுக்கு செல்ல முடிந்தது...? அதுவும் நல்ல, பண்பான பெண்ணாக இருந்துவிட்டு, அதெப்படி விக்ரமுடன் அத்தனை நெருக்கம் காட்டினாள்..? பெத்தவர்களை நம்ப மாட்டார்கள், ஆனால் எவனோ ஒருவன் நாலு வார்த்தை மனதை தொடும்படி பேசிவிட்டால், அவனை நம்பி திருமணத்துக்கு முன்பே, எந்தவித ஸூரிட்டியும் இல்லாமல் தன்னையே கொடுக்கும் அளவிற்கு சென்று விடுவார்களா என்ன ? அப்படியென்றால், அங்கே அவளின் வளர்ப்பே கேள்விக் குறியாகிறது தானே..? என்னைக் கேட்டால் அதை காதல் என்றே சொல்ல மாட்டேன், அவசரக் காதல் என்று தான் சொல்வேன்.
இதனால் தான் விக்ரம் இறந்த செய்தியை கேட்டவுடனே, தான் ஏமாந்து விட்டோம் என்பதை உணர்ந்தே கல்லாய் சமைந்து விட்டாளோ என்னவோ..? எனக்கு இந்த மதுமதி மேல கொஞ்சம் கூட பச்சாத்தாபமே வரலை. மயூரன் தான் ரொம்ப பாவம்.
இப்பவும் சொல்றேன் மதுமதியோட காதலை விட மயூரன் காதல் தான் உண்மையானது, அவளைப் பத்தின உண்மை எல்லாம் தெரிஞ்சிருந்தும், அவள் முதல் காதலிலிருந்து மீண்டு வருவாளா, மாட்டாளா என்பதும் தெரியாமல், அவளோட ஒட்டுமொத்த வெறுப்புக்கு ஆளாகப் போகிறோம் என்று தெரிந்தும் அவளையே கரம் பிடித்த மயூரன் காதல் தான் உயிர்ப்பானது. எவ்வித எதிர்பார்ப்பும் அற்றது.
(எங்க வீட்ல நிச்சயமே முடிந்து விட்டால் கூட, மணமகனிடம் பேச அனுமதிக்க மாட்டார்கள், ஏனென்று காரணம் கேட்டதற்கு கமுத்தில் தாலி ஏறும் வரை அவன் உனக்கானவன் எனும் நிச்சயமில்லாதவன் என்று தான் கூறுவார்கள், ஆனால், இப்பொழுது அதெல்லாம் காணாமல் போய் விட்டது.
இருந்தாலும், அதற்காக தன்னையே இழந்து காதலை நிருபிப்பது என்பதெல்லாம்
ஹைலி ஈடியாட்டிக். நான் இப்படித்தான், சரி எது, தவறு எது என்பதை எந்தவித பூச்சும் இல்லாமல் நேரிடையாகவே கூறிடுவேன்)
ஆனால், அதற்காக மதுமதி வாழ்நாள் முழுவதும் திருமணம் ஆகாமலே இருக்க வேண்டும்
என்று சொல்லவில்லை. அவளைப் போன்ற பெண்களுக்கு மயூரன் மாதிரி ஒருவன் வாழ்க்கை கொடுத்தால் அதை வரவேற்க காத்திருக்கிறோம். தயவுசெய்து அவள் காதலை மட்டும் உண்மை என்று சொல்லிவிடாதீர்கள்.
காதலை இவர்களின் (இச்சைக்காக) தேவைக்காக கொச்சைப் படுத்துகிறார்களோ என்று தான் தோணுகிறது.
இது என்னோட பாயிண்ட் ஆஃப் வ்யூ, தட்ஸ் ஆல்.



CRVS (or) CRVS 2797